Friday 27 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2015) காலை, IST- 08.30 மணி, நிலவரப்படி,

எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில்கள் ஓடும் என்று அறிவிப்பு

சென்னை, மார்ச்.28-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக அணைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பஸ்-ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                         மேலும்....

முதுபெரும் பா.ஜனதா தலைவருக்கு மத்திய அரசு கவுரவம் 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார்.
புதுடெல்லி, மார்ச்.28-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது.
91 வயது தலைவர்
அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு அறிவித்து பெருமை சேர்த்தது.
91 வயதாகும் வாஜ்பாய், 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர்;
                                                                                                                மேலும்....
தமிழக சட்டசபை இன்று நடைபெறாது கூட்டத்தை ஒத்திவைத்து அறிவிப்பு

சென்னை, மார்ச்.28-
இன்று நடக்க இருந்த தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலகம் வெளியிட்டது.
இன்று முழு அடைப்பு
கர்நாடக அரசின் மேகதாது திட்டம் உள்பட தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தலையிட்டு தடுக்கக் கோரி தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
                                                                                          மேலும்....

தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரியின் குடும்பத்தினர் நெல்லையில் வீட்டை காலி செய்தனர் அரசியல்வாதிகள் மிரட்டலால் சென்னையில் குடியேற முடிவு

நெல்லை, மார்ச்.28-
தற்கொலை செய்துகொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் நெல்லையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள். அரசியல்வாதிகள் மிரட்டி வருவதால் சென்னையில் குடியேற இருப்பதாக கூறினார்கள்.
அதிகாரி தற்கொலை
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த மாதம் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
                                                                                                       மேலும்....

இன்றைய முக்கிய செய்திகள் (27-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (27-03-2015) காலை, IST- 10.30 மணி, நிலவரப்படி,

உன்னத மன்னருக்கு ஒர் பாரத ரத்னா வாஜ்பாய்க்கு குவியும் வாழ்த்துக்கள்

புதுடில்லி, மார்ச், 27,2015
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் இன்று பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதற்கென ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது இல்லத்திற்கு சென்று வழங்குகிறார். அவருடன் பிரதமர் மோடியும் செல்கிறார்.
இன்று வழங்கப்படும் பாரத ரத்னா இவரது சேவை மனப்பாண்மைக்கு கிடைத்த பரிசு என்று, இவருக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
                                                                                                     மேலும்....

கர்நாடக அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்: தமிழகத்தில் நாளை ரெயில்-சாலை மறியல் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு

சென்னை, மார்ச்.27-
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து, தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) ரெயில்-சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஆதரவு?
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் விவசாயிகள், அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு, வணிகர்கள், பஸ், லாரி உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள், சேவை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று(நேற்று) சந்தித்து வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
                                                                                        மேலும்....

காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
புதுடெல்லி, மார்ச்.27-
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத் தின் சில மாவட்டங் களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
                                                                                                       மேலும்....

ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பலி துணை விமானி, சதி செய்து விமானத்தை மலை மீது மோதவைத்தார் கருப்பு பெட்டி மூலம் வெளியான பரபரப்பு தகவல்


பாரீஸ், மார்ச்.27-
ஆல்ப்ஸ் மலையில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில், துணை விமானி சதி செய்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
விமான விபத்து
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு கடந்த 24-ந் தேதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் ஆல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51
                                                                                            மேலும்....

Thursday 26 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

நிலக்கரி சுரங்க வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு பிறப்பித்த சம்மனை ரத்து செய்யக்கோரி மன்மோகன்சிங் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுடெல்லி, மார்ச்.26-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் தனிக்கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சம்மன்
கடந்த 2005-ம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நிலக்கரித் துறையின் பொறுப்பும் அவர் வசம் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கத்தில் இருந்து ண்டால்கோ என்னும் நிறுவனத்துக்கு நிலக்கரியை எடுக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக சி.பி.ஐ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி பாரத் பராசர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவராக, ஏப்ரல் 8-ந் தேதியன்று நேரடியாக ஆஜராகுமாறு கடந்த 11-ந் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
                                                                                                               மேலும்....

