Wednesday 31 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

2014 முடிந்து 2015 பிறந்தது: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் மெரினாவில் பலூன்களை பறக்கவிட்டு உற்சாகம்


சென்னை, ஜனவரி, 01-01-2015,
2014-ம் ஆண்டு முடிந்து 2015-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன.
2015 பிறந்தது
2014-ம் ஆண்டு இனிதாக விடைபெற்று, 2015-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது.
சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் நேற்று இரவு 8 மணி முதலே மக்கள் திரளாக கூடத்தொடங்கினர். ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல மெரினாவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டது. நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அவர்கள் வண்ண பலூன்களை பறக்கவிட்டும், வெடி வெடித்தும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஓட்டல்களில் கேளிக்கை
சென்னையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் கேளிக்கை நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணிக்கு தொடங்கிய நடனம் விடிய, விடிய நடந்தது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் அவர்கள் கேக் வெட்டி, ஹேப்பி நியூ இயர் என்று கோரசாக குரல் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல நட்சத்திர ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் தம்பதிகளாகவும், காதல் ஜோடிகளாகவும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி களித்தனர்.
தேவாலயம், கோவில்களில்
புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
                                                                                                      மேலும், . . . .  .

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் சாவு: இந்திய படைகளின் பதிலடிக்கு 4 பாகிஸ்தான் சிப்பாய்கள் பலி வெள்ளைக்கொடியை ஏந்தி உயிர் தப்பிய எதிரிகள்

ஜம்மு, ஜனவரி, 01-01-2015,
பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலியானதற்கு பதிலடியாக இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தியதால், இந்தியப்படை தாக்குதலை நிறுத்தியது.
இந்திய வீரர் பலி
சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரண்டாவது நாளாக, சம்பா மாவட்டம் சச்டெகார் என்ற இடத்தில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டனர்.
ரோந்து சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் பலியானார்.
பதிலடி
இதற்கு எல்லை பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி கொடுத்தனர். அவர்கள் நடத்திய கடுமையான எதிர் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள்.
                                                                                                    மேலும், . . .  .

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு பஸ் தொழிலாளர் போராட்டம் வாபஸ் உடனடியாக பணிக்கு திரும்பினர்

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பஸ் தொழிலாளர் போராட்டம் வாபஸ் ஆனது.
சென்னை, ஜனவரி, 01-01-2015,
ஊதிய உயர்வு உட்பட 22 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 28-ந்தேதியில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தவிர மற்ற 11 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.
அமைச்சருடன் பேச்சு
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் பெருமளவில் சிரமம் ஏற்பட்டது. அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்தநிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று காலையில் தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
                                                                                     மேலும், . . . .  .

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து அல்ல: விமானம், கடலில் எப்படி விழுந்தது என்பது பற்றி வெளியாகும் தகவல்கள் உயிர் காப்பு சட்டையுடன் உடல் மீட்கப்பட்டதால் புதிய கோணத்தில் விசாரணை

ஜகார்த்தா, ஜனவரி, 01-01-2015,
162 பேருடன் நடுவானில் மாயமான விமானம் கடலில் விழுந்தது எப்படி என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கண் இமைக்கும் நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. உயிர் காப்பு சட்டையுடன் உடல் மீட்கப்பட்டதால் புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
விமானம் மாயம்
இந்தோனேஷியாவில் உள்ள சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் கடந்த 28-ந் தேதி புறப்பட்டு சென்ற ஏர் ஆசியா ‘ஏ320-200’ ஏர் பஸ் விமானம், நடுவானில் திடீரென மாயமானது. புறப்பட்டுச் சென்ற 42 நிமிடங்களில் இந்த விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்த பணியில், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
விபத்து உறுதியானது
இந்த நிலையில், இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் (கரிமட்டா ஜலசந்தி பகுதியில்) விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விமானத்தின் பாகங்கள், மாயமான ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டன. எனவே அந்த விமானம், கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதும் உறுதியானது. இது தொடர்பான காட்சிகள் டெலிவிஷன் சானல்களில் ஒளிபரப்பாகின. அவற்றைக் கண்டபோது, விபத்துக்குள்ளான விமானத்தில் பலியானவர்களின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அழுதனர். ஒருவரை ஒருவர் தேற்ற முடியாமல் தவித்தனர்.
கடலில் இருந்து 40 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
                                                                                                            மேலும், . 

Tuesday 30 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

162 பேருடன் மலேசிய விமானம் வெடித்து சிதறியது உறுதி: கடலில் மிதந்த பயணிகளின் உடல்கள் மீட்பு அதிகாரிகள் தகவல்



ஜகார்த்தா, டிசம்பர், 31-12-2014,
162 பேருடன் மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறி கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பலியான பயணிகளின் உடல்களை இந்தோனேஷிய மீட்பு குழுவினர் நேற்று மீட்டனர்.
மாயமான விமானம்
இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் கடந்த 28-ந் தேதி காலை புறப்பட்டுச் சென்றது. அதில் விமான ஊழியர்கள் 7 பேரும், 155 பயணிகளும் இருந்தனர்.
இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 149 பேரும், தென்கொரியர்கள் 3 பேரும், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒரு பயணியும் இருந்தனர். இவர்களில் 17 பேர் சிறுவர்-சிறுமிகள். இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் யாரும் இதில் பயணம் செய்யவில்லை.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது.
                                                                                                           மேலும், . . .  .

தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் ஆகிறார்? அடுத்த மாதம் நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்

சென்னை, டிசம்பர், 31-12-2014,
மு.க.ஸ்டாலின் தி.மு.க. பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. உட்கட்சி தேர்தல்
தி.மு.க.வில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. உட்கட்சி தேர்தல் முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதம் ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி முதல் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 65 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் 60 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
பொதுக்குழு கூடுகிறது
எஞ்சியுள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிடும்.
                                                                                                              மேலும், . . .  .

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்: தொழிற்சங்கத்தினர், இன்று அமைச்சருடன் பேச்சுவார்த்தை போராட்டம் முடிவுக்கு வருமா?

சென்னை, டிசம்பர், 31-12-2014,
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று (புதன்கிழமை) அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பேச்சுவார்த்தை
ஊதிய ஒப்பந்தம் மற்றும் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று மாலை 5.50 மணியளவில், தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம், சென்னை போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் முன்னிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை
கூட்டம் முடிந்து வெளியில் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சின்னச்சாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. சார்பில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச ஆட்சேபனை இல்லை என்று கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்று நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
தொ.மு.ச. கடிதத்தை எழுதி கொடுத்ததன் அடிப்படையில், நாளை(இன்று) காலை 10 மணிக்கு கோட்டையில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில்
                                                                                                    மேலும், . . . . . 

நள்ளிரவில் தாலிச்செயினை காப்பாற்ற நடந்த போராட்டம்: ஓடும் மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயரை தள்ளிவிட்ட கொள்ளையன் வடமாநில ஆசாமியா? போலீசார் விசாரணை

சென்னை, டிசம்பர், 31-12-2014,
சென்னையில் நள்ளிரவில் ஓடும் மின்சார ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு தாலிச்செயினுடன் கொள்ளையன் தப்பிவிட்டான். அவன் வடமாநில ஆசாமியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் என்ஜினீயர்
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி அசோக்நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முனீஸ்வரி (வயது 26). முனீஸ்வரியும், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போலவே இருவரும் காலையில் வேலைக்கு செல்ல தயாரானார்கள்.
மின்சார ரெயில் பயணம்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த பிரச்சினை காரணமாக பஸ் வருமோ? வராதோ? என்ற சந்தேகத்தில் காலையில் மின்சார ரெயிலில் முனீஸ்வரி வேலைக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பும்போதும் தான் மின்சார ரெயிலிலேயே வருவதாகவும், தனது கணவரை கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்து அழைத்து செல்லும்படியும் முனீஸ்வரி கூறியிருந்தார்.
அதே போலவே நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், தனது மனைவிக்கு போன் செய்து தான் கடற்கரை ரெயில் நிலையத்தில் உனக்காக காத்திருக்கிறேன் என்று நாகராஜன் கூறினார்.
                                                                                                                 மேலும், . .  . . .

Monday 29 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,
 போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடின கல்வீச்சு-மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது


போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சு, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். என்றபோதிலும் தமிழகம் முழுவதும் 70 சதவீத பஸ்கள் ஓடின.
சென்னை, டிசம்பர், 30-12-2014,
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
ஆனால் அவர்கள் நேற்று முன்தினமே எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் பாதிப்பு
இந்த திடீர் போராட்டத்தால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியது.
                                                                                                                    மேலும், . . . . .

பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான பெண்ணின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்


பெங்களூரு, டிசம்பர், 30-12-2014,
பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் உடல் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை பெண் பலி
பெங்களூரு நகருக்கு தீவிரவாதிகளால் தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நகரின் இதயம் போன்ற பகுதியான எம்.ஜி.ரோடு அருகே சர்ச் தெருவில் உள்ள தனியார் ஓட்டல் முன்புள்ள நடைபாதையில் குண்டுவெடித்து சிதறியது.
இதில், சென்னையை சேர்ந்த பவானி (வயது 38), அவரது கணவரின் அண்ணன் மகன் கார்த்திக், கம்ப்யூட்டர் என்ஜினீயர் சந்தீப் மற்றும் வினய் ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பவானி நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
மகன், மகள் கண்ணீர்
இதுபற்றி அறிந்ததும் சென்னையில் இருந்து பவானியின் கணவரான பாலன் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்.
                                                                                                  மேலும், . . . . .

நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்யவில்லை பிடிபட்ட வாலிபர் வாக்குமூலம்

ஆலந்தூர், டிசம்பர், 30-12-2014,
நீலாங்கரை அருகே கடற்கரையில் காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என பிடிபட்ட காரைக்கால் வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கல்லூரி மாணவி
சென்னையை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த கயல்(வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த கவுதம்(19-பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த 22-ந்தேதி மாலை கவுதம் தனது காதலி கயலுடன் நீலாங்கரை அருகே உள்ள கடற்கரைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி மிரட்டி கயலை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
வாலிபர் வாக்குமூலம்
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் தென்சென்னை இணை கமிஷனர் அருண் தலைமையில் அடையாறு துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர்கள் முகமது அஸ்லாம், சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கிருஷ்ணன், பாஸ்கர், சேகர்பாபு, சிவக்குமார், ரவீந்திரன், நாகராஜ், அகிலா ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சோழிங்கநல்லூரில்
                                                                                                      மேலும், . . . . 

தமிழ்நாட்டில் 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் முதல்-அமைச்சர் அறிக்கை

சென்னை, டிசம்பர், 30-12-2014,
தமிழ்நாட்டில் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூண்டி விடுகிறார்
2006 முதல் 2011 வரை மைனாரிட்டி அரசுக்கு தலைமை தாங்கி ஆட்சி நடத்தி போக்குவரத்து துறையை சீரழித்து விட்டுச் சென்ற கருணாநிதி இன்றைக்கு போக்குவரத்துக் கழகங்களில் மைனாரிட்டி நிலையில் உள்ள தி.மு.க.வைச் சார்ந்த தொழிற்சங்கமான தொ.மு.ச.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ரீதியில் அறிக்கை ஒன்றினை கடந்த 28-ந்தேதி வெளியிட்டுள்ளார்.
வெறும் 13.96 சதவீத உறுப்பினர்களைக் கொண்டுள்ள தொ.மு.ச-வைச் சார்ந்த பணியாளர்களை தூண்டிவிட்டு சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள வைத்த கருணாநிதி தனது அறிக்கையில் இந்த அரசை குறை கூறி கண்டித்துள்ளார். தி.மு.க.வைச் சார்ந்த தொ.மு.ச.வினர் சட்ட விரோதமாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதை மறைக்கும் விதமாகவே இது போன்ற ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
சொந்தமான சொத்துக்கள்
ஜெயலலிதா 3-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 6,150 கோடியே 95 லட்சம் ரூபாயாகும். பணியிலிருந்து ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 922 கோடியே 24 லட்சம் ரூபாய் வழங்கியவர் ஜெயலலிதா தான். போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டிருந்தன.
194 பேருந்துகள் விபத்து இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டிருந்தன.
                                                                                           மேலும், . . . . . 

Sunday 28 December 2014

இணைய தளங்களில் வேகமாக பரவும் வசுந்தராவின் ஆபாச புகைப்படங்கள்

இணைய தளங்களில் வேகமாக பரவும் வசுந்தராவின் ஆபாச புகைப்படங்கள்
  
Actress Vasundhara Leaked topless (Leaked Selfie) and few Nude photos

‘வட்டாரம்’, ‘ஜெயங்கொண்டான்’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா. சீனு ராமசாமி இயக்கத்தில் தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பில் கடைசியாக ‘சொன்னா புரியாது’ என்னும் படம் வெளியானது. இதன்பிறகு இவரது நடிப்பில் எந்த படமும் வெளியாக வில்லை.
பட வாய்ப்புகள் இல்லாததால் தன் காதலருடன் அடிக்கடி வெளியூர் சென்று வந்த வசுந்தரா, அப்போது காதலருடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அது தற்போது இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த சமயத்தில் இவர் செல்பியாக எடுத்துக்கொண்ட டாப்லெஸ் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் படங்கள் எப்படி கசிந்தது என்று தெரியாத நிலையில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, வசுந்தரா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள், காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா.
                                                                                                          மேலும், . . . . 


இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

பெங்களூருவில் குண்டு வெடிப்பு; சென்னை பெண் பலி 2 பேர் படுகாயம்


பெங்களூரு, டிசம்பர், 29-12-2014,
பெங்களூரு நகரின் முக்கிய கடைவீதியில் நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதிகள் மிரட்டல்
தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு நகருக்கு தீவிரவாதிகளின் மிரட்டல் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பெங்களூருவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக “டுவிட்டர்” சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு திரட்டி வந்ததாக மெஹதி மஸ்ரூர் பிஸ்வாஸ் (வயது 24) என்ற ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மெஹதி பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதோடு ஷமிவிட்னஸ் என்ற டுவிட்டர் சமூக வலைத்தள முகவரி மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு திரட்டி வந்ததும் அம்பலமானது.
மெஹதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெங்களூருவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த போவதாகவும், துணைபோலீஸ் கமிஷனர் அபிஷேக் கோயலுக்கு டுவிட்டரில் மிரட்டல் வந்தது. அதில் “எங்கள் சகோதரர் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்றும், பெங்களூரு நகரில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குண்டு வெடித்தது
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று இரவு குண்டுவெடித்து சென்னை பெண் பலியானார்.
                                                                                                     மேலும், . . .  . 


இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் சென்ற விமானம் மாயம் கடலில் விழுந்து நொறுங்கியதா?

சிங்கப்பூர், டிசம்பர், 29-12-2014,
162 பேருடன் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் திடீர் என்று மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஏர் ஆசியா விமானம்
மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஆசியா’ நிறுவனம் மலிவு கட்டண விமானங்களை இயக்கி பிரசித்தி பெற்றதாகும். இந்த விமான நிறுவனத்தின் ‘ஏ320-200’ ஏர் பஸ் விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில், பிரான்சு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு பயணி, 3 தென்கொரிய பயணிகள் உள்பட மொத்தம் 155 பயணிகள், 7 சிப்பந்திகள் என மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர். 162 பேரில் 156 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். பயணிகளில் 16 பேர் குழந்தைகள், ஒரு கைக்குழந்தையும் உண்டு. இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை.
திடீர் மாயம்
இந்த விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை சென்று அடைந்திருக்க வேண்டும்.
                                                                                                                           மேலும், . . . . 

