Tuesday 30 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம் வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

சென்னை, அக்டோபர், 01-10-2014,
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல்,
                                                                                     மேலும், . . .

கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டதால் ஜாமீன் கேட்டு ஜெயலலிதா புதிய மனு அவசர வழக்காக இன்று விசாரணை

பெங்களூர், அக்டோபர், 01-10-2014,
ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
ஜாமீன் மனு
இதையடுத்து ஜெயலலிதாவும், இதே வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அவரது தோழி சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு, அப்பீல் மனு, குற்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரும் மனு, தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு என 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதே போன்று சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேரின் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
                                                                                                        மேலும், . . .

சென்னையில் நடிகர்கள், டைரக்டர்கள் உண்ணாவிரதம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம்

சென்னை, அக்டோபர், 01-10-2014,
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் படஅதிபர்கள் சென்னையில் மவுன உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழ் திரையுலகினர் நேற்று மவுன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.
வெல்வார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம்.
                                                                                                           மேலும், . . .

பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1 குறைகிறது
புதுடெல்லி,அக்டோபர், 01-10-2014,
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
                                                                                                          மேலும், . . .

Monday 29 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

 பெங்களூர் தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது


பெங்களூர் தனிக்கோர்ட்டு விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
பெங்களூர், செப்டம்பர், 30-09-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா
இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
                                                                                                                  மேலும், . . . . .  

ஜெயலலிதா பதவி இழந்ததால் மாற்று ஏற்பாடு தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்பு 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர்

சென்னை, செப்டம்பர், 30-09-2014,
தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்துவைத்தார். 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா வகித்து வந்த முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழக்க நேரிட்டது.
இதைத்தொடர்ந்து புதிய முதல்-அமைச்சரை தேர்வு செய்ய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பதவி ஏற்கும் நிகழ்ச்சி
புதிய முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று பகல் 1.20 மணிக்கு நடைபெற்றது.
                                                                                                             மேலும், . .  .. . . 

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: நடிகர்-நடிகைகள் இன்று உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து


சென்னை, செப்டம்பர், 30-09-2014,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் சென்னையில் இன்று மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.
எதிர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திரையுலகினரும் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
தமிழ் திரையுலகினர் சென்னை பிலிம் சேம்பர் அலுவலகத்தில் நேற்று மாலை அவசரக்கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் தலைமை தாங்கினார்.
இதில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன்
                                                                                                          மேலும், . . . . 

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எதிரொலி பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு


சென்னை, செப்டம்பர், 30-09-2014,
பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்பை அறிந்து வேதனையில் அ.தி.மு.க. தொண்டர்கள் 30 பேர் மரணம் அடைந்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தண்டனையை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மாநிலம் முழுவது சோகத்திற்கு உள்ளாகினர். அதில் ஒரு சில தொண்டர்கள் துக்கம் தாங்காமல் மாரடைப்பாலும், அதிர்ச்சியடைந்தும், தீக்குளித்தும், தூக்குமாட்டியும் இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
தூக்குப்போட்டு சாவு
சென்னை வளசரவாக்கம், ஏ.பி.என். பிரதாப் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் வெங்கடேசன், தீக்குளித்து ஆபத்தான நிலையில் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
சென்னை திருவொற்றியூர் பெரிய மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த யோவான் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகளும், 2-ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் மாணவியுமான ஜோனஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் தூக்குமாட்டி இறந்தார்.
                                                                                                                   மேலும், . . . . . 

Sunday 28 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு புதிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்கிறார்


அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்கிறார்.
சென்னை, செப்டம்பர், 29-09-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாசிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
ஆலோசனை
இதனால் அவருக்கு பதிலாக புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
                                                                                                  மேலும், . . . . 

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் நாளை விசாரணைக்கு வரும்

பெங்களூர், செப்டம்பர், 29-09-2014,
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வக்கீல் பி.குமார் தெரிவித்தார். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இதேபோல் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால், அவர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜாமீன் மனு
தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பின் நகல் ஜெயலலிதாவின் வக்கீல்களுக்கு கிடைத்து உள்ளது.
                                                                                                              மேலும், . . . . 

அரசியல் வெற்றிடம் ஏற்படவில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது ஐகோர்ட்டில் அரசு வாதம்

சென்னை, செப்டம்பர், 29-09-2014,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று ஐகோர்ட்டில் அரசு சார்பில் வாதிடப்பட்டது.
வன்முறை
சென்னை ஐகோர்ட்டில் மனுதாரர்கள் டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் என்.ராஜாராமன், வக்கீல் எஸ்.ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கட்சியினர் சாலைகளுக்கு வந்து பந்த் நடத்தியும், வன்முறையில் ஈடுபடவும் தொடங்கினர்.
இயல்பு நிலை பாதிக்கப்பட்டது
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் பஸ் எரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டனர்.
                                                                                                      மேலும், . . . . . 

சென்னையில், இயல்புநிலை திரும்பியது வணிக வளாகங்கள், திரையரங்குகள் வழக்கம்போல இயங்கின

சென்னை, செப்டம்பர், 29-09-2014,
சென்னையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் நேற்று வழக்கம்போல இயங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்பு
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
                                                                                                மேலும், . . . . . 

Saturday 27 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில்


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனால் முதல்-அமைச்சர் பதவியை இழந்த அவர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகள் தேர்தலில் அவர் போட்டியிட முடியாது.
பெங்களூர், செப்டம்பர், 28-09-2014,
ஜெயலலிதா சந்தித்த பல்வேறு வழக்குகளில் சொத்து குவிப்பு வழக்கும் ஒன்றாகும்.
சொத்து குவிப்பு வழக்கு
1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு முதலில் சென்னையில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்பெங்களூருக்கு மாற்றப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 27-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தனிக்கோர்ட்டு தீர்ப்பு
ஜெயலலிதா தரப்பின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு வழங்கும் இடம் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக அங்கு தற்காலிகமாக தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதை யொட்டி அந்த பகுதி முழுவதும் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
காலை 11 மணிக்கு தனிக்கோர்ட்டு கூடியது. தீர்ப்பு கூறப்படுவதையொட்டி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனிக் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
                                                                                                     மேலும், . . . 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர ஆலோசனை புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்கிறார்கள்


சென்னை, செப்டம்பர், 28-09-2014,
ஜெயலலிதா பதவி இழந்ததால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கூடி புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்கிறார்கள்.
புதிய முதல்-அமைச்சர் தேர்வு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் தானாகவே இழந்து விட்டார்.
ஜெயலலிதா நேற்று சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய முதல்- அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் அவசரக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.
                                                                                                                         மேலும், . . . 

