Thursday 31 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-07-2014) நண்பகல், IST- 02.00 மணி, நிலவரப்படி,

பா.ஜனதா–இந்து முன்னணி தலைவர்கள் 11 பேருக்கு தீவிரவாதிகள் குறி?


சென்னை, ஜூலை, 31–07-2014,
வேலூர் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் முதல், அம்பத்தூர் சுரேஷ் குமார் வரை 6 பேர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டில் கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பிய ஆசாமிகள் அதில், பா.ஜனதா, இந்து முன்னணி தலைவர்கள் 11 பேரின் பெயர்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில் ‘தீ’ என்பது வானதி சீனிவாசனையும், சிவகங்கையில் ‘ஜா’ என்பது எச்.ராஜாவையும் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இதே போல தஞ்சையில் ‘ம்’ என்பது, அப்பகுதியில் பிரபலமான பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் என்று கருதப் படுகிறது. சென்னையில் ‘ன்’ என்பது இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகி ராமகோபாலனை குறிப்பிடு வதாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர கோவையில் 3 பேரும், திருச்சி, திருப்பூர், நெல்லை, விருதுநகரில் ஒருவரும் மிரட்டல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
                                                                                                                     மேலும், . . .

சென்னை வாலிபர்கள் 2 பேர் கடத்தி படுகொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

சென்னை, ஜூலை, 31–07-2014,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் மருதேரி ஏரிக்கரையில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி–சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
அவரது சட்டைப் பையில் புதுவை போட்டோ ஸ்டூடியோவின் அடையாள அட்டை இருந்தது. எனவே அவர் புதுவையை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதே போல, காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலும் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவரும் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலையுண்ட 2 பேரும் சென்னையை சேர்ந்த நண்பர்கள் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
                                                                                                                  மேலும், . . .

புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்பு


புதுடெல்லி, 31–07-2014,
ராணுவ தளபதி விக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக், இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நாட்டின் 26–வது ராணுவ தளபதியான அவர், 30 மாதங்கள் அப்பதவியில் இருப்பார். அவருக்கு வயது 59. அவர், கடந்த 1987–ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த மே மாதம், காங்கிரஸ் கூட்டணி அரசின் இறுதிக்காலத்தில், தல்பீர்சிங் சுஹாக், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
                                                                                                           மேலும், . . . . 

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805

சென்னை, ஜூலை, 31–07-2014,
இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தீரன் சின்னமலை பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வந்தது.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.
                                                                                                   மேலும், . . . . .

Wednesday 30 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-07-2014) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்

தஞ்சாவூர், ஜூலை 30–07-2014,
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையானவர்களில் 8 பேர் அதிகாரிகள், 3 பேர் ஆசிரியைகள். அவர்கள் விவரம் வருமாறு:–
                                                                                                  மேலும், . . . . . 

கோவையில் 7 இடங்களில் குண்டு வெடிக்கும் கமிஷனர் ஆபீசுக்கு போனில் மிரட்டல்

கோவை, ஜூலை 30–07-2014,
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் 7 இடங்களில் இன்று குண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.
அவரிடம் போலீசார், "நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்ற கேட்டபோது அந்த நபர், "அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. குண்டு வெடிக்கும் என்றால் வெடிக்கும். முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
"எந்த இடத்தில் வெடிக்கும்?" என்று போலீசார் கேட்டபோது "கணபதி...கணபதி..." என்று கூறிவிட்டு போனில் பேசியவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
                                                                                             மேலும், . . . . .

விவாகரத்து வழக்கு ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம்
மும்பை, ஜூலை. 30–07-2014,
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசன்னேவை கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சுசன்னே இந்தி நடிகர் சஞ்சய் கானின் மகள். இந்த தம்பதியினருக்கு ஹிரே கான்(வயது 7), ஹிருதான்(5) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 6–ந் தேதி ஹிருத்திக் ரோசனின் தந்தை ராகேஷ் ரோசன் தனது 64–வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஹிருத்திக் ரோசனின் மனைவி சுசன்னே காலதாமதமாக வந்தார். அவருடன் அவரது தாயார் சரைன் கான், தந்தை சஞ்சய் கான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
                                                                                                           மேலும், . . . . 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை–நிதியுதவி: ஜெயலலிதா

சென்னை, ஜூலை. 30–07-2014,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல்–அமைச்சரின் தனிப் பிரிவிற்கு அளித்த மனுவில், தனது பெற்றோர் தன்னை பத்து ஆண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்றதாகவும், 16.2.2014 அன்று சதீஷ்குமார் என்பவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கி, நடுக்காட்டில் போட்டு விட்டு சென்றுவிட்டதாகவும், மயக்க நிலையில் இருந்த தன்னை உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்ததாகவும் தெரிவித்து, தன்னுடைய துர்ப்பாக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, தன் மீது கருணை வைத்து உதவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைக் கருணையுடன் பரிசீலித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
விசாரணை அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் சிறு வயதாக இருக்கும்போதே, அவரது தந்தை மற்றும் தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்தனியாக சென்று விட்டபடியால் தனித்து விடப்பட்ட நிலையில் அப்பெண் அவரது பெரியப்பா வீட்டில் வளர்ப்பு மகளாக வளர்ந்து வந்துள்ளார்.
                                                                                                மேலும், . . . . .

Tuesday 29 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-07-2014) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் துப்பாக்கி முனையில் 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

புதுடெல்லி, 29-07-2014,
டெல்லியில் துப்பாக்கி முனையில் 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. உத்தம் நகரை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவியை மாணவியை 5 பேர் கொண்ட கும்பல், சுரேந்தர் என்பவரது வீட்டிற்கு கொண்டு சென்று, துப்பாக்கி முனையில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 19ம் தேதி நடந்ததுள்ளது.
மாணவியை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அந்த கும்பல் செல்போனில் படம் பிடித்துள்ளது.
                                                                                                     மேலும், . . . . .

