Sunday 2 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,



அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி உறுதி ஆனது ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, பிப்ரவரி, 03-02-2014,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
கம்யூனிஸ்டு கட்சிகள்
தேர்தலை சந்திக்கும் ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன. பல்வேறு கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதன் பிறகு 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் அ.தி.மு.க. அணியிலேயே இடம்பெற்று தேர்தலை சந்தித்தன.
                                                                                                                 மேலும், . . . 


கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் கோஷம் தலைவர்கள் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு
விழுப்புரம், பிப்ரவரி, 03-02-2014,
உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் எழுப்பிய கேள்விக்கு பதிலாக, ‘‘கூட்டணி வேண்டாம்’’ என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். அதே நேரம் தலைவர்கள் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.
ஊழல் எதிர்ப்பு மாநாடு
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் தே.மு.தி.க. 9–வது மாநில மாநாடு நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் ஏராளமான லாரி, வேன், கார்கள் மூலம் வந்து குவிந்தனர்.
                                                                                                                        மேலும், . . . 


பயிற்சி செவிலியர்கள் 6–வது நாளாக தொடர்ந்து போராட்டம் அரசு அதிகாரிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை, பிப்ரவரி, 03-02-2014,
பயிற்சி செவிலியர்களின் போராட்டம் நேற்று 6–வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி செவிலியர்கள் அரசு அதிகாரிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
பயிற்சி செவிலியர்கள்
தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்த செவிலியர்களை அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்க்கக்கூடாது, அரசு பிறப்பித்த ‘எம்.ஆர்.பி.’ தேர்வு முறையை மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பயிற்சி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
                                                                                                                                    மேலும், . . 




No comments:

Post a Comment