Monday 30 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

85 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் போட்டிருந்தால் கட்டடம் விழுந்திருக்காது
சென்னை, 30-06-2014,
சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்துக்கு, குறைந்த ஆழத்துக்கு அஸ்திவாரம் போட்டதே முக்கிய காரணம். இப்பகுதியில், 25 மீட்டர் ஆழம் வரை களிமண் இருப்பதால், 26 மீட்டர் ஆழத்துக்கு, 'பைல் பவுண்டேஷன்' (ஆழ்துளை அஸ்திவாரம் முறை) முறையில் அஸ்திவாரம் போட்டிருக்க வேண்டும் என, மண் பரிசோதனை வல்லுனர்கள் கூறினர்.
சென்னை, போரூர் அருகே, 11 மாடி கட்டடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. 'பலத்த மழையின் போது, இடி விழுந்ததே விபத்துக்கு காரணம்' என, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் கூறி வருகிறது.ஆனால், 'இடி விழுந்தால் கட்டடத்தின் மேல் பகுதி மட்டுமே சேதமடையும். கட்டடத்தின் அஸ்திவார நிலையில் ஏற்பட்ட குறைபாடே, ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழ முக்கிய காரணம்' என, பல்வேறு கட்டுமான வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அஸ்திவாரம்
அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, அஸ்திவாரமே அடிப்படையானது.
                                                                                                    மேலும், . . . 

மே.வங்க கவர்னர் நாராயணன் ராஜினாமா அடுத்து கோவா கவர்னர் வெளியேறுகிறார்
கோல்கட்டா, 30-06-2014,
மேற்குவங்க கவர்னர் நாராயணன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் முறைகேடு தொடர்பாக இவரிடம் , சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தேசிய தேசிய பாதுகாப்பு துறை செயலராக இருந்தவர் எம்.கே., நாராயணன். இவர் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டார்.
                                                                                    மேலும், . . . .

அதிக தளங்கள் கொண்ட 52 அடுக்குமாடி கட்டடங்களின் நிலை என்ன? உறுதித்தன்மையை பரிசோதிக்க வலியுறுத்தல்
சென்னை, 30-06-2014,
'சென்னை, மவுலிவாக்கம், 11 மாடி கட்டட விபத்தை அடுத்து, சென்னை புறநகரில், 20 முதல் 45 தளங்கள் வரை உள்ள, 52 அடுக்குமாடி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து பரிசோதிக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, பல்வேறு கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சென்னை புறநகர் பகுதிகளில், 30 தளங்கள் கொண்ட, 6 அடுக்குமாடி கட்டடங்கள்; 28 தளங்கள் கொண்ட, 6 அடுக்குமாடி கட்டடங்கள்; 20 தளங்கள் கொண்ட, 8 அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளன.இது தவிர, 20 முதல் 45 தளங்கள் கொண்ட, 32 கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 20 முதல் 50 தளங்கள் கொண்ட, 59 கட்டடங்கள், திட்ட அனுமதி நிலையில் உள்ளன.இதில், கட்டி முடிக்கப்பட்ட, 20 கட்டடங்கள், கட்டப்பட்டு வரும், 32 கட்டடங்கள் என மொத்தம், 52 கட்டடங்களின் உறுதித்தன்மைக்கு யார் உத்தரவாதம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலை, போரூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, ஒரகடம் - சிங்கபெருமாள் கோவில் சாலை, ஜி.எஸ்.டி., சாலை ஆகிய இடங்களில், இக்கட்டடங்கள்
                                                                                                         மேலும், . . . 

பிரிந்து போன காதலியை அடைய ரூ.24 லடச ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கிய வாலிபர்
பீஜிங், 30-06-2014,
காதல்...
இந்த 3 எழுத்து தான் வாலிபர்களை வசப்படுத்தும் இளம் வஞ்சியரின் மந்திரக்கோல்
காதலில் ஊடலும் ஒரு இன்பமே அந்த ஊடல் மட்டும் நீண்டு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்
சில காதலர்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபித்துக்கொண்டு பிரிந்து விடுவர். அவ்வாறு ஒரு சின்ன விஷயத்துக்காக பிரிந்து சென்ற தனது காதலிக்கு, சீன வாலிபர் ஒருவர் பாடம் புகட்டியிருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஹூஜியாயுன் என்ற இளைஞர் கடந்த 2007-ம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை காதலித்தார்.
                                                                                                       மேலும், . . . .

No comments:

Post a Comment