Thursday 27 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் நளினி, ராபர்ட் பயாஸ் உள்பட 4 பேரை விடுதலை செய்ய தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.
புதுடெல்லி, பிப்ரவரி, 28-02-2014,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 18-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு
இதன் அடிப்படையில், அவர்கள் 3 பேரையும் மற்றும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய 19-ந்தேதி தீர்மானித்த தமிழக அரசு, அதுபற்றி 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
                                                                                                            மேலும், . . . 
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகுங்கள் வர்த்தகர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேச்சு
புதுடெல்லி, பிப்ரவரி, 28-02-2014,
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகுங்கள் என்று வர்த்தகர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசினார்.
வர்த்தகர்கள் மத்தியில் மோடி
தலைநகர் டெல்லியில் அனைத்திந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் (கெயிட்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று பங்கேற்று, வர்த்தகர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலகளாவிய சவால்களைக்கண்டு வர்த்தக சமூகத்தினர் ஓடக்கூடாது. ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றால், நாம் ஒழிந்து விடுவோம் என்று வர்த்தகர்கள் கருதக்கூடாது. சவால்களை எதிர்கொள்ளத்தக்க அளவில் நீங்கள் (வர்த்தகர்கள்) உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
                                                                                                                       மேலும், . . 


பா.ஜ.க. கூட்டணியில் கூடுதல் இடம் கேட்டு போராடும் பா.ம.க. 2 நாட்களில் சுமுக உடன்பாடு ஏற்பட வாய்ப்பு
சென்னை, பிப்ரவரி, 28-02-2014,
பா.ஜ.க. கூட்டணியில், கூடுதல் இடம் கேட்டு பா.ம.க. இன்னும் போராடி வருகிறது. இருந்தாலும், 2 நாட்களில் சுமுக உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தே.மு.தி.க. உறுதி
தமிழகத்தில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு முன்னேற்றக்கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. நரேந்திரமோடியின் தூதுக்குழு கடந்த 2 தினங்களுக்கு முன்பு எல்.கே.சுதீஷை சந்தித்து பேசிய பிறகு தே.மு.தி.க.வும் அக்கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
                                                                                                                 மேலும், . . . .

Wednesday 26 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-02-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

 பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 14 'சீட்!' கந்தன் கோவிலில் கிருஷ்ணன் பிரார்த்தனை
சென்னை, 27-02-2014,
பா.ஜ., - தே.மு.தி.க., பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. 18 தொகுதி கள் கேட்ட, தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ., அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், கூட்டணி முடிவை, அதிகாரப்பூர்வமாக இன்று, தே.மு.தி.க., அறிவிக்கலாம் என, பா.ஜ., வட்டாரம் நம்பிக்கை தெரிவித்தது.
கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்து, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருச்செந்தூர் சென்று, முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். இந்த கூட்டணிக்கு, காரணகர்த்தாவாக செயல்பட்ட, காந்திய மக்கள் கட்சி தலைவர், தமிழருவி மணியன், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு உள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், அவரது மைத்துனர், சுதீஷுடன், பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்திய பேச்சில், பா.ஜ., தரப்பில், 'தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது' என்பதை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். அதை ஏற்று, கூட்டணி முடிவை அறிவிக்கும்படியும், பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
                                                                                                    மேலும்,. . . 

முதல்–அமைச்சரின் 66–வது பிறந்தநாள் பரிசளிப்பு விழா
இந்தியாவை வல்லரசாக்கும் வல்லமை படைத்தவர்

ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை, 27-02-2014,
இந்தியாவை வல்லரசாக்கும் வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
விளையாட்டு போட்டிகள்– மருத்துவ முகாம்கள்
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை நகரில் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்பவர்கள் அழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர். மேலும் முதல்–அமைச்சர் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
பரிசு வழங்கல்
இந்த விழாவுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி, சிறுபான்மையினர் துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
                                                                                                                     மேலும், . . .

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை ஆவதில் சிக்கல் ஏன்? கருணாநிதி பதில்
சென்னை, 27-02-2014,
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை ஆவதில் சிக்கல் ஏன்? என்பது குறித்து கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வளர்ச்சி திட்டங்கள்
கேள்வி:–தேர்தல் கமிஷன் இன்னும் தேர்தலுக்கான தேதியைக்கூட அறிவிக்கவில்லை; ஆனால் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா அவசர அவசரமாக நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதின் காரணம் என்ன?
                                                                         மேலும், . . . 

Tuesday 25 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

பெண் என்ஜினீயர் கொலையில் மேற்குவங்காள வாலிபர்கள் கைது பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக வாக்குமூலம்
சென்னை, பிப்ரவரி, 26-02-2014,
சென்னை கேளம்பாக்கம் சிறுசேரியில் பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கொடூர கொலையாளிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பெண் என்ஜினீயர் கொலை
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார்.
கடந்த 13–ந்தேதி அன்று இரவு காணாமல் போன இவர், கடந்த 22–ந்தேதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதனால் உமாமகேஸ்வரி கற்பழித்து, கழுத்தறுத்து, குத்தி கொலைச்செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தையே உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்து டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பாளர்

                                                                                                             மேலும், . . . .

இடதுசாரிகள், அ.தி.மு.க. உள்பட 11 கட்சிகள் இணைந்து காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக புதிய அணி உதயம் பிரதமர் யார் என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும்
புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2014,
இடதுசாரிகள், அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து, காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தால், பிரதமர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
11 கட்சிகள் ஆலோசனை
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் மாற்றாக, இடது சாரிகள் மற்றும் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகளும் இணைந்து புதிய அணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
                                                                                                      மேலும், . . .