அ.தி.மு.க.வினர் சாலை மறியல், கல்வீச்சு சென்னையில் கடைகள் அடைப்பு-பஸ்கள் நடுவழியில் நிறுத்தம் பொதுமக்கள் கடும் பாதிப்பு


சென்னை, செப்டம்பர், 28-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் அ.தி.மு.க.வினர் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
கொந்தளிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு கோர்ட்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கொந்தளித்து எழுந்தனர். சாலை மறியல், கல்வீச்சு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு, பஸ் எரிப்பு போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. சென்னையிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன.
பகல் 1 மணிக்கு கர்நாடக போலீஸ் துறை உயர்அதிகாரிகள், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளிடம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போதே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கப்போவது உறுதியாகி விட்டது. சென்னையைபொறுத்தமட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சென்னை முழுவதும், போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி உத்தரவிட்டார்.
தடுக்க முடியவில்லை
ஆனால் அ.தி.மு.க.வினரின் கொந்தளிப்பை போலீசாரால் பெரும்பாலான இடங்களில் தடுத்து நிறுத்த முடியவில்லை.
                                                                                                   மேலும், . . . 

சட்டமும் நீதியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன சுப்ரமணியன் சாமி



சென்னை, செப்டம்பர், 28-09-2014,
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை, முதலில் தாக்கல் செய்தவர், பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சுப்ரமணியன் சாமி அளித்த பேட்டி:
செய்த தவறுக்கு
யார் மீதும், ஆதாரம் இல்லாமல், நான் குற்றம் சுமத்துவதில்லை; வழக்கு போடுவதில்லை என்பது, ஜெயலலிதா மீது நான் தாக்கல் செய்த, சொத்துக் குவிப்பு வழக்கிலும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த தீர்ப்பை கண்டு யாரும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ தேவையில்லை. செய்த தவறுக்குத் தான், கோர்ட் தண்டனை விதித்து இருக்கிறது.
                                                                                                  மேலும், . . .

Friday 26 September 2014

மெட்ராஸ் - திரைவிமர்சனம்

Madras Movie Review



மெட்ராஸ்  - திரைவிமர்சனம்

படம் : மெட்ராஸ்
நடிகர் : கார்த்தி
நடிகை : கத்ரீனா தெரஸா
இயக்குனர் :ரஞ்சித்
'அட்டகத்தி' பா.இரஞ்சித்தின் எழுத்து, இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் பக்கா ஆக்ஷன், கமர்ஷியல் படம்தான் ''மெட்ராஸ்''. முன்பாதி படம் பழைய மெட்ராஸ் மாதிரி பளபளப்பாகவும், பரபரப்பாகவும், பின்பாதி இன்றைய சென்னை மாதிரி கலீஜாகவும், மெர்சலாகவும், நெர்சலாகவும், புரியதா புதிராய் இருப்பதும் தான் மெட்ராஸின் ப்ளஸ், மைனஸ்!
கதைப்படி, வடசென்னையின், பரபரப்பான ஏரியாவில் உள்ள ஒரு சுவற்றுக்காக ஒருகட்சியும், அதிலிருந்து பிரிந்து வந்த புதுக்கட்சியும் அடிக்கடி மோதிக் கொண்டு சில உயிர்களை பலி கொடுக்கின்றன. அதில் அதிகம் பலிக்கு உள்ளாவதும், பாதிப்பிற்குள்ளாவதும், புதிய கட்சியில் அதிகளவில் இருக்கும் அந்த ஏரியாவாசிகள் தான். இதில் மெர்சலாகும் அன்பு எனும் புதுக்கட்சியின் தீவிர தொண்டனான ஏரியாவாசி, தன் கட்சியின் ஏரியா தலைவர் கட்டளைப்படி குட்டி சுவற்றை தன் கட்சி சின்னம் வரைவதற்கு பயன்படுத்திக் கொள்ள சபதம் ஏற்கிறார்.
வேலை, காதல், காதலி, குடும்பம் என திரியும் அன்புவின் நண்பரும், ஹீரோவுமாகிய காளி எனும் கார்த்தி, சம்பந்தமில்லாமல் இவர்களது பாலிடிக்ஸில் தலையை விட்டு, எதிர்பாராமல் ஒரு கொலையை செய்வதுடன், நண்பன் அன்புவையும், விரோதிகளின் கொலைவெறிக்கு பலி கொடுக்கிறார். அதன்பின்னும் காதல், காதலி, குடும்பம் என மனதை தேற்றிக் கொள்ள முயலும் கார்த்திக்கு, ஒருகட்டத்தில் தான் செய்த கொலைக்காக சிறை செல்ல தயாரான அன்புவை கொன்றது விரோதிகள் அல்ல, கூடவே இருந்த துரோகி... என்பது தெரியவர, வில்லன்களை பழிவாங்க களம் இறங்கினாரா.? காதலியுடனான இல்வாழ்க்கை தான் பெரிதென இருக்கிறாரா.? இல்லை இரண்டிலும் வெற்றி பெறுகிறாரா.? என்பது க்ளைமாக்ஸ்!
                                                                                                                          மேலும், . . . . 

ஜீவா (2014) - திரைவிமர்சனம்

ஜீவா (2014) - திரைவிமர்சனம்

'Jeeva' - Movie Review



ஜீவா (2014)

நடிகர் : விஷ்ணு
நடிகை : ஸ்ரீதிவ்யா
இயக்குனர் : சுசீந்திரன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : ஆர்.மதி
ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் (சார்லி) வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.
தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா (மாரிமுத்து) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) இவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இவனும் அவளை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பா (டி.சிவா) வுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்.
                                                                                       மேலும், . . .  .

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டு வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

பெங்களூர், செப்டம்பர், 27-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் இன்று(சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா இன்று ஆஜர் ஆவதால் கோர்ட்டு வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு
கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.
கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இறுதி வாதம் தொடங்கியது
இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா முன்னிலையில் இறுதி வாதத்தை முதலில் தொடங்கிய ஜெயலலிதா வக்கீல் குமார் 25 நாட்கள் வாதிட்டு பல்வேறு முக்கியமான தகவல்களை, விவரங்களை எடுத்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் வாதிட்டனர். அரசு வக்கீல் பவானிசிங் 9 நாட்கள் வாதிட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதியுடன் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அறிவித்தார்.
                                                                                                  மேலும், . . . .  

