Sunday 27 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

ஊழல் சக்திகளை அகற்ற புதிய செயல் திட்டம்

ஆமதாபாத், 28-04-2014,

"அடுத்த மக்களவைத் தேர்தல் களத்தில் இருந்து ஊழல் மற்றும் குற்றச் சக்திகளை முற்றிலும் அகற்ற புதிய செயல் திட்டம் ஒன்றை வைத்துள்ளேன்'' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார். மோடி மேலும் கூறியிருப்பதாவது:

ஊழல், குற்ற விவகாரங்களைப் பொருத்த வரை, குறித்த காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம் ஒன்று என்னிடம் உள்ளது. அதன்படி, வரும் 2019இல் நடைபெற உள்ள 17ஆவது மக்களவைத் தேர்தலில் குற்றம் மற்றும் ஊழல் சக்திகள் பங்கேற்கவே முடியாது.

இப்போதைய எம்.பி.க்களை அந்தச் செயல்திட்டம் முதலில் குறிவைக்கும். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிப்பதற்காக நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரப்படும்.
                                                                                             மேலும், . . .

அழகிரி ஆதரவாளர்கள் மேலும் 10 பேர் நீக்கம்

மதுரை, 28-04-2014,

மதுரையில் திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. முன்னாள் மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதனிடையே, மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மேலும் 10 பேர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்க முடியாது என்று மு.க.அழகிரி கூறிவருகிறார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து அழகிரி விமர்சித்த பிரச்னையில், அவரது ஆதரவாளர்கள் மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 10 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைக் கண்டித்த அழகிரியும் நீக்கப்பட்டார்.

தேர்தலின்போது மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரை, மு.க.அழகிரி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்குமாறு கூறிய அழகிரி, பாஜக கூட்டணிக்கு வாக்குச் சேகரிக்கவும் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.
                                                                                                    மேலும், . . . 

புகார்கள் மீது நடவடிக்கை

சென்னை, 28-04-2014,

லோக்சபா தேர்தலின் போது, சரியாக பணியாற்றாத, கொடுத்த பணத்தை தேர்தல் பணிக்கு செலவிடாமல், ஸ்வாகா செய்த, மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்து, தி.மு.க., தலைவர், கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினிடம், வேட்பாளர்கள் சிலர், அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்காக, மூன்று கட்டமாக, சாலை மார்க்கமாக, 8,000 கி.மீ., தூரத்திற்கு மேல், வாகனம் மூலம் பயணித்து, ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 37 இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி, தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.ஓய்வு இல்லாமல், தேர்தல் பணிகளை மேற்கொண்டதால், தற்போது ஓய்வு எடுப்பதற்காக, அவர் தன் மனைவி துர்காவுடன், நேற்று அதிகாலை, சென்னையிலிருந்து ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார்.

புறப்படும் முன்

இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து, வரும், 2ம் தேதி தான், சென்னை திரும்புகிறார். அதனால், தொழிலாளர் தினமான, மே 1ம் தேதி, ஸ்டாலின் சென்னையில் இல்லை. அந்த நாளில், அவர் சென்னையில் இருந்தால், சிந்தாதிரிப்பேட்டை பூங்காவில் உள்ள, மே தின நினைவுச் சின்னத்தில், வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.வரும் 1ம் தேதி, அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவருக்கு பதிலாக, தி.மு.க., துணை பொதுச் செயலர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோர்,
                                                                       மேலும், . . .. 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் (28-04-2014)

முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்

சென்னை, 28-04-2014,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் முதலமைச்சரை உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

                                                                                              மேலும், . . . 

Saturday 26 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை சென்னை ராணுவ அதிகாரி பலி 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர், 27-04-2014,

காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தீவிரவாதிகள்

அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
                                                                               மேலும், . . . . 

பா.ஜ., கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் இடங்கள் 317 மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தயார்

புதுடெல்லி, 27-04-2014,

'ஒன்பது கட்டங்களாக நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும்; அந்த கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க உதவுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம்மாதம் 7 முதல், மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை, இம்மாதம் 7, 9, 10, 12, 17 மற்றும் 24ம் தேதிகளில், ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

அதிக இடங்களில்...

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், இன்னும் மூன்று கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின், மே 16ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
                                                                                                             மேலும், . . .

மின்வெட்டு தொடர்கிறது - கேட்க நாதியில்லை


சென்னை, 27-04-2014,

தமிழக முதல்வர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் முதன்முறையாக நேற்று அதிகபட்சமாக, 3,870 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

மின் உற்பத்தி

அதிகரித்து உள்ள போதிலும், மின் தேவை அதை விட அதிகமாக உள்ளதால், மின்வெட்டும் தொடர்கிறது. தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகாவாட். இதில், தூத்துக்குடியில், 1,050, மேட்டூரில், 840, வட சென்னையில், 630, எண்ணூரில், 450 என, அனல் மின் நிலையங்களில் மட்டும் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.மேலும், கட்டுமானப் பணி முடிந்து மின் வாரியத்திடம் ஒப்படைத்த, மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட், வட சென்னை புது யூனிட்டில், 600 மெகாவாட், பழைய, புதிய அனல் மின் நிலையங்கள் மூலம், 4,170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். எனினும், எண்ணூர் மின் நிலையம் பழமையானது என்பதால், குறைந்த அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அனைத்து அனல் மின் நிலையங்களிலும் முழு அளவில் மின் உற்பத்தி நடந்தால், 3,800 முதல், 4,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும்.
                                                                                                              மேலும், . . .

