Wednesday 11 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-06-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பாராளுமன்றத்தில் பாராட்டிய மோடி

புதுடெல்லி, ஜூன் 11-
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மக்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மாநிலங்களைப் பொருத்தவரை பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொள்ள நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். கூட்டுறவு முறையிலான கூட்டாட்சியின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
                                                                                                                             மேலும், . . . . .

பாகிஸ்தானில் பிள்ளைக்கறி தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத், ஜூன் 11-
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
                                                                               மேலும், . . . .

மோகனாம்பாளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

வேலூர், ஜூன்.11–

வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் மோகனாம்பாள். கரகாட்ட கலைஞர். இவர் வாடகைக்கு இருந்த காட்பாடி வீட்டில் இருந்து ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோகனாம்பாள், அவரது அக்காள் நிர்மலா, நிர்மலாவின் மகன் சரவணன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் கோர்ட்டில் மோகனாம்பாள், நிர்மலா ஆகிய இருவரும் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு பிரபாகரன் மோகனாம்பாள், நிர்மலா ஆகிய இருவரையும் 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், இன்று (புதன்கிழமை) இருவரையும் காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரும் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மாஜிஸ்திரேட் உத்தரவுபடி மோகனாம்பாளை போலீசார் வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து அழைத்து வந்து காட்பாடி கோர்ட்டில் இன்று மதியம் ஆஜர்படுத்தினர்.
                                                                                      மேலும் , . . . 

ன்றைய செய்திப் புகைப் படங்கள் (11-06-2014)













                                                                                                    மேலும், . . . . 

No comments:

Post a Comment