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு பற்றிய விசாரணை வைகோ ஆஜராகி வாதம்

சென்னை, செப்டம்பர், 27-09-2014,
சென்னையில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு பற்றிய விசாரணையில், வைகோ ஆஜராகி வாதிட்டார்.
விடுதலைப்புலிகள்
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 1992-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தவேளையில், கடந்த ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு என நீடித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் கடந்த மே மாதம் 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தில் தன்னையும் விசாரணையில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
                                                                                                          மேலும், . . . . 

தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வாபஸ் எதிரொலி மராட்டிய முதல்-மந்திரி ராஜினாமா ஜனாதிபதி ஆட்சி அமல் ஆகுமா?

மும்பை, செப்டம்பர், 27-09-2014,
மராட்டியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதை தொடர்ந்து, முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ராஜினாமா செய்தார். இதனால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கூட்டணி முறிந்தது
மராட்டிய சட்டசபை தேர்தல் அக்டோபர் 15-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூட்டணி அரசை நடத்தி வந்த ஆளும் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தியது.
                                                                                                                    மேலும், . . . 

புதிய வீடு கட்டுபவர்கள் 750 மூட்டை வாங்கலாம் சலுகை விலையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.190 விலையில் அம்மா சிமெண்டு ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் சலுகை விலையில், மூட்டை ஒன்றுக்கு ரூ.190 விலையில் அம்மா சிமெண்டு விற்பனைக்கு வருவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தின் கீழ், புதிதாக வீடு கட்டுபவர்கள் அதிகபட்சமாக 750 சிமெண்டு மூட்டைகள் வரை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
சென்னை, செப்டம்பர், 27-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மலிவு விலையில்அத்தியாவசிய பொருட்கள்
ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும், ஏழைகளின் கனவுகள் நனவாக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது எனது தலைமையிலான அரசு.
சிமெண்டு
இந்த வரிசையில், வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன்.
                                                                                                                      மேலும், . . . . 

Thursday 25 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல தடை

பெங்களூர், செப்டம்பர், 26-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை தனிக்கோர்ட்டில் ஆஜராவதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
நாளை தீர்ப்பு
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கில் நாளை(சனிக்கிழமை) தீர்ப்பு கூறப்படுகிறது. அன்றைய தினம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி, பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டு பெங்களூர் பரப்பனஅக்ரஹாராவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தனிக்கோர்ட்டை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
                                                                                          மேலும், . . .

மராட்டிய சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பம் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி முறிந்தது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தது
மும்பை, செப்டம்பர், 26-09-2014,
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு சிக்கல் எதிரொலியாக மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா- பா.ஜனதா கூட்டணி உடைந்தது. மேலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்தது.
சட்டசபை தேர்தல்
மராட்டிய சட்டசபை தேர்தல் அக்டோபர் 15-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) முடிகிறது. மராட்டியத்தில் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் சிவசேனா - பா.ஜனதா கட்சிகள் இந்த சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்தன.
இதனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இரு கட்சி தலைவர்களும் கூடி பேசி வந்தனர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.
இறுதி பேச்சு
இந்த நிலையில் நேற்று சிவசேனா, பா.ஜனதா தலைவர்கள் இறுதியாக கூடி பேசினார்கள்.
                                                                                      மேலும், . . . . .

ஐ.நா. மன்ற கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருணாநிதி கருப்பு சட்டை அணிந்தார் தி.மு.க. தொண்டர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது


சென்னை, செப்டம்பர், 26-09-2014,
ஐ.நா. மன்றத்தில் பங்கேற்ற ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை அணிந்தார். தி.மு.க. தொண்டர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
கருப்பு சட்டை
இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25-ந் தேதி அன்று அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்தும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி நேற்று காலை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
                                                                                                                    மேலும், . . . . . .

பூந்தமல்லியில் நடந்த தம்பதிகள் கொலை வழக்கில் 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

பூந்தமல்லி, செப்டம்பர், 26-09-2014,
பூந்தமல்லியில் வீட்டில் தனியாக இருந்த தம்பதிகள் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தனது கனவு திட்டத்தை நிறைவேற்ற கொலை செய்ததாக கைதான ஒருவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
தம்பதிகள் கொலை
பூந்தமல்லி, திருமால் நகர், 2-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு(வயது 62). இவருடைய மனைவி சாந்தி(57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்- மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி காலை பாபு வீடு நீண்டநேரம் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் அறையில் சாந்தியும், மாடியில் உள்ள மற்றொரு அறையில் பாபுவும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
600 பேரிடம் விசாரணை
பூந்தமல்லி போலீசார் கொலையான கணவன்- மனைவி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
                                                                                              மேலும், . . . . 

Wednesday 24 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

இந்தியா வரலாற்று சாதனை


செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
பெங்களூர், செப்டம்பர், 25-09-2014,
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
மங்கள்யான் விண்கலம்
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (‘இஸ்ரோ’) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 1,350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி மங்கள்யான் விண்கலம் டிசம்பர் 1-ந் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
                                                                                                       மேலும், . . . . 

கருணாநிதியுடன் டாக்டர் ராமதாஸ் ‘திடீர்’ சந்திப்பு தி.மு.க.வுடன் கூட்டணியா என்பது பற்றி பேட்டி

சென்னை, செப்டம்பர், 25-09-2014,
கருணாநிதியை, டாக்டர் ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். தி.மு.க.வுடன் பா.ம.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
கருணாநிதியுடன் சந்திப்பு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேரன்- பேத்தி (ராமதாஸ் மகள் காந்தி மகன் பிரித்தீவனுக்கும்-மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மகள் சம்யுக்தாவுக்கும்) திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி, திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் நேற்று காலை 10.40 மணியளவில் வந்தார்.
                                                                                            மேலும், . . . . 

காஞ்சீபுரம் அருகே பல்கலைக்கழக விடுதியில் குளியல் அறையில் மாணவிகளை படம் எடுத்த ஊழியருக்கு அடி-உதை கலெக்டரிடம் மாணவிகள் புகார்; வாகனங்கள் உடைப்பு


காஞ்சீபுரம், செப்டம்பர், 25-09-2014,
பல்கலைக்கழக விடுதி குளியல் அறையில் மாணவிகள் குளிப்பதை படம் எடுத்த ஊழியரை மாணவிகள் பிடித்து அடித்து உதைத்தனர். அவரை கைது செய்யக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்த மாணவிகள் ஆத்திரத்தில் பல்கலைக்கழக வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள்.
பல்கலைக்கழக மாணவிகள்
காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் சங்கரா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான மாணவிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரீசியன் மற்றும் பிளம்பராக ஏனாத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ஜே.ராஜா (வயது 33) வேலை பார்த்து வருகிறார்.
                                                                                                        மேலும், . . . . .