தமிழக பட்ஜெட்

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ரூ.650 கோடிக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை, மார்ச்.26-
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பட்ஜெட் தாக்கல்
சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 9.56 மணிக்கு வந்தார்.
சபாநாயகர் ப.தனபால், ‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’’ என்ற திருக்குறளை வாசித்து காலை 10 மணிக்கு சட்டசபை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், 2015-2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (வரவு- செலவு அறிக்கை) நிதி இலாகா
                                                                                                                 மேலும்....

திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது நடுரோட்டில் கார் கவிழ்ந்து சென்னை பெண் டாக்டர் பலி


விழுப்புரம், மார்ச்.26-
நடுரோட்டில் கார் கவிழ்ந்து, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் பலியானார். திருமண வீட்டுக்கு சென்றுவிட்டு தோழிகளுடன் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பெண் டாக்டர்
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் மகள் பிரணவப்பிரியா (வயது 27). இவர் மதுராந்தகம் அருகே உள்ள சின்னகேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா தனது தோழிகள் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் பிரீத்தி (23), நீலாங்கரையை சேர்ந்த டாக்டர் திருமேனி (24) ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை திருமண விழா முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார்.
கார் கவிழ்ந்து பலி
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பிரணவப்பிரியாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டபடி சாலையின் மறுபக்கத்திற்கு சென்று கவிழ்ந்தது.
இதில் டாக்டர் பிரணவப்பிரியா காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
                                                                                                          மேலும்....

கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை வைத்திருக்கிறேன் தாம்பரத்தை தாண்டினால் ‘தாமரை’யை யாருக்கும் தெரியவில்லை குஷ்பு பேட்டி

சென்னை, மார்ச்.26-
தாம்பரத்தை தாண்டினால், ‘தாமரை’யை யாருக்கும் தெரியவில்லை. இதுதான் தமிழக பா.ஜ.க.வின் எழுச்சி என்றும், கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை இன்னமும் வைத்திருக்கிறேன் என்றும் நடிகை குஷ்பு கூறினார்.
இளங்கோவன் ஒத்துழைப்பு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின், தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘காங்கிரஸ் கட்சியில் நான் சேர்ந்ததில் இருந்து, எனக்கு தேசிய அளவில் பதவி கிடைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிகம் ஆசைப்பட்டார். தற்போது பதவி கிடைத்துவிட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒத்துழைப்பு இல்லாமல் எனக்கு பதவி கிடைத்திருக்காது. அவருடைய ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது’ என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                                மேலும்....

Wednesday 25 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஆட்சேப கரமான கருத்துகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி, மார்ச்.25-
கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பை நகரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
அதை விமர்சித்து ‘பேஸ்புக்’ பக்கங்களில் எழுதியதாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா மற்றும் ரீனு சீனிவாசன் ஆகிய இரு பெண்கள் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                    மேலும்....

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் வரிச்சலுகைகள் இருக்க வாய்ப்பு

சென்னை, மார்ச்.25-
2015-16-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்
ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த 4 பட்ஜெட்டுகளையும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இன்று பட்ஜெட்
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
                                                                                                                               மேலும்....

கட்சியில் சேர்ந்த 5 மாதத்தில் பதவி: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் சோனியா காந்தி அறிவிப்பு

சென்னை, மார்ச்.25-
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 5 மாதத்தில் நடிகை குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு
தி.மு.க.வில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விலகிய நடிகை குஷ்பு, டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார்.
                                                                                                         மேலும்....

எம்.பி.பி.எஸ். என்பதற்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமை கைதான போலி டாக்டர் தம்பதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, மார்ச்.25-
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
போலி டாக்டர் தம்பதி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் வேடம் போட்டதோடு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற படிப்புகள் பற்றி இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை.
                                                                                            மேலும்....
 

