Friday 19 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்விக்கு ஜாமீன் வழங்குவதா? பாகிஸ்தானை கண்டித்து தீர்மானம் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது

மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்விக்கு பாகிஸ்தான் கோர்ட்டு ஜாமீன் வழங்கி யதை கண்டித்து, பாராளுமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி, டிசம்பர், 20-12-2014,
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக வந்த பாகிஸ்தான் தீவிர வாதிகள் 10 பேர் மும்பை நகருக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதி லக்விக்கு ஜாமீன்
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் பிரிவின் தலைவர் ஜாகியுர் ரகுமான் லக்விக்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி லக்விக்கு ஜாமீன் வழங்கியது மிகவும் துரதிர்ஷ்டமானது என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
பாராளுமன்றத்தில் தீர்மானம்
இந்த நிலையில், லக்விக்கு ஜாமீன் வழங்கியதை கண்டித்து பாராளுமன்றத்தில் நேற்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று பாராளுமன்றம் கூடியதும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் மற்றும் சில உறுப்பினர்கள், லக்வி ஜாமீன் பிரச்சினையை கிளப்பினார்கள். இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நோட்டீசு கொடுத்து இருப்பதாகவும் கூறினார்கள்.
மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
அப்போது மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில் கூறியதாவது:-
                                                                                                                      மேலும், . .  .

‘மின் கட்டணத்தை உயர்த்தியது எந்த வகையிலும் நியாயமற்றது’ மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேச்சு


மதுரை, டிசம்பர், 20-12-2014,
“மின்கட்டணத்தை உயர்த்தியது எந்த வகையிலும் நியாயமற்றது” என்று, மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தே.மு.தி.க. சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மின்கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
                                                                                             மேலும், . . . . 

புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனத்துக்கு அதிரடி தடை நள்ளிரவு 1 மணி வரை ஆட்டம், பாட்டம் நடத்த அனுமதி

சென்னை, டிசம்பர், 20-12-2014,
சென்னையில் ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் ஆபாச நடனத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நள்ளிரவு 1 மணிவரை ஆட்டம், பாட்டத்துடன் விழா நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2014-ம் ஆண்டு விடை பெறப்போகிறது. 2015 புத்தாண்டு பிறக்க இன்னும் 10 நாட்களே உள்ளன. புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவு 12 மணிக்கு சென்னை நகரம் விழாக்கோலத்துடன் கோலாகலமாக காணப்படும். அன்றைய தினம் நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டங்கள் நடைபெறும்.
நட்சத்திர ஓட்டல்களில் அசம்பாவிதம் இல்லாமல், ஆர்ப்பரிப்போடு புத்தாண்டு விழாவை எவ்வாறு கொண்டாட அனுமதிப்பது என்பது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகள், நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், ஆபாஷ்குமார், இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சிவானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். 60-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆபாச நடனத்திற்கு தடை
நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியை எவ்வாறு நடத்திட வேண்டும் என்பது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
                                                                                             மேலும், . . . . . 

நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை, டிசம்பர், 20-12-2014,
நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
93-வது பிறந்தநாள்
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் 93-வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி மாலை அணிவித்து வாழ்த்தினார்.
பின்னர் அங்கிருந்து புறப்படும் போது நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                                      மேலும், . . . . 

No comments:

Post a Comment