சென்னை கார் டிரைவர்களை கடத்திக்கொன்ற கொலைக்கும்பல் தலைவன் கைது துண்டு, துண்டாக வெட்டிக்கொல்லப்பட்டவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, செப்டம்பர், 25-09-2014,
சென்னையை சேர்ந்த கார் டிரைவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை கும்பல் தலைவன் விஜி கைது செய்யப்பட்டார்.
அதிரடி கொலைகள்
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் தனியாக செல்லும் கார் டிரைவர்கள், கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. கடந்த 6 மாதத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து லாரி, கார், வேன்களை ஓட்டிச்சென்ற டிரைவர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 3 கொலை சம்பவங்களில் ஒரு மாபாதக கும்பலுக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை மதுரவாயலில் இருந்து, காரில் தோல்களை ஏற்றிச்சென்ற டிரைவர் வாசிம்அக்ரம், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் ஓட்டிச்சென்ற காரையும் புதுச்சேரியில் விற்பனை செய்துவிட்டனர்.
இதேபோல சென்னை அம்பத்தூரில் இருந்து சென்ற கார் டிரைவர் முருகேசன், கடந்த மார்ச் மாதம், வேலூர் மாவட்டம், வாலாஜா பகுதியில் விரிஞ்சிபுரம் என்ற இடத்தில்
                                                                                                         மேலும், . . . . 

Tuesday 23 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

11 ஆண்டுகளாக ஆந்திராவை கலங்கடித்த சர்வதேச செம்மரக்கடத்தல் மன்னன் சென்னையில் கைது

நகரி, செப்டம்பர், 24-09-2014,
ஆந்திர மாநிலத்தை கலக்கிய பிரபல செம்மரக்கடத்தல் மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
செம்மரக்கடத்தல் மன்னன் கைது
ஆந்திர மாநில வனப்பகுதிகளில் சமீப காலமாக செம்மரங்களை வெட்டி கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை பண ஆசை காட்டி செம்மரங்களை கடத்தி வருகின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலால் ஆந்திர மாநிலத்தை கலங்கடித்து வந்தவர் மலியக்கல் மூசா. தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை துறைமுகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.
                                                                                                                          மேலும், . . . . 

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் கைது


மதுரை, செப்டம்பர், 24-09-2014,
மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகளும், உறவினர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
மதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2-ந் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து,
                                                                                              மேலும், . . .

மராட்டிய சட்டசபை தேர்தல்: சிவசேனா-பாரதீய ஜனதா கூட்டணி உறுதியானது தொகுதி பங்கீடு விவரம் விரைவில் வெளியாகும்
மும்பை, செப்டம்பர், 24-09-2014,
மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவசேனா-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு விவரம் விரைவில் வெளியாகும்.
தொகுதி பங்கீட்டில் சிக்கல்
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுவதில் பிரதான எதிர்கட்சிகளான சிவசேனா-பாரதீய ஜனதா கூட்டணி திட்டம் வகுத்து வருகிறது.
இந்த இரு கட்சிகளும், ஆளும் கட்சியினருக்கு மிக பெரிய சவாலாக திகழ்ந்து வரும் இந்த சூழ்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக சிவசேனா-பா.ஜனதா இடையே ஒருமித்த உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
பா.ஜனதா யோசனை
ஏனெனில், பா.ஜனதாவை விட அதிகமான தொகுதிகளில் அதாவது 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதில் சிவசேனா முனைப்பு காட்டுகிறது.
                                                                                                           மேலும், . . . .

‘என்கவுன்டர்’ நடவடிக்கையை கட்டுப்படுத்த 11 நெறிமுறைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, செப்டம்பர், 24-09-2014,
நாடு முழுவதும் போலீசாரால் நடத்தப்படும் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக, 11 நெறிமுறைகளை வகுத்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது.
மும்பை கோர்ட்டில் மனு
மக்கள் உரிமைக் கழகம் அமைப்பின் சார்பில், ‘என்கவுன்டர்’ நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் நெறிமுறைகளை வகுக்குமாறு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் 1995-ம் ஆண்டில் இருந்து 1997 வரை மும்பை போலீசாருக்கும், கிரிமினல்களுக்கும் இடையில் நடைபெற்ற 99 ‘என்கவுன்டர்’களில் 135 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்கவுன்டர்கள் குறித்த முழு தகவல்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் பெயர், எந்த சந்தர்ப்பத்தில் என்கவுன்டர்கள் நடைபெற்றன போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, ‘என்கவுன்டர்’ நடவடிக்கை தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை போலீசுக்கு வலியுறுத்தியது.
                                                                                          மேலும், . . . . 

Monday 22 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவு கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்றஇடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. கோவை, தூத்துக்குடி மேயர் பதவிகள், 4 நகராட்சி தலைவர் பதவிகள் உள்பட பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.
சென்னை, செப்டம்பர், 23-09-2014,
தமிழ்நாட்டில் கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத் தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அ.தி.மு.க. அமோக வெற்றி
இந்த இடைத்தேர்தலை தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இந்த இடைதேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான இடங்களை அந்த கட்சி கைப்பற்றியது.
                                                                                                   மேலும், . . . . 

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் கணவன் கண் எதிரே புதுப்பெண் தலைநசுங்கி சாவு பஸ்சை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்


திருச்சி, செப்டம்பர், 23-09-2014,
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் கணவன் கண் எதிரே புதுப்பெண் தலை நசுங்கி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பஸ்சை அடித்து நொறுக்கினார்கள்.
புதுமண தம்பதி
திருச்சி பொன்மலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ்பாபு (வயது 29). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி என்ற பத்மாவதி (26). இந்த தம்பதியினருக்கு கடந்த 4-ந் தேதி திருச்சி பொன்மலையில் திருமணம் நடந்தது.
சதீஷ்பாபு நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றார். மனைவி ரேவதி மற்றும் அவரது தாய், குடும்பத்தினர் துணிகள் எடுப்பதற்காக திருச்சி பெரிய கடை வீதிக்கு வந்தனர். சதீஷ்பாபு பணி முடிந்ததும் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் பெரிய கடை வீதிக்கு வந்தார்.
                                                                                                                      மேலும், . . . . .

