Sunday 28 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு புதிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்கிறார்


அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்கிறார்.
சென்னை, செப்டம்பர், 29-09-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாசிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
ஆலோசனை
இதனால் அவருக்கு பதிலாக புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
                                                                                                  மேலும், . . . . 

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் நாளை விசாரணைக்கு வரும்

பெங்களூர், செப்டம்பர், 29-09-2014,
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வக்கீல் பி.குமார் தெரிவித்தார். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இதேபோல் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால், அவர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜாமீன் மனு
தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பின் நகல் ஜெயலலிதாவின் வக்கீல்களுக்கு கிடைத்து உள்ளது.
                                                                                                              மேலும், . . . . 

அரசியல் வெற்றிடம் ஏற்படவில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது ஐகோர்ட்டில் அரசு வாதம்

சென்னை, செப்டம்பர், 29-09-2014,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று ஐகோர்ட்டில் அரசு சார்பில் வாதிடப்பட்டது.
வன்முறை
சென்னை ஐகோர்ட்டில் மனுதாரர்கள் டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் என்.ராஜாராமன், வக்கீல் எஸ்.ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கட்சியினர் சாலைகளுக்கு வந்து பந்த் நடத்தியும், வன்முறையில் ஈடுபடவும் தொடங்கினர்.
இயல்பு நிலை பாதிக்கப்பட்டது
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் பஸ் எரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டனர்.
                                                                                                      மேலும், . . . . . 

சென்னையில், இயல்புநிலை திரும்பியது வணிக வளாகங்கள், திரையரங்குகள் வழக்கம்போல இயங்கின

சென்னை, செப்டம்பர், 29-09-2014,
சென்னையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் நேற்று வழக்கம்போல இயங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்பு
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
                                                                                                மேலும், . . . . . 

No comments:

Post a Comment