‘‘தவறு நடந்திருந்தால் மன்னித்து, ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ முஸ்லிம்களுக்கு பாரதீய ஜனதா வேண்டுகோள்
புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2014,
எங்காவது தவறு நடந்திருந்தால், அதற்காக மன்னித்து, மத்தியில் ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று முஸ்லிம் மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் விரோத கட்சி அல்ல
பாராளுமன்றத் தேர்தலையொட்டி, நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைக்க 272–க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற குறி வைத்து பாரதீய ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. இதில் முஸ்லிம் மக்களின் பங்கு தொடர்பாக டெல்லியில் பாரதீய ஜனதா சார்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரதீய ஜனதா, முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. எங்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை நம்பிப் போகாதீர்கள். இந்த முறை நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.
                                                                                                               மேலும், . . 

Monday 24 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

நரேந்திரமோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு ‘‘பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றக்கூட போர் தொடுத்தது இல்லை’’
பீஜிங், பிப்ரவரி, 25-02-2014,
அருணாசலபிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக சீனா மீது நரேந்திரமோடி கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. ‘பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றக்கூட போரிட்டது இல்லை’ என்று அந்நாடு கூறியுள்ளது.
குற்றச்சாட்டு
குஜராத் மாநில முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அம்மாநிலத்தை கைப்பற்றத் துடிக்கும் சீனாவை எச்சரித்தார்.
நாட்டின் எல்லையை விஸ்தரிக்கும் குணத்தை சீனா கைவிட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

                                                                                                             மேலும், . .. 

வெடிபொருள் பதுக்கிய வழக்கு பறவை பாதுஷாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி நெல்லை கோர்ட்டு உத்தரவு

நெல்லை, பிப்ரவரி, 25-02-2014,
வெடிப்பொருள் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பறவை பாதுஷாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நெல்லை கோர்ட்டு அனுமதி வழங்கியது.
பறவை பாதுஷா
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27–ந்தேதி மேலப்பாளையம் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது 2 பேர் வெடி பொருட்களுடன் சிக்கினார்கள்.
                                                                                    மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா வெளியிட்டார்
சென்னை, பிப்ரவரி, 25-02-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 66–வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் பிறந்தநாள் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 12.30 மணிக்கு வந்தார்.
அங்கு அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                          மேலும், . . . 

Sunday 23 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு ‘‘நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது’’
புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2014,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்
தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
                                                                                         மேலும், . . . 

‘ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள்’ பா.ஜனதா மீது ராகுல் காந்தி தாக்கு
டேராடூன், பிப்ரவரி, 24-02-2014,
ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள் என பா.ஜனதா மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரத்த அரசியல்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ஜனதா ரத்த அரசியல் நடத்த பயிற்சி எடுத்து வருகிறது. அவர்களுக்கு தேவை ஆட்சி அதிகாரம் மட்டுமே. அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆட்சியை பிடிப்பதற்கு தேவைப்பட்டால் மக்களிடையே பிரிவினையை தூண்டக்கூட அவர்கள் தயங்க மாட்டார்கள்.
                                                                                                    மேலும், . . .

‘காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுகிறது’ நரேந்திர மோடி குற்றச்சாட்டு
லூதியானா, பிப்ரவரி, 24-02-2014,
காங்கிரஸ் கட்சி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
வெற்றி பேரணி
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு, பா.ஜனதா கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நேற்று பா.ஜனதா சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                      மேலும், . . 

Saturday 22 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,



பூமியில் எந்த சக்தியாலும் அருணாசலபிரதேசத்தை பறிக்க முடியாது நரேந்திர மோடி ஆவேசம்
இடாநகர், பிப்ரவரி, 23-02-2014,
பூமியில் எந்த சக்தியாலும் அருணாசலபிரதேசத்தை இந்தியாவிடம் இருந்து பறிக்க முடியாது, சீனா தனது குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நரேந்திர மோடி கூறினார்.
பறிக்க முடியாது
அருணாசலபிரதேசத்தில் பாசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:–
                                                                                          மேலும், . . . .

இந்தியா முழுவதும் போராட்டம் சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் 25–ந் தேதி முதல் வேலை நிறுத்தம் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து
புதுடெல்லி, பிப்ரவரி, 23-02-2014,
சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒரே சீரான விலை
அகில இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்திர பிரகாஷ், இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பவன் சோனி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் சங்கத்தின் கோரிக்கை பற்றி கூறியதாவது:–
மானிய விலை சிலிண்டருக்கு ரூ.450 வரையும், மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கு ரூ.1,275 வரையும், 19 கிலோ வர்த்தக உபயோக சிலிண்டர்களுக்கு ரூ.1,900 வரையும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற சமச்சீரற்ற விலை நிர்ணயமே, கியாஸ் வினியோகத்தில் முறைகேடுகளுக்கு வழிகோலுகிறது. ஆனால், அதற்கு வினியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல.
                                                                                             மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தல் தேதி 2 வாரத்தில் வெளியாகும் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த பரிசீலனை
புதுடெல்லி, பிப்ரவரி, 23-02-2014,
பாராளுமன்ற தேர்தல் தேதி 2 வாரத்தில் வெளியாகும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல்
நடப்பு 15–வது பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மே 31–ந் தேதி முடிகிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் மத்தியில் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.
இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்டு, இறுதி செய்யப்பட்டு விட்டன. புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியும் முடிந்துள்ளது.
                                                                                                                          மேலும், . . . 