உலக அளவில் உ.பி.யில்தான் மதகலவரத்தால் பலியானோர் அதிகம் அமெரிக்கா அறிக்கை
லக்னோ, 29-07-2014,
உலக அளவில் மதக் கலவரம் காரணமாக உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவில் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு இலாகா ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகள், படுகொலைகள் குறித்து சர்வதேச மதச் சுதந்திரம் என்ற பெயரில் அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிடுவது வழக்கம்.
2013ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி அண்மையில் வெளியிட்டார்.
                                                                                                       மேலும், . . . .

அரசு நிலத்தை "பிளாட்' போட்ட பஞ்சாயத்து தலைவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல், 29-07-2014,
சிவியாம்பாளையம் பஞ்சாயத்து எல்லையில், அரசுக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க., பஞ்சாயத்து தலைவர், 25 பேருக்கு பிளாட் போட்டு விற்றது, போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் அடுத்த, சிவியாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, 45, இவர், அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர் பதவியில் உள்ளார். சிவியாம்பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள், சில நாட்களுக்கு முன், மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், "சிவியாம்பாளையம் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எட்டு ஏக்கர் பரப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, 25 பேருக்கு,
                                                                                                            மேலும், . . . . .

1ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிரியர்கள் கைது

பெங்களூர், 29-07-2014,
பெங்களூரில் 1ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் வர்த்தூர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட குன்டதஹள்ளி கேட் அருகே வர்த்தூர்–ஹரலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 1–ம் வகுப்பு படித்த மாணவிக்கு கடந்த 12–ந் தேதி நேகாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
                                                                                                 மேலும், . . . . . .

Monday 28 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-07-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

அசோக் சவானுக்கு தேர்தல் கமிஷன் அளித்த விளக்க நோட்டீசுக்கு ஐகோர்ட்டு தடை

புதுடெல்லி, 28-07-2014,
சட்டமன்ற தேர்தலின் போது பணம் கொடுத்து செய்தி வெளியிட்டது தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய விளக்க நோட்டீசுக்கு டெல்லி கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேர்தல் கமிஷனில் புகார்
மராட்டியத்தில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் நந்தேத் மாவட்டத்தில் உள்ள போகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலின் போது சில பத்திரிகைகளில் கட்டுரைகள் போல தோற்றமளித்த விளம்பரங்களை அசோக் சவான் பெருத்த செலவில் வெளியிட்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, ‘இந்த செய்திகளுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்த கணக்கு அறிக்கையில் சவான் குறிப்பிடவில்லை’ என்று,
                                                                                                 மேலும், . . . . 

லிபியாவில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் சண்டை; 59 பேர் பலி


பெங்காசி, 28-07-2014,
லிபியாவில் தீவிரவாதிள் ராணுவம் இடையிலான கடும் சண்டையில் 59 பேர் பலியாகினர்.
லிபியாவில் 34 ஆண்டுகால கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. திரிபோலி விமானநிலையம் ஜிண்டான் போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் ஈருந்து வருகிறது. இதனால் இந்த விமானநிலையம் மீது இஸ்லாமிய போராட்டக்குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் பெங்காசி நகரின் மீதும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் பெங்காசி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
                                                                                                       மேலும், . . . . .
காஸாவில் உடனடி போரை நிறுத்த வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

காஸா சிட்டி, 28-07-2014,
காஸாவில் உடனடி போரை நிறுத்த வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்–காஸாமுனை ஹமாஸ் இயக்கத்தினர் இடையே கடந்த 8–ந் தேதி சண்டை தொடங்கியது. இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாமுனையில் குண்டு மழை பொழிய,
                                                                                                        மேலும், . . . .

நாளை ரம்ஜான்: கருணாநிதி–தலைவர்கள் வாழ்த்து

சென்னை, 28-07-2014,
ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:–
இஸ்லாமிய மக்களின் புனித நூலான ‘‘திருக்குர்ஆன்’’ நூல் அருளப்பட்ட ரமலான் மாதம் முழுவதும் உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல், பசித் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அன்றாடம் உரிய பணிகளை ஆற்றி, நோன்புக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மனநிறைவோடு ரமலான் திருநாளைக் கொண்டாடும் எனதருமை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
இஸ்லாம் நெறி வளர்த்த அண்ணல் நபிகள் நாயகம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வாழ்வியல் முறைகளையே போதித்தார். ‘‘தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள், அவ்வாறே உறவினர்களிடமும் அண்டை வீடுகளில் உள்ள அந்நியரிடமும், ஆதரவற்றோரிடமும், ஏழைகளிடமும், எப்போதும் உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களிடமும், பயணிகளிடமும், உங்கள் பணியாளர்களிடமும் அன்பு செலுத்துங்கள்’’ ‘‘பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், கைதிகளை விடுவியுங்கள், பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள், பிறர் மீது பெறாமை கொள்ளாதீர்கள், பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள்.
‘‘உங்கள் வாக்குறுதியைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறாதீர்கள்’’–
                                                                                                    மேலும், . . . . . 

Sunday 27 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-07-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

திருவொற்றியூர் வாலிபரை கொலை செய்ய ரூ.8 லட்சம் வாங்கினோம்: பெண் தகவல்

சென்னை, 27-07-2014,
வாலிபரை கொலை செய்ய ரூ.8 லட்சம் பணம் வாங்கி 6 பேரும் பங்கு போட்டுக் கொண்டதாக பிடிபட்ட பெண் பரபரப்பு தகவல் வெளியிட்டார்.
திருவொற்றியூர் வாலிபர் விக்கி கொலை தொடர்பாக போலீசில் பிடிபட்ட எஸ்தர்ராணி (35) பல திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இவர் சதாசிவம் கம்பெனியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஆவார். இவருக்கு திருமணமாகி கணவர் கணேசனுடன் புது வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார்.
தனது கள்ளக்காதலியாக இருந்த சுஜாதாவை விக்கி அபகரித்துக் கொண்டதால் சதாசிவம் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நேரத்தில் முன்னாள் ஊழியரான எஸ்தர்ராணியை சந்தித்து கூறி வருத்தப்பட்டார்.
அப்போது சதாசிவம் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விக்கியை தீர்த்துக் கட்ட வேண்டும், நீ உதவி செய் என்று எஸ்தர்ராணியிடம் கேட்டுக் கொண்டார்.
                                                                                                               மேலும், . .. 

