Thursday 17 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும்
கன்னியாகுமரி பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேச்சு

கன்னியாகுமரி, 18-04-2014,
அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளிடம் இருந்து விடுபடும் வரையில் தமிழகத்துக்கு விமோசனம் கிடையாது என்று கன்னியாகுமரி பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கூறினார்.

பிரசார பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடந்த பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி அருகில் உள்ள முருகன்குன்றத்தில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விமோசனம் கிடையாது
தமிழக அரசு உங்களைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. டெல்லியில் உள்ள மத்திய அரசும் கவலைப்படுவதில்லை. அதனால்தான் இன்னும் இந்த மாவட்டம் வளர்ச்சி அற்ற நிலையில் இருந்து வருகிறது.

                                                                                                    மேலும், . . . .  

குஜராத்தை விட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் கிருஷ்ணகிரி கூட்டத்தில் புள்ளி விவரத்துடன் ஜெயலலிதா பேச்சு


கிருஷ்ணகிரி, 18-04-2014,

குஜராத்தைவிட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் புள்ளி விவரத்துடன் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நேற்று, கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து, பூசாரிப்பட்டி கூட்டு ரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்

பொய் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள தி.மு.க.வினர், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தீட்டியதே தி.மு.க. என்பது போலவும், எனது தலைமையிலான அரசு இந்தத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது என்றும், இதுவரை எந்தப்பகுதிக்கும் தண்ணீர் செல்லவில்லை என்றும், பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.

1965–ம் ஆண்டு முதன் முதலில் இந்தத்திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்தபோது, 1986–ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1987–ல் எம்.ஜி.ஆரின் மறைவினை அடுத்து இதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், 1994–ம் ஆண்டு நான் முதல்–அமைச்சராக இருந்தபோது, சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், மத்திய அரசு அனுமதி தருவதில் தாமதம் செய்ததால், நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. 1996–ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 1998–ல் கர்நாடக அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் மீண்டும் நான் முதல்–அமைச்சரான போது 2003–ல் இந்தத்திட்டத்தை நான் எடுத்துக்கொண்டேன். 18–8–2005 அன்று எனது ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை 1,005 கோடி ரூபாய் மதிப்பில் ஜப்பான் நிதி உதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவை மத்திய அரசுக்கு நான் அனுப்பினேன்.
                                                                             மேலும், . . . 

பாராளுமன்றத்துக்கு 5-வது கட்ட தேர்தல் 121 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது

புதுடெல்லி, 18-04-2014,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற சிறப்புக்குரிய நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

ஐந்தாவது கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ந் தேதி 6 தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட தேர்தல் 9-ந் தேதி 6 தொகுதிகளிலும், மூன்றாவது கட்ட தேர்தல் 10-ந்தேதி 91 தொகுதிகளிலும், நான்காவது கட்ட தேர்தல் 12-ந் தேதி 7 தொகுதிகளிலும் நடைபெற்றன.

ஐந்தாவது கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் பரவியுள்ள 121 தொகுதிகளில் நேற்று நடந்தது. மாநில வாரியாக தேர்தல் நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-

பீகார்-7, சத்தீஷ்கார்-3, காஷ்மீர்-1, ஜார்கண்ட்-6, கர்நாடகம்-28, மத்திய பிரதேசம்-10, மராட்டியம்-19, மணிப்பூர்-1, ஒடிசா-11, ராஜஸ்தான்-20, உத்தரபிரதேசம்-11, மேற்கு வங்காளம்-4
                                                                                           மேலும், . . . .

No comments:

Post a Comment