Thursday 24 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

ஓசூரில் அதிகாலை பயங்கரம் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, ஊழியரை சரமாரியாக வெட்டிய வாலிபர்



ஓசூர், 24-07-2014,
ஓசூரில் அதிகாலை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபர், அங்கிருந்த ஊழியரை வாளால் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்த நோயாளிகள், பிற ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள். படுகாயத்துடன் அந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வாளுடன் வந்த வாலிபர்
ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை ஊழியர்கள் பணியில் இருந்தனர். அந்த நேரம் சிவப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் வாலிபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்தார்.
கையில் பெரிய வாளுடன் வந்த அவர், டாக்டர் எங்கே என்று கேட்டபடி உள்ளே வந்தார். அந்த நேரம் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக திட்டிய அவர், நேராக மருந்து வழங்கும் பிரிவுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஊழியர் பிரகாஷ் (35) என்பவரை பார்த்து, டாக்டர் எங்கு என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டாயா? என கேட்டவாறு, தான் வைத்திருந்த வாளால் அவரை வெட்ட முயன்றார்.
சரமாரியாக வெட்டு
இதை சற்றும் எதிர்பார்க்காத, பிரகாஷ், அதிர்ச்சியில் ’என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ என்று கையெடுத்து கும்பிட்டார்.
                                                                                                 மேலும், . . . . 

மும்பை போலீஸ் உதவி கமிஷனருமா ? மாடல் அழகி கற்பழிப்பு புகார்
மும்பை, 24-07-2014,
நாட்டிலேயே அதிக குற்றம் நடப்பதாக வரும் புள்ளி விவரத்தின்படி உச்சத்தில் இருக்கும் மும்பையில் ஒரு மாடல் அழகி போலீஸ் உதவி கமிஷனர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை உதவி கமிஷனர் சுனில் பிரஷ்கர் மீது ஒரு மாடல் அழகி எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
                                                                                                                      மேலும், . . . .

தெலுங்கானாவில் பஸ் மீது ரெயில் மோதல்: 12 மாணவர்கள் பலி
ஐதராபாத், 24-07-2014,
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரான் என்ற இடத்தில் காக்கதியா டெக்னோ என்ற தனியார் பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வருகிறார்கள். வழக்கம் போல் இன்று காலை 8.50 மணிக்கு பஸ்சில் மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதில் டிரைவர் உள்பட 38 பேர் இருந்தனர். வரும் வழியில் மாசாயி பேட்டையில் ரெயில்வே லெவல்கிராசிங் உள்ளது. இங்கு கேட் கீப்பர் இல்லை. அந்த ரெயில் பாதையில் நிஜாமாபாத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
பஸ் டிரைவர் ரெயில் வருவதை கவனிக்காமல் லெவல் கிராசிங்கை கடக்க முயன்றார்.
                                                                                                        மேலும், . . . . 

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான மனு விசாரணை தொடங்கியது
புதுடெல்லி, 24-07-2014,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 18-ந் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
                                                                                               மேலும், . . . . 

No comments:

Post a Comment