Thursday 5 June 2014

கனவு தொழிற்சாலை (06-06-2014)

கனவு தொழிற்சாலை (06-06-2014) காலை, IST- 10.00 மணி,நிலவரப்படி,

“பகடை ...பகடை பாடல்காட்சிகள்

















சென்னை, 06-06-2014,
பொள்ளாச்சி, கோவா, ஹைதராபாத்தில் “பகடை ...பகடை பாடல்காட்சிகள் திலீப்குமார் - திவ்யாசிங் பங்கேற்றனர்.
வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி) லிட் பட நிறுவனங்கள் இணைத்து தயாரிக்கும் படம் “பகடை... பகடை”
இந்த படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அத்துடன் கோவலனின் காதலி, மற்றும் திரைக்கு வர உள்ள திருப்புகழ், மையம் கொண்டேன் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் கோவைசரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை ஆகியோர் நடிதிருகிறார்கள்.
வசனம் - வி.பிரபாகர், ஒளிப்பதிவு - Y.முரளி
இசை - ராம்ஜி – A.C. ஜான்பீட்டர்,
பாடல்கள் - தமிழமுதன், பால்முகில்
கலை - P.A.ஆனந்த், நடனம் - யாசின்
ஸ்டன்ட் - டைகர்பாபு, எடிட்டிங் - சுரேஷ்அர்ஸ்
தயாரிப்பு நிர்வாகம் - ஸ்ரீதர்
தயாரிப்பு மேற்பார்வை - முத்தையா
கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் சசிசங்கர்...
படம் பற்றி இயக்குனர் கூறியது.......
படத்தின் பாடல் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட்டுள்ளது.
“மாறுதே மாறுதே - என் சூழல் மாறுதே” என்ற பாடல் காட்சியில் திலீப்குமார் – திவ்யாசிங் பங்கேற்க கோவாவில் யாசின் நடன அமைப்பில் படமாகப்பட்டது.
“மண்வாசமே மனச கோதுதே” என்ற பாடல் காட்சி பொள்ளாச்சியில் திலீப்குமார், கோவைசரளா, திவ்யாசிங், சிங்கமுத்து, இளவரசு ஆகியோர் பங்கேற்க படமாக்கப் பட்டது.
“பகாடியா பகாடியா சேல கட்டி வந்த பகாடியா” என்ற பாடல் காட்சி ஹைதராபாத்தில் திலீப்குமார் - ரிச்சு பங்கேற்க படமாகப் பட்டது.
இளமையான காதல் கதையாக பகடை பகடை உருவாகி இருக்கிறது என்றார் இயக்குனர்.

No comments:

Post a Comment