கோவையில் காதல் கணவரை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மகளை கடத்திய பெற்றோர் போலீஸ் விசாரணை

கோவை, 27-04-2014,

கோவையில் காதல் கணவரை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மகளை கடத்திய பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதலித்தனர்

கோவை கணபதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் சுதாகர் (வயது25). இவர் அத்திப்பாளையம் பிரிவில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். இவரும் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த மஞ்சு பட்டேல் (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர் வடமாநில பெண் ஆவார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இந்த நிலையில் இருவரது காதலுக்கும் சுதாகர் வீட்டில் பச்சைக்கொடி காட்டினர்.
                                                                    மேலும், . . . 

Tuesday 22 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு முதல் முறையாக தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

சென்னை, 23-04-2014,

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

ஒட்டுப்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

அதிரடி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலில் வன்முறைகளை தடுப்பதற்காகவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் முதன் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

144 தடை உத்தரவு

இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதை கட்டுப்படுத்துவதற்காகவும், வன்முறை நிகழாமல் சட்டம்–ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் குற்ற விசாரணை முறை சட்டத்தின் 144–ம் பிரிவு தடை உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்துகிறோம்.
                                                                                 மேலும், . . . . 

‘சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்’ ஆந்திராவில் நரேந்திர மோடி பிரசாரம்

நகரி, 23-04-2014,

‘முதன் முதலாக தேர்தலை சந்திக்கும் தெலுங்கானா மக்கள் ஆட்சியை சோனியா குடும்பத்திடம் கொடுத்துவிடாதீர்கள்’ என்று நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

ஆந்திராவில் நரேந்திர மோடி பிரசாரம்

ஆந்திராவில் பாரதீய ஜனதா கட்சியுடன் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு மத்திய மந்திரி சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன்கல்யாண் தொடங்கிய ஜன சேனா கட்சியும் ஆதரவு அளித்து உள்ளது. ஆனால் அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

பாரதீய ஜனதா மற்றும் தெலுங்குதேச கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று ஆந்திராவில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆந்திராவில் நேற்று நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் பாலமூர் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது:-
                                                                                                        மேலும், . . . .

நாளை இந்தியாவை வல்லரசாக ஆக்குங்கள்

சென்னை, 23-04-2014,

'லஞ்சம் வாங்காமல் மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்': 'இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. அந்த உரிமையை அனைவரும், தவறாமல் பயன்படுத்தி, லஞ்சம் வாங்காமல், யாருக்கும் பயப்படாமல், மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்தார். அவர், அளித்த பேட்டி:

ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளன?

தமிழகத்தில், 24ம் தேதி, அமைதியாகவும், நேர்மையாகவும், ஓட்டுப்பதிவு நடைபெற, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, 23ம் தேதி கடைசி கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேவையான அளவு இருப்பு உள்ளன. ஓட்டுச் சாவடிகளில், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், நிழல் இல்லையென்றால், ஓட்டு போட வருவோர் நிற்பதற்கு வசதியாக,
                                                                                                  மேலும், . . . 

Monday 21 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார் ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள் சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

சென்னை, 22-04-2014,

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.

சூறாவளி பிரசாரம்

புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சென்னையில் 3 நாட்கள்

அதன் பின்னர், கடந்த 19–ந் தேதி முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் (வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை) வேன் மூலம் வீதி, வீதியாக சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
 

 
                                                                        மேலும், . . . 

‘பாரதீய ஜனதா கூட்டணியால் அரசியல் மாற்றம் ஏற்படும்’ வேலூரில் எல்.கே.அத்வானி பேச்சு

வேலூர், 22-04-2014,

‘பாரதீய ஜனதா கூட்டணியால் அரசியலில் மாற்றம் ஏற்படும்’ என்று வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பேசினார்.
பொதுக்கூட்டம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் மாங்காய் மண்டி அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன்ராஜிலு, தேசிய பொறுப்பாளர் முரளிதரராவ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசியதாவது:–

நான் முதன்முதலில் பாராளுமன்றத்தில் சந்தித்த நபர் சிவாஜிகணேசன். அவரிடம் நீங்கள் நடித்த ஒரு தமிழ்படத்தை பார்த்து உள்ளேன் என்றேன்.
                                                                                                  மேலும், . . . 

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து போட்டி ராகுல்காந்தி அறிவிப்பு

ராமநாதபுரம், 22-04-2014,

பாராளுமன்ற தேர்தலை போன்று தமிழகத்தில் அடுத்து நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்று ராமநாதபுரத்தில் நடந்த பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல்காந்தி பிரசாரம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று ராமநாதபுரம் வந்தார். இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டி.பிளாக் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:–

பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் இன்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதை நினைவுகூர்கிறேன். 50 ஆண்டுகாலத்துக்கு முன்பே ஏழை எளிய குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை தீட்டித் தந்தது நமக்கு எல்லாம் பெருமை.
                                                                                                 மேலும், . . .

