Friday 27 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-06-2014) மாலை, IST- 08.00 மணி, நிலவரப்படி,

ஆந்திராவில் பயங்கர விபத்து டீக்கடையில் காலை அடுப்பு பற்ற வைத்தபோது ஊரில் தீ பற்றியது




கோதாவரி, 27-06-2014

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசின் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு வயல்கள் உள்ளன. இங்கிருந்து எடுக்கப்படும் எரிவாயு, பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள 18 அங்குல சுற்றளவு கொண்ட குழாய்கள் மூலம் அமலாபுரம் மண்டலம், நகரம் என்னும் கிராமத்தின் வழியாக பொன்னமாதா என்ற இடத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறிய எரியவாயு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலை 5.30 மணி அளவில் நகரம் அருகே பதிக்கப்பட்டு இருந்த எரிவாயு குழாய்கள் திடீரென வெடித்துச் சிதறின.
                                                                                                                     மேலும், . . .  

பாளையங்கோட்டையில் சிறைத் தோட்டத்தில் கைதிகள் சாகுபடி

பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைத் தோட்டத்தில் கைதிகள் விளைவித்த புதிய ரக (பஎ37அ) நிலக்கடலை அறுவடைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பங்கேற்று கைதிகளை உற்சாகப்படுத்தினார்.
சிறைகளில் விவசாய தொழில்நுட்பத்தை சிறைவாசிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி சிறைத் திட்டத்தின் தொடர்ச்சியாக, விவசாயப் பின்னணி கொண்ட சிறைவாசிகளை சிறைகளில் உள்ள தோட்டங்களில் பணியில் ஈடுபடுத்திடவும், தண்டனைக் குறைப்பு மற்றும் வருமானம் ஈட்டும் வகையாகவும் சிறைத் துறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் திரிபாதி, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சேகர் பசு ஆகியோர் ஆலோசனையின்பேரில் பஎ37அ என்னும் வீரியரக நிலக்கடலை விதை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வழங்கப்பட்டு, மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைத் தோட்டத்தில், 5 ஏக்கரில் பயிரிடப்பட்டது. அதன் அறுவடைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப் பணியைப் பார்வையிட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:
                                                                                                                      மேலும், . . .  

அம்மா உணவகங்களுக்கு தனி நிதி: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை



தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அம்மா உணவகங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
                                                              மேலும், . . .  

நெல்லை மாநகராட்சி ஆணையர் அறையில் தீ

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக தப்பின.
திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இதன் தரைத் தளத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர், செயற்பொறியாளர்,
                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment