Monday 11 May 2015

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

எனது 58 ஆண்டுகால வக்கீல் தொழிலில் இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை’ அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பேட்டி

பெங்களூரு, செவ்வாய், மே 12, 2015,
“எனது 58 ஆண்டுகால வக்கீல் தொழிலில் இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை என்று, அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா கூறினார்.
ஆச்சார்யா கருத்து
ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக இருந்து பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆச்சார்யா, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, மீண்டும் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலுக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒரு நாள் அவகாசம் வழங்கி இருந்தது. அதன்படி ஆச்சார்யா, 18 பக்கங்கள் கொண்ட எழுத்துபூர்வ வாதத்தை கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து ஆச்சார்யா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை.
                                                                                                       மேலும்....

ஜெயலலிதா விடுதலை தேர்தலில் நிற்க தடை நீங்கியது மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்


 

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி குமாரசாமி விசாரித்தார்.
ஜெயலலிதா விடுதலை
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி சரியாக காலை 11 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்க தொடங்கினார்.
அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவுக்கு தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்
அத்துடன் இந்த வழக்கில், நிறுவனங்களின் மேல்முறையீட்டில் ஒரு பகுதியை கோர்ட்டு அனுமதிப்பதாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி கீழ்க்கோர்ட்டு (தனிக்கோர்ட்டு) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் கூறினார். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-
                                                                                                                   மேலும்....

நீதிபதி தீர்ப்பு முழு விவரம் ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன?


 

பெங்களூரு, செவ்வாய், மே 12, 2015,
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.
919 பக்க தீர்ப்பு
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.
விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-
                                                                                                    மேலும்....

நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம் மனசாட்சி தான் ஜெயலலிதா விடுதலை பற்றி கருணாநிதி கருத்து



சென்னை, செவ்வாய், மே 12, 2015,
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என்றும், நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம் மனசாட்சி தான் என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
150 முடிச்சுகள்
கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா குறித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தான் நினைவுக்கு வருகிறது.
கடந்த ஜனவரி 29–ந்தேதி விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, ‘‘சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார்.
                                                                                            மேலும்....

Thursday 7 May 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-05-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-05-2015) மாலை, IST- 02.30 மணி, நிலவரப்படி,

பிளஸ்-2 தேர்வில் திருப்பூரை சேர்ந்த பவித்ரா, கோவையை சேர்ந்த நிவேதா 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்




சென்னை, மே, 07–05-2015,
தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 10 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் தேர்வுத்துறை இயக்கக தலைவர் தேவராஜன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதில் திருப்பூர், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மற்றும் கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா ஆகிய இருவரும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அதே போல் 1190 மதிப்பெண் பெற்று விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யவர்ஷிணி ஆகிய 4 மாணவர்கள் மாநில அளவில் 2 -ம் இடம் பிடித்தனர்.
நாமக்கல், கிரினிட்டி அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாரதி 1189 மதிப்பெண் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார்.
                                                                                                       மேலும்....

கள்ளக்காதலால் கணவர் அபகரிப்பு தற்கொலைக்கு முயன்ற வி.ஏ.ஓ. மீது பேராசிரியை புகார்



பழனி, மே, 07–05-2015,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா தேவத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் தமிழ்ச்செல்வி. மேல் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மீது பழனி ஆண்டவர் மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றும் ஜெ.தமிழ்ச்செல்வி என்பவர் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:–
நான் பழனி ஆண்டவர் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது எனக்கு அளித்த பெரும்பாலான நகை மற்றும் பணத்தை எனது கணவர் அபகரித்துக்கொண்டார்.
                                                                                                      மேலும்....

கோவையில் கைதான மாவோயிஸ்டு தீவிரவாதிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை






கோவை, மே, 07–05-2015,
கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கார்த்தி என்ற கண்ணன், ஈஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் ரூபேஷ் தென்மாநில இயக்க மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் தலைவர் ஆவார்.
அவர் மீது கேரளாவில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கைதான 5 பேரும் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.
எனவே அவர்களை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
                                                                                                 மேலும்....

சல்மான்கான் இடைக்கால ஜாமீனை ரத்துசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி, மே, 07–05-2015,
இந்தி நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டு உள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குடிபோதையிலும், உரிமம் இல்லாமலும் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்தி ஒருவரை கொன்ற வழக்கில், இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விசாரணை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அவரது சார்பில் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி அபய் திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சல்மான்கான் சார்பில் மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே ஆஜர் ஆனார். அவர், ‘‘தீர்ப்பின் நகல் சல்மான்கானுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதுவரையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்’’ என வாதிட்டார். ஆனால், அதை அரசு வக்கீல் சந்தீப் ஷிண்டே எதிர்த்தார். ‘‘தீர்ப்பு நகல் இன்றி, சல்மான்கான் மனுவை விசாரிக்கவே கூடாது’’ என கூறினார். இருப்பினும் நீதிபதி அபய் திப்சே, ‘‘வழக்கு விசாரணை முழுமையும் அவர் ஜாமீனில்தான் இருந்திருக்கிறார். அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவருக்கு தண்டனை தீர்ப்பின் நகல் இன்னும் வழங்கப்படவில்லை. நீதியின் நலனைக் கருத்தில் கொண்டு, உத்தரவு நகல் கிடைக்கிறவரை அவரை காக்க வேண்டியதுதான் சரியானது’’ என கூறி, 8–ந் தேதி வரை 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சல்மான் கானுக்கு வழங்கப்பட்டு உள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
                                                                                                                 மேலும்....