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது பஸ்களை இயக்க நடவடிக்கை தமிழக அரசு ஏற்பாடு


தமிழ்நாட்டில்போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. ஆனால் வழக்கம் போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, டிசம்பர், 29-12-2014,
அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 11 தொழிற்சங்கங்களின் பேரவை கூட்டம் கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை தோல்வி
அப்போது, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29-ந் தேதி (இன்று) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பு அன்றே வெளியிடப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் கடந்த 26-ந் தேதி அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
வேலைநிறுத்த போராட்டம்
2-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை கடந்த 27-ந் தேதி தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி 29-ந் தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன.
ஆனால், திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து தொழிலாளர் கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு போக்குவரத்து பணிமனை முன்பும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால், அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களை கொண்டு பஸ்களை இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
முதல்-அமைச்சர் ஆலோசனை
போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தை அடுத்து,
                                                                                                                               மேலும், . .  . .

போக்குவரத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக முடிவு காண வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல்



சென்னை, டிசம்பர், 29-12-2014,
போக்குவரத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக முடிவு காண வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர்களுடைய பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல், தமிழக முதல்-அமைச்சர் கடந்த 8-12-2014 அன்று நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ரூ.1000 இடைக்கால நிவாரணமாக 1-1-2015 முதல் வழங்குவதாக மீண்டும் ஒரு பொய்யை சட்டமன்றத்தில் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல நிர்வாகங்களை முற்றுகையிட்டு 9-12-2014 அன்று போராட்டங்கள் நடத்தினர்.
கோரிக்கை நிராகரிப்பு
வேலை நிறுத்தம் முறையாக சட்டப்படி 19-12-2014 முதல் தொடங்கியிருக்க வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் துறையும் போக்குவரத்துத் துறையும் மெத்தனம் காட்டி கோரிக்கைகளை நிராகரித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் 19-12-2014 முதல் 22-12-2014 வரை பொதுமக்களிடம் வேலை நிறுத்தத்திற்காக ஆதரவு திரட்டியதாகவும், இறுதிவரை அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொழிற்சங்கங்கள் 29-12-2014 முதல் வேலைநிறுத்தம் செய்வதென அறிவித்தன என்றும், இதற்கான விளக்கக் கூட்டம் 26-12-2014 அன்று சென்னை பல்லவன் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பொழுது தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்றும், ஆனால், அங்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்புள்ள பெரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் விவரங்கள் தரப்பட்டன.
பேச்சு வார்த்தை
27-12-2014 காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அனைத்து சங்கங்களும் அங்கு சென்றிருக்கிறார்கள். அங்கு அ.தி.மு.க. சங்கமும் வருகை தந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச. இருப்பதால் தொழிலாளர் துறை முன்னதாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்து அதன் மூலம் அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தையை 30-12-2014 அன்று துவங்குவது என்ற ஆலோசனையை தொ.மு.ச. பேரவை அரசு முன் வைத்தபோது, முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்து தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் தான் பேச்சுவார்த்தை துவங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
உடனடியாக தொ.மு.ச. எந்த கவுரவமும் பார்க்காமல் நாங்கள் கடிதம் கொடுக்கிறோம்.
                                                                                                  மேலும், . .  . .

Saturday 27 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

புதிய ஆதாரம் அம்பலம் எதிரொலி கராச்சி நகரில் வசிக்கும் தாவூத் இப்ராகிமை ‘இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி, டிசம்பர், 28-12-2014,
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தாவூத் இப்ராகிம்
இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பல முறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.
ஆனால் பாகிஸ்தான் அதை பொருட்படுத்தவில்லை. தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
                                                                                                                   மேலும், . . . . 

அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

சென்னை, டிசம்பர், 28-12-2014,
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்கள்
சென்னையில் கடந்த 22-ந்தேதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் 11 தொழிற்சங்கங் களின் (அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து) பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ந்தேதி(நாளை) வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம் அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
                                                                                                  மேலும்,. . . . . 

அரசியல் பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் பயங்கர கலவரம்; துப்பாக்கி சூடு கல்வீச்சில் தேனி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 பேர் காயம்


தேனி, டிசம்பர், 28-12-2014,
தேனியில் அரசியல் பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டு, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர் எஸ்.ஆர்.தமிழன் (வயது 37). இவரது தந்தை செவ்வாழை ராசு, பருத்திவீரன் உள்பட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சமீபத்தில் இவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து மாநில பொதுச்செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ. அறிவித்தார். எஸ்.ஆர்.தமிழன் பெங்களூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு தேர்வு எழுதுவதற்காக சென்றிருந்தார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது நேற்று முன்தினம் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார்.
பஸ் மீது கல்வீச்சு
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
                                                                                                மேலும், . . . . . 

மேலூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள ‘பொக்கிஷமலை’யில் அதிக அளவு முறைகேடுகள் சகாயம் பார்வையிட்டார்

மேலூர், டிசம்பர், 28-12-2014,
மேலூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள பொக்கிஷமலையில் அதிக அளவு முறைகேடு நடந்திருப்பதாக, சகாயம் ஆய்வில் கண்டுபிடித்தார்.
முறைகேடுகள்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து ஐகோர்ட்டு உத்தரவின் படி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலையில் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் கீழவளவு பகுதி மலைப்பகுதியில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் பற்றி சகாயம் விசாரணை நடத்தினார்.
                                                                                                        மேலும், . . . . .

Friday 26 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

காஷ்மீர் அரசியலில் அதிரடி திருப்பம் உமர் அப்துல்லா கட்சி திடீர் ஆதரவு மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கிறது
காஷ்மீர் அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கு உமர் அப்துல்லா கட்சியின் ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கிறது.
ஸ்ரீநகர், டிசம்பர், 27-12-2014,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜனதா முயற்சி
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் செய்த பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு, சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே அம்மாநிலத்தில் ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பா.ஜனதா, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. இதற்காக தேசிய மாநாட்டு கட்சிக்கு மத்தியில் ஒரு கேபினட் மந்திரி உள்பட பல சலுகைகளை வழங்குவதாகவும் தகவல் கசிந்தது.
ஆனால் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா இந்த தகவல் களை திட்டவட்டமாக மறுத்தார்.
                                                                                                  மேலும், . . . .

பாகிஸ்தானில் 134 பள்ளிக்குழந்தைகள் பலிக்கு காரணமான முக்கிய சதிகாரன் சுட்டுக்கொலை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்

பெஷாவர், டிசம்பர், 27-12-2014,
பாகிஸ்தானில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 134 பள்ளிக்குழந்தைகள் பலியான சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சதிகாரன், ராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது பலி ஆனான்.
குழந்தைகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் கடந்த 16-ந் தேதி தெரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் புகுந்து 134 குழந்தைகள் உள்பட 150 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
                                                                                                      மேலும், . . .  . . 

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களுக்கான செலவை மத்திய அரசு உடனே தரவேண்டும் நிதி மந்திரிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை, டிசம்பர், 27-12-2014,
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களுக்கான செலவு தொகையை மத்திய அரசு உடனே தரவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நம்பிக்கை வளர்ச்சி
டெல்லியில் மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடந்த அனைத்து மாநில நிதிமந்திரிகள் கூட்டத்தில், நிதித்துறை இலாகாவை கவனிக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
மத்தியில் இந்த அரசு நிர்வாகப் பொறுப்புக்கு வந்தபோது, அதிக பண வீக்கத்துடனும், குறைந்த வளர்ச்சியுடனும் கூடிய பலவீனமான பொருளாதார சூழ்நிலை எழுந்தது. ஆனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறிது சிறிதாக நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு இந்த புதிய அரசு செயல்பட்டதை பாராட்டுகிறோம். பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை இந்த அரசு கவர்ந்துள்ளது.
நிதிப்பழு
அனைவருக்கும் வீடு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, நகர்ப்புற தூய்மை, ஸ்மார்ட் நகரங்கள் (நவீன நகரங்கள்) அமைத்தல் போன்ற நகர்ப்புற வளர்ச்சிக்காக அதிக அளவில் செலவிடுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நகர்ப்புற புதுப்பிப்புத் திட்டத்தின் முதல் பகுதியை வெற்றிகரமாக அமல்படுத்திய பிறகு இரண்டாம் கட்ட திட்டத்தை மாநிலங்கள் எதிர்பார்த்தபடி உள்ளன.
முதல் பாகத்தில் நிலுவையில் உள்ள 10 சதவீத தொகை இன்னும் மத்திய அரசால் தரப்படவில்லை என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
                                                                                                                       மேலும், . . .  .

சுனாமி தாக்கி 10 ஆண்டுகள் நிறைவு: ஆழி பேரலையில் உறவுகளை இழந்தவர்கள், கடலில் பால் ஊற்றி உருக்கம் பேரன், பேத்தியை பறிகொடுத்த பெண் கதறல்




சென்னை, டிசம்பர், 27-12-2014,
சுனாமி தாக்கி 10 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. பேரலையில் சிக்கி உறவுகளை இழந்தவர்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பேரன், பேத்தியை பறிகொடுத்த பெண் ஒருவர் கதறி அழுதார்.
கருப்பு நாளாக்கிய சுனாமி
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு கருப்புநாளாகவே விடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமத்ரா தீவில் உருவான சுனாமி பேரலைகளால் தமிழக கடலோர மாவட்டங்களும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். உறவுகளை கண் முன்னே பறி கொடுத்தவர்களும் மனதளவில் உருக்குலைந்து போனார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், அந்த சோக வடுவை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
மெரினா கடற்கரை முதல் எண்ணூர் வரை வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சுனாமிக்கு இரையாயினர். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் பகுதியில் மட்டும் 54 பேர் ஆழி பேரலையின் தாக்குதலுக்கு ஆளாகி இன்னுயிரை இழந்தனர்.
அஞ்சலி
அவர்களின் நினைவாக பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று அமைதி ஊர்வலம் நடந்தது.
                                                                                           மேலும், . . . 