சென்னை மெரினாவில் கடத்தல் பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற பெண் கைது


சென்னை, செப்டம்பர், 23-09-2014,
சென்னை மெரினாவில் பச்சிளம் ஆண்குழந்தை கடத்திச்செல்லப்பட்டது. அந்த ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விலைபேசிய பெண் கைது செய்யப்பட்டார்.
ஆண் குழந்தை கடத்தல்
சென்னை கந்தன்சாவடி, வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவரது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, தனியாக சென்றுவிட்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்தன. ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும், கணவர் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். அப்துல்லா என்ற 6 மாத பச்சிளம் ஆண் குழந்தையை மட்டும் பாத்திமா தன்னுடன் வைத்திருந்தார்.
குழந்தையுடன் மெரினாவுக்கு வந்து பாத்திமா பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு மெரினாவில் மாநில கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பாத்திமா உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம பெண் ஒருவர், பாத்திமாவிடம் பேச்சு கொடுத்தார். பாத்திமா தனது சோக கதையை சொல்லி வருத்தப்பட்டார்.
மர்ம பெண், பாத்திமாவின் குழந்தையை கையில் வாங்கி முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது பாத்திமா, அருகில் மறைவான இடத்திற்கு சிறுநீர் கழிக்க சென்றார்.
                                                                                                   மேலும், . . . . .

ஏழை நோயாளிகள், பார்வையாளர்களின் நலனுக்காக சென்னையில் மேலும் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம் ஜெயலலிதா திறந்து வைத்தார்



சென்னை, செப்டம்பர், 23-09-2014,
சென்னையில் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஏழை-எளிய மக்கள்
சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி மற்றும் பொங்கல் சாம்பார், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் ஆகியவை தரமானதாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.13 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும்,
                                                                                                             மேலும், . . . . 

Sunday 21 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகள் - அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி
இணையதளத்தில் விளம்பரம் செய்து முறைகேடு கார் மோசடி கும்பல் தலைவனுக்கு வலைவீச்சு விமானத்தில் தப்பி ஓட்டம்

சென்னை, செப்டம்பர், 22-09-2014,
இணையதளத்தில் விளம்பரம் செய்து, வாடகை தருவதாக கார்களை வாங்கி, அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள கார் மோசடி கும்பலின் தலைவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாடகை தருவதாக மோசடி
சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், நான் இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன்.
அந்த விளம்பரத்தில், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், தங்கள் கார்களை எங்களிடம் ஒப்படைத்தால், மாதம் கணிசமான தொகையை வாடகையாக தருவோம்,
                                                                                              மேலும், . . . .

தர்மபுரி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு ஓடிய கார், லாரி மீது மோதியது

தர்மபுரி, செப்டம்பர், 22-09-2014,
தர்மபுரி அருகே சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு ஓடிய கார், லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
நகைக்கடை மேலாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31), அவரது மனைவி நித்யா (25). இந்த தம்பதிக்கு கிரிஜா (6), விஷால் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் நகைக்கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் விஜயகுமாரின் தம்பி முனிராஜின் மனைவிக்கு நேற்று முன்தினம் இரவு தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
                                                                                                      மேலும், . . . .

‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசிய நூற்றாண்டு விழா குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் பங்கேற்பு

சென்னை, செப்டம்பர், 22-09-2014,
சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய 100-வது ஆண்டு விழாவில் குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
100 ஆண்டுகள் நிறைவு
முதலாம் உலகப்போரின்போது, ஜெர்மனி நாட்டின் ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய 100-வது ஆண்டு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையொட்டி அதன் நூற்றாண்டு நிறைவு விழாவும், அந்த கப்பலில் வந்த தமிழக வீரர் செண்பகராமனின் 123-வது பிறந்தநாள் விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயக்குனர் ஜெ.டி.சர்மா, கம்பத், வெங்கட் ராஜூலு, சிங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவுக்கு செண்பகராமனின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து அவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
‘ஜெய்ந்த்’ என்று கூறியவர்
விழாவில் குமரிஅனந்தன் பேசியதாவது:-
                                                                                                              மேலும், . . . . .

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர் இந்திய மருத்துவ சங்க தலைவர் பேட்டி

நாமக்கல், செப்டம்பர், 22-09-2014,
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் கூறினார்.
கவுன்சில் கூட்டம்
இந்திய மருத்துவ சங்கத்தின் 280-வது கவுன்சில் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் (தேர்வு) சுரேந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                               மேலும், . . . .

தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் (2014) விமர்சனம்

Tamilselvanum Kalaiselviyum Movie Review

 

தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் (2014)


கார்த்தி- அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் 'அலெக்ஸ்பாண்டியன்'. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். அவரிடம் உதவியாளராக இருந்த பாண்டியன் 'தமிழ்செல்வனும் கலைச்செல்வியும்' என்ற படத்தை இயக்கிவருகிறார். கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே பார்த்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
புது தயாரிப்பு நிறுவனமான 'மயில் மாஸ் மீடியா' இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மதுரை, கோவைப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. கதாநாயகனாக ராஜேசும் கதாநாயகியாக அனாமிகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகேந்திரன், பாப்சுரேஷ், தில்ஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சந்த்ரா இசையில் எல்.ஆர். ஈஸ்வரி ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒஸ்தி படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் : ராஜேஷ்
நடிகை : கலை அனாமிகா
இயக்குனர் : பாண்டியன்.பி
இசை : சந்திரா பார்ஸ்
ஓளிப்பதிவு : எம்.ஏ.ராஜதுரை
கார்த்தி- அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் 'அலெக்ஸ்பாண்டியன்'. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். அவரிடம் உதவியாளராக இருந்த பாண்டியன் 'தமிழ்செல்வனும் கலைச்செல்வியும்' என்ற படத்தை இயக்கிவருகிறார். கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே பார்த்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
புது தயாரிப்பு நிறுவனமான 'மயில் மாஸ் மீடியா' இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மதுரை, கோவைப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. கதாநாயகனாக ராஜேசும் கதாநாயகியாக அனாமிகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகேந்திரன், பாப்சுரேஷ், தில்ஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
                                                                               மேலும், . . .  .

ஆடாம ஜெயிச்சோமடா (2014) விமர்சனம்

Aadama Jeichomada Movie Review

ஆடாம ஜெயிச்சோமடா (2014)


இயக்குனர் பத்ரி தனது சொந்த கம்பெனி மூலம் தயாரித்து, இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா.
“வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு” ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது. இப்படத்தில் கருணாகரன், பாபி சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேத்தன், அபிஷேக், விச்சு, கெளதம், சித்ரா லட்சுமணன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து காமெடி கதையம்சத்தில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தமிழ்ப்படம், சென்னை 28, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை - படங்களின் நாயகன் சிவா, இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.
நடிகர் : கருணா
நடிகை : விஜயலட்சுமி
இயக்குனர் : பத்ரி
இசை : ஷான் ரோல்டன்
ஓளிப்பதிவு : துவாரகநாத்
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்படும் சூதாட்டம் பற்றிய கதையே ஆடாம ஜெயிச்சோமடா.
                                                                                              மேலும், . . .  .