Friday 21 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2014) காலை, IST- 08.00 மணி, நிலவரப்படி,

 இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது 15–வது பாராளுமன்றம் முடிவுக்கு வந்தது கடைசி நாளில் நெகிழ்ச்சியான காட்சிகள்
புதுடெல்லி, பிப்ரவரி, 22-02-2014,
15–வது பாராளுமன்றம் நேற்று முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் நெகிழ்ச்சியான காட்சிகளைப் பார்க்க முடிந்தது.
பட்ஜெட் நிறைவேறியது
நடப்பு 15–வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தின் நீட்டிப்புத் தொடராக அமைந்தது. கடந்த 5–ந் தேதி இந்த நீட்டிப்பு தொடர் தொடங்கியது. இடைக்கால ரெயில்வே பட்ஜெட், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன.
கடைசி நாளான நேற்று இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது.
                                                                                                      மேலும், . . .
பா.ஜனதாவின் தேர்தல் நிதி, பிரசார செலவுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் நரேந்திரமோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்
புதுடெல்லி, பிப்ரவரி, 22-02-2014,
பா.ஜனதா கட்சியின் தேர்தல் நிதி மற்றும் தேர்தல் பிரசார செலவு விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று, அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ரிலையன்ஸ் நிறுவன கியாஸ் விவகாரத்தில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறார்.
கியாஸ் விலையை குறைப்பீர்களா?
அது குறித்து நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பா.ஜனதா கட்சியின் தேர்தல் செலவுகளையும், கட்சிக்கு யார்–யாரெல்லாம் நிதி கொடுத்தனர் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கியாஸ் விலையை குறைக்கத் தயாரா? என்றும், கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
                                                                             மேலும், . . . 

இந்திய-பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு ரூ.5,081 கோடிக்கு ஒப்பந்தங்கள் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்து
சென்னை, பிப்ரவரி, 22-02-2014,
தமிழ்நாட்டில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், 5 ஆயிரத்து 81 கோடி ரூபாய் மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் ஏறத்தாழ 16 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பும் பெறுவார்கள்.
விழாவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
                                                                                                     மேலும், . . . 

Thursday 20 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

பா.ஜ.க-தே.மு.தி.க. இடையே நேரடி பேச்சு வார்த்தை தொடங்கியது
சென்னை, பிப்ரவரி, 21-02-2014,
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்குநாடு தேசிய கட்சி ஆகியவை இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., ஆந்திரா மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. கூட்டணியில், ம.தி.மு.க. வுக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் கொடுக்க பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், அந்தக் கட்சி கூடுதலாக 4 தொகுதிகளை கேட்கிறது. இதனால், பா.ம.க.வுடனான பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.
                                                                                                           மேலும், . . .

ராஜீவ் கொலை கைதிகளுக்கு தண்டனை ரத்து காங்கிரஸ் பரபரப்பு துண்டு பிரசுரம்
சென்னை, பிப்ரவரி, 21-02-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரசார் ‘சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்’ என்ற தலைப்பில் 4 பக்க துண்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா? தமிழர்களே சிந்திப்பீர் என்ற கேள்வியுடன் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சி, குண்டு வெடிப்பில் பலியான தியாகி லீக் முனுசாமி, சந்தாணிபேகம், போலீஸ் சூப்பிரண்டு டி.கே.எஸ். முகமது இக்பால், இன்ஸ் பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப் ஆகியோரது படங்களையும் பிரசுரித்துள்ளனர்.
அந்த துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:–
                                                                                                        மேலும், . . . 

பார்லிமெண்டில் நிலுவையில் 81 மசோதாக்கள் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?
புதுடில்லி, பிப்ரவரி, 21-02-2014,
15 வது லோக்சபாவின் கடைசிக் கூட்டத் தொடரும், பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடருமான தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் பார்லி.,யில் தாக்கல் செய்யப்படாமல் இன்னும் 81 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
கடைசி கூட்டத் தொடர்
தற்போது நடைபெற்று வரும் 15வது லோக்சபாவின் செயல்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. புதிய லோக்சபாவிற்கான தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 5ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த கூட்டத் தொடர் முடிய உள்ளது.
                                                                                                              மேலும், . . . 

Wednesday 19 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

‘‘பிரதமராக இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?’’ ராகுல் காந்தி வருத்தம்
புதுடெல்லி, பிப்ரவரி, 20-02-2014,
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலையாவது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இந்த நாட்டில் பிரதமராக இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்று வருத்தத்துடன் கூறினார்.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நேற்று முன்தினம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் கூறியது.
                                                                          மேலும், . . .
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7-பேரும் 3-நாளில் விடுதலை சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, பிப்ரவரி, 20-02-2014,
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது,படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
                                                                                                 மேலும், . . .

ராகுல்காந்தி மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் வருகை கருணாநிதியை சந்திக்கவும் வாய்ப்பு
சென்னை, பிப்ரவரி, 20-02-2014,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்தி மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பாத யாத்திரையில் அவர் பங்கேற்கிறார். மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பாத யாத்திரை
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதில், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்று வருகிறார்.
                                                                                                               மேலும், . . .