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட இந்திய குடிமக்களை திரும்பவும் ஏற்றுக்கொள்ள தயார் - உள்துறை அமைச்சகம்
புதுடெல்லி, 27-07-2014,
ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட இந்திய குடிமக்களை திரும்பவும் ஏற்றுக்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகள் 157 பேர் அடைக்கலம் கேட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணம் செய்த படகின் என்ஜின் கடந்த மாதம் 29–ந் தேதி கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்றது. அவர்கள் உதவி கேட்டு நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை மீட்டு விசாரணை நடத்தியது.
                                                                                                                 மேலும், . . . 

சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, 27-07-2014,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த சில வாரங்களில் மூட்டைக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது. காரணமின்றி செய்யப்பட்டுள்ள விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.180 ஆக இருந்தது. ஆனால், அடுத்த 6 மாதங்களில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 100 ரூபாய் அதிகரித்து ரூ.280 ஆக உயர்ந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் 330 ரூபாயாக அதிகரித்த சிமெண்டின் விலை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மீண்டும் குறைந்தது.
                                                                                                         மேலும், . . . .  

‘பொதுமக்கள் பீதி அடையவேண்டாம்’ விரிசலால் கபினி அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை நீர்ப்பாசனத் துறை அதிகாரி பேட்டி
மைசூர், 27-07-2014,
கபினி அணையில் ஏற்பட்டுள்ள விரிசலால் அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கபினி அணை
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் பீச்சனஹள்ளி மற்றும் பீதரஹள்ளி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது கபினி அணை. கர்நாடக மாநில முக்கிய அணைகளில் இதுவும் ஒன்று. இந்த அணை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தான் கபினி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. இதனால் வயநாடு பகுதியில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தே அணைக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீர், மண்டியா, குடகு, சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் உயிர்நாடி ஆகும். மேலும் இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், பணமரம் மற்றும் மானந்தவாடி ஆறுகளில் கலந்து,
                                                                                                                    மேலும், . . . . 

Saturday 26 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

கடற்கரை போர் நினைவு சின்னத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

சென்னை, ஜூலை.26–07-2014,
கடந்த 1999–ம் ஆண்டு மே 3–ந்தேதி பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் மாநிலம் கார்கில் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் எதிர்த்து போரிட்டு ஜூலை 26–ந்தேதி இந்திய பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அனைவரையும் விரட்டி அடித்தனர்.
ஆபரேசன் விஜய் என்ற பெயரில் நடந்த அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்தது.
                                                                                                  மேலும், . . . 

மேஜர் சரவணன் போன்ற இளைஞர்கள் நாட்டுக்கு வேண்டும்: தாயார் பேட்டி

திருச்சி, ஜூலை, 26-07-2014,
26– 1999–ம் ஆண்டு மே மாதம் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 14,229 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜூபார் மலைப்பகுதியான பட்டாலிக் பகுதியில் எல்லைப்பகுதியை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருந்தது.
இந்த ராணுவ படைக்கு திருச்சி பீம நகரை சேர்ந்த 28 வயதே ஆன மேஜர் சரவணன் தலைமை தாங்கினார். 26–ந் தேதி அதிகாலை 4 மணிக்கு உடலை உறைய வைக்கும் கடும் குளிர், பட்டாலிக் பகுதியில் பரவியிருந்தது.
அப்போது பாகிஸ்தான் எதிரிகள் இந்திய எல்லைக்குள் பயங்கர ஏவுகணைகளுடன் ஊடுருவி விட்டதாக தலைமை அதிகாரிகளிடம் இருந்து மேஜர் சரவணனுக்கு தகவல் வந்தது.
உடனே தனது படை வீரர்களுடன் மேஜர் சரவணன், எதிரிகளை தடுத்து அவர்களை அழித்து வீழ்த்த வேகமாக முன்னேறி சென்றார்.
                                                                                                                           மேலும் , ., . 

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்

கங்கை கொண்ட சோழபுரம், ஜூலை 26–07-2014,
தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது.
கி.பி 1014 ஆம் ஆண்டு அரியணை ஏறிய இராஜேந்திர சோழன் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்ட பெருமை கொண்டவன். அவன் மன்னனாக பதவி வகித்த கடைசி 15 ஆண்டுகள் போருக்கு செல்லாமல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை நலனுக்காகவும் காவல் அரணாக நின்றான். இந்த காலகட்டத்தில் சோழ நாட்டில் ஏராளமான ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டன. அதில் ஒன்று அங்குள்ள சோழகங்கம் ஏரி.
இராஜேந்திரனின் இந்த அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியிருக்கவேண்டும்.
                                                                                                                    மேலும் , , . . .
இன்று ஆடி அமாவாசை வேதாரண்யம் – பூம்புகாரில் பக்தர்கள் புனித நீராடினர்
வேதாரண்யம், ஜூலை 26–07-2014,
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு பித்ருகடன் செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பகுதியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் ஆதிசேது என்றழைக்கப்படும் கோடிக்கரையில் உள்ள கடலில் அக்னி தீர்த்தம் சித்தர் கட்டம் என்ற இடத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.
                                                                                                                    மேலும், . . .
                                                                                                                       

Friday 25 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

கார்கில் போர் 15-வது நினைவு தினம் ராணுவ தளபதி விக்ரம் சிங் அஞ்சலி செலுத்தினார்

புதுடெல்லி, 25-07-2014,
கடந்த 1999-ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனிசிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. அப்போது இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது.
இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற 15-வது ஆண்டு
                                                                                                 மேலும், . . .