அரண்மனை (2014) விமர்சனம்

Aranmanai Movie Review

அரண்மனை


படம் : அரண்மனை
நடிகர் : வினய்
நடிகை : ஹன்சிகா மோத்வானி

இயக்குனர் :சுந்தர்.சி
தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை.
இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.
“இது என்னுடைய வழக்கமான படமில்லை. திகில் சஸ்பென்ஸ் கலந்த ஹர்ரர் மூவி…” என்கிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் முக்கியமாக இடம் பெறும் அரண்மனைக்காக பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி அரண்மனை எங்கு தேடியும் அமையவில்லையாம். மேலும் தேடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்த சுந்தர்.சி ஐதராபாத்தில் அரண்மனை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட்டை அமைத்து, முழுக்க முழுக்க அந்த செட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
                                                                                                                மேலும், . . . 

ரெட்ட வாலு விமர்சனம்

Retta Vaalu Movie Review

ரெட்ட வாலு திரைவிமர்சனம்


நடிகர் : அகில் பாறூக்
நடிகை : சரண்யா நாக்
இயக்குனர் : தேசிகா
இசை : செல்வகணேஷ்.வி
ஓளிப்பதிவு : பானு முருகன்
ரெட்ட வாலு :சிம்பு, ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘வாலு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி ராமையாவிடம் உதவியாளராக பணியாற்றிய தேசிகா என்பவர் இயக்கும் படத்துக்கும் ‘வாலு’ என பெயரிடப்பட்டது. மாதக்கணக்கில் நிலவிவந்த இந்த பெயர் குழப்பத்துக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தேசிகா தனது படத்துக்கு ‘ரெட்ட வாலு’ என்று பெயர் மாற்றிக் கொண்டதன் மூலம் சிக்கல் தீர்ந்தது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
படத்தில் ஹீரோ அகில், ஹீரோயின் சரண்யா இருவரும் குறும்புத்தனமும், அரட்டையும் நிறைந்த வாலுத்தனமான கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர். இதனால் ரெட்ட வாலு என்று பெயர் மாற்றப்பட்டது. எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். சிலரால் மட்டுமே அதை சாதிக்க முடிகிறது. பலருக்கு அது பகல் கனவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன, தீர்வு உண்டா என்பதற்கு படம் பதில் சொல்லும். தம்பி ராமையா, கோவை சரளா, ‘பசங்க’ சிவகுமார், செந்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வைரமுத்து பாடல்களுக்கு செல்வ கணேஷ் இசை. ஜெய இளவரசன் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இரண்டு கோஷ்டிகள் உண்டு. கோடம்பாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டை. கோடம்பாக்கம் என்றால் தென்னக கிராமத்திலிருந்து மஞ்சப்பையுடன் சினிமா கனவுடன் ரயிலோ லா‌ரியோ ஏறியவர்கள். ஆழ்வார்பேட்டை என்றால் கொஞ்சம் இன்டலெக்சுவல் டைப். கமல், மணிரத்னம் போன்றவர்களின் அலுவலகங்கள் ஆழ்வார்பேட்டையில் இருப்பதால் வந்த பெயர் இது. சினிமாவுக்கு இன்டெலக்சுவல் எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக ஆத்மார்தம் தேவை.
                                                                                                                     மேலும், . . . 

ஃபைண்டிங் ஃபேனி (இந்தி) (2014) விமர்சனம்

Finding Fanny Hindi Movie Review

ஃபைண்டிங் ஃபேனி (இந்தி)


படம் : ஃபைண்டிங் ஃபேனி (இந்தி)
நடிகர் : அர்ஜூன் கபூர் , நஸ்ருதீன் ஷா, பங்கஜ் கபூர்
நடிகை : தீபிகா படுகோனே , டிம்பிள் கபாடியா
இயக்குனர் :ஹோமி அட்ஜானியா
46 ஆண்டுகளுக்கு முன் தான் காதலித்த பெண்ணை தேடி செல்லும் ஒரு போஸ்ட்மேனின் பயணம் தான் ஃபைண்டிங் ஃபேனி படத்தின் ஒருவரிக்கதை!
''பைண்டிங் பேனி'' படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. மசாலா படம் போன்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்காது, ஆனால் உண்மையாக சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்கும். அப்படி நேசிப்பவர்கள் கண்டிப்பாக இந்தப்படத்தை மிஸ் பண்ணமாட்டார்கள், அவர்களுக்கு பிடிக்காமல் இருக்காது.
கோவா அருகே போகொலிம் எனும் அழகான சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள் ஏஞ்சி(தீபிகா படுகோனே), பிரெடி(நஸ்ரூதீன் ஷா), சேவியோ(அர்ஜூன் கபூர்), டான் பெட்ரோ(பங்கஜ் கபூர்), ரோசலினா(டிம்பிள் கபாடியா). போஸ்ட் மாஸ்டரான நஸ்ரூதீன் ஷா, 46 ஆண்டுகளுக்கு முன் தான் காதலித்த பெண்ணுக்கு காதல் கடிதம் ஒன்று வரைந்து அதை அந்தப்பெண் ஏற்றுக்கொள்ளாமல் போக அதை எண்ணி இப்போதும் மனம் வருந்துகிறார். இந்நிலையில் நஸ்ருதீன் ஷாவின் மனகவலையை போக்க தீபிகா எண்ணுகிறார். அதற்காக அவர் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்க எண்ணுகிறார். தீபிகாவின் இந்த எண்ணத்திற்கு அர்ஜூன் கபூர், பங்கஜ் கபூர், டிம்பிள் கபாடியா ஆகியோரும் உதவுகின்றனர். பிறகு இந்த ஐவரும் ஒரு காரில் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர், இறுதியில் அந்தப்பெண்ணை கண்டுபிடித்து நஸ்ருதீன் ஷாவின் மனக்கவலையை இவர்கள் தீர்த்தார்களா.? என்பது படத்தின் அழகிய கதை.
                                                                                                                  மேலும், . . . . 