Tuesday 24 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

மாநகராட்சி கமிஷனரின் நண்பர்கள் என்று ஏமாற்றி மோசடி சென்னையில் போலி டாக்டர் தம்பதி கைது வேலைவாங்கி தருவதாக கோடி, கோடியாக சுருட்டியதாக பரபரப்பு தகவல்கள்

சென்னை, மார்ச்.24-
மாநகராட்சி கமிஷனர் தங்கள் நண்பர் என்று ஏமாற்றி, சென்னையில் கோடி, கோடியாக வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் காமராஜ் புகார்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்தார். பிளஸ்-2 வகுப்புக்கு பாடம் நடத்தினார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் அஜீத் என்ற மாணவனுக்கு நான் வீட்டுக்கு சென்று டியூசன் சொல்லிக் கொடுப்பேன்.
                                                                                                               மேலும்....

சென்னையில் நடைபெறுகிறது தமிழ்நாடு, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பேச்சுவார்த்தை நல்லெண்ண நடவடிக்கையாக 54 மீனவர்களை இலங்கை விடுவித்தது

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழக-இலங்கை மீனவ பிரதிநிதிகள் சென்னையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக, சிறைபிடிக்கப்பட்ட 54 மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுவித்தது.
சென்னை, மார்ச்.24-
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
நீடிக்கும் பிரச்சினை
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
                                                                                                                       மேலும்....

2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ ரூ.4,632 கோடிக்கு தாக்கல் சாலை பணிகளுக்கு ரூ.1,862 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச்.24-
2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் ரூ.4,632 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. சாலை பணிகளுக்கு மட்டும் ரூ.1,862 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘பட்ஜெட்’ கூட்டம்
சென்னை மாநகராட்சியின் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.
                                                                                                                          மேலும்....

ஜெயிலுக்கு சென்ற ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல்: போலீஸ்காரர் கடத்திக் கொலை சென்னை கோர்ட்டில் 7 பேர் சரண்

புதுச்சேரி, மார்ச்.24-
ஜெயிலுக்கு கணவனை பார்க்கச் சென்ற ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்ட புதுச்சேரி போலீஸ்காரர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். ரவுடி உள்பட 7 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
போலீஸ்காரர் மாயம்
புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்தவர் ரகு என்ற ரகுபதி (வயது 31). போலீஸ்காரரான இவரது மனைவி தாமரைச்செல்விக்கு (28) சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் வாணரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 19-ந்தேதி ரகுபதி வாணரப்பேட்டைக்கு சென்று மனைவி குழந்தையை பார்த்துச் சென்றார். அதன் பிறகு அவரை காணவில்லை.
இது குறித்து தாமரைச்செல்வி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். ரகுபதியின் புகைப்படம் விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே சாலையோரம், ரவியின் பிணம் ரத்தவெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் அவரது மோட்டார்சைக்கிளும் கிடந்தது. விபத்து என்று கருதிய திருநாவலூர் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த தகவல் முதலியார்பேட்டை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்காதல்
ரகுபதியின் பெற்றோர் சென்று உடலை அடையாளம் காட்டினர்.
                                                                                                                         மேலும்....

Monday 23 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

'வாட்டர் மேன் ஆப் இந்தியா' ராஜேந்திர சிங்கிற்கு உலகின் சிறப்பு மிக்க பரிசு வழங்கப்பட்டது

மார்ச் 23,2015, 11:07 AM IST
1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்து 'வாட்டர் மேன் ஆப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்கிற்கு, இத்துறையில் சிறப்பான செயல்பாட்டிற்காக உலகின் உயர்ந்த பரிசான 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' பரிசு வழங்கப்பட்டது
தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சுவீடனை சேர்ந்த அமைப்பு, ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
                                                                                                 மேலும்....

ஆப்கானில் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் அப்பாவி - விசாரணை அதிகாரி

மார்ச் 23,2015, 10:15 AM IST
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் அப்பாவி என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள மசூதியின் அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தாவை, அப்பகுதியை சேர்ந்த மக்கள் அடித்து கொலை செய்தனர்.
                                                                                          மேலும்....


சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்

சிங்கப்பூர், மார்ச் 23, 2015, 8:55 AM IST
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம் அடைந்தார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
                                                                                                             மேலும்....

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது பிரதமர் மோடி உறுதி

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக கூறிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என்று உறுதி அளித்தார்.
புதுடெல்லி, மார்ச்.23, 2015, 6:30 AM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி விஜயதசமி நாளில் இருந்து நாட்டு மக்களுடன் மாதம் ஒரு முறை ‘மன் கி பாத்’ (‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’) என்ற தலைப்பில், வானொலியில் பேசி வருகிறார்.
வானொலியில் பேச்சு
இது நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றடைவதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் நேற்றும் அவர் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் 30 நிமிடங்கள் பேசினார். இந்த உரையை அவர், நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிற நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா பற்றி விளக்குவதற்காக பயன்படுத்திக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                            மேலும்....

Friday 20 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் கடும் எதிர்ப்பு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டம் ரத்து ஆகிறது டெல்லி மேல்-சபையில் பெட்ரோலிய மந்திரி தகவல்

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி மேல்-சபையில் பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
புதுடெல்லி, மார்ச். 21-
தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
மீத்தேன் எரிவாயு திட்டம்
இதைத்தொடர்ந்து, இந்த எரிவாயுவை எடுத்து பயன்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, இதற்கான ஒப்பந்தத்தை ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்து ஆனது.
இதனால் அந்த நிறுவனம், அந்த திட்டம் தொடர்பான சில பூர்வாங்க பணிகளை தொடங்கியது.
                                                                                                        மேலும்....

சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராகிவிட்டார்கள் சென்னையில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு

சென்னை, மார்ச்.21-
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராகிவிட்டார்கள் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசினார்.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. தெற்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்தியமந்திரிகள் தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், பேராயர் எஸ்றா சற்குணம், தி.மு.க.தலைவர் கருணாநிதி மகன் மு.க. தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
                                                                                                            மேலும்....


சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பார் கவுன்சில் அலுவலகம் மீது செருப்பு-கற்கள் வீச்சு வக்கீல்கள் போராட்டத்தில் பெரும் பரபரப்பு

சென்னை, மார்ச்.21-
வக்கீல் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், பார் கவுன்சில் அலுவலகம் மீதும், போலீசார் மீதும் செருப்புகள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் எதிர்ப்பு
வக்கீல் எஸ்.பிரபாகரன் தலைமையிலான தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்துக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், கடந்த 8-ந்தேதி அங்கீகாரம் வழங்கியது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்துக்கு பார் கவுன்சில் வழங்கிய அங்கீகாரத்தை திரும்ப பெறவேண்டும். இந்த அங்கீகாரம் முறையற்ற வழிகளில் பெறப்பட்டுள்ளது என்று கூறி, பார் கவுன்சிலை பல முறை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கம்,
                                                                                                மேலும்....


உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து ரெயில் கவிழ்ந்து 38 பேர் பலி 150 பயணிகள் காயம்

ரேபரேலி, மார்ச்.21-
உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 38 பேர் பலி ஆனார்கள். மேலும் 150 பயணிகள் காயம் அடைந்தனர்.
ரெயில் தடம் புரண்டது
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள பச்ரவான் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9.10 மணிக்கு, அந்த ரெயில் திடீரென்று விபத்துக்கு உள்ளானது.
ரெயில் நிலையத்தை நெருங்கும்போது ரெயில் என்ஜினும், அதை அடுத்துள்ள 2 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன.
                                                                                                            மேலும்....

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு புதிய முயற்சி சோனியா உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
புதுடெல்லி, மார்ச்.20-
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தில், தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில திருத்தங்களை செய்து உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.
இந்த அவசர சட்டம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதியுடன் காலாவதி ஆகிறது.
                                                                                                                   மேலும்....