Tuesday 18 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது தெலுங்கானா மசோதா நிறைவேறியது பாராளுமன்றத்தில் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 19-02-2014,
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வகைசெய்யும் ‘ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா–2014’ கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ஆந்திராவின் இதர பகுதியான சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.
மிளகுப்பொடி வீசினர். இதில் 3 எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சபையில் கண்ணாடிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன. கைகலப்பும் நடந்தது.
எப்படி இருந்தாலும், மசோதாவை நிறைவேற்றியே தீருவது என்று மத்திய அரசு உறுதியாக இருந்தது.
                                                                                          மேலும், . . . 

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரின் தூக்கு ரத்து விடுதலை பற்றி அரசு முடிவு செய்யலாம் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 19-02-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பரபரப்பான இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
தூக்கு தண்டனை
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 1991–ம் ஆண்டு மே மாதம் 21–ந் தேதி இந்த துயர சம்பவம் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். சென்னை அருகே உள்ள பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் மனைவி நளினி உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
                                                                                    மேலும், . . .

மார்ச் முதல் வாரத்தில் ஜெ., பிரசாரம் துவக்கம் பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலுடன் வழிபாடு

சென்னை, பிப்ரவரி, 19-02-2014,
அ.தி.மு.க.,வில், இம்மாத இறுதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, மார்ச் முதல் வாரத்தில், பிரசாரத்தை துவக்க, முதல்வர்,ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க., பணியைத் துவக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர முடியாமல், சிதறுண்டு கிடப்பதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றும், அந்தக் கட்சி தலைமை நம்புகிறது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும், கூட்டணியில் சேர்த்து, தேர்தலை சந்திக்க, முடிவு செய்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும், 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்தனர். அனைவரையும், நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்பதால், மாவட்ட செயலர்களிடம் இருந்து பரிந்துரை பட்டியல் பெறப்பட்டது.
                                                                                                                             மேலும், . . .

Sunday 16 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் புதிய சலுகைகள் இடம் பெற வாய்ப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 17-02-2014,
வருகிற ஏப்ரல்–மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்குப்பின் புதிதாக பொறுப்பு ஏற்கும் மத்திய அரசு, ஜூன்–ஜூலை மாதங்களில் 2014–15–ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.
இடைக்கால பட்ஜெட்
அதற்கு முன்பாக ஜூலை மாதம் வரை உள்ள செலவினங்களுக்கு அனுமதி பெறுவதற்கான இடைக்கால பட்ஜெட், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று தெலுங்கானா விவகாரத்தில் பாராளுமன்றத்தில் வரலாறு காணாத கலகம் நடைபெற்றது. உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி வீசி தாக்குதல் நடந்தது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று (திங்கட்கிழமை) கூடும் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு நிதி மந்திரி ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், 12 முதல் 18 பங்கங்களை கொண்டதாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
                                                                                                       மேலும், . . . 

செல்போனில் மலர்ந்த காதல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு காதலன் சிறையில் அடைப்பு

சென்னை, பிப்ரவரி, 17-02-2014,
சென்னையில் குளிர்பானத்தில், மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவி கற்பழிக்கப்பட்டார். கோர்ட்டில் சரண் அடைந்த காதலன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கற்பழிப்பு புகார்
சென்னை புரசைவாக்கம், ஆர்.கே.புரம், பிரீக்ளின் ரோட்டைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகள் ஜானகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது–வயது 19). நர்சு பயிற்சி பெற்று வந்தார். தண்டையார்பேட்டை அரசு தொற்று நோய் ஆஸ்பத்திரியில், தினமும் பயிற்சிக்கு செல்வார். அப்போது ஆஸ்பத்திரி எதிரில் இளநீர் கடை நடத்தி வந்த, சதீஷ்(வயது 24) என்பவருடன், காதல் ஏற்பட்டது. இளநீர் சாப்பிடச் சென்ற போது, ஏற்பட்ட காதல், பின்னர் செல்போன் பேச்சு மூலம் வளர்ந்தது.
                                                                                                                    மேலும், . .

காங்கிரஸ் அரசின் ஊழல்களின் பட்டியல் தன் வலைதளத்தில் அத்வானி பகிரங்கம்

புதுடில்லி, பிப்ரவரி, 17-02-2014,
கடந்த, 10 ஆண்டு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில் பகிரங்கமாக பட்டியலிட்டுள்ளார். 'சுதந்திர இந்தியாவின், மிக மோசமான ஊழல் ஆட்சி இது' என்றும், கடுமையாக, அவர் விமர்சித்துள்ளார். அது போல், பெருமையாக பிரதமர் பதவியில் அமர்ந்த மன்மோகன் சிங், ஊழல்வாதி என்ற பெயருடன், வெளியேற உள்ளார் என்றும் அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, 10 ஆண்டு கால, ஐ.மு., கூட்டணி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களையும், அவர், பட்டியலிட்டுள்ளார்.
                                                                                                                மேலும், . . . 


Saturday 15 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

கெஜ்ரிவால் கோரிக்கை நிராகரிப்பு டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி மத்திய மந்திரி சபை முடிவு
புதுடெல்லி, பிப்ரவரி, 16-02-2014,
டெல்லியில் கவர்னர் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு ராஜினாமா
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்தது. சட்டசபையில் கடந்த 14–ந் தேதி, முதல்–மந்திரி முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் புரிவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்தது.
உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பதவி விலகியது. 48 நாள் ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்தது. பதவி விலகல் கடிதத்தை துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கிடம் கெஜ்ரிவால் அரசு அளித்தது. அத்துடன், டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற மந்திரிசபையின் பரிந்துரையையும் அளித்தது.
                                                                              மேலும், . . . 

தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

சென்னை, பிப்ரவரி, 16-02-2014,
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கலந்துரையாடல்
இதன் ஒரு பகுதியாக தேர்தல் செலவுகள் குறித்து பத்திரிகையாளருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தேர்தல் கமிஷன் நடத்தி வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் கமிஷனின் பொது இயக்குனர் (தேர்தல் செலவுகள்) பி.கே.தாஷ் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இருவரும் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:–
                                                                                                                         மேலும், . . . .

இந்திய விமானத்தை கடத்திய போது விடுவிக்கப்பட்ட உமர் ஷேக் பாகிஸ்தான் சிறையில் தற்கொலை முயற்சி

இஸ்லாமாபாத், பிப்ரவரி, 16-02-2014,
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் குடியுரிமை கொண்ட உமர் ஷேக் பாகிஸ்தான் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1-1-2000 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தை பயணிகளுடன் கடத்திய தீவிரவாதிகள், விமானத்தையும் பயணிகளையும் விடுவிக்க நிபந்தனை விதித்தனர்.
இந்திய சிறையில் அடைத்து வைத்திருக்கும் மவ்லானா மசூத் அக்தர், முஸ்தாக் அஹமத் சர்கார் மற்றும் உமர் ஷேக் ஆகியோரை விடுதலை செய்தால் விமான பயணிகளை விடுவிப்போம் என இந்திய அரசுடன் அவர்கள் பேரம் பேசினர்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பயணிகளை கடத்திய குற்றத்துக்காக உமர் ஷேக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பயணிகளை உயிருடன் மீட்பதற்காக அவர்களின் நிபந்தனைகளுக்கு சம்மதித்த இந்திய அரசு உமர் ஷேக் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்தது.

                                                                                                            மேலும், . . . 

Friday 14 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

தி.மு.க.,வின் 10 வது மாநில மாநாடு திருச்சியில் துவக்கம்
திருச்சி, பிப்ரவரி, 15-02-2014,
திருச்சியில் இன்றும், நாளையும் நடைபெறும் திமுக.,வின் 10வது மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று கொடியேற்றி துவக்கி வைத்தார்.
பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க.,வின் மாநில மாநாட்டை திருச்சியில் இன்று காலை 10. 50 மணியளவில் கட்சி தலைவர் கருணாநிதி கொடியேற்றி துவக்கி வைத்தார். அவரது வயதை குறிக்கும் வகையில் மாநாட்டு திடலில் 90 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் தி.மு.க.,வின் 10 வது மாநில மாநாடு திருச்சியில் துவங்குகிறது.
                                                                               மேலும், . . .
டில்லியில் நிருபர்களிடம் விஜயகாந்த் பாய்ச்சல் கூட்டணி பற்றிய கேள்விக்கு கோபம்
புதுடில்லி, பிப்ரவரி, 15-02-2014,
டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவரை, நிருபர்கள் பேட்டி காண முயன்ற போது, அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா...'' எனக்கூறி, ஆவேசமாக, விஜய்காந்த் முன்னேற முயன்றதால், பாதியிலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது
எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு
டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, பிரதமர் இல்லத்தை விட்டு வெளியே வந்த, விஜயகாந்தை, நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பிரதமர் இல்லத்தின் எதிர்புறம் உள்ள சாலையில் தான், இடவசதி உள்ளது என்பதால், விஜயகாந்தை, அங்கு வரும்படி, நிருபர்கள் அழைத்தனர்.காரைவிட்டு, விஜயகாந்த் இறங்கி வருவதற்கு முன், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வந்து, வரிசையாக அணிவகுத்து நின்றனர். பின், சுதீஷ் சைகை காட்டியதும், நிருபர்கள் இருந்த இடத்திற்கு, விஜயகாந்த் வந்தார்.டில்லியில், நேற்று மழை பெய்து, மேக மூட்டமாக இருந்த நிலையிலும், கூலிங் கிளாஸ் அணிந்தபடியே, பேட்டியை விஜயகாந்த் ஆரம்பித்தார். பிரதமரின் சந்திப்பு குறித்து, பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல், பேச ஆரம்பித்தார். பின், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா குறித்து, சில நிமிடங்கள் தாக்கிப் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
                                                                                                         மேலும், . . . 

49 நாட்களாக டில்லியில் நடந்த பரபரப்பு அரசியல் முடிவு
புதுடில்லி, பிப்ரவரி, 15-02-2014,
'ஜன லோக்பால்' மசோதாவை, மாநில லெப்டினன்ட் கவர்னர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி தாக்கல் செய்யக் கூடாது' என, டில்லி சட்டசபையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறிய தால், தான் விரும்பிய படி, அந்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போன ஏமாற்றத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், 'ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால். இதனால், கடந்த, 49 நாட்களாக டில்லியில் நடந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்தது.
டில்லியில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி, அமைத்த நாளில் இருந்து, எல்லா விஷயங்களிலும், ஒரே குழப்பமும், சட்டத்திற்கு கட்டுப்படாத தன்மையும் காணப்பட்டது. மத்திய அரசை, கண்மூடித்தனமாக எதிர்ப்பதிலும், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையும் முழுமையாக நிறைவேற்றாதது போன்றவற்றால், கெஜ்ரிவால் அரசு, மக்களின் அதிருப்தியை அதிகமாக சம்பாதித்தது.
                                                                                     மேலும், . . . 

