Monday 23 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இந்தியர்கள் பத்திரம்; பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற முயற்சி - மத்திய அரசு
புதுடெல்லி, 23-06-2014,
ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் என்றும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
                                                                                                                         மேலும், . . . 

கொலையுண்ட சுரேஷ்குமாரின் பேச்சுக்களை சிடியாக வெளியிட்ட கும்பல்

சென்னை, ஜூன். 23–06-2014,
இந்து முன்னணி அமைப்பின், திருவள்ளுர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், அம்பத்தூரில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது.
இக்கொலை சம்பவம் குறித்து, துப்பு துலக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சண்முகவேல் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட சுரேஷ்குமார் இந்துத்துவா கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததால்
                                                                                                      மேலும், . . .  

கூடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: கைதான வாலிபர் வாக்குமூலம்


கூடலூர், ஜூன். 23–06-2014,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பாரதிநகரைச் சேர்ந்தவர் ஜோயி (வயது 50). தேயிலை விவசாயி. இவரது மனைவி கிரிஜா. இவர்களது மகள் ரெசினா என்ற ஜோஸ்ல்னா (22). ஜோயியின் தாயார் அம்னி.
ரெசினா கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கேட்டரிங் படித்தார். அப்போது அவருடன் படித்த லெனின் என்ற வாலிபருக்கும் ரெசினாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்வது என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் ரெசினா சமீப காலமாக லெனினுடன் சரியாக பேசுவது இல்லை. இந்த நிலையில் ரெசினாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் வரன் பார்த்து நிச்சயம் செய்தனர்.
                                                                                                  மேலும், . . . 

தியேட்டர்களுக்கு மிரட்டல் சிங்கள படம் சென்னையில் நிறுத்தம்


சென்னை, 23-06-2014,
இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் ‘வித்யூ வித் அவுட் யூ’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குனர் தயாரித்து இருந்தார். இது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி விட்டு அதில் இருந்து வெளியேறியவன் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கு தன் கணவன் ராணுவத்தில் இருந்தது தெரியவருகிறது.
                                                                                                 மேலும், . . . .

No comments:

Post a Comment