பீகார் மாநில எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விநோதம் மாணவர்கள் காப்பி அடிக்க ஜன்னல் மீது ஏறி ‘பிட்’ காகிதம் கொடுத்த பெற்றோர்

பாட்னா, மார்ச்.20-
நாளந்தா பல்கலைக்கழகத்தை பெற்ற பெருமைமிக்க மாநிலம் பீகார். ஒரு காலத்தில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு, அங்கு தற்போது நடந்து வரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறந்த உதாரணம் ஆகும்.
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
                                                                                                                        மேலும்....

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மச்சாவு: ‘சி.பி.ஐ. விசாரணை நடத்த தயார்’ மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.20-
கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிகுமார் மர்ம மரணத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்தத் தயார் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
மர்மச்சாவு
நேர்மையான அதிகாரி என்ற பெயர் எடுத்த கர்நாடக அரசின் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் டி.கே.ரவி (35 வயது), பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கடந்த 16-ந் தேதி தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அதை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக மாநில குற்றப்புலனாய்வுத்துறை (சி.ஐ.டி.) விசாரணைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் ரவியின் தந்தை கரியப்பா, தாயார் கவுரம்மா, சகோதரர் ரமேஷ் மற்றும் உறவினர்கள்,
                                                                                                              மேலும்....

மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறிவைக்கும் குஷ்பு கட்சி மேலிடம் பரிசீலனை

சென்னை, மார்ச் 20–
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லெட்சுமி உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இதுவரை அவருக்கு கட்சி பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
அதே நேரத்தில் மக்களை கவரும் நட்சத்திர பேச்சாளராக குஷ்பு திகழ்வதால் கூட்டம் திரள்கிறது.
                                                                                                 மேலும்....

Wednesday 18 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

கர்நாடக மாநிலத்தில் மர்ம மரணம் அடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி “சி.பி.ஐ. விசாரணை நடத்த மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்”


பெங்களூரு, மார்ச்.19-
ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்று அவரது பெற்றோர் கூறினார்கள்.
நேர்மையான அதிகாரி
கர்நாடக மாநில அரசின் வணிகவரித்துறை கூடுதல் கமிஷனர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவிகுமார், நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர்.
35 வயதான அதிகாரி ரவிகுமார், கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணம் தூக்கில் தொங்கியது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம்
அந்த மாநில முதல்-மந்திரி சித்தராமையா, அதிகாரி ரவிகுமார் மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
                                                                                                         மேலும்....

நெல்லையில் வீடு புகுந்து 3 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை கள்ளக்காதலனுடன் ஓடியதால் கொன்றதாக சரண் அடைந்த கணவர் வாக்குமூலம்

நெல்லை, மார்ச்.19-
நெல்லையில் வீடு புகுந்து 3 குழந்தைகளின் தாயை அவரது கணவரே வெட்டிக்கொலை செய்தார். பின்னர் அரிவாளுடன் போலீசில் சரண் அடைந்த அவர் ‘தனது மனைவி கள்ளக்காதலுனுடன் ஓடியதால் ஏற்பட்ட அவமானத்தால் அவளை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
கள்ளக்காதல் விவகாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அவரது மனைவி பொன் ஈசுவரி(25). இவர்களுக்கு முத்து சரளா (7), முத்துமாரி (5), சீதாலட்சுமி (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பொன் ஈசுவரி தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு விட்டு பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விடுவார். இவ்வாறு அடிக்கடி அங்கு வரும்போது பொன் ஈசுவரிக்கும் அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
                                                                                                              மேலும்....

உடன்குடி மின் திட்டம் ரத்து குறித்து விசாரணை நடத்த தயாரா? தமிழக அரசுக்கு, கருணாநிதி கேள்வி

சென்னை, மார்ச்.19-
உடன்குடி மின் திட்டம் ரத்து குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயாரா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி மின்திட்டம்
தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத்திட்டத்தின் கீழ் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22-2-2009 அன்று “உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்” நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று, அதன் பின்ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே அமைந்தது.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், உடன்குடியில் பி.எச்.இ.எல். நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முழுவதுமாக 2012-ம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின்வாரியம் மட்டும் தனித்தே அந்தத்திட்டத்தைத் தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட்உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 24-2-2012 அன்று அறிவித்தார்.
டெண்டர்
இதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன.
                                                                                                          மேலும்....

தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது தீவிரவாதிகள் வேடத்தில் நுழைந்த 45 பேரை பிடித்தனர் சென்னை ரிசர்வ் வங்கியை தாக்க வந்த 10 பேரை விரட்டி அடித்தனர்


சென்னை, மார்ச்.19-
தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி போலீசார் முதல் முதலாக இணைந்து நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. ஒத்திகையில் தீவிரவாதிகள் வேடத்தில் நுழைய முயன்ற 45 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
தீவிரவாதிகள்ஊடுருவலை தடுக்க...
கடல் வழியாக வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்திய கடலோர மாநிலங்களில் 6 மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் வேடத்தில் கமாண்டோ படை வீரர்கள் கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய அம்சமாகும்.
தமிழகத்திலும் 13 கடலோர மாவட்டங்களில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 9 முறை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதுபோன்ற ஒரு ஒத்திகை தமிழகத்தில் நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் நடக்க இருந்த பாதுகாப்பு ஒத்திகை தள்ளி போடப்பட்டது. தற்போது 10-வது முறையாக நேற்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் தமிழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு ஒத்திகை முடிவடைகிறது.
ஆந்திரா, புதுச்சேரி...
இந்த ஒத்திகைக்கு ஆபரேஷன் ஆம்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
                                                                                                              மேலும்....

Monday 16 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,


வரிச்சலுகைகள்-புதிய வரிகள் இருக்குமா? 25-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக பட்ஜெட் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
சென்னை, மார்ச்.17-
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது.
2011-12-ம் ஆண்டுக் கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013- 14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம்
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
                                                                                                         மேலும்....

சென்னையில் பாலியல் பலாத்கார முயற்சியில் மாணவி கொலை: கொலையாளி தினேஷ் வெளிமாநிலத்திற்கு தப்பி ஓட்டம் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்

சென்னை, மார்ச்.17-
சென்னையில் பாலியல் பலாத்கார முயற்சியில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தினேசை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறும் நிலை உள்ளது. தினேஷ் வெளிமாநிலத்திற்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவி அருணா கொலை
சென்னை தலைமைச்செயலக காலனி, பராக்கா ரோட்டில் உள்ள வி.ஜே.அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கண்ணப்பன் வீட்டில் பயங்கர படுகொலைச் சம்பவம் கடந்த 9-ந் தேதி அன்று நடந்தது. அதிகாரி கண்ணப்பன் இருதய ஆபரேஷனுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் அவரது மகன் தினேஷ் மட்டும் தனியாக இருந்தார். தினேஷ் என்ஜினீயரிங் பட்டதாரி. தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
தினேஷ், சென்னை சூளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அருணாவை உயிருக்கு உயிராக காதலித்தார்.
                                                                                                               மேலும்....

தனியார் நிறுவனங்களுக்காக தமிழகத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லையா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை, மார்ச்.17-
தனியார் நிறுவனங்களுக்காக தமிழகத்தில் நிலங்கள் கையகப்படுத்தவில்லையா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் நில எடுப்பு திருத்த மசோதாவை இந்தியாவிலே உள்ள பெரும்பாலான கட்சிகளும், பா.ஜ.க.வின் கூட்டணியிலே உள்ள கட்சிகளும் தீவிரமாக எதிர்த்து வெளிநடப்பே செய்துள்ள நிலையில், அந்த மசோதாவை 2013-ல் கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க. தற்போது வலியச் சென்று ஆதரித்து வாக்களித்தது பற்றிய இரட்டை நிலையை விளக்கி நான் கொடுத்த அறிக்கைக்கு, ஜெயலலிதா மீண்டும் பதிலளித்திருக்கிறார்.
தனியார் நிலம்
தனியார் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை;
                                                                                                        மேலும்....