Thursday 13 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

35 லட்சம் குடும்பத்துக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் பள்ளிக்கல்விக்கு ரூ. 17,731 கோடி கூவம் சீரமைக்க ரூ.3,833 கோடி தஞ்சை, நெல்லையில் சிறப்பு மருத்துவமனை புதிய வரி இல்லாத தமிழக பட்ஜெட்

சென்னை, பிப்ரவரி, 14-02-2014,
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
ஜெயலலிதா வந்தார்
சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10.52 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்தார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
சபாநாயகர் ப.தனபால், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


பட்ஜெட் தாக்கல்
பின்னர், 2014-2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு அறிக்கை) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். காலை 11.02 மணிக்கு 80 பக்க பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்த அவர் பகல் 1.42 மணி வரை தொடர்ச்சியாக 2 மணி 40 நிமிடங்கள் வாசித்தார்.


இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்போ, நடைமுறையில் உள்ள வரி விகிதத்தினை உயர்த்தவோ செய்யவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் சலுகைகள் தரும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார். பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

                                                                                                         மேலும், . . 

லோக்சபாவில் 'பெப்பர் ஸ்பிரே!' அடித்தார் ஆந்திர காங்கிரஸ்- எம்.பி, வரலாறு காணாத சம்பவங்களால் பார்லிமென்ட் ஸ்தம்பிப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 14-02-2014,
தெலுங்கானா மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய, மத்திய அரசு தரப்பில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிராக, அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சம் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துவங்கியதும், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயை, தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்யுமாறு, சபாநாயகர் மீரா குமார், அழைத்தார். ஷிண்டே எழுந்த மறுகணமே, சபைக்குள் பெரும் ரகளை மூண்டது. லோக்சபாவுக்குள் நடந்த ரகளையின் போது, உச்சகட்டமாக, 'பெப்பர் ஸ்பிரே' மயக்க மருந்தை, பீய்ச்சியடித்ததால், சபைக்குள், பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். இருமல், தும்மல், கண் எரிச்சலுடன், அவசரமாக, ஏராளமானோர் சபையிலிருந்து ஓட்டம் பிடித்தனர். பார்லிமென்ட்டின், அனைத்து, வெளிப்புற வாயில்களிலும், ஏராளமான போலீசார் மற்றும் சபை காவலர்கள், நிறுத்தப்பட்டிருந்தனர். உள்ளே நுழையும் ஒவ்வொருவரும், கடும் சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்பட்டனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை, பார்வையிட வழங்கப்படும், பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது.
                                                                                                                     மேலும், . . 

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக மரணம்

சென்னை, பிப்ரவரி, 14-02-2014,
திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
பாலுமகேந்திரா நேற்று காலை மூச்சுத் திணறல் காரணமாக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                                                                  மேலும், . . .

Tuesday 11 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயித்ததில் முறைகேடு புகார் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி மீது வழக்கு டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் நடவடிக்கை
புதுடெல்லி, பிப்ரவரி, 12-02-2014,
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கிருஷ்ணா, கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து மத்திய அரசுக்கு சப்ளை செய்கிற இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்வதில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது.இது தொடர்பாக மத்திய மந்திரிசபை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் தஹிலியானி, மூத்த வக்கீல் காமினி ஜெய்ஸ்வால், மத்திய அரசு துறையின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா ஆகியோர் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளித்துள்ளனர்.
                                                                                                                   மேலும், . . .

3–வது அணி என்பது காங்கிரசை காப்பாற்றும் வேலை நரேந்திரமோடி பேச்சு
புவனேஸ்வர், பிப்ரவரி, 12-02-2014,
3–வது அணி என்பது காங்கிரசை காப்பாற்றும் வேலை என்று நரேந்திரமோடி கூறினார்.
மோடி பிரசாரம்
பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டணி கட்சியான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. புவனேசுவரத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:–உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகள், ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் போன்ற மூன்றாவது அணியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அவர்கள் ஆட்சி செய்யும் அல்லது ஆட்சி செய்த மாநிலங்களை அழித்து வருகிறார்கள்.
                                                                               மேலும், . . . 

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் வரி இல்லாத பட்ஜெட்டாக இருக்குமா? நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
சென்னை, பிப்ரவரி, 12-02-2014,
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (13–ந்தேதி) தாக்கல் செய்கிறார்.
இந்த அரசின் 4–ம் பட்ஜெட்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011–12–ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2012–13, 2013–14–ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுவரை மூன்று பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2014–15–ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
                                                                                               மேலும், . . . 

Monday 10 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

சுதந்திர இந்திய வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகள் மிக மோசமான காலம் பிரதமர் மன்மோகன்சிங் மீது மோடி தாக்குதல்
காந்திநகர், பிப்ரவரி, 11-02-2014,
சுதந்திர இந்திய வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகள் மிக மோசமான அழிவு காலம் என்று பிரதமர் மன்மோகன்சிங் மீது நரேந்திர மோடி தாக்குதல் தொடுத்துள்ளார்.
மோடி பதில் தாக்குதல்
பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, ‘‘பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவு’’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் கோபா என்ற இடத்தில் நடந்த மாநில பாரதீய ஜனதா கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இதற்கு நரேந்திர மோடி பதில் தாக்குதல் தொடுத்துள்ளார். ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீகமலம்’ என்ற அந்த புதிய அலுவலகத்தை நரேந்திர மோடி திறந்து வைத்து கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

                                                                                                                  மேலும், . . 

குறிப்பிட்ட சில பணிகளில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற சிறப்பு இளைஞர் காவல் படை தொடக்கம் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை ஜெயலலிதா வழங்கினார்

சென்னை, பிப்ரவரி, 11-02-2014,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சட்டம்–ஒழுங்கை பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின்போது மீட்பு பணிகளை மேற்கொள்வது போன்ற இன்றியமையா பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் மேம்பாட்டிற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா அறிவிப்பு
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் ஆட்பற்றாக்குறையை தவிர்க்கவும், காவல் துறையின் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சில பணிகளில் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட ஒரு துணைப்படையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கருதியும் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை என்ற ஒரு சிறப்பு படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்று 29.10.12 அன்று சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மேலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் 23–ந் தேதி அன்று சட்டசபையில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 10 ஆயிரத்து 500 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்ய நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை அலுவலகங்களில் வழங்கப்பட்டன.
                                                                                                                        மேலும், . . . 

‘குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டார்’ பரபரப்பான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
புதுடெல்லி, பிப்ரவரி, 11-02-2014,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்று 3 பேர் கொண்ட கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புயலை கிளப்பிய சூதாட்டம்
கடந்த, ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்த போது, சூதாட்ட சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட ஆட்டங்களின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிப்பதற்காக சூதாட்ட தரகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ‘மேட்ச் பிக்சிங்’ செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏராளமான புரோக்கர்களும் சிக்கினர். பிறகு ஜாமீனில் வெளி வந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட் கால தடை விதித்தது.
                                                                                                                       மேலும், . . . 

Sunday 9 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

சென்னையில், பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடத்துவது பற்றி பரிசீலனை

சென்னை, பிப்ரவரி, 10-02-2014,
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி குறித்து இந்த மாதம் இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆலோசனை
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.சி.சம்பத், பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அவர் சென்னை வந்தார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–
                                                                                   மேலும், . . .

காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - ஜெயலலிதா பேச்சு

மதுரை, பிப்ரவரி, 10-02-2014,
முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையான காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பேசியதாவது:–
தேவரின் பொன்மொழிகள்
‘‘இங்கு பெருந்திரளாக கூடியுள்ள சகோதர சகோதரிகளே கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர் திருமகனார் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டவர், தேவர் திருமகனார். ‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’ என்று முழங்கியவர், அவர். அவரது பொன்மொழிகள் இக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன.
காங்கிரஸ் அல்லாத ஆட்சி
ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை அவருடைய முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன் தேவர் திருமகனாரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது என்று தெரிவித்து அந்த லட்சியத்தை அடைய நீங்கள் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு அவர் பகல் 2 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் தளம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார்.
                                                                                                    மேலும், . . . . 

‘எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை’ அத்வானி சொல்கிறார்
புதுடெல்லி, பிப்ரவரி, 10-02-2014,
எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறி இருக்கிறார்.
பிரதமர் கனவு தகர்ந்தது
முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், அத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுவதால் மீண்டும் பிரதமர் கனவில் இருந்து வந்தார், அத்வானி. ஆனால், அவருடைய எதிர்ப்பையும் மீறி குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அத்வானியின் பிரதமர் கனவு தகர்ந்தது.
                                                                                         மேலும், . . . 

Saturday 8 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

ஹார்வர்டு பல்கலைக்கழகம் உதவாது பொருளாதார வளர்ச்சிக்கு கடின உழைப்பு தான் தேவை ப.சிதம்பரம் மீது நரேந்திர மோடி தாக்கு
சென்னை, பிப்ரவரி, 09-02-2014,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் தேவை இல்லை. கடின உழைப்பு தான் தேவை என்று ப.சிதம்பரம் மீது நரேந்திர மோடி தாக்குதல் தொடுத்தார்.
ப.சிதம்பரம் மீது தாக்குதல்
வண்டலூரில் நடந்த பாரதீய ஜனதா பொதுக் கூட்டத்தில் இதுபற்றி நரேந்திர மோடி பேசியதாவது:–
மத்திய அரசில் தேர்தலில் தோற்று, மறு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற ஒருவர் மந்திரியாக இருக்கிறார். அவர் என்னைப் பற்றி மிக மோசமாக பேசி வருகிறார். நான் மவுனமாக இருப்பது சேறு எவ்வளவு உயரத்துக்கு வந்தாலும், அதற்கு மேல் தாமரை வரும் என்பதால் தான்.
                                                                                                                  மேலும், . . .

கெஜ்ரிவால் ‘திடீர்’ மிரட்டல் ‘‘ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன்’’
புதுடெல்லி, பிப்ரவரி, 09-02-2014,
ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜனலோக்பால் மசோதா
டெல்லி சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, முதல்–மந்திரி முதல் அடிமட்ட ஊழியர்வரை யார் ஊழல் செய்தாலும், அவர்களுக்கு ஆயுள்தண்டனை வரை விதிக்க வகைசெய்து ஜனலோக்பால் சட்டம் கொண்டு வர முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார்.
                                                                                                            மேலும், . . . 

மகளை காதலித்த வாலிபரை வரவழைத்து கொன்ற கொடூரம் கல்லூரி மாணவியின் தந்தை வெறிச்செயல்

தூத்துக்குடி, பிப்ரவரி, 09-02-2014,
மகளை காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைப்பதாக ஏமாற்றி அழைத்து கொடூரமாக ஒருவர் கொலை செய்து இருக்கிறார்.
சினிமாபட பாணியில் நடந்த இந்த கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கல்லூரி மாணவி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. அவருடைய மகள் கவிதா (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
                                                                                            மேலும், . . . . . .

