Wednesday 18 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

விலகும் முடிவை ஓராண்டுக்கு முன்பே எடுத்து விட்டேன் தோழியிடம் மனம் திறந்த குஷ்பு

சென்னை, ஜூன்.18–06-2014,

தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் தி.மு.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதே நேரத்தில் தனது நெருங்கிய தோழி ஒருவரிடம் தி.மு.க.வில் இருந்து தான் விலகியது பற்றியும், அதற்கான காரணங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அந்த தோழி கூறியிருக்கும் கருத்துக்கள் வாரபத்திரிகை ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
மனதில் பட்டதை தைரியமாக பேசும் நான் நிறைய படிப்பேன். பெரியார் படத்தில் நடித்தபோது அவரை பற்றி படித்தேன். பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

தமிழகத்திலேயே நிரந்தரமாக குடியேறிவிட்ட நான் சுந்தர்சியை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். 2 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னுடன்தான் எனது தாயும்,
                                                                                        மேலும், . . . .  

தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் நெஸ்வாடியா போலீசில் புகார்


மும்பை, ஜூன் 18–06-2014,
தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக அவரது முன்னாள் காதலர் நெஸ்வாடியா போலீசில் புகார் செய்துள்ளார்..
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ்வாடியா ஆகியோர் உள்ளனர்..
இவர்கள் இருவரும் காதலர்களாக 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டுவரை நட்புடன் பழகி வந்தனர். அதன் பிறகு பிரிந்துவிட்டனர் என்றாலும் ஐ.பி.எல். அணி பங்குதாரர்களாக நீடித்து வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரித்தி ஜிந்தா மும்பை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
                                                                                             மேலும், . . . .  

தீவிரவாதிகளால் 40 இந்தியர்கள் கடத்தல் மீட்பது பற்றி மோடி ஆலோசனை

பாக்தாத், ஜூன். 18–06-2014,
எண்ணை வளம் மிக்க நாடான ஈராக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கு முகாமிட்டுள்ள நிலையில் ஷியா பிரிவு முஸ்லிம் ஆட்சி நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். இதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற படைப்பிரிவை தொடங்கி இருக்கிறார்கள்.
நாள் தோறும் அங்கு தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தி வந்தனர். அதில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக சக்தி வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் சண்டையில் குதித்து உள்ளனர். இதனால் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.

தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகரங்களை தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். முக்கிய நகரங்களான திக்ரித்,
                                                                                                    மேலும், . . .

தேர்தல் தோல்வியை கண்டு திமுக துவண்டு விடவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூன். 18–06-2014

தியாகராய நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஏழுமலை மகன் கார்த்திக் என்ற சஞ்சீவ் குமார்–காயத்ரி திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘பகுதி செயலாளர் ஏழுமலை எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர். பொது மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர். 3 முறை மாமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். சென்னை மேயராக நான் பணியாற்றிய போது பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க என்னுடன் துணை நின்றவர்.
நான் துணை முதல்– அமைச்சராக இருந்து பணியாற்றியதை விட சென்னை மேயராக இருந்து பணியாற்றிய பணிகளை இன்றைக்கும் மக்கள் பாராட்டுகின்றனர்.
                                                                                        மேலும், . . .

No comments:

Post a Comment