21 மாவட்டங்களில் புதிய மன நல மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, 25-07-2014,
சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும் எண்ணற்ற பல சீரிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கீழ்க்காணும் திட்டங்களை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது அரசின் நிதியுதவியுடன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் திருவள்ளூர், கடலூர்,
                                                                                                              மேலும், . . . 

சிவில் சர்வீஸ் திறனாய்வுத் தேர்வு பாராளுமன்றத்தில் அமளி அரசு பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
புதுடெல்லி, 25-07-2014,
சிவில் சர்வீஸ் திறனாய்வுத் தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் எழுந்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில், திறனாய்வு முறையை கைவிடக்கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
                                                                                                      மேலும், . . . .

அனல் மின் நிலையத்தில் அலகுகள் "அவுட்' தென் மாவட்ட மின் தடை அபாயம்
தூத்துக்குடி, 25-07-2014,
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 வது, 3 வது அலகுகளில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 வது அலகு பராமரிப்புக்கு எடுக்கப்பட்டுள்ளதால், மூன்று அலகுகளில் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடியில் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு ஐந்து அலகுகளில் இருந்தும் ஒரு அலகில் இருந்து 210 மெகாவாட் வீதம், மொத்தமாக
                                                                                                        மேலும், . . . 

Thursday 24 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

ஓசூரில் அதிகாலை பயங்கரம் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, ஊழியரை சரமாரியாக வெட்டிய வாலிபர்



ஓசூர், 24-07-2014,
ஓசூரில் அதிகாலை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபர், அங்கிருந்த ஊழியரை வாளால் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்த நோயாளிகள், பிற ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள். படுகாயத்துடன் அந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வாளுடன் வந்த வாலிபர்
ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை ஊழியர்கள் பணியில் இருந்தனர். அந்த நேரம் சிவப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் வாலிபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்தார்.
கையில் பெரிய வாளுடன் வந்த அவர், டாக்டர் எங்கே என்று கேட்டபடி உள்ளே வந்தார். அந்த நேரம் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக திட்டிய அவர், நேராக மருந்து வழங்கும் பிரிவுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஊழியர் பிரகாஷ் (35) என்பவரை பார்த்து, டாக்டர் எங்கு என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டாயா? என கேட்டவாறு, தான் வைத்திருந்த வாளால் அவரை வெட்ட முயன்றார்.
சரமாரியாக வெட்டு
இதை சற்றும் எதிர்பார்க்காத, பிரகாஷ், அதிர்ச்சியில் ’என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ என்று கையெடுத்து கும்பிட்டார்.
                                                                                                 மேலும், . . . . 

மும்பை போலீஸ் உதவி கமிஷனருமா ? மாடல் அழகி கற்பழிப்பு புகார்
மும்பை, 24-07-2014,
நாட்டிலேயே அதிக குற்றம் நடப்பதாக வரும் புள்ளி விவரத்தின்படி உச்சத்தில் இருக்கும் மும்பையில் ஒரு மாடல் அழகி போலீஸ் உதவி கமிஷனர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை உதவி கமிஷனர் சுனில் பிரஷ்கர் மீது ஒரு மாடல் அழகி எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
                                                                                                                      மேலும், . . . .

தெலுங்கானாவில் பஸ் மீது ரெயில் மோதல்: 12 மாணவர்கள் பலி
ஐதராபாத், 24-07-2014,
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரான் என்ற இடத்தில் காக்கதியா டெக்னோ என்ற தனியார் பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வருகிறார்கள். வழக்கம் போல் இன்று காலை 8.50 மணிக்கு பஸ்சில் மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதில் டிரைவர் உள்பட 38 பேர் இருந்தனர். வரும் வழியில் மாசாயி பேட்டையில் ரெயில்வே லெவல்கிராசிங் உள்ளது. இங்கு கேட் கீப்பர் இல்லை. அந்த ரெயில் பாதையில் நிஜாமாபாத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
பஸ் டிரைவர் ரெயில் வருவதை கவனிக்காமல் லெவல் கிராசிங்கை கடக்க முயன்றார்.
                                                                                                        மேலும், . . . . 

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான மனு விசாரணை தொடங்கியது
புதுடெல்லி, 24-07-2014,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 18-ந் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
                                                                                               மேலும், . . . . 

Tuesday 22 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-07-2014) காலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற 100–வது நாளில் செயல்படுத்த நடவடிக்கை
புதுடெல்லி, 23-07-2014,
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி 17 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளார். இதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100–வது நாளின்போது அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 அம்ச திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார்.
இந்த திட்டம் கடந்த 10–ந்தேதி இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதன் மீதான விரிவான செயல் திட்டத்தையும், அவற்றை அமல்படுத்துவது தொடர்பான கருத்துகளையும் ஜூலை 20–ந்தேதிக்குள் உருவாக்கித் தருமாறும் அந்த அமைச்சகங்கள் கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டன.
100–வது நாளில் அறிவிப்பு
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100–வது நாள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வருகிறது.
                                                                                                                                மேலும், . . .

முதுமையை குறிப்பிட்டு பட்டேல் திட்டினார் கடைசி நாட்களில் காந்தியின் சொல்லை பலர் கேட்கவில்லை உதவியாளர் கல்யாணம் பேச்சு

சென்னை, 23-07-2014,
காந்தி இறக்கும்போது ‘ஹேராம்’ என்ற வார்த்தையை கூறவில்லை என்றும், அவரது கடைசி நாட்களில் பலர் அவருடைய பேச்சை கேட்கவில்லை என்றும் காந்தியின் நேர்முக உதவியாளர் கல்யாணம் கூறினார்.
கருத்தரங்கு
சென்னை ஐகோர்ட்டின் 150–வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ என்ற வக்கீல் சங்கம் தொடர் கருத்தரங்கு நடத்தி வருகிறது.
‘காந்தியின் கடைசி நாள்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தியிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய வி.கல்யாணம் உரையாற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது.
                                                                                              மேலும், . . . 

