Wednesday 11 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (11-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (11-03-2015) மாலை, IST- 02.30 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா வழக்கு பெங்களூர் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி ஆஜர்

பெங்களூர், மார்ச். 11–03-2015,
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 5–ந்தேதி முதல் தொடர்ந்து இருதரப்பு வாதம் நடந்து வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். அப்போது தங்கள் மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுகளை மறுத்தனர். அரசு தரப்பில் வக்கீல் பவானி சிங் ஆஜராகி வாதாடினார்.
திங்கட்கிழமை 39–வது நாளாக விசாரணை நடந்தது.               
                                                                                                           மேலும்....

சம்மன் அனுப்பியது வருத்தம் அளிக்கிறது மன்மோகன் கருத்து

புதுடெல்லி, மார்ச். 11–03-2015,
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது வட மாநிலங்களில் உள்ள நிலக்கிரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை 142 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மத்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. அதில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து அறிவித்தது.
                                                                                                மேலும்....

பிரிட்டிஷாரின் ஏஜெண்டாக காந்தி செயல்பட்டார் என்ற மார்கண்டேய கட்ஜுவுக்கு பாராளுமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி, மார்ச். 11–03-2015,
பிரஸ் கிளப் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் நேற்று தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
‘காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரை நாட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இன்றைய பாராளுமன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில், கட்ஜுவை கண்டித்து ஒரு மனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் காந்திஜிக்கும், சுபாஷ் சந்திரபோசுக்கும் எதிராக கட்ஜு கூறியுள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தனது கட்டுரையில், மகாத்மா காந்தி, வெள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்தார்.
                                                                                      மேலும்....

தமிழக அரசியலில் புதிய திருப்பம் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கைகோர்க்கும் திருமாவளவன்

சென்னை, மார்ச். 11–03-2015,
விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தன. எம்.பி. தேர்தலில் 2 இடங்களில் நின்ற அக்கட்சி தோல்வியை தழுவியது.
அதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்கும் போதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று திருமாவளவன் அறிவித்து
                                                                                                மேலும்...

No comments:

Post a Comment