Sunday 21 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா எந்தநேரத்திலும் கைது?

சண்டிகர், டிசம்பர், 22-12-2014,
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, அரியானா மாநிலத்தில் செய்த நில முறைகேடுகளால், அவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த மாநில நில உச்சவரம்பு சட்டத்தை மீறி, 146 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரராக விளங்கும் ராபர்ட் வாத்ரா மீதான விசாரணையின் பிடி இறுகி வருவதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.
டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆட்சியிலிருந்த, முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து, எம்.எல்.கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றது.பா.ஜ., அரசு பொறுப்பேற்கும் முன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை அம்பலப்படுத்தினார், அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அதனால், அப்போதைய காங்கிரஸ் அரசின் கோபத்திற்கு ஆளான அவர், மூன்றாண்டுகளில், பல முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ராபர்ட் வாத்ராவின் முறைகேடுகள் குறித்து, அரியானா மாநில அரசு மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், புலனாய்வு பத்திரிகைகள் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
*'ஸ்கை லைட் ரியாலிட்டி, ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி, புளூ பிரீஸ் டிரேடிங்' என்ற மூன்று நிறுவனங்கள் சார்பில், 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் அடிமாட்டு விலைக்கு, அரியானா மாநில அரசின் ஆதரவுடன் வாங்கப்பட்டன.
*இந்த மூன்று நிறுவனங்களில், 90 சதவீத பங்குகளை, வாத்ரா தான் வைத்துள்ளார்.
                                                                                                         மேலும்,  . . .  . .

சட்டசபை தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்தது காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை மதியத்திற்குள் முடிவு தெரிந்துவிடும்
சட்டசபை தேர்தல் நடைபெற்ற காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது நாளை மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
ஸ்ரீநகர், டிசம்பர், 22-12-2014,
காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்தது
இரு மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது. 5-வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.
                                                                                                              மேலும், . . . . .

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டு தேர்தலை சந்திப்போம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா சென்னையில் பேட்டி

சென்னை, டிசம்பர், 22-12-2014,
2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்றும், முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டு தான் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அமித்ஷா கூறினார்.
அமித்ஷாவுக்கு வரவேற்பு
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் அரசியல் பயணமாக அமித்ஷா சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரில் நடந்த பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணிக்கு தியாகராயநகரில் உள்ள தமிழக பாரதீய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்திற்கு அமித்ஷா வந்தார். அவரை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் வரவேற்றனர்.
மாநிலத்துணை தலைவர் வானதி சீனிவாசன், குடிசை மேம்பாட்டு மாநில தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன், மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர்கள் ஆர்.பிரகாஷ், காளிதாஸ், ஜெயசங்கர், பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ். மற்றும் நிர்வாகிகள் அமித்ஷாவுக்கு பொன்னாடை அணிவித்தனர்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
இதைத்தொடர்ந்து கூட்டரங்கில் மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். 9.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 11.30 மணிக்கு முடிந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உறுப்பினர் சேர்க்கை, சட்டமன்ற தேர்தலுக்கு எவ்வாறு கட்சியை முன் எடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அமித்ஷா பகல் 12 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                மேலும், . . . . 

நாமக்கல்லில் தங்கி இருந்த கூலிப்படை தலைவன் துப்பாக்கிமுனையில் கைது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை

நாமக்கல், டிசம்பர், 22-12-2014,
நாமக்கல்லில் தங்கி இருந்த கூலிப்படை தலைவனை போலீசார் துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆஞ்சநேயர் கோவிலை தகர்க்கும் சதித்திட்டத்துடன் அவன் வந்தானா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
வீடு சுற்றிவளைப்பு
நாமக்கல் நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 65). இவருக்கு சொந்தமான மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பகுதியில் சகுந்தலா வசித்து வருகிறார். மேல்பகுதியில் 4 இளைஞர்கள் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வாடகைக்கு குடி வந்தனர்.
இவர்களில் ஒருவர் தான் வங்கி ஒன்றில் வேலை செய்து வருவதாகவும்,
                                                                                                            மேலும், . .  . . 

No comments:

Post a Comment