இன்றைய முக்கிய செய்திகள் (08-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-02-2014) மாலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

வரலாறே தெரியாதவர் மோடி குஜராத் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு
அகமதாபாத், பிப்ரவரி, 08-
குஜராத் மாநிலம் பர்டோலியில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில், கட்சியின் பிரச்சாரக் குழு தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
வரலாறே தெரியாதவர்கள் குஜராத்தை ஆட்சி செய்கிறார்கள். காந்தி, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களைப் பற்றி குஜராத் தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விஷத்தன்மை கொண்ட அமைப்பு என்று வல்லபாய் பட்டேல் கூறியிருந்தார். ஆனால், பட்டேலைப் பற்றி எதுவும் தெரியாத மோடி இப்போது அவரது சிலையை அமைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தமே காந்தி கொலைக்கு காரணம்.

                                                                                                    மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவானால் ஆதரித்து பிரசாரம் செய்வோம்: சீமான் பேட்டி
கோபி, பிப்ரவரி, 08-
கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாருக்கு நினைவு பொதுகூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வேளாண் தொழிலை செய்தால் கேவலம் என்ற நிலையை மாற்றி இளைஞர்களும் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
மண்ணை நேசிக்கும் இளைஞர்களுக்குதான் திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும்.
                                                                                                  மேலும், . . . .

வாஸ்துபடி மணிப்பூர் முன்னேறினால் நாடு முன்னேறும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை - மோடி கடும் தாக்கு
இம்பால், பிப்ரவரி, 08-
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று காலை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:–
வடகிழக்கு மாநிலங்களுக்கு இன்று வந்திருப்பதன் மூலம் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறேன். மணிப்பூர் மாநில மக்களுக்கும், இந்த மண்ணுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                               மேலும், . . 

Thursday 6 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-02-2014) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,

புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் சட்டசபை மீண்டும் கூடுகிறது 13–ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை, பிப்ரவரி, 07-02-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.
எனவே 2011–12–ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்தது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
அதன் பின்னர் 2012–13, 2013–14ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது 4–ம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2014–15–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
                                                                                         மேலும், . . . 

நரேந்திரமோடியை டீ வியாபாரி என்பதா? எதிர்க்கட்சியினரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடெல்லி, பிப்ரவரி, 07-02-2014,
எதிர்க்கட்சியினரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது என்று கட்சி செய்தி தொடர்பாளர்களுக்கு ராகுல் காந்தி ஆலோசனை வழங்கினார்.
ராகுல் ஆலோசனை
சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர் டீ வியாபாரி என்று கூறியிருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கட்சி செய்தி தொடர்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் எப்படி சிறந்த முறையில் நாட்டு மக்களுக்கு காங்கிரசின் செயல்திட்டங்களை சொல்ல வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
                                                                                                      மேலும், . . . . 

சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும் அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை
சென்னை, பிப்ரவரி, 07-02-2014,
ஏ.டி.எம்.வசதி உள்பட சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் தொழிலாளர்கள் கருத்தரங்கம்
இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் செயலாளர் கே.கலைவாணி பேசியதாவது:–

                                                                                                                                மேலும், . . 

இன்றைய முக்கிய செய்திகள் (06-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-02-2014) நண்பகல்,IST- 01.00 மணி,நிலவரப்படி,

கம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை
சென்னை, பிப்ரவரி, 06–02-2014,
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.
அ.தி.மு.க. சார்பில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா நியமித்துள்ள தொகுதி பங்கீட்டு குழுவினரான ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் அதன் மாநில தலைவர் தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
                                                                                                    மேலும், . . . 

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி ராகுல்காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு
சென்னை, பிப்ரவரி, 06–02-2014,
பாராளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவரவில்லை.
தற்போதைய நிலையில் அ.தி.மு.க. அணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் கட்சிகள் பேரவை ஆகிய இடம் பெற்றுள்ளன. பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன பா.ம.க.வும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன. தே.மு.தி.க.வின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக இது வரை எந்த கட்சியும் தெரிவிக்க வில்லை.
                                                                                                       மேலும், . . . 

காங்கிரஸ் எம்.பி.க்களே வைக்கிறாங்க ஆப்பு தெலுங்கானாவால் திணறுகிறது காங்கிரஸ்
புதுடில்லி, பிப்ரவரி, 06–02-2014,
நடப்பு ஆளும் காங்கிரஸ் அரசின் கடைசி பார்லி., கூட்டம் இன்றுடன் 2 வது நாளாக ஸ்தம்பித்து போயுள்ளது. பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றுவோம் என்ற கனவில் இருந்த காங்கிரசுக்கு, காங்கிரஸ் எம்,பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளனர். அதுவும் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளனர். எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொண்டுள்ளனர்.
ஆந்திராவை இரண்டாக பிரிப்பதற்குள் காங்கிரஸ் கட்சி சந்தித்த எதிர்ப்பு கணைகள் ஏராளம். தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த காரணத்தினால் ஆந்திராவை 2 ஆக பிரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்தது. இது முதல் கடும் போராட்டம், அரசு அலுவலகம் எரிப்பு, என மாறிய கலவரம் ராணுவம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. பல உயிரிழப்புகள், வர்த்தக ரீதியிலான சேதம் என வந்தது மட்டுமே மிச்சம். அறிவித்த காரணத்தினால் தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் அரசு பின் வாங்க முடியாமல் தவித்தது.
                                                                                               மேலும், . . .