Tuesday 1 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

7-ம் வகுப்பு மாணவியை குளிர்பானத்தில் மது கலந்து பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை
சேலம், 01-07-2014,
சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சத்யா (பெயர் மாற்றம்) (12). இவர் இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீரபத்திரன் (35). இவரது மகள் விஜி (பெயர் மாற்றம்).சத்யாவும் , விஜியும் தோழிகள் இவர்கள் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வருவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள்.
நேற்று மாலை சத்யா தனது தோழி விஜி வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் வீரபத்திரன் மற்றும் விஜி ஆகியோர் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த சத்யா ஏன் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே இருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு வீரபத்திரன், விஜியின் அம்மா வீட்டை பூட்டி விட்டு ஆத்தூர் சென்று விட்டார். சாவி அவரிடம் தான் இருக்கிறது.
                                                                                                               மேலும், . . .  

இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள 11 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது

சென்னை, 01-07-2014,
சென்னை போரூரில் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள 11 மாடி கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் சனிக்கிழமை மாலை இடிந்து தரைமட்டம் ஆனது.
                                                                                                            மேலும், . . .

மோடியை வரவேற்காத விஜயகாந்த்: சட்டசபை தேர்தல் வரை தே.ஜ., கூட்டணி நீடிக்குமா?

சென்னை, 01-07-2014,
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க செல்லாததால், தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., நீடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வைகோ, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரும், பிரதமர் வரவேற்பில் பங்கேற்ற நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மட்டும் புறக்கணித்தது, பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திடீர் மோதல்
இதற்கிடையில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில், கூட்டணி அமைய காரணமாக இருந்த, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனுக்கும், தே.மு.தி.க.,வினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் மோதலும், கூட்டணி ஒற்றுமையில், குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.
                                                                                               மேலும், . . . .

விரல் நுனியில் விபரீதம் இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் ஆந்திரா, கர்நாடகா முதலிடம்
புதுடெல்லி, 01-07-2014,
தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகமே உள்ளங்கையில் வந்துவிட்ட நிலையில், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
இணையம் வழியாக பல்வேறு குற்றங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பண பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது, பாஸ்வேர்டு மற்றும் கணக்கு விவரங்களை திருடுவது. சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடியும் பாலியல் ரீதியான தொல்லைகள். பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுதல், மிரட்டுதல், தடை செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் விற்பனை செய்வது, வெப்சைட் ஹேக்கிங், இமெயில் மிரட்டல், பேஸ்புக் மூலம் ஏற்படும் குற்றங்கள் போன்றவை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதுவரை பதிவாகியுள்ள வழக்குகளின் அடிப்படையில் இந்தியாவில் 51 சதவீதம் அளவுக்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக
                                                                                                       மேலும், . . .

No comments:

Post a Comment