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொள்ள தடை சென்னையில் கருணாநிதி தலைமையில் 31–ந் தேதி கண்டன கூட்டம்

சென்னை, 23-07-2014,
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் வரும் 31–ந் தேதி கருணாநிதி தலைமையிலும், ஆகஸ்டு 1 மற்றும் 2–ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் கண்டன கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் 3 முறை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டிருப்பதால் இனி இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாது என்று சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
                                                                                                     மேலும், . . . 
பெரியபாளையம் அருகே கிராம மக்களிடையே மோதல் போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அதிரடிப்படையினர் குவிப்பு

பெரியபாளையம், 23-07-2014,
பெரியபாளையம் அருகே கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிராம மக்களிடையே மோதல்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே உள்ள அணைக்கட்டில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறும்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழாவுக்கு கொசஸ்தலை ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள புன்னபாக்கம் கிராம மக்களும், கொசஸ்தலை ஆற்றின் தெற்கு பகுதியில் வசிக்கும் வெள்ளியூர் கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்போது புன்னபாக்கம் கிராம மக்களுக்கும், வெள்ளியூர் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
                                                                                                  மேலும், . . . 

Saturday 19 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம்: உலக நாடுகளின் உதவியை நாடும் மலேசியா
கோலாலம்பூர், ஜூலை, 19-07-2014,
உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் எம்.எச்-17 சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர். இதையடுத்து அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாய் தலைமையில் மருத்துவக் குழு மற்றும் விசாரணைக்குழு இன்று உக்ரைன் செல்கிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாய் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடம் பாதுகாப்பற்ற பகுதி. விமானம் விழுந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளேன். அங்கு எங்களை செல்ல அனுமதிக்காவிட்டால் அது மனிதாபிமானமற்ற செயல்.
விமானத்தின் கருப்பு பெட்டி குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்.
                                                                                                          மேலும், . . .

ஈரோடு: பேக்கரி உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


ஈரோடு, ஜூலை, 19-07-2014,
ஈரோடு ரெங்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 43). இவர் ரெங்கம் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை எழுந்து பேக்கரியை திறக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ரெங்கம்பாளையம் ஜோசப் ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் பிரேம்நாத் பிணமாக மீட்கப்பட்டார்.
                                                                                                       மேலும், . . .

தி.மு.க.வில் இருந்து முல்லைவேந்தன் நிரந்தர நீக்கம்: அன்பழகன் அறிக்கை

சென்னை, ஜூலை, 19-07-2014,
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தலைமைக் கழகத்தின் வேண்டுகோளை ஏற்றுச் செயல்படாமல், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்து விட்டதாக புகார் கூறப்பட்ட கழக முன்னணியினரைப் பற்றியும், அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்தும் விசாரித்த அளவில், அந்தக் குற்றச்சாட்டுகளில் முழு உண்மையில்லை என்றும், புகார்கள் உள்ளூர் கோபதாபங்களையொட்டி கொடுக்கப்பட்டவை என்றும், தாங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீற வில்லை என்றும், கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கழகத்திற்காக பல இன்னல்களையேற்று பணியாற்றி வருபவர்கள் என்றும், அதையும் மீறி தங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தியிருந்தால், தலைமைக் கழகம் தங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கழகத் தலைவர், கலைஞர் தங்களின் கடந்த கால பணிகளை எண்ணிப் பார்த்து மீண்டும் கழகத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்றும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் விளக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களின் விளக்கங்களை யெல்லாம் பார்த்த பிறகு, அவர்கள் தெரிவித்துள்ள பல கருத்துகள் அடியோடு புறக்கணிக்கப்பட முடியாத ஒரு நிலையில் அந்தக் கழகத் தோழர்கள் இருப்பது தெளிவாகிறது.
                                                                                                                                மேலும், . . .

பெங்களூரில் 6 வயது மாணவி கற்பழிப்பு: பள்ளியில் பெற்றோர் 3–வது நாளாக முற்றுகை

பெங்களூர், ஜூலை, 19-07-2014,
பெங்களூரில் எலட் விப்ஜியார் என்ற தனியார் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 2–ம் வகுப்பு 6 வயது சிறுமி கடந்த வாரம் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
அன்று சிறுமி வகுப்பறையில் குறும்புத்தனமாக நடந்து கொண்டதால் வகுப்பறையை விட்டு வெளியேறச் சொல்லி ஆசிரியர் தண்டனை கொடுத்தார். அருகில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் தனியாக அடைத்து வைக்கப்பட்டார்.
அரை மணி நேரம் கழித்து சிறுமி மீண்டும் வகுப்பறைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அவள் சோர்வுடன் காணப்பட்டார். சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலியால் துடித்தார்.
                                                                                                                     மேலும், . . . 

Tuesday 15 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

பிரபல ரவுடி கேட் ராஜேந்திரன் பற்றிய பரபரப்பு தகவல்கள்

சென்னை, 15-07-2014,
திருவொற்றியூரை சேர்ந்தவர் கேட் ராஜேந்திரன் பிரபல ரவுடியான இவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வடசென்னையை கலக்கி வந்தவன்.
திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, போலீஸ் நிலையங்களில் இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேட் ராஜேந்திரன் கடந்த மாதம் 3-ந்தேதி தான் சிறையில் இருந்து வெளியில் வந்தான்.
இன்று காலையில் சாப்பிடுவதற்காக வெளியில் வந்தான். பெரிய பாளையம் ரால்லபாடி பகுதியில் போலீஸ் குடியிருப்புக்கு அருகில் உள்ள கடையில் சாப்பிட சென்ற கேட் ராஜேந்திரனை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வெட்டியது. இதில் தலை, கழுத்து, கை, கால்களில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அவன் பலியானான்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பெரிய பாளையம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கேட் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட கேட் ராஜேந்திரனுக்கு 55 வயது ஆகிறது. மேகலா என்ற மனைவியும், கண்ணன், கலைமணி என்ற 2 மகன்களும் உள்ளனர்.
பெரியபாளையத்தில் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட ‘கேட்’ ராஜேந்திரன் கடந்த 1989–ம் ஆண்டில் இருந்து 1994 வரை சென்னை போலீசுக்கு பெரும் தலைவலியாக விளங்கியவன்.
                                                                                                                மேலும், . . .  

ஹபீஸ்சயீத் சந்திப்பு விவகாரம்: பாராளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஜூலை, 15–07-2014,
மும்பையில் 2008–ம் ஆண்டு தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 166 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீது. பாகிஸ்தானை சேர்ந்த இவன் ஜமாத்–உத்–தவா தீவிரவாத இயக்கத் தலைவன் ஆவான்.
இந்த நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் யோகாகுரு பாபா ராம்தேவ்வின் நெருங்கிய உதவியாளரும், பத்திரிகையாளருமான வைதிக் தீவிரவாதி ஹபீஸ் சயிதை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2–ந்தேதி லாகூரில் இந்த சந்திப்பு நடந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
                                                                                                                     மேலும், . . .

தமிழகத்தின் மனுவை விசாரிக்க காவிரி நடுவர் மன்றம் மறுப்பு
புதுடெல்லி, ஜூலை, 15–07-2014,
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் இன்று கூடிய காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமிழகம், கர்நாடகம் இடையேயான காவிரி நதி நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 1990–ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று 1991–ல் இடைக்கால உத்தரவு வழங்கியது. அதன் பிறகு 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந்தேதி இறுதித்தீர்ப்பை வழங்கியது.
அதில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 419 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
                                                                                                         மேலும், . . .

112–வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூலை, 15–07-2014,
பெருந்தலைவர் காமராஜரின் 112–வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், இளங்கோவன், திருநாவுக்கரசர், கட்சி தலைவர் ஞானதேசிகன், செல்வபெருந்தகை, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் உருவ படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் மாநில தலைவர் குமரிஅனந்தன், ஜெ.குமார், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், நாஞ்சில் பிரசாத், சைதை ரவி, இ.சி.சேகர், மணிபால், ஜவகர்பாபு, வில்லிவாக்கம், சுரேஷ், நடிகர் ராஜ்குமார், ஜி.சேகர், வெங்கடேஷ், தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உ.பலராமன், மாறன் மற்றும் டி.என். அசோகன், வழக்கறிஞர் டி.எம்.பிரபாகர், வேலுத்தேவர், ஜான்சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு நகர தலைவர் நாஞ்சில் பிரசாத் மாலை அணிவித்து மாணவ – மாணவிகளுக்கு

                                                                                        மேலும் , . .

Monday 14 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

பாராளுமன்ற துளிகள்
புதுடெல்லி, 14-07-2014,
அறிக்கை தயாராகவில்லை...
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி பற்றி ஆய்வு செய்ய ஏ.கே.அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தயாரித்துள்ள அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாக சில தகவல்கள் இன்று வெளியானது.
அதை ஏ.கே.அந்தோணி மறுத்தார். அறிக்கை இன்னமும் தயாராகவில்லை. அதற்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மன்மோகன்- ஜேட்லி சந்திப்பு
காங்கிரஸ் படுதோல்வியை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் அமைதியாக குடியேறி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி திடீரென மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்றார்.
                                                                                                          மேலும், . . . 

தீ விபத்தில் கட்டிடம் சேதம்: ஸ்டேட் வங்கின் 3 கிளைகள் வேறு இடத்திற்கு மாற்றம்


சென்னை, ஜூலை.14–
சென்னை பாரிமுனையில் இயங்கி வந்த ஸ்டேட் வங்கி பிரதான கிளை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கி பணம், வாடிக்கையாளர் நகை மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தீக்கு இறையாகாமல் தப்பின. அங்கிருந்த பணம், மற்றும் நகைகள் மற்ற கிளைகளுக்கு மாற்றப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்து உள்ள இடத்தில் 3 கிளைகள் இருந்து உள்ளது. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்களுடைய நகைகள், ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரதாப்ராவ் சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
                                                                             மேலும், . . . .

வேட்டிக்கு தடையால் குமுறும் தமிழகம்
சென்னை, 14-07-2014,
சென்னை கிரிக்கெட் கிளப்புக்குள் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டி வந்ததால் ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் 2 வக்கீல்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் கிரிக்கெட்டில் விளாசப்படும் சிக்சர்களை போல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறது.
வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு மல்லு கட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தயாராகி விட்டன.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் இன்று சட்டசபையில் பிரச்சினையை கிளப்புவேன் என்று ஆவேசத்துடன் சென்றுள்ளார்.
இது ஒரு கலாச்சார தாக்குதல்! மேலை நாகரீகம்தான் உயர்வானது என்ற எண்ணத்தை தக்க வைக்கும் முயற்சி என்று தமிழர்கள் குமுறுகிறார்கள்.
                                                                                                   மேலும், . . . .

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மணி விழா: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜூலை. 14–
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் 60–வது மணிவிழா இன்று கொண்டாடப்பட்டது. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மணி விழாவையொட்டி இன்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள். பலர் மணிவிழாவில் பங்கேற்று அவர்களிடம் ஆசி பெற்றனர்.
தினத்தந்தி அதிபர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, ராம்கி, நடிகை நிரோஷா, சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கருநாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் சுந்தரேசன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் நேரில் பங்கேற்றனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், ஜே.எம்.ஆரூண், நடிகர் சத்யராஜ் ஆகியோர் போனில் வாழ்த்து கூறினர்.
                                                                                     மேலும், . . . 

