Sunday 16 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் புதிய சலுகைகள் இடம் பெற வாய்ப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 17-02-2014,
வருகிற ஏப்ரல்–மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்குப்பின் புதிதாக பொறுப்பு ஏற்கும் மத்திய அரசு, ஜூன்–ஜூலை மாதங்களில் 2014–15–ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.
இடைக்கால பட்ஜெட்
அதற்கு முன்பாக ஜூலை மாதம் வரை உள்ள செலவினங்களுக்கு அனுமதி பெறுவதற்கான இடைக்கால பட்ஜெட், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று தெலுங்கானா விவகாரத்தில் பாராளுமன்றத்தில் வரலாறு காணாத கலகம் நடைபெற்றது. உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி வீசி தாக்குதல் நடந்தது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று (திங்கட்கிழமை) கூடும் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு நிதி மந்திரி ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், 12 முதல் 18 பங்கங்களை கொண்டதாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
                                                                                                       மேலும், . . . 

செல்போனில் மலர்ந்த காதல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு காதலன் சிறையில் அடைப்பு

சென்னை, பிப்ரவரி, 17-02-2014,
சென்னையில் குளிர்பானத்தில், மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவி கற்பழிக்கப்பட்டார். கோர்ட்டில் சரண் அடைந்த காதலன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கற்பழிப்பு புகார்
சென்னை புரசைவாக்கம், ஆர்.கே.புரம், பிரீக்ளின் ரோட்டைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகள் ஜானகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது–வயது 19). நர்சு பயிற்சி பெற்று வந்தார். தண்டையார்பேட்டை அரசு தொற்று நோய் ஆஸ்பத்திரியில், தினமும் பயிற்சிக்கு செல்வார். அப்போது ஆஸ்பத்திரி எதிரில் இளநீர் கடை நடத்தி வந்த, சதீஷ்(வயது 24) என்பவருடன், காதல் ஏற்பட்டது. இளநீர் சாப்பிடச் சென்ற போது, ஏற்பட்ட காதல், பின்னர் செல்போன் பேச்சு மூலம் வளர்ந்தது.
                                                                                                                    மேலும், . .

காங்கிரஸ் அரசின் ஊழல்களின் பட்டியல் தன் வலைதளத்தில் அத்வானி பகிரங்கம்

புதுடில்லி, பிப்ரவரி, 17-02-2014,
கடந்த, 10 ஆண்டு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில் பகிரங்கமாக பட்டியலிட்டுள்ளார். 'சுதந்திர இந்தியாவின், மிக மோசமான ஊழல் ஆட்சி இது' என்றும், கடுமையாக, அவர் விமர்சித்துள்ளார். அது போல், பெருமையாக பிரதமர் பதவியில் அமர்ந்த மன்மோகன் சிங், ஊழல்வாதி என்ற பெயருடன், வெளியேற உள்ளார் என்றும் அத்வானி கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, 10 ஆண்டு கால, ஐ.மு., கூட்டணி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களையும், அவர், பட்டியலிட்டுள்ளார்.
                                                                                                                மேலும், . . . 


No comments:

Post a Comment