Sunday 27 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

ஊழல் சக்திகளை அகற்ற புதிய செயல் திட்டம்

ஆமதாபாத், 28-04-2014,

"அடுத்த மக்களவைத் தேர்தல் களத்தில் இருந்து ஊழல் மற்றும் குற்றச் சக்திகளை முற்றிலும் அகற்ற புதிய செயல் திட்டம் ஒன்றை வைத்துள்ளேன்'' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார். மோடி மேலும் கூறியிருப்பதாவது:

ஊழல், குற்ற விவகாரங்களைப் பொருத்த வரை, குறித்த காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம் ஒன்று என்னிடம் உள்ளது. அதன்படி, வரும் 2019இல் நடைபெற உள்ள 17ஆவது மக்களவைத் தேர்தலில் குற்றம் மற்றும் ஊழல் சக்திகள் பங்கேற்கவே முடியாது.

இப்போதைய எம்.பி.க்களை அந்தச் செயல்திட்டம் முதலில் குறிவைக்கும். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிப்பதற்காக நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரப்படும்.
                                                                                             மேலும், . . .

அழகிரி ஆதரவாளர்கள் மேலும் 10 பேர் நீக்கம்

மதுரை, 28-04-2014,

மதுரையில் திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. முன்னாள் மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதனிடையே, மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மேலும் 10 பேர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்க முடியாது என்று மு.க.அழகிரி கூறிவருகிறார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து அழகிரி விமர்சித்த பிரச்னையில், அவரது ஆதரவாளர்கள் மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 10 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைக் கண்டித்த அழகிரியும் நீக்கப்பட்டார்.

தேர்தலின்போது மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரை, மு.க.அழகிரி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்குமாறு கூறிய அழகிரி, பாஜக கூட்டணிக்கு வாக்குச் சேகரிக்கவும் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.
                                                                                                    மேலும், . . . 

புகார்கள் மீது நடவடிக்கை

சென்னை, 28-04-2014,

லோக்சபா தேர்தலின் போது, சரியாக பணியாற்றாத, கொடுத்த பணத்தை தேர்தல் பணிக்கு செலவிடாமல், ஸ்வாகா செய்த, மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்து, தி.மு.க., தலைவர், கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினிடம், வேட்பாளர்கள் சிலர், அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்காக, மூன்று கட்டமாக, சாலை மார்க்கமாக, 8,000 கி.மீ., தூரத்திற்கு மேல், வாகனம் மூலம் பயணித்து, ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 37 இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி, தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.ஓய்வு இல்லாமல், தேர்தல் பணிகளை மேற்கொண்டதால், தற்போது ஓய்வு எடுப்பதற்காக, அவர் தன் மனைவி துர்காவுடன், நேற்று அதிகாலை, சென்னையிலிருந்து ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார்.

புறப்படும் முன்

இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து, வரும், 2ம் தேதி தான், சென்னை திரும்புகிறார். அதனால், தொழிலாளர் தினமான, மே 1ம் தேதி, ஸ்டாலின் சென்னையில் இல்லை. அந்த நாளில், அவர் சென்னையில் இருந்தால், சிந்தாதிரிப்பேட்டை பூங்காவில் உள்ள, மே தின நினைவுச் சின்னத்தில், வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.வரும் 1ம் தேதி, அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவருக்கு பதிலாக, தி.மு.க., துணை பொதுச் செயலர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோர்,
                                                                       மேலும், . . .. 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் (28-04-2014)

முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்

சென்னை, 28-04-2014,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் முதலமைச்சரை உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

                                                                                              மேலும், . . . 

No comments:

Post a Comment