கிரியேச்சர் 3டி (இந்தி) (2014) விமர்சனம்

Creature 3D Hindi Movie Review

கிரியேச்சர் 3டி (இந்தி)


படம் : கிரியேச்சர் 3டி (இந்தி)
நடிகர் : இம்ரான் அப்பாஸ் நக்வி
நடிகை : பிபாஷா பாசு
இயக்குனர் :விக்ரம் பட்
டைரக்டர் விக்ரம் பட் சமீபத்தில் இயக்கி, வெளிவந்துள்ள படம் கிரியேச்சர் 3டி. நடிகை பிபாசா பாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் இம்ரான் அப்பாஸ் நஹ்வி, முகுல் தேவ், பிக்ரம்ஜீத் கன்வர்பால், தீப்ராஜ் ரானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஹானா தத்தாக பிபாசா பாசு நடித்துள்ளார். ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடப்பது போன்று கதை நகர்கிறது. காட்டுக்குள் இருக்கும் அந்த வீட்டில் அஹானா தத் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவராக குணால் ஆனந்த் என்ற கதாபாத்தில் இம்ரான் அப்பாஸ் நடித்துள்ளார்.
அந்த வீட்டில் தங்கி இருக்கும் உறவினர்கள் ஒரு மர்ம விலங்கினத்தால் தாக்கப்படுகின்றனர். குணால் மற்றும் புரோபசர் சாதனாவாக வரும் முகுல் தேவ் ஆகியோரின் உதவியுடன் அஹானா அந்த மர்ம உயிரினத்திடம் இருந்து எவ்வாறு தன்னையும், தன் விருந்தினர்களையும் காப்பாற்றி கொள்கிறாள் என்பதை திகிலுடன் சொல்வது தான் கிரியேச்சர் படத்தின் கதை.
                                                                                                        மேலும், . . . .

ஆள் (2014) விமர்சனம்

Aal Tamil Movie Review

ஆள் (2014)


நடிகர் : வித்தார்த்
நடிகை : ஹர்திகா ஷெட்டி
இயக்குனர் : ஆனந்த கிருஷ்ணன்
இசை : ஜோஹன்
ஓளிப்பதிவு : உதய குமார்
ஆமீர். சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல... அவருடைய காதலி.
சிக்கிமில் தனியாக வசித்து வரும் ஆமீருக்கு எப்படியாவது தனது குடும்பத்தை சிக்கிமிற்கு கொண்டு வந்து செட்டிலாகி விடவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.
இந்நிலையில், இவர் பணியாற்றி வரும் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கிடையே சண்டை வருகிறது. முஸ்லீம் மாணவனான ரிஸ்வானை சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவன், தான் முஸ்லீம் என்பதால்தான் தன்னை சக மாணவர்கள் கேலியாகவும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள் என்று ஆமீரிடம் கூறுகிறான்.
இதனால் அவன்மீது இரக்கம் காட்டும் ஆமீர், அவனை தன்னுடன் வந்து தங்குமாறு கூறுகிறார். ரிஸ்வானும் அவருடன் வந்து தங்குகிறான். இருவரும் ஆசிரியர்-மாணவன் பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.
                                                                                                  மேலும், . . . . 

வச்சிக்கவா (2014) விமர்சனம்

Vachikava Movie Review


வச்சிக்கவா (2014)

நடிகர் : மாணிக்கவேல்
நடிகை : அச்சிதா
இயக்குனர் : ஏ.ஆர்.ரபி
இசை : ரித்தேஷ்
ஓளிப்பதிவு : ஏ.ஆர்.ரபி
நாயகன் மாணிக்கவேலும் நாயகி அச்சிதாவும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அச்சிதாவிற்கு மாணிக்கவேல் முறைப்பையன். இருவரும் சிறுவயதில் இருந்தே ஸ்கூலுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள். அச்சிதாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் மாணிக்கவேல். ஆனால், அச்சிதாவிற்கு இந்த விசயம் தெரியாமல் மாணிக்கவேலுடன் முறைப்பையன் என்பதால் சாதாரணமாக பழகி வருகிறார்.
மாணிக்கவேலுக்கு அச்சிதா மீதுள்ள காதல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தன் காதலை சொல்ல பல வழிகளில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் பக்கத்து ஊரில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு செல்கிறார் அச்சிதா. அந்த ஊரில் உள்ள பள்ளியில் சிறுவர்கள் அடிக்கடி காணாமல் போகிறார்கள். இது தெய்வ குற்றம் என்று சொல்லி ஊரில் உள்ள மக்களை ஏமாற்றிக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் சிறுவர்களை பலி கொடுத்து வருகிறார் சாமியாரான ராஜ அம்மையப்பன்.
அப்படி ஒருநாள் அச்சிதா செல்லும் வழியில் சாமியார் ஒரு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து அவனை மயங்க வைத்து கடத்தி செல்வதை பார்த்து விடுகிறார். அதை தன் அக்காவின் கணவரான ரபியிடம் சொல்கிறார். அவர் அந்த சாமியார் மீது போலீசிடம் தகவல் கொடுக்க, போலீசார் சாமியாரை கைது செய்து விடுகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாததால் ஜெயிலில் இருந்து வெளியில் வரும் சாமியார் அச்சிதாவை பழி வாங்க நினைக்கிறார்.
                                                                                                       மேலும், . . . . 

துடிக்கும் துப்பாக்கி (2014) விமர்சனம்

Scarlet Johansson in Lucy 2014 Movie Review (In Tamil Dubbed Thudikkum Thuppaki (Lucy) Movie)

Scarlet Johansson in Lucy 2014 Movie Review (In Tamil Dubbed Thudikkum Thuppaki (Lucy) Movie)
Scarlet Johansson in Lucy 2014 Movie Review

துடிக்கும் துப்பாக்கி (2014)