இன்றைய முக்கிய செய்திகள் (21-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தில் அத்வானி, ராகுல் போட்டி பிரசாரம்

சென்னை, ஏப்ரல், 21-04-2014,

கோடை வெயிலின் தாக்கத்தையும் மறக்கடிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சி தலைவர்கள் தலைநகர் சென்னையில் சூறாவளி பிரசாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பிரசாரம் நிறைவடைய இன்னும் 32 மணி நேரமே உள்ள நிலையில் தேசிய கட்சி தலைவர்களும் இன்று தமிழகத்தை முற்றுகையிட்டு போட்டி பிரசாரம் செய்கின்றனர்.
                                                          மேலும், . . . .
வைகோவை வெற்றி பெற செய்யுங்கள்: மு.க.அழகிரி

கள்ளிக்குடி, ஏப்ரல், 21-04-2014,

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி எம்.பி. தி.மு.க. வேட்பாளர்களை வீழ்த்த தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மு.க.அழகிரி அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசியதாவது:–
                                                                                                        மேலும், . . . 

தமிழகம் எல்லாவற்றிலும் இருண்டுபோய் உள்ளது: பிரேமலதா பேச்சு


மதுரை, ஏப்ரல், 21-04-2014,

மதுரை பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்து குமாரை ஆதரித்து கொட்டாம்பட்டியில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கொட்டாம்பட்டி பகுதி அதிகமான தென்னை சாகுபடி செய்து வரும் பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் தென்னை சாகுபடிக்கு அதிகரிக்க தேவையான எதையும் தமிழக அரசும் செய்யவில்லை. இங்கு இருக்கும் அமைச்சர்களும் செய்யவில்லை. இந்த பகுதிகளில் உள்ள மாணவ– மாணவிகள் கல்லூரி படிப்பதற்கு நெடுந்தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே கொட்டாம்பட்டியில் அரசு கலைகல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் கனரக தொழிற்சாலைககள் அமைக்கப்படும். அதற்கு தே.மு.தி.க. வேட்பாளரை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
                                                                                                                  மேலும், . . .

Saturday 19 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

‘‘நாட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இனியும் இயக்க முடியாது’’ சோனியா, ராகுல் மீது நரேந்திரமோடி தாக்கு


கவுகாத்தி, 20-04-2014,

சோனியாவும், ராகுலும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் நாட்டை இனியும் இயக்க முடியாது என நரேந்திரமோடி ஆவேசமாகப் பேசினார்.

விலை கொடுக்க வேண்டும்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, அசாமில் காகொய்ஜன் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மன்மோகன்சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்ஜய பாரு ‘விபத்தாக வந்த பிரதமர்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். முடிவுகளை தாயும், மகனும்தான் (சோனியா, ராகுல்) எடுக்கிறார்கள், மன்மோகன் சிங் வெறும் பகட்டுக்குத்தான் என்று நாம் கூறி வந்ததை சஞ்ஜய பாருவின் புத்தகமும் தெரியப்படுத்தி உள்ளது.

‘மவுன மோகன் சிங் அல்ல’

உண்மையான பிரதமர் யார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்தி உள்ளது. மன்மோகன்சிங் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இதற்கு தாயும், மகனும் ஒரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
                                                                                                                      மேலும், . . .

தொழில் அதிபர்களுக்கு விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது தான் குஜராத் மாடல் ராகுல்காந்தி தாக்கு

நாகான், 20-04-2014,

தொழில் அதிபர்களுக்கு விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது தான் ‘குஜராத் மாடல்’ என்று ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் தாக்குதல் தொடுத்தார்.

அசாம் மாநிலம் நாகானில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாய நிலங்கள் பறிப்பு

மோடி தனது குஜராத் மாடல் (மாதிரி திட்டம்) பற்றி பேசுகிறார். அவர் என்ன செய்தார்? ஏழை விவசாயிகளின் விளை நிலங்களை பறித்தார். இப்படி 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தொழில் அதிபர்களான அதானிகளுக்கு மீட்டர் ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்.
                                                                                                       மேலும், . . . 

தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம் வருகை தேர்தல் ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை, 20-04-2014,

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

2 ஆண்டு ஜெயில்

22-ந் தேதி மாலை 6 மணியோடு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன் பிறகு ஊர்வலம், பொதுக்கூட்டம், பேரணி போன்ற எந்த விதத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. அதுமட்டுமல்ல எஸ்.எம்.எஸ்., சி.டி., டி.வி, ரேடியோ, இன்டர்நெட் போன்ற எந்த விதத்திலும் பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது.

ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப அனுமதிக் கக்கூடாது என்று தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த விதியை மீறினால், இரண்டு ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
22-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதள முகவரிகள் மூலம் பிரசாரம் செய்வதை கண்டறிவது சிரமம். அமெரிக்காவில் இருந்துகூட ஒருவரால் பிரசாரம் செய்ய முடியும். அதை கண்காணிப்போம்.

                                                                                                           மேலும், . . . 

இன்றைய முக்கிய செய்திகள் (19-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாஜக ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டில் பதுக்கிய ஊழல் பணம் மீட்கப்படும் ராஜ்நாத்சிங் உறுதி
தஞ்சாவூர், ஏப்ரல், 19–04-2014,
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பழ.அண்ணாமலை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்புமுருகானந்தம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அகோரம், நாகை பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிறது. இதில் காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி, மாறி காங்கிரஸ் அரசுடன் கூட்டணி அமைத்துள்ளன.
                                                                                                        மேலும், . . . 

ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவு மீட்கப்படும்: சீமான்

வானூர், ஏப்ரல், 19–04-2014,
விழுப்புரம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து திருச்சிற்றம் பலம் கூட்டு ரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:–
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஏமார்ந்து போனோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போடவேண்டியது வாக்கு இல்லை. வாக்கரிசி தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி என மாறி மாறி ஆட்சி நடத்தி இருந்தாலும் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்ற தி.மு.க வினால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்?
தேர்தல் அறிக்கையில் கட்ச தீவை மீட்க தீவிரமாக போராடுவோம் என்கிறார் கலைஞர். அப்படியானால் கட்ச தீவை மீட்க இதுவரை தீவிரமாக போராடியது இல்லையா, முதல்வர் பதவியில் இருந்த கலைஞர் இதற்கு போராடியது இல்லை என்றால் ஏன் முதல்வர் பதவி வேண்டும், தேர்தலில் ஏன் வாக்கு கேட்டு வருகிறீர்கள்?
                                                                             மேலும், . . .  

22-ந் தேதி முதல் வேட்பாளர்கள், கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடுகள்
சென்னை, ஏப்ரல், 19–04-2014,
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. அதைத் தொடர்ந்து 22-ந் தேதியில் இருந்து வேட்பாளர்கள், அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்றத் தொகுதி மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 24-ந் தேதி நடக்க உள்ளது. இதற்கான சில ஒழுங்குமுறை விதிகள், 22-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும்வரை நடைமுறைக்கு வருகின்றன. தேர்தல் தொடர்பான கூட்டங்கள், ஊர்வலங்களை யாரும் நடத்துவது, அதில் பங்கேற்பது தடை செய்யப்படுகிறது.
                                                                                    மேலும், . . . 

Thursday 17 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும்
கன்னியாகுமரி பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேச்சு

கன்னியாகுமரி, 18-04-2014,
அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளிடம் இருந்து விடுபடும் வரையில் தமிழகத்துக்கு விமோசனம் கிடையாது என்று கன்னியாகுமரி பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கூறினார்.

பிரசார பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடந்த பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி அருகில் உள்ள முருகன்குன்றத்தில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விமோசனம் கிடையாது
தமிழக அரசு உங்களைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. டெல்லியில் உள்ள மத்திய அரசும் கவலைப்படுவதில்லை. அதனால்தான் இன்னும் இந்த மாவட்டம் வளர்ச்சி அற்ற நிலையில் இருந்து வருகிறது.

                                                                                                    மேலும், . . . .  

குஜராத்தை விட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் கிருஷ்ணகிரி கூட்டத்தில் புள்ளி விவரத்துடன் ஜெயலலிதா பேச்சு


கிருஷ்ணகிரி, 18-04-2014,

குஜராத்தைவிட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் புள்ளி விவரத்துடன் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நேற்று, கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து, பூசாரிப்பட்டி கூட்டு ரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்

பொய் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள தி.மு.க.வினர், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தீட்டியதே தி.மு.க. என்பது போலவும், எனது தலைமையிலான அரசு இந்தத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது என்றும், இதுவரை எந்தப்பகுதிக்கும் தண்ணீர் செல்லவில்லை என்றும், பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.

1965–ம் ஆண்டு முதன் முதலில் இந்தத்திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்தபோது, 1986–ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1987–ல் எம்.ஜி.ஆரின் மறைவினை அடுத்து இதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், 1994–ம் ஆண்டு நான் முதல்–அமைச்சராக இருந்தபோது, சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், மத்திய அரசு அனுமதி தருவதில் தாமதம் செய்ததால், நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. 1996–ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 1998–ல் கர்நாடக அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் மீண்டும் நான் முதல்–அமைச்சரான போது 2003–ல் இந்தத்திட்டத்தை நான் எடுத்துக்கொண்டேன். 18–8–2005 அன்று எனது ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை 1,005 கோடி ரூபாய் மதிப்பில் ஜப்பான் நிதி உதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவை மத்திய அரசுக்கு நான் அனுப்பினேன்.
                                                                             மேலும், . . . 

பாராளுமன்றத்துக்கு 5-வது கட்ட தேர்தல் 121 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது

புதுடெல்லி, 18-04-2014,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற சிறப்புக்குரிய நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

ஐந்தாவது கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ந் தேதி 6 தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட தேர்தல் 9-ந் தேதி 6 தொகுதிகளிலும், மூன்றாவது கட்ட தேர்தல் 10-ந்தேதி 91 தொகுதிகளிலும், நான்காவது கட்ட தேர்தல் 12-ந் தேதி 7 தொகுதிகளிலும் நடைபெற்றன.

ஐந்தாவது கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் பரவியுள்ள 121 தொகுதிகளில் நேற்று நடந்தது. மாநில வாரியாக தேர்தல் நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-

பீகார்-7, சத்தீஷ்கார்-3, காஷ்மீர்-1, ஜார்கண்ட்-6, கர்நாடகம்-28, மத்திய பிரதேசம்-10, மராட்டியம்-19, மணிப்பூர்-1, ஒடிசா-11, ராஜஸ்தான்-20, உத்தரபிரதேசம்-11, மேற்கு வங்காளம்-4
                                                                                           மேலும், . . . .