Sunday 13 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர் - தகவல்கள்

புதுடெல்லி, 13-07-2014,
சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர் என்று மத்திய புலனாய்வு பிரிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 10-ம் தேதி பரஸ்கானா போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவத்தில் பரஸ்கானா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் குலாப் கேடேகர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
                                                                                                     மேலும், . . . 

பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்து கொலை? நிர்வாண நிலையில் உடல் கிடந்தது

சிதம்பரம், 13-07-2014,
பள்ளி மாணவியை யாரோ கடத்தி கற்பழித்து கொலை செய்துள்ளனர். நிர்வாண நிலையில் அந்த மாணவியின் பிணம் கிடந்தது.
பள்ளி மாணவி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர். திட்டில் உள்ள ஓடையில் கடந்த 10–ந் தேதி 15 வயது மதிக்கத்தக்க சிறுமி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். கிள்ளை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் பள்ளிக்கூட புத்தகப்பை, பள்ளி சீருடை, ரோஸ் நிறத்தில் ஒரு சுடிதாரும், பச்சை நிறத்தில் ஒரு சுடிதாரும், வெள்ளை நிறத்தில் ஒரு ஜோடி காலணி ஆகியவை கிடந்தன. அந்த பையில் இருந்த ரப்பரில், ‘செல்வி, 10–ம் வகுப்பு’ என்று எழுதியிருந்தது. இதன்மூலம் இறந்துகிடந்த சிறுமி, பள்ளி மாணவி என்பது தெரியவந்தது.
                                                                                                                மேலும், . . . 

உ . பி., கவர்னராக ராம்நாயக் ?
புதுடில்லி, 13-07-2014,
உ .பி., மாநில கவர்னராக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்நாயக் நியமிக்கப்படுகிறார். ராம்நாயக் அரசியலில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர் என்பதால் இவருக்கு இந்த பதவியை வழங்கிட உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மத்தியில் மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் காங்கிரஸ் கட்சியின் விசுவாசிகளான கவர்னர்களை மாற்ற பா.ஜ., அரசு முடிவு செய்தது. உ .பி., மேற்குவங்கம், கோவா, சட்டீஸ்கர் மாநில கவர்னர்கள் ராஜினமா செய்தனர். புதுச்சேரி கவர்னர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் நிரப்பப்பட வேண்டிய கவர்னர் போஸ்டிங் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
                                                                                                    மேலும், . . . 

நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும்மருத்துவமனைகள்


சென்னை, 13-07-2014,
நோயாளிகளுக்கு பொருத்தும் மருத்துவ சாதனங்களான ஸ்டென்ட்ஸ்(ட்யூப் வடிவிலான குழாய்), இம்ப்ளான்ட்ஸ்(பிளேட்டுகள் மற்றும் இதர சாதனங்கள்), பேஸ் மேக்கர் போன்றவைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் விலை கேட்டாலே மாரடைப்பு ஏற்பட்டுவிடும். அதன் வழக்கமான விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்த்தி மருத்துவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த சாதனங்கள் வெளிச்சந்தையில் கிடைக்காததால், நோயாளிகளும் இந்த விலைகளை சரிபார்க்க முடியாது. அதனால் பணயக்கைதி நிலையில் உள்ள நோயாளி மருத்துவர்கள் கேட்கும் தொகையைத் தான் கட்டவேண்டி இருக்கிறது. அநேக மருத்துவமனைகளில் இந்த சாதனங்கள் அன்றாடம் பல நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதால் மருத்துவமனையின் ஒட்டுமொத்த லாபத்தில் 30 சதவிகித தொகையை இச்சாதனங்கள் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
அந்த நோயாகளிடம் அளவுக்கதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது.
                                                                                                                       மேலும், . . . .

Saturday 12 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

11 மாடி கட்டிட விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

சென்னை, ஜூலை, 12–07-2014,
போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந்தேதி 11 மாடிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையிலும் புலன் விசாரணை நடைபெறுகிறது.
ஆனால் இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வந்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை,
                                                                                                        மேலும், . . . 

இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம், ஜூலை, 12–07-2014,
இலங்கையால் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரும் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் கடந்த 28–ந் தேதி கடலுக்கு மீன் பிடித்து கொண்டு இருந்த 17 மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதேபோல், கடந்த 5–ந் தேதி ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 20 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 37 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி மத்திய அரசுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
                                                                                                                           மேலும், . . .

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டிக்கு தடை விதிப்பதா?: ராமதாஸ் கண்டனம்
சென்னை, ஜூலை, 12–07-2014,
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நேற்று மாலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்குக் காரணம் அவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்திருந்தது தானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞரும் அவமதிக்கப்பட்டிருப்பது
                                                                                                          மேலும், . . . 

நவீன படுக்கை வாங்கி தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலைவீச்சு

மதுரை, ஜூலை, 12–07-2014,
மதுரை கே.கே.நகரில் ‘தனிஷ் கிப்ட்ஸ்’ என்ற பெயரில் கடை நடத்தி வந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் ராஜ்குமார். இவர் குவைத்தில் ஒரு கம்பெனியில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த கம்பெனியில் தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட நவீன படுக்கைக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், அதை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும் ஜெயலட்சுமி பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
                                                                                              மேலும், . . .

Friday 11 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-07-2014) மாலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மோடிக்கு ஒபாமா அழைப்பு: முறைப்படி கடிதம் கொடுத்தார் அமெரிக்க மந்திரி
புதுடெல்லி, ஜூலை, 11-07-2014
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது. ஆனால், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமர் ஆனபிறகு அவரை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அவருக்கு ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை துணை மந்திரி வில்லியம் பர்ன்ஸ் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
                                                                                                           மேலும், . . . 