நடிகர் : மோர்கன் ஃப்ரீமேன்
நடிகை : ஸ்கார்லெட் ஜோஹான்சன்
இயக்குனர் : லுக் பெசோன்
இசை : எரிக் செர்ரா
ஓளிப்பதிவு : தியரி அர்போகஸ்ட்
மேற்படிப்பு படிப்பதற்காக சீனாவுக்கு வருகிறாள் லூசி. அவளிடம் சூட்கேஸ் ஒன்றை கொடுத்து அதை சீனாவில் இருக்கும் ஜேன்ங் (மின் சிக் சோய்) என்ற மிகப்பெரிய தாதாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறான் அவளுடைய நண்பன். லூசி அந்த வேலையை செய்ய மறுக்கிறாள்.
அதனால் அவளது கையில் சூட்கேசுடன் ஒரு கைவிலங்கை மாட்டி, அந்த கைவிலங்கின் சாவி ஜேன்ங்கிடம் இருக்கிறது. அவனிடம் சூட்கேசை ஒப்படைத்து கைவிலங்கை நீக்கிக் கொள் ஒன்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். லூசி வேறு வழியில்லாமல் ஜேன்ங்கிடம் சென்று சூட்கேஸை ஒப்படைத்துவிட்டு தனது கையை விடுவித்துக் கொள்கிறாள்.
அந்த சூட்கேசுக்குள் மூளையின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் ரசாயன பவுடர் இருக்கிறது. அதை உலகில் உள்ள பல நாடுகளுக்கு அனுப்ப திட்டம் போட்டுள்ள ஜேன்ங், லூசி மற்றும் நான்கு பேரின் உடம்புக்குள் அந்த பவுடரை பாக்கெட் போட்டு தைத்து விடுகிறான். லூசி அந்த வேலையை செய்ய அடம்பிடிக்கிறாள்.
ஜேன்ங்கின் அடியாட்கள் அவளை அடித்து துன்புறுத்துகின்றனர். அப்போது லூசியின் வயிற்றுக்குள் இருந்த ரசாயன பவுடர் பாக்கெட் உடைந்து அவளுடைய ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் லூசிக்கு மிகப்பெரிய சக்தி கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
அவளுடைய மூளை சாதாரண மனிதர்களைவிட 10 சதவீதம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்துகொண்ட லூசி அங்கிருந்து தப்பித்து புரொபசர் நார்மனிடம் (மோர்கன் ஃப்ரீமேன்) சென்று தன்னுடைய பிரச்சினைக்கு தீர்வு காண செல்கிறாள். அதே நேரத்தில் தன்னிடமிருந்து தப்பித்துச் சென்ற லூசியை தனது ஆட்களுடன் தேடிச் செல்கிறான் ஜேன்ங்.
நேரம் ஆக ஆக லூசியின் மூளை வேலை செய்யும் திறன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் அவளுக்கு புதுவிதமான சக்திகளும் வருகின்றது. இறுதியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.
                                                                                                   மேலும், . . . . 

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 பயங்கர ஆயுதங்களுடன் எல்லையில் காத்து இருக்கிறார்கள் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் முறியடிக்க ராணுவம் தயார் நிலை
ஸ்ரீநகர், செப்டம்பர், 21-09-2014,
காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் 200 தீவிரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஷ்மீரில் ஊடுருவல்
பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாம்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய பகுதிக்குள் அடிக்கடி ஊடுருவி நாச வேலைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்காக காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் அவர் களை இந்திய ராணுவம் அவ்வப்போது விரட்டியடித்து வருகிறது. மேலும் சில நேரங்களில் ராணுவத்துடன் நடக்கும் மோதல்களில் அவர்கள் கொல் லப்பட்டு வருகின்றனர்.
200 தீவிரவாதிகள்
இந்தநிலையில் காஷ்மீரில் ஊடுருவுவதற்காக 200 தீவிரவாதிகள் தற்போதும் எல்லைப் பகுதியில் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
                                                                                                                    மேலும், . . . .

காஷ்மீரை மீட்கப்போவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு இந்தியா கடும் கண்டனம் ‘காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை’

காஷ்மீரை மீட்கப்போவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பேசி இருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இஸ்லாமாபாத், செப்டம்பர், 21-09-2014,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியரின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி.
25 வயதான இவர் பாகிஸ்தான் மக்கள்கட்சியின் இணைத் தலைவராக உள்ளார்.
தேர்தலில் போட்டியிட திட்டம்
கடந்த ஆண்டு அங்கு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. அடுத்து, 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு வழி நடத்த இப்போதே பிலாவல் தயார் ஆகி வருகிறார்.
இது தொடர்பாகசமீபத்தில் கராச்சியில் பத்திரிகையாளர்களை பிலாவல் சந்தித்து பேசினார்.
                                                                                                        மேலும், . . . .

ஆவின் பாலை திருடி கலப்படம் செய்த வழக்கு கைதான முக்கிய குற்றவாளி வீட்டில் அதிரடி சோதனை ஆதாரங்கள் சிக்கியதாக போலீசார் தகவல்

சென்னை, செப்டம்பர், 21-09-2014,
ஆவின் நிறுவனத்துக்கு கொண்டுசெல்லும் பாலை திருடி, அதற்கு பதில் தண்ணீரை கலந்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆதாரங்களை கைப்பற்றினர்.
பால் திருட்டு
விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அருகேயுள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஆவின் நிறுவனத்துக்கு பால் கொண்டு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து பால்களை திருடி, அதற்கு பதில் தண்ணீர் கலப்பதை வெள்ளிமேடு போலீஸ் நிலைய போலீசார் கண்டு பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பலரை கைது செய்தனர்.
8 பேர் கைது
பாலில் தண்ணீர் கலக்கும் மோசடி, திண்டிவனம் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் நடந்துள்ளது என்று தெரியவந்ததை தொடர்ந்து,
                                                                                                                மேலும், . . . .

முதலாம் உலகப் போரின்போது சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் 100 ஆண்டுகள் நிறைவு



சென்னை, செப்டம்பர், 21-09-2014,
முதலாம் உலகப் போரின்போது, சென்னை நகரை ‘எம்டன்’ கப்பல் குண்டுவீசி தாக்கிய தினம் நாளையுடன் 100-வது ஆண்டை நிறைவு செய்கிறது.
முதலாம் உலகப்போர்
உலகத்தையே உலுக்கிய முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் நடைபெற்றது. இந்தப் போரானது, நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.
முதலாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தையும் அமைத்திருந்தனர்.
எம்டன் போர்க்கப்பல்
பெரும்பாலான ஆங்கிலேயர்கள் சென்னையில் வாழ்ந்ததால், ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து இடம்பெற்றிருந்த நேச நாடுகளின் கையே ஓங்கியிருந்தாலும், அவர்களின் ஆளுகையில் உள்ள ஒருசில இடங்களையாவது தாக்கிவிட வேண்டும் என்று ஜெர்மனி நினைத்தது.
தாக்குதலை நடத்த அவர்கள் தேர்வு செய்த இடம் சென்னை. அதற்காக, ஜெர்மனியின் கடற்படைக்கு சொந்தமான எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற நவீன போர்க் கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னையை நோக்கி வீரர்கள் விரைந்தனர். அந்த கப்பலில், தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் என்ற வீரரும் இடம்பெற்றிருந்தார்.
இந்தியாவை மீட்க
ஜெர்மனி நாட்டின் போர் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்து பிடியில் இருந்து தாய் நாடான இந்தியாவை மீட்க வேண்டும் என்று தீராத வேட்கை கொண்டிருந்தார்.
                                                                                               மேலும், . . .