Monday 10 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

சுதந்திர இந்திய வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகள் மிக மோசமான காலம் பிரதமர் மன்மோகன்சிங் மீது மோடி தாக்குதல்
காந்திநகர், பிப்ரவரி, 11-02-2014,
சுதந்திர இந்திய வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகள் மிக மோசமான அழிவு காலம் என்று பிரதமர் மன்மோகன்சிங் மீது நரேந்திர மோடி தாக்குதல் தொடுத்துள்ளார்.
மோடி பதில் தாக்குதல்
பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, ‘‘பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவு’’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் கோபா என்ற இடத்தில் நடந்த மாநில பாரதீய ஜனதா கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இதற்கு நரேந்திர மோடி பதில் தாக்குதல் தொடுத்துள்ளார். ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீகமலம்’ என்ற அந்த புதிய அலுவலகத்தை நரேந்திர மோடி திறந்து வைத்து கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

                                                                                                                  மேலும், . . 

குறிப்பிட்ட சில பணிகளில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற சிறப்பு இளைஞர் காவல் படை தொடக்கம் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை ஜெயலலிதா வழங்கினார்

சென்னை, பிப்ரவரி, 11-02-2014,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சட்டம்–ஒழுங்கை பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின்போது மீட்பு பணிகளை மேற்கொள்வது போன்ற இன்றியமையா பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் மேம்பாட்டிற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா அறிவிப்பு
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் ஆட்பற்றாக்குறையை தவிர்க்கவும், காவல் துறையின் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சில பணிகளில் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட ஒரு துணைப்படையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கருதியும் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை என்ற ஒரு சிறப்பு படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்று 29.10.12 அன்று சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மேலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் 23–ந் தேதி அன்று சட்டசபையில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 10 ஆயிரத்து 500 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்ய நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை அலுவலகங்களில் வழங்கப்பட்டன.
                                                                                                                        மேலும், . . . 

‘குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டார்’ பரபரப்பான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
புதுடெல்லி, பிப்ரவரி, 11-02-2014,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்று 3 பேர் கொண்ட கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புயலை கிளப்பிய சூதாட்டம்
கடந்த, ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்த போது, சூதாட்ட சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட ஆட்டங்களின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிப்பதற்காக சூதாட்ட தரகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ‘மேட்ச் பிக்சிங்’ செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏராளமான புரோக்கர்களும் சிக்கினர். பிறகு ஜாமீனில் வெளி வந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட் கால தடை விதித்தது.
                                                                                                                       மேலும், . . . 

No comments:

Post a Comment