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு பாராளுமன்றம் நோக்கி காங்கிரசார் பேரணி நடத்தியதால் பரபரப்பு போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தி கலைத்தனர்

புதுடெல்லி, மார்ச்.17-
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய காங்கிரசார் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மசோதா நிறைவேற்றம்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில், ‘முக்கிய துறைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் அனுமதி பெற தேவையில்லை’ என்பது உள்ளிட்ட சில திருத்தங்களை சேர்த்து தற்போதைய பா.ஜனதா அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாராளுமன்றம் நோக்கி பேரணி
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
                                                                                                 மேலும்....

Friday 13 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் சிறிசேனாவை சந்தித்தபின் நரேந்திரமோடி பேட்டி


சிறிசேனாவை சந்தித்த பின் நிருபர் களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அரசு விரைவாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
கொழும்பு, மார்ச். 14-03-2015,
பிரதமர் நரேந்திர மோடி செசல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக கடந்த 10-ந் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இலங்கையில் மோடி
முதலில் செசல்ஸ் நாட்டுக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து மொரீஷியஸ் சென்றார்.
மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு போர்ட்லூயிஸ் நகரில் இருந்து, இலங்கைக்கு புறப்பட்ட அவர், நேற்று அதிகாலை 5.25 கொழும்பு நகர் போய்ச் சேர்ந்தார். அங்குள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
விமானநிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும்,
                                                                                                               மேலும்....

நில எடுப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்தது ஏன்? கருணாநிதிக்கு, ஜெயலலிதா பதில்

சென்னை, மார்ச். 14-03-2015,
நிலஎடுப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்தது ஏன்? என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கேள்விக்கு ஜெயலலிதா பதிலளித்து உள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் முடிவு
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடைமுறையில் இருந்த நில எடுப்பு சட்டத்திற்கு மாற்றாக, ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ என்னும் சட்ட முன்வடிவினை 2013-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது. இந்தச்சட்டம் 1-1-2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தில் சில திருத்தங்களை பா.ஜ.க. அவசர சட்டம் மூலம் கடந்த 31-12-2014 அன்று கொண்டு வந்தது.
                                                                                                        மேலும்....

டிராபிக் ராமசாமியை கைது செய்ய போலீசாருக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? அரசு தரப்பிடம், ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

சென்னை, மார்ச். 14-03-2015,
கிரிமினலை கைது செய்வதுபோல், அதிகாலையில் வீடு புகுந்து டிராபிக் ராமசாமியை கைது செய்ய போலீசாருக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்று ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் அரசு தரப்பு வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார்.
ராமசாமி கைது
வீரமணி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமியை வேப்பேரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், ஜி.ரவிகுமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
தற்போது, டிராபிக் ராமசாமியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை வழங்க புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாலை கைது
இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
                                                                                                                    மேலும்....

நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு சபாநாயகரின் நாற்காலி வீச்சு: மோதலில் 20 எம்.எல்.ஏ.க்கள் காயம்



திருவனந்தபுரம், மார்ச். 14-03-2015,
கேரள சட்டசபையில் நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சிகளுக்கும், சபை பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 எம்.எல்.ஏ.க்கள் காயமடைந்தனர்.
லஞ்சப் புகார்
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகிப்பவர், 82 வயது கே.எம்.மாணி. இவர் மூடப்பட்ட மதுபான பார்களை புதுப்பிக்க உரிமம் வழங்கியதில் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. கேரள பார் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பிஜூ ரமேஷ் இந்த குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் மாணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதவி விலக வற்புறுத்தல்
இந்த விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் நிதிமந்திரி மாணி பதவி விலகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி எம்.எல்.ஏ.க்கள் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இதனிடையே, மார்ச் 13-ந்தேதி சட்டசபையில் 2015-2016-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாணி தாக்கல் செய்வார்
                                                                                            மேலும்....