Tuesday 15 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காவிரி நீர் பிரச்சினையில் துரோகம் செய்தது யார்? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால்

ஆரணி, 16-04-2014,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று, ஆரணி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அதே தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து, வடதண்டலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மின்சார பற்றாக்குறை

கடந்த ஆண்டு 2013-ல் ஜூலை மாதம் முதல் அக்டோபர் 15ந்தேதி வரை மின்வெட்டு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவியது. இதனை, நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது பெருமையாக கூறினேன். இவ்வாறு நான் சொன்னவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு சொல்லி வைத்தாற் போல் திடீர் என ஒரே சமயத்தில் குறைந்தது.


                                                                                                                                         மேலும், . . .

நாட்டின் பரிதாப நிலைக்கு சோனியா, ராகுல் தான் காரணம் நரேந்திரமோடி குற்றச்சாட்டு

ஹசாரிபாக், 16-04-2014,

நாட்டின் பரிதாப நிலைக்கு சோனியா, ராகுல் ஆகியோர் தான் காரணம் என்று நரேந்திரமோடி குற்றம் சாட்டினார்.

ராகுலுக்கு பதிலடி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மராட்டிய மாநிலம், லாத்தூரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “குஜராத் ‘மாதிரி’ அரசு பற்றி நரேந்திரமோடி பேசி வருகிறார். குஜராத் ‘மாதிரி’, ‘டாபி’ (இனிப்பு மிட்டாய்) மாதிரி ஆகும். அவுரங்காபாத் நகரம் மாதிரி ஒரு நிலத்தை ‘டாபி’யை பார்சல் செய்து கொடுத்ததுபோல தொழில் அதிபர் அதானிக்கு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற விலையில் மோடி கொடுத்துள்ளார். எனவே ‘குஜராத் மாதிரி’ என்பது ‘டாபி மாதிரி’ என விமர்சித்தார்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நரேந்திரமோடி, ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

சிறுபிள்ளைத்தனம்

அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                     மேலும், . . .                

ஒன்றிய கவுன்சிலர் படுகொலை கொலை முயற்சியில் 4 முறை தப்பியவரை வெட்டி சாய்த்தனர்


மதுரை, 16-04-2014,

பசுபாண்டியன் கொலையில் முக்கிய குற்றவாளியான, ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் மதுரை அழகர்கோவில் முன்பு ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே 4 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் ஆவார்.

முக்கிய குற்றவாளி

திண்டுக்கல் மாவட்டம் கரட்டழகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது 37). திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 10–1–2012 அன்று திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டியில், தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
                                                                                                                மேலும், . . .  

பாளையங்கோட்டையில் கணவர் வீட்டு முன் இளம்பெண் போராட்டம்

நெல்லை, 16-04-2014,

பாளையங்கோட்டையில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, அவரது வீட்டு முன் இளம்பெண் நேற்று போராட்டம் நடத்தினார்.

மதபோதகர்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஆசீர்வாத தெருவை சேர்ந்தவர் வினோத்ஜேம்ஸ் (வயது 39). அவருடைய மனைவி எஸ்தர் ராணி (35). இவர்களுக்கு பெஞ்சமின் சவேரியார் (10) என்ற மகன் உள்ளான். 5–ம் வகுப்பு படித்து வருகிறான். வினோத் ஜேம்ஸ் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எஸ்தர்ராணி ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய மகனையும் அழைத்து சென்று விட்டார்.
                                                                                                                               மேலும், . . .

Monday 14 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-04-2014)

 இன்றைய முக்கிய செய்திகள் (15-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் சோனியாகாந்தி, நரேந்திரமோடி நாளை வாக்கு சேகரிக்கிறார்கள்

சென்னை, 15-04-2014,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
5 முனைப்போட்டி
தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்த பாராளுமன்ற தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும், தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டும் தேர்தலை சந்திக்கின்றன.

                                                                                                   மேலும், . . . 

இந்திய அரசியல் சாசன சிற்பியான அம்பேத்கரை காங்கிரஸ் அவமதிக்கிறது பிறந்த தினவிழாவில் நரேந்திரமோடி குற்றச்சாட்டு
ஆமதாபாத், 15-04-2014,
இந்திய அரசியல் சாசன சிற்பியான அம்பேத்கரை காங்கிரஸ் அவமதிப்பதாக, அவரது பிறந்த தின விழாவில் பேசிய நரேந்திமோடி குற்றம் சாட்டினார்.
அம்பேத்கார் பிறந்த தினம்
இந்திய அரசியல் சாசனத்தை இயற்றிய தலைமை சிற்பியான அம்பேத்கரின் 123–வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்திநகரில் நடந்த அம்பேத்கார் பிறந்த தினக்கொண்டாட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                மேலும், . . .  


சங்கரன்கோவில் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு


நெல்லை, 15-04-2014,
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் ‘ரோபோ‘ கருவி உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டான். 6 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.
3 வயது சிறுவன்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கணேசன். சங்கரன்கோவில் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஹர்சன் (வயது 3) என்ற மகனும், வைஷ்ணவி (1) என்ற மகளும் உள்ளனர்.

குத்தாலப்பேரி ஊருக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், ஆசிரியர் கணேசனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு தென்னை, எலுமிச்சை பயிரிட்டுள்ளார்.
                                                                                             மேலும், . . . .

