Monday 8 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதி விளக்கம்

சென்னை, டிசம்பர், 09-12-2014,
முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.
கவனஈர்ப்பு
சட்டசபையில், முட்டை கொள்முதல் சம்பந்தமாக உறுப்பினர்கள் சந்திரகுமார் (தே.மு.தி.க.), சிவசங்கர் (தி.மு.க.), பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), அஸ்லாம்பாஷா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர். இதற்கு பதில் அளித்து சத்துணவுத்துறை அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-
முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள், கொள்முதல் செய்யப்படும் முட்டைகளின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து சரியான வழிமுறைகளையும், நெறி முறைகளையும் வகுத்து, இந்த திட்டத்தினை நேர்படச்செயல்படுத்த வேண்டிய ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் இந்த அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுபற்றி சரியாகத்தெரிந்துகொள்ளாமலோ அல்லது இந்த அரசு மீது வீண்பழி சுமத்தி, குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவு திட்டத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று முட்டைக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதாக ஒரு உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னாள் மாவட்ட அளவில் முட்டை கொள்முதல் செய்ய டெண்டர்கள் பெறப்பட்டு முடிவு செய்யப்பட்டன
                                                                                                            மேலும், . . . . .

திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து வெளியேற்றி இருக்கிறார்கள் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, டிசம்பர், 09-12-2014,
திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து நேற்று தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் வெளியே வந்தனர். சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரவையில் 2014-2015-ம் ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நான் பேசத் தொடங்கினேன். எனது உரையில் பல்வேறு கருத்தினை, ஆதாரங்களுடன், புள்ளி விவரங்களோடு பேச வந்தேன். இந்த செய்தியறிந்து எனது பேச்சால் பினாமி ஆட்சிக்கு ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று என்னை பேசவிடாமல் வெளியேற்றியிருக்கிறார்கள்.
சிறப்பு கவன ஈர்ப்பு
எனது பேச்சில், கடந்த நிதிநிலை அறிக்கையில், முன்னாள் முதல்-அமைச்சர், ஜெயலலிதா 110 விதியின்கீழ் படித்த 36 அறிவிப்புகளும் அதற்கு 31 ஆயிரத்து 208 கோடி
                                                                                          மேலும், . . . . . 

பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியது கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் முடிவு

சென்னை, டிசம்பர், 09-12-2014,
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாக அறிவித்துள்ளது. ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ம.தி.மு.க. கூட்டம்
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்த நிலையில், கூட்டணி தலைமையுடன் ம.தி.மு.க. வுக்கு பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், ஆட்சிமன்ற குழு செயலாளர் ஆர்.கணேசமூர்த்தி, அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் செவந்தியப்பன், அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்தில் அதிபன், இமயம் ஜெபராஜ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வக்கீல் தேவராஜ், சட்டப்பிரிவு மாநில செயலாளர் எஸ்.வெற்றிவேல் மற்றும் பாலவாக்கம் சோமு ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை
கூட்டத்தில் அனைவரிடமும் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு 41 மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்ற குழு, அரசியல் ஆலோசனை குழு, அரசியல் ஆய்வு மையம் மற்றும் மாநில அணிகளின் செயலாளர்கள் பங்கேற்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ தீர்மானங்களை வாசிக்க அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர். தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
                                                                                                                மேலும், . . . .
பகவத்கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க கூடாது கருணாநிதி அறிக்கை

சென்னை, டிசம்பர், 09-12-2014,
பகவத்கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க கூடாது என்று கருணாநிதி, ராமதாஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகவத்கீதை தேசியப் புனித நூல்
மத்திய அரசில் பா.ஜ.க. பொறுப்பேற்றதற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் கட்டாயம் “இந்தி” என்று தொடங்கி, “குரு உத்சவ்” என்று விழா எடுத்து, பாடமொழியாக “சமஸ்கிருதம்” என்று அறிவித்து, “இந்தியா இந்துக்கள் தேசமே”என்ற பேச்சுகளுக்கெல்லாம் இடம் கொடுத்து, மத்திய மந்திரி ஒருவரே அவசரப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்தார். அதற்காக பிரதமரே வருத்தம்கலந்த தொனியில் சமாதானம் செய்து பதில் கூறுகின்ற அளவுக்கு நிலைமை மாறியது.
அடுத்த கட்டமாக “பகவத் கீதை” தேசியப் புனித நூலாக அறிவிக்க ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்
                                                                                                   மேலும், . . . . 

No comments:

Post a Comment