Thursday 25 December 2014

வெள்ளக்காரத்துரை (2014)

வெள்ளக்காரத்துரை (2014)
Vellaikara Durai Movie Review


அன்புசெழியன் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும் “ வெள்ளகார துரை “
1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் - எழிச்சூர் அரவிந்தன். ஒளிப்பதிவு - சூரஜ் நல்லுசாமி
வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார். கலை - ரெமியன். நடனம் - தினேஷ், தினா. ஸ்டன்ட் - திலீப் சுப்பராயன் /எடிட்டிங் - கிஷோர். தயாரிப்பு நிர்வாகம் - ஜெயராஜ், ரஞ்சித்
தயாரிப்பு மேற்பார்வை - சங்கர்தாஸ். இணை இயக்கம் - பாலகணேசன்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.


சூரி வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் அவருடைய மாமா வீட்டில் அவருக்கு மரியாதையே இல்லை. ஆகையால், தனது சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ஜான் விஜய்யிடம் ரூ.15 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி, புரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு நிலத்தை வாங்கி அதை பிளாட் போட்டு விற்பனை செய்ய திட்டம் தீட்டுகிறார். இவருடைய இந்த தொழிலுக்கு சூரியின் நண்பரான விக்ரம் பிரபுவும் உதவியாக இருக்கிறார்.
                                                                                    மேலும், . . . . 

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

கூட்டணி ஆட்சிக்கு பா.ஜனதா முயற்சி புதிய அரசு அமைப்பது யார்? காஷ்மீரில் இழுபறி நீடிப்பு
காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கூட்டணி அரசு அமைக்க பாரதீய ஜனதா கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு இருக்கிறது.
ஸ்ரீநகர், டிசம்பர், 26-12-2014,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தனிப்பெரும் கட்சி
87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 44 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அங்கு மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதனை தொடர்ந்து பா.ஜனதா- 25, தேசிய மாநாட்டு கட்சி- 15, காங்கிரஸ்- 12, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மிகப்பெரிய கட்சியாக பாரதீய ஜனதாவால் வரமுடியாவிட்டாலும் கானி லோனின் 2 இடங்கள், பா.ஜனதா போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிபெற்ற 4 சுயேச்சைகள், தேசிய மாநாட்டு கட்சியின் 15 இடங் கள் ஆகியவற்றை சேர்த்தால் 46 இடங்கள் கிடைக்கிறது.
என்.சி.பி.யுடன் பேச்சு
எனவே பா.ஜனதா தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து காஷ்மீரில் முதல் முறையாக ஆட்சியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது.
                                                                                                           மேலும், . . .  .

கடன் கொடுக்க மறுத்ததால் விசைத்தறி அதிபர், மகள் கொலை நெல்லையை சேர்ந்த 3 பேர் கைது


கோவை, டிசம்பர், 26-12-2014,
கோவை அருகே விசைத்தறி அதிபரையும், மகளையும் குத்திக்கொன்ற நெல்லையை சேர்ந்த கொலையாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசைத்தறி அதிபர்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது45). விசைத்தறி அதிபரான இவருடைய மனைவி பெயர் சரோஜினி (45). மகள்கள் வினோதினி (26), யசோதா (23). வினோதினிக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வினோதினி வந்தார்.
ராக்கியப்பன் வீட்டை ஒட்டியுள்ள இடத்தில் விசைத்தறி கூடத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். சோமனூர் பள்ளபாளையத்தில் தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் குமார், சம்பள முன்தொகையாக ரூ.50 ஆயிரம் வேண்டும் என்று ராக்கியப்பனிடம் கேட்டார்.
ஆத்திரம்
பணம் கிடைக்க தாமதமான நிலையில், கடந்த வாரம் பரமசிவம் என்ற வாலிபரை வேலைக்கு சேர்ப்பதற்காக குமார் அழைத்து வந்தார்
                                                                                                                            மேலும், . . . . 

பெரம்பலூரில் பெண் அதிகாரி தீக்குளித்து சாவு தந்தையை கணவர் தாக்கியதால் விபரீத முடிவு

பெரம்பலூர், டிசம்பர், 26-12-2014,
கண்முன்னே தனது தந்தையை கணவர் தாக்கியதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வருவாய் பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வருவாய் ஆய்வாளர்
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் ராஜூ. இவர் பட்டு வளர்ப்பு துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிர்மலா(வயது 26). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் பகுதி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளையராஜாவுக்கும் (35) கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இளையராஜா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கணவருடன் தகராறு
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் நிர்மலா தனியாக வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். ராசிபுரத்தில் தங்கி பணியாற்றி வரும் இளையராஜா பள்ளி விடுமுறை நாட்களில் பெரம்பலூருக்கு வந்து செல்வார். திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக சென்று வந்த அவர்களது வாழ்க்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் செய்தார்.
                                                                                                        மேலும், . . . . 

