Thursday 13 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

35 லட்சம் குடும்பத்துக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் பள்ளிக்கல்விக்கு ரூ. 17,731 கோடி கூவம் சீரமைக்க ரூ.3,833 கோடி தஞ்சை, நெல்லையில் சிறப்பு மருத்துவமனை புதிய வரி இல்லாத தமிழக பட்ஜெட்

சென்னை, பிப்ரவரி, 14-02-2014,
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
ஜெயலலிதா வந்தார்
சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10.52 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்தார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
சபாநாயகர் ப.தனபால், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


பட்ஜெட் தாக்கல்
பின்னர், 2014-2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு அறிக்கை) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். காலை 11.02 மணிக்கு 80 பக்க பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்த அவர் பகல் 1.42 மணி வரை தொடர்ச்சியாக 2 மணி 40 நிமிடங்கள் வாசித்தார்.


இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்போ, நடைமுறையில் உள்ள வரி விகிதத்தினை உயர்த்தவோ செய்யவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் சலுகைகள் தரும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார். பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

                                                                                                         மேலும், . . 

லோக்சபாவில் 'பெப்பர் ஸ்பிரே!' அடித்தார் ஆந்திர காங்கிரஸ்- எம்.பி, வரலாறு காணாத சம்பவங்களால் பார்லிமென்ட் ஸ்தம்பிப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 14-02-2014,
தெலுங்கானா மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய, மத்திய அரசு தரப்பில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிராக, அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சம் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துவங்கியதும், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயை, தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்யுமாறு, சபாநாயகர் மீரா குமார், அழைத்தார். ஷிண்டே எழுந்த மறுகணமே, சபைக்குள் பெரும் ரகளை மூண்டது. லோக்சபாவுக்குள் நடந்த ரகளையின் போது, உச்சகட்டமாக, 'பெப்பர் ஸ்பிரே' மயக்க மருந்தை, பீய்ச்சியடித்ததால், சபைக்குள், பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். இருமல், தும்மல், கண் எரிச்சலுடன், அவசரமாக, ஏராளமானோர் சபையிலிருந்து ஓட்டம் பிடித்தனர். பார்லிமென்ட்டின், அனைத்து, வெளிப்புற வாயில்களிலும், ஏராளமான போலீசார் மற்றும் சபை காவலர்கள், நிறுத்தப்பட்டிருந்தனர். உள்ளே நுழையும் ஒவ்வொருவரும், கடும் சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்பட்டனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை, பார்வையிட வழங்கப்படும், பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது.
                                                                                                                     மேலும், . . 

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக மரணம்

சென்னை, பிப்ரவரி, 14-02-2014,
திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
பாலுமகேந்திரா நேற்று காலை மூச்சுத் திணறல் காரணமாக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                                                                  மேலும், . . .

No comments:

Post a Comment