Sunday 13 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


கரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு காவிரி பிரச்சினையில் இரு கட்சிகளும் தமிழக மக்களை வஞ்சிக்கின்றன

கரூர், 14-04-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று, கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரையை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
ராயனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
                                                                                                           மேலும், . . . 

தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள் மோடி விளாசல்
சென்னை, 14-04-2014,
''தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் நடுவில் தமிழக மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும், இந்த இருகட்சிகளும் நினைப்பது இல்லை.
''அவர்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் புதிதாக உருவாகி உள்ள, மூன்றாவது சக்தி தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
                                                                                                 மேலும், . . .

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் நரேந்திரமோடி சந்திப்பு
சென்னை, 14-04-2014,
சென்னை வந்த நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடம் நடந்தது. வெளியே வந்த அவர் இன்று தமிழ் புத்தாண்டை யொட்டி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நரேந்திரமோடி வருகை
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல் மந்திரியுமான நரேந்திர மோடி நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார்.
பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக அவர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசப் போவதாக பா.ஜ.க. சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
                                                                                                         மேலும், . . . . 

Saturday 12 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடி சந்திப்பு
சென்னை, 13-04-2014,
லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
இந்த கட்சிகள் சார்பில், 39 தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும் என, கட்சி மேலிடத்திடம், தமிழக பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலும், தமிழ் புத்தாண்டு தினமான, நாளை, தமிழர் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை அணிந்து, மோடி, பிரசாரத்திற்கு தமிழகம் வர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, மோடி இன்று, தமிழகம் வருகிறார்.சென்னை விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், முதல் நிகழ்ச்சியாக, நடிகர் ரஜினி வீட்டுக்கு செல்கிறார். மோடியும், ரஜினியும் தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பை முடித்த பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்திற்கு மோடி வருகிறார்.
                                                                                                                     மேலும்.
திருமணத்தை மோடி மறைத்தது தான் ஆர்.எஸ்.எஸ். போதிக்கும் ஒழுக்க நெறியா? இ.கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா கேள்வி
கடலூர், 13-04-2014,
திருமணத்தை மோடி மறைத்தது தான் ஆர்.எஸ்.எஸ். போதிக்கும் ஒழுக்க நெறியா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று காலையில் கடலூருக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும், மதவெறி, பாசிச கொள்கை கொண்ட பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட வேண்டும், இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக மத்தியில் ஒரு புதிய அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து செல்கிறது.
-------------------------------------------------------------------------------------------மேலும்....
பிரசாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி கறுப்பு பணமா? மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டால் சந்திக்க தயார் காங்கிரசுக்கு மோடி சவால்


புதுடெல்லி, 13-04-2014,
பாராளுமன்ற தேர்தலுக்காக ரூ.10 ஆயிரம் கோடி கறுப்பு பணம் செலவிடப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தினால் அதைச் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று நரேந்திர மோடி கூறினார்.பா.ஜனதா தனது தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதாகவும், இதில் 90 சதவீதம் கறுப்பு பணம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:–
விசாரணைக்கு தயார்
பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா 10 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது. இதில் 90 சதவீத பணம் கறுப்பு பணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பிரசாரத்தின்போது கூறி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா இதைக் கூறி வருகிறார்.10 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.
-------------------------------------------------------------------------------------------மேலும்....

இன்றைய முக்கிய செய்திகள் (12-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதி ஜெயலலிதா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்றும், மின்சார தட்டுப் பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப் படுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.




திருநெல்வேலி, ஏப்ரல், 12-04-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திருநெல்வேலி பாராளு மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விளக்கம்
இன்று தமிழகமெங்கும் மின்சார நிலைமை பற்றிய பேச்சு நிலவுகிறது. திடீரென்று மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் பேசுகின்றனர். இதையே ஒரு குறையாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இதைப் பற்றி சில விளக்கங்களை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
இதற்கு முன்பு 2 முறை நான் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறேன். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் நான் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் விநியோகம் சீராக இருந்தது.


                                                                                                மேலும், . . . 

நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஜெயலலிதா பட்டியலிட்டு பேச்சு
நெல்லை, ஏப்ரல், 12-04-2014,
நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா பேசினார்.
பாளையங்கோட்டை பெல் நகரில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



மருத்துவமனை
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நிறைவேற்றிக் கொடுத்து உள்ளோம். நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி


                                                                                                        மேலும், . . . .

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் சாதி, மதத்தை சொல்லி ஓட்டுக்கேட்பவர்களை புறக்கணியுங்கள் வைகோ பேச்சு

நெல்லை, ஏப்ரல், 12-04-2014,
“சாதி, மதத்தின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கிறவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்“ என்று தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் வைகோ கூறினார்.
வைகோ பிரசாரம்
தென்காசி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரத்தை தொடங்கினார். கோவில் நுழைவு வாயில் முன்பு அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார்.
பின்னர் நடுவக்குறிச்சியில் அவருக்கு, ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றார்கள். நாதசுரம், தவில் இசைக்கலைஞர்கள் இன்னிசை வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து சேர்ந்தமரம், சுரண்டை, பாவூர்சத்திரம் பிரசாரம் செய்துவிட்டு, தென்காசிக்கு வந்தார். அங்கு காசிவிசுவநாத சுவாமி கோவில் அருகே வடக்கு, மேற்கு ரதவீதிகள் சந்திக்கும் இடத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அங்கு வைகோ பேசியதாவது:-

                                                                                                                  மேலும்,. . . .,

Thursday 10 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

முதல் முறையாக வேட்பு மனுவில் மனைவி பெயரை குறிப்பிட்டார் - நரேந்திரமோடி பரபரப்பான தகவல்கள்
வதோதரா, ஏப்ரல், 11-04-2014,
நரேந்திரமோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயரை முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் திருமண விவகாரம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் இது என்றோ பகிரங்கமாக அறிவித்தது இல்லை. குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோதுகூட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார்.
ஆனால் சமீபத்தில், மோடி மணமானவர், அவருக்கு 17 வயதில் திருமணமானது, அவரது மனைவி யசோதா பென் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என தகவல்கள் வெளியாகின.
ஓய்வு பெற்ற நிலையில், அந்த பெண் தனது வாழ்வில் பெரும்பகுதியை இறைவழிபாட்டில் கழிப்பதாகவும், தனது விதி மற்றும் கெட்ட நேரத்தால்தான் மோடியுடன் இணைந்து வாழ முடியாமல் போய்விட்டதாகவும் பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
                                                                                          மேலும், . . . 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஓப்புக்கொள்கிறாரா? நீலகிரி பிரசாரத்தில் ஜெயலலிதா கேள்வி

சென்னை, ஏப்ரல், 11-04-2014,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக நேற்று காரமடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது:–
மக்கள் சேவையில் நாட்டம்
வாக்காள பெருமக்களே. மக்கள் சேவையில் நாட்டமுள்ள கட்சி அ.தி.மு.க. மக்கள் நலனை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி தி.மு.க. இந்த தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் ஆ.ராசா. சென்ற முறையும் ராசா
                                                                                                                 மேலும், . . . 

11 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்களில் 3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல் 91 தொகுதிகளில் விறு, விறுப்பான ஓட்டுப்பதிவு
புதுடெல்லி, ஏப்ரல், 11-04-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
91 தொகுதிகளில் தேர்தல்
முதல் கட்ட தேர்தல் கடந்த கடந்த 7–ந்தேதியும், 2–வது கட்ட தேர்தல் நேற்று முன்தினமும் நடைபெற்றது.
3–வது கட்டமாக 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது என்ற விவரம் வருமாறு:–
                                                                                           மேலும், . . . 

Wednesday 9 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

வதோதரா தொகுதியில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று நரேந்திரமோடி வேட்புமனு தாக்கல் டீ கடைக்காரர் வழிமொழிந்தார்
வதோதரா, ஏப்ரல், 10-04-2014,
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை டீ கடைக்காரர் வழிமொழிந்தார்.
உற்சாக வரவேற்பு
பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்றுதான் கடைசி நாள் ஆகும். இதையொட்டி மனுதாக்கல் செய்வதற்காக நரேந்திரமோடி நேற்று காலை வதோதரா நகருக்கு
                                                                                       மேலும், . . . 

தமிழ்நாடு, புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 40 தொகுதிகளில் 875 பேர் போட்டி, வட சென்னை - 40, தென் சென்னை - 42, மத்திய சென்னை - 20
சென்னை, ஏப்ரல், 10-04-2014,
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 29–ந்தேதி தொடங்கி கடந்த 5–ந்தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் 1,256 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7–ந்தேதி நடந்தது. அப்போது 348 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். நேற்று சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
875 பேர் போட்டி
அதன்பிறகு இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 789 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். புதுச்சேரி தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று மாலை வெளியிட்டார்.
தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
                                                                        மேலும், . . . 

அனைத்து அவலநிலைகளையும் தீர்க்கும் மாயாஜாலக்காரரா, நரேந்திரமோடி? சோனியா காந்தி கேள்வி

கோலார், ஏப்ரல், 10-04-2014,
உண்மையான முகம், முகமூடியால் மறைக்கப்பட்டிருக்க, நாட்டின் அனைத்து அவலநிலைகளையும் தீர்க்கும் மாயாஜாலக்காரர் போல மோடியை சித்தரிக்கின்றனர் என்று சோனியாகாந்தி குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் பிரசாரம்
கர்நாடக மாநிலம் கோலாரில், மத்திய மந்திரி கே.எச்.முனியப்பாவை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார். அப்போது, பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை பெயர் குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:–
                                                                            மேலும், . . 

Tuesday 8 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் செலவை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதா? தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கண்டனம் ‘‘ஜனநாயகத்திற்கு எதிரான செயல்’’

திருவள்ளூர், ஏப்ரல், 09-04-2014,
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரியை ஆதரித்தும், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபாலை ஆதரித்தும் 2 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருவள்ளூர் வடமதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மகத்தான வெற்றி
2011–ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ, அதைவிட மகத்தான வெற்றியை நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கின்றேன். எனது வேண்டுகோளினை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு.
                                                                                                                மேலும், . . . 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது கேரளா நரேந்திர மோடி குற்றச்சாட்டு
காசர்கோடு, ஏப்ரல், 09-04-2014,
தீவிரவாதிகளின் புகலிடமாக கேரளா மாறிவிட்டது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு
கேரள மாநிலம் காசர்கோட்டில் பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரனை ஆதரித்து பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்து, தலையை துண்டித்து கொலை செய்தனர். இதுபற்றி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக கூறினார்.
                                                                                                        மேலும், . . . . 