போர் குற்ற விசாரணை நடத்த தயார் என்று தேர்தலுக்காக ராஜபக்சே இரட்டை வேடம் போடுகிறார் கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை, டிசம்பர், 26-12-2014,
தேர்தலுக்காக, போர் குற்ற விசாரணை நடத்த தயார் என்று ராஜபக்சே இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிபர் தேர்தல்
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனவரி 8-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 19 பேர் மனு செய்திருந்த போதிலும், 2 பேர் மட்டுமே பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி பால சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றன. ரனில் விக்கிரமசிங்கேயும், சந்திரிகாவும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டியதற்கு மாறாக, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அந்தச் செய்தி இந்தியா முழுவதும் கண்டனத்திற்குரிய ஒன்றாக இருந்தது.
புதிய வாக்குறுதி
இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் சிறிசேனா,
                                                                                                                                மேலும்,. . . . .

Wednesday 24 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,


Christmas is church bells chiming joyfully across the wintry sky, telling of the miracle that came from God on high. Merry Christmas
Photo : anton joel kennedy and Rithikaa Haley kennedy

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சென்னை, டிசம்பர், 25-12-2014,
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு-பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சலுகையை 1974-ம் ஆண்டில் வழங்கியது தி.மு.க. ஆட்சி. இந்த சலுகையை மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கு நீட்டித்து 1975-ல் ஆணையிட்டது.
1989-ல் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், 1999-ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வகை செய்தது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை 2006-ல் ரத்து செய்தது.
செய்த பணிகள்
2010-ல் வள்ளுவர்கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு அன்னை தெரசா மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு 1968-ல் பேரறிஞர் அண்ணா தலைமையேற்று நடத்திய 2-ம் உலக மாநாட்டின்போது, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிலைகள் எடுத்து சிறப்பித்தது. நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இடம் நினைவிடமாக புதுப்பிக்கப்பட்டது. முல்லை பெரியாறு கட்டி முடித்த பென்னிகுவிவுக்கு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் சிலையெடுக்கப்பட்டது.
                                                                                                                           மேலும், . .  . .

அசாம் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 67 ஆக உயர்வு கலவரத்தை கட்டுப்படுத்த காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

கவுகாத்தி, டிசம்பர், 25-12-2014,
அசாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஆதிவாசிகள், போடோ வகுப்பினரின் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்
அசாம் மாநிலத்தில் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் ஆகிய மாவட்டங்களில் ஆதிவாசிகள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் போடோ தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம், போடோ தீவிரவாதிகள் அதி நவீன துப்பாக்கிகளுடன் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் மாவட்டங்களில் உள்ள சோனாஜூலி, விஸ்வநாத் சரியாலி, உல்தாபாணி, மதுபூர் ஹதிஜூலி, ருமிகாதா ஆகிய 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
பலி 67 ஆக உயர்வு
இதில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
                                                                                             மேலும், . .  . . .  .

மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது மதன்மோகன் மாளவியாவுக்கும் வழங்கப்படுகிறது

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்துமகா சபா தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, டிசம்பர், 25-12-2014,
நாட்டுக்கு மிகப்பெரிய சேவை செய்த தலைவர்களுக்கு மத்திய அரசு உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
‘பாரத ரத்னா’ விருது
மூதறிஞர் ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், எம்.ஜி.ஆர்., பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. இதுவரை 43 பேர் இந்த விருதை பெற்று இருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைவர்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்தனர்.
கோரிக்கை வலுத்தது
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த ஆண்டில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த விருதை வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
                                                                                                         மேலும், . .  . . .

மரணம் அடைந்த டைரக்டர் கே.பாலசந்தருக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி சென்னையில், உடல் தகனம் நடந்தது

சென்னை, டிசம்பர், 25-12-2014,
மரணம் அடைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் உடலுக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய உடல் தகனம் சென்னையில் நேற்று மாலை நடந்தது.
கே.பாலசந்தர்
தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர்.
காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
அஞ்சலி
அவருடைய உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாலசந்தர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், த.மா.கா. (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
                                                                                                                   மேலும், . . . . . .

Tuesday 23 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

2 மாநில சட்டசபை தேர்தல் முடிவு அறிவிப்பு ஜார்கண்டில் பா.ஜனதா வெற்றி காஷ்மீரில் 2-வது இடத்தை பிடித்தது


2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றது. காஷ்மீர் மாநிலத்தில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இங்கு பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்தது.
புதுடெல்லி, டிசம்பர், 24-12-2014,
ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
ஓட்டுப்பதிவு அமோகம்
ஜார்கண்ட் மாநிலத்தில், நக்சலைட்டுகள் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். இதனால் அந்த மாநிலத்தில், 66 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு.
காஷ்மீரிலும், மக்கள் பெருந்திரளாக கூடி வந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு 65 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜார்கண்டில் பா. ஜனதா ஆட்சி
இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது.
                                                                                                                            மேலும், . . . .

100 படங்களுக்கு மேல் இயக்கிய டைரக்டர் கே.பாலசந்தர் மரணம் நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது


சென்னை, டிசம்பர், 24-12-2014,
100 படங்களுக்கு மேல் இயக்கிய டைரக்டர் கே.பாலசந்தர் நேற்று இரவு மரணமடைந்தார். நினைவு திரும்பாமலே அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 84.
கே.பாலசந்தர்
தமிழ்பட உலகில் ‘இயக்குனர் சிகரம்’ என்று பாராட்டப்பட்டவர் கே.பாலசந்தர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். என்றாலும், கடந்த 15-ந்தேதி அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவர் தனது சுயநினைவை இழந்தார்.
மரணம்
அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடினார்கள். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 7 மணிக்கு கே.பாலசந்தர் மரணமடைந்தார்.
                                                                                              மேலும், . . . .

தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்தபோது பரிதாபம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தை மூச்சுத்திணறி சாவு ‘செவிலியர்களின் கவனக்குறைவே காரணம்’ என்று உறவினர்கள் புகார்



சென்னை, டிசம்பர், 24-12-2014,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த பச்சிளங்குழந்தை மூச்சுத்திணறி இறந்தது. மருத்துவமனை செவிலியர்களின் தவறான சிகிச்சையால் தான் இறப்பு ஏற்பட்டதாக கூறி குழந்தையின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ரத்த அழுத்தம்
சென்னை, சேத்துப்பட்டு 3-வது தெருவில் வசிப்பவர் சதீஷ் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ஷோபா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனது. இந்தநிலையில் ஷோபா கர்ப்பம் அடைந்தார். அவரை பிரசவத்துக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சதீஷ் சேர்த்தார்.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் ஷோபாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் நேற்று அதிகாலையில் ஷோபாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக கூறி, அவரை குழந்தையுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்த டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
பச்சிளங் குழந்தை சாவு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஷோபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
                                                                                                   மேலும், . . . . 

நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடக்கோரி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு

சென்னை, டிசம்பர், 24-12-2014,
நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடக்கோரி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.
ஆர்ப்பாட்டம்
நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், அவரை பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க அரசின் பள்ளி, உயர்க்கல்வி மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, எழும்பூர் பகுதிச்செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
                                                                                  மேலும், . . . .  .

Monday 22 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, பா.ஜனதா முன்னிலை
ராஞ்சி/ஸ்ரீநகர், டிசம்பர், 23-12-2014,
சட்டசபை தேர்தல் நடைபெற்ற காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது.
இரு மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 20–ந் தேதி நடந்தது. 5–வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதி நடைபெற்றது. காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 2008–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவானதை விட 4 சதவீதம் அதிகம் ஆகும். தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்திருந்த போதும், வாக்காளர்கள் அதை பொருட்படுத்தாமல் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். ஜார்கண்ட் மாநிலத்தில் சில மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருந்தது.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
                                                                                                                     மேலும், . . . . . 

தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் வனத்துறை அலுவலகம் சூறை; ஜீப் எரிப்பு

பாலக்காடு, டிசம்பர், 23-12-2014,
தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதுடன் வனத்துறை அலுவலகத்தை சூறையாடி, அங்கு நின்றிருந்த ஜீப்பையும் தீ வைத்து எரித்தனர்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம்
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கண்ணனூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. திடீரென்று கிராமங்களுக்குள் நுழையும் அவர்கள் அங்கு வசிப்பவர்களை மிரட்டி அரிசி, பருப்பு போன்ற பொருட்களை அள்ளிச்செல்கின்றனர்.
15 நாட்களுக்கு முன்பு கேரளாவின் மானந்தவாடி வனப்பகுதியில் அதிரடிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது குகைக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் அதிரடிப்படையினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதிரடிப்படையினரும் எதிர் தாக்குதல் நடத்தியதால் மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றனர்.
திடீர் தாக்குதல்
இந்த சம்பவத்துக்கு பின்னர் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
                                                                                                  மேலும், . . . . 

திருச்சி கோர்ட்டு முன் வக்கீல்கள்-போலீசார் பயங்கர மோதல்

திருச்சி, டிசம்பர், 23-12-2014,
திருச்சி கோர்ட்டு முன் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
வக்கீல் மீது வழக்குப்பதிவு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பிரபல ரவுடி குணா தொழில் அதிபர் ஆறுமுகம் என்பவரை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக வக்கீல் ராஜேந்திரகுமார் என்பவர் மீதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வக்கீல் ராஜேந்திரகுமார் மீது போலீசார் வழக்கு போட்டதை கண்டித்து வக்கீல் சங்க தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சி கோர்ட்டு பிரதான நுழைவு வாயில் அருகே வக்கீல்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
                                                                                                                   மேலும், . .  . . . .

கிறிஸ்துமஸ் நல உதவிகள் வழங்கும் விழாவில் தி.மு.க. கூட்டணிக்கு வர தே.மு.தி.க.வுக்கு மறைமுக அழைப்பு எஸ்றா சற்குணத்திற்கு, விஜயகாந்த் பதில்

சென்னை, டிசம்பர், 23-12-2014,
தே.மு.தி.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு எஸ்றா சற்குணம் மறைமுகமாக அழைப்பு விடுத்தார். இதற்கு விஜயகாந்த் தனது பேச்சில் பதில் அளித்தார்.
கிறிஸ்துமஸ் விழா
தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் நல உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, இளைஞரணி மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய சுவிசேஷ திருச்சபைகள் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், இணை பேராயர் டி.சுந்தர்சிங், பேராயர் ராஜாசிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் நல உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம் பேசியதாவது:-
                                                                                                                              மேலும், . . .  .