சுஷ்மா சுவராஜுடன் பெரிஸ் சந்திப்பு: இலங்கைக்கு வரும்படி அழைப்பு


புதுடெல்லி, ஜூலை, 11-07-2014
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிஸ், டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் அளித்த பேட்டி வருமாறு:-
                                                                                                                 மேலும், . . .

சுப்ரீட் கோர்ட் நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
புதுடெல்லி, ஜூலை, 11-07-2014
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பாக கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா காலாவதியாகிவிட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி சதாசிவத்திடம் இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை
                                                                                                              மேலும், . . . 

தர்மபுரியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


தர்மபுரி, ஜூலை, 11-07-2014
கடந்த ஆண்டு தர்மபுரியில் திவ்யாவை காதலித்து இளவரசன் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜாதிக்கலவரம் ஏற்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டன. பின்னர் இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த வாரம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது சிலர் ஆயுத பயிற்சி பெற்று வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக கூறி தர்மபுரி
                                                                                                       மேலும், . . .

Thursday 10 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-07-2014) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, ஜூலை 10-07-2014,
தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிக்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. காலை சட்டசபை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பூவராகன், அ.மலர்மன்னன், ரா.உமாநாத், ராம.நாராயணன், எஸ்.ராஜு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய மந்திரி கோபிநாத் பாண்டுரங் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், அலமாதி கிராமத்தில் சேமிப்பு கிடங்கில் மதில்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியவை குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
                                                                                                                 மேலும், . . .

பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
புது தில்லி, ஜூலை 10-07-2014,
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.
அவையாவன..
5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.
வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.
விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.
                                                                                                                      மேலும், . . .

வளர்ச்சியை அளிக்கும்: மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வகை செய்யும் மத்திய பட்ஜெட் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வகை செய்யும். அடுத்த 2,3 வருடங்களுக்கு வளர்ச்சியை அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தெளிவான திட்டம் பட்ஜெட்டில் உள்ளது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஜவுளி மண்டலம் அமைக்கும் முடிவுக்கும்,பொன்னேரி உள்பட 100 நவீன நகரங்கள் உருவாக்குவதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரவேற்பை தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த பிரெய்லி அச்சகங்களில் ஒன்றாவது தமிழகத்தில் அமைய வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை - சோனியா காந்தி கருத்து
மத்திய பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
                                                                                                                  மேலும், . . .

தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய பட்ஜெட்: வைகோ வரவேற்பு


சென்னை, ஜூலை 10-07-2014,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பத்து ஆண்டுக்கால காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் வீழ்ந்து கிடந்த இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து மீட்டு உயர்த்துகின்ற வகையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த, இந்திய அரசின் பொது வரவு, செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில உரிமைகளை மதிக்கும் அரசாகத் திகழும் என்பதற்கு அடையாளமாக, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்காக சென்னையில் அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்ப மருத்துவமனை, சூரிய மின்சக்தித் திட்டம், ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா, சென்னை மருத்துவக் கல்லூரியில் காசநோய், பல் மருத்துவ சிகிச்சைகள் தொடங்குதல் போன்ற அறிவிப்புகளைத் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.
                                                                                                         மேலும், . . .

Wednesday 9 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-07-2014) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

நாடே உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது எம்.பி.,களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
புதுடில்லி, ஜூலை, 09-07-2014,
லோக்சபாவில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி,க்களின் அடாவடியான செயல்களால் அதிருப்தியடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'ஒட்டு மொத்த நாடே உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. அவையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ளுங்கள்' என்று எம்.பி.களுக்கு அறிவுரை வழங்கினார்.
லோக்சபாவில் நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மேற்கு வங்கத்திற்கு ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை என கூறி திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
                                                                                                                        மேலும், . . .

குற்றவாளிகள் விடுதலை விவகாரம் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி, ஜூலை, 09-07-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாழன் உள்பட 3 பேரின் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது. தண்டனை காலத்தைப் பொறுத்து அவர்களை மாநில அரசு நினைத்தால் விடுதலை செய்யலாம் என்றும் கூறியிருந்தது.
இதனால் தமிழக அரசு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
                                                                                                     மேலும், . . . 

கடற்கரையில் காதல் விளையாட்டு: எல்லை மீறும் காதலர்களுக்கு கடிவாளம்
சென்னை, ஜூலை, 09-07-2014,
பெசன்ட்நகர் கடற்கரையில் வைத்து நேற்று முன் தினம் இரவு காதலன் ஏழுமலையால் கழுத்தை நெரித்து நித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து விட்டு ஏமாற்றிய காரணத்துக்காக நித்யா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்து தனது காதல் வெறியை தீர்த்துக் கொண்டதாக ஏழுமலை அளித்திருக்கும் திடுக்கிடும் வாக்கு மூலத்தால் போலீசாரும் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.
பெசன்ட்நகர் கடற்கரையில் ஆள்நடமாட்டம் இருந்த போதே நித்யாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறியிருக்கும் ஏழுமலை, இதனை வழக்கமான காதல் விளையாட்டு என நினைத்து யாரும் தடுக்க முன்வரவில்லை என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். இது போலீசுக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுபோன்று மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட தொடங்கியுள்ளனர்.
                                                                                                     மேலும், . . .

பாரதீய ஜனதா தலைவராக அமித்ஷா தேர்வு
புதுடெல்லி, ஜூலை, 09-07-2014,
பாரதீய ஜனதா தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கிறார். இதனால் பா.ஜனதா தலைவர் பதவி காலியாக இருந்தது. இதற்கு அமித்ஷா பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா. ஜனதா மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது.
                                                                                                       மேலும், . . .