தந்தையின் குடியினால் மகள் பிறந்தநாளில் சோகம் கிணற்றில் வீசி மகனை கொன்று தாய் தற்கொலை

அரூர், ஏப்ரல், 09-04-2014,
அரூர் அருகே கிணற்றில் வீசி மகனை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார். தண்ணீரில் தத்தளித்த 8 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள்.
இந்த துயர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மகளின் பிறந்த நாள்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் பூபதி(வயது30). தச்சு தொழிலாளி. இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த சூர்யா(28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு பூவாசம்(8) என்ற மகளும், ஹரீஸ்(4) என்ற மகனும் இருந்தனர். நேற்று பூவாசத்திற்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அதன்பின்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பூபதி குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது.

                                                                                                               மேலும், . . . 

Monday 7 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் உறுதி ஊழலை ஒழிக்க, விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை
புதுடெல்லி, ஏப்ரல், 08-04-2014,
பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
52 பக்க தேர்தல் அறிக்கை
பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் இதனை அறிக்கையை வெளியிட்டனர்.
52 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் பற்றிய விவரம் வருமாறு:–
ராமர் கோவில் கட்டப்படும்
* டெல்லியில் உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
* அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.
* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும்.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை.
                                                                                                      மேலும், . . . 

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 367 மனுக்கள் தள்ளுபடி
சென்னை, ஏப்ரல், 08-04-2014,
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளில், நேற்று, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், 367 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளிலும், மார்ச் 29ம் தேதி, மனு தாக்கல் துவங்கியது. கடந்த 5ம் தேதி நிறைவு பெற்றது. மொத்தம் 1,261 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று, மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், நீலகிரி பா.ஜ., வேட்பாளர், சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் உட்பட, 367 பேரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. 894 பேர் மனுக்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர், நாளை (9ம் தேதி) மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஆலந்துார் சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க., வேட்பாளர் காமராஜ் மனுவை ஏற்க, ஆம் ஆத்மி வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு, வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை, 11:00 மணிக்கு, இத்தொகுதியில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், குருமூர்த்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முறையாக மனு தாக்கல் செய்யாமல், அசட்டையாக நடந்து கொண்டதே, மனு தள்ளுபடியானதற்கு காரணம் என, கூறப்படுகிறது. இதனால், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில் போட்டியிட, கோபால கிருஷ்ணன் (அ.தி.மு.க.,), ராம்குமார் (அ.தி.மு.க., மாற்று), ராஜா (தி.மு.க.,), குருமூர்த்தி (பா.ஜ.,), அன்பரசு (பா.ஜ., மாற்று), காந்தி (காங்.,) ராணி (ஆம் ஆத்மி), ரமேஷ் பாபு (ஆம் ஆத்மி மாற்று) உட்பட, 16 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன.இதில், பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி உட்பட, ஆறு வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
                                                                                                              மேலும், . . . 

அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்

சென்னை, ஏப்ரல், 08-04-2014,
அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வாக்கு சேகரிக்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
                                                                                     மேலும், . . . 

Sunday 6 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அசாமில் 5 தொகுதிகள் திரிபுராவில் ஒரு தொகுதி பாராளுமன்றத்துக்கு இன்று முதல்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
புதுடெல்லி, ஏப்ரல், 07-04-2014,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வர்ணிக்கப்படும் இந்தியாவில், பாராளுமன்றத்துக்கு 9 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இன்று முதல் கட்ட தேர்தல்
இந்த தேர்தல் இன்று (7-ந் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 12-ந் தேதி முடிகிறது. முதல் கட்டமாக, அசாமில் 5 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்கிறது.
அசாமில் தேஜ்பூர், காலியாபார், ஜோரத், திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளும், திரிபுராவில் திரிபுரா மேற்கு தொகுதியும் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் ஆகும்.
                                                                                 மேலும், . . . . . 

300 இடங்களை தாருங்கள் ‘இந்தியாவை வலிமையான நாடு ஆக்குகிறேன்’ நரேந்திரமோடி வேண்டுகோள்
பிஜ்னோர், ஏப்ரல், 07-04-2014,
‘இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற, 300 இடங்களுக்கு மேல் தாருங்கள்’ என நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மல்யுத்தம்
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி நேற்று உத்தரபிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள பிஜ்னோர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 போர் வீரர்கள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்) உள்ளனர். இவர்கள் உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று மல்யுத்தம் புரிகின்றனர். ஆனால் டெல்லியில் ஆட்சி புரிவதற்கு ஒன்றாக இணைகின்றனர். இவர்கள் ஊழல் என்ற பெயரில் ஒன்றாக இணைந்துள்ளனர். இவ்வாறு 3 கட்சிகளும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன.
                                                                                   மேலும்,  . . . . . 

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

சென்னை, ஏப்ரல், 07-04-2014,
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று அனைத்து தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
6 நாட்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகத்தில் 39 தொகுதியிலும் மொத்தமாக ஆயிரத்து 318 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 198 பேர் ஆண்கள், 118 பேர் பெண்கள், இரண்டு பேர் அரவாணிகள். வடசென்னையில் அதிகபட்சமாக 53 பேரும், அடுத்தபடியாக மதுரையில் 52 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

                                                                                                      மேலும், . . . .