Monday 22 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, பா.ஜனதா முன்னிலை
ராஞ்சி/ஸ்ரீநகர், டிசம்பர், 23-12-2014,
சட்டசபை தேர்தல் நடைபெற்ற காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது.
இரு மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 20–ந் தேதி நடந்தது. 5–வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதி நடைபெற்றது. காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 2008–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவானதை விட 4 சதவீதம் அதிகம் ஆகும். தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்திருந்த போதும், வாக்காளர்கள் அதை பொருட்படுத்தாமல் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். ஜார்கண்ட் மாநிலத்தில் சில மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருந்தது.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
                                                                                                                     மேலும், . . . . . 

தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் வனத்துறை அலுவலகம் சூறை; ஜீப் எரிப்பு

பாலக்காடு, டிசம்பர், 23-12-2014,
தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதுடன் வனத்துறை அலுவலகத்தை சூறையாடி, அங்கு நின்றிருந்த ஜீப்பையும் தீ வைத்து எரித்தனர்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம்
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கண்ணனூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. திடீரென்று கிராமங்களுக்குள் நுழையும் அவர்கள் அங்கு வசிப்பவர்களை மிரட்டி அரிசி, பருப்பு போன்ற பொருட்களை அள்ளிச்செல்கின்றனர்.
15 நாட்களுக்கு முன்பு கேரளாவின் மானந்தவாடி வனப்பகுதியில் அதிரடிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது குகைக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் அதிரடிப்படையினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதிரடிப்படையினரும் எதிர் தாக்குதல் நடத்தியதால் மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றனர்.
திடீர் தாக்குதல்
இந்த சம்பவத்துக்கு பின்னர் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
                                                                                                  மேலும், . . . . 

திருச்சி கோர்ட்டு முன் வக்கீல்கள்-போலீசார் பயங்கர மோதல்

திருச்சி, டிசம்பர், 23-12-2014,
திருச்சி கோர்ட்டு முன் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
வக்கீல் மீது வழக்குப்பதிவு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பிரபல ரவுடி குணா தொழில் அதிபர் ஆறுமுகம் என்பவரை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக வக்கீல் ராஜேந்திரகுமார் என்பவர் மீதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வக்கீல் ராஜேந்திரகுமார் மீது போலீசார் வழக்கு போட்டதை கண்டித்து வக்கீல் சங்க தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சி கோர்ட்டு பிரதான நுழைவு வாயில் அருகே வக்கீல்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
                                                                                                                   மேலும், . .  . . . .

கிறிஸ்துமஸ் நல உதவிகள் வழங்கும் விழாவில் தி.மு.க. கூட்டணிக்கு வர தே.மு.தி.க.வுக்கு மறைமுக அழைப்பு எஸ்றா சற்குணத்திற்கு, விஜயகாந்த் பதில்

சென்னை, டிசம்பர், 23-12-2014,
தே.மு.தி.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு எஸ்றா சற்குணம் மறைமுகமாக அழைப்பு விடுத்தார். இதற்கு விஜயகாந்த் தனது பேச்சில் பதில் அளித்தார்.
கிறிஸ்துமஸ் விழா
தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் நல உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, இளைஞரணி மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய சுவிசேஷ திருச்சபைகள் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், இணை பேராயர் டி.சுந்தர்சிங், பேராயர் ராஜாசிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் நல உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம் பேசியதாவது:-
                                                                                                                              மேலும், . . .  .

No comments:

Post a Comment