Sunday 8 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-06-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாகிஸ்தானில் பயங்கரம் காராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 20 பேர் பலி

கராச்சி, 09-06-2014,

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்த தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தியதில், 13 பாதுகாப்பு படையினர் பலியாயினர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில் 20 பேர் பலியாயினர்.
கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் போலி அடையாள அட்டை காட்டி உள்ளே புகுந்த 15 தீவிரவாதிகள் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். மேலும் கையெறி குண்டுகளையும் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
                                                                                                             மேலும், . . . 

அழகிரியை அமைதியாக்கும் முயற்சி கருணாநிதியின் தூதரானார் ரஜினி?



சென்னை, 09-06-2014,

தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று, நடிகர் ரஜினி, திடீரென சந்தித்து பேசினார்.
இருவர், சந்திப்பின் பின்னணியில், கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதாவது, தி.மு.க.,விலிருந்து, டிஸ்மிஸ் செய்யப்பட்ட, முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியிடம் பேசி, உட்கட்சி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி விரும்புகிறார்.அதற்காக அழகிரியிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க, தன்னுடைய தூதராக ரஜினியை தேர்ந்தெடுத்திருக்கிறார் கருணாநிதி. அது குறித்து பேசுவதற்காகத்தான், தன் இல்லத்துக்கு ரஜினியை வரவழைத்தார் கருணாநிதி என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
                                                                                                                           மேலும், . . . 
19 மந்திரிகளுடன் ஆந்திர முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றார் பயிர் கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்து

விஜயவாடா, 09-06-2014,

விஜயவாடா அருகே நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஆந்திர முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய முதல் கையெழுத்து போட்டார்.

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு

தெலுங்கானா தவிர்த்து, எஞ்சிய ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சட்டசபை கட்சி தலைவராக (முதல்–மந்திரி) சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, நேற்று இரவு 7.27 மணிக்கு ஆந்திர முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். விஜயவாடா–குண்டூர் இடையே உள்ள நாகார்ஜூன நகரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அவர் பதவி ஏற்றார். தொண்டர்களின் வாழ்த்தொலி முழங்க, கடவுளின் பெயரால், தெலுங்கு மொழியில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
                                                                                     மேலும், . . .

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் சாவு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை


வில்லியனூர், 09-06-2014,

புதுவையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண் பரிதாபமாக செத்தார்.இதை தொடர்ந்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கர்ப்பிணி

புதுச்சேரி வில்லியனூர் புதுப்பேட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். கூலித்தொழிலாளி. வில்லியனூர் உறுவையாறு பேட் பகுதியை சேர்ந் தவர் ரோஜா(வயது 19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு ரோஜா தனது வீட்டை விட்டு வெளியேறி ராம்குமார் வீட்டிற்கு வந்து அங்கேயே குடும்பம் நடத்தி வந்தார்.
                                                                                                  மேலும், . . . 

No comments:

Post a Comment