Saturday 15 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

கெஜ்ரிவால் கோரிக்கை நிராகரிப்பு டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி மத்திய மந்திரி சபை முடிவு
புதுடெல்லி, பிப்ரவரி, 16-02-2014,
டெல்லியில் கவர்னர் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு ராஜினாமா
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்தது. சட்டசபையில் கடந்த 14–ந் தேதி, முதல்–மந்திரி முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் புரிவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்தது.
உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பதவி விலகியது. 48 நாள் ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்தது. பதவி விலகல் கடிதத்தை துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கிடம் கெஜ்ரிவால் அரசு அளித்தது. அத்துடன், டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற மந்திரிசபையின் பரிந்துரையையும் அளித்தது.
                                                                              மேலும், . . . 

தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

சென்னை, பிப்ரவரி, 16-02-2014,
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கலந்துரையாடல்
இதன் ஒரு பகுதியாக தேர்தல் செலவுகள் குறித்து பத்திரிகையாளருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தேர்தல் கமிஷன் நடத்தி வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் கமிஷனின் பொது இயக்குனர் (தேர்தல் செலவுகள்) பி.கே.தாஷ் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இருவரும் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:–
                                                                                                                         மேலும், . . . .

இந்திய விமானத்தை கடத்திய போது விடுவிக்கப்பட்ட உமர் ஷேக் பாகிஸ்தான் சிறையில் தற்கொலை முயற்சி

இஸ்லாமாபாத், பிப்ரவரி, 16-02-2014,
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் குடியுரிமை கொண்ட உமர் ஷேக் பாகிஸ்தான் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1-1-2000 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தை பயணிகளுடன் கடத்திய தீவிரவாதிகள், விமானத்தையும் பயணிகளையும் விடுவிக்க நிபந்தனை விதித்தனர்.
இந்திய சிறையில் அடைத்து வைத்திருக்கும் மவ்லானா மசூத் அக்தர், முஸ்தாக் அஹமத் சர்கார் மற்றும் உமர் ஷேக் ஆகியோரை விடுதலை செய்தால் விமான பயணிகளை விடுவிப்போம் என இந்திய அரசுடன் அவர்கள் பேரம் பேசினர்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பயணிகளை கடத்திய குற்றத்துக்காக உமர் ஷேக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பயணிகளை உயிருடன் மீட்பதற்காக அவர்களின் நிபந்தனைகளுக்கு சம்மதித்த இந்திய அரசு உமர் ஷேக் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்தது.

                                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment