Wednesday 10 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஆந்திராவில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை, டிசம்பர். 11-12-2014,
ஆந்திராவில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்தபோது, அச்செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர மாநில காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது. அத்தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தும், அவர்களது கேமராக்கள் உடைக்கப்பட்டும் உள்ளது.
நியாயமான முறையிலும், சுதந்திரமாகவும், செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை தாக்கிய, ஆந்திர மாநில காவல்துறையை தே.மு.தி.க. சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் பத்திரிக்கையாளர்களை அவர்களது கடமையை செய்யவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்.
இத்தாக்குதலில் காயமடைந்த பத்திரிக்கையாளர்களுக்கும், சேதமடைந்த கேமராக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
                                                                                                               மேலும், . . . .

அ.தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம் கருணாநிதி அறிக்கை

சென்னை, டிசம்பர். 11-12-2014,
அ.தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேச்சுவார்த்தை
கேள்வி:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த விவகாரம் முற்றிப்போய் சென்னையில் அதன் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லமே சூறையாடப்பட்டிருக்கிறதே?
பதில்-பேச்சுவார்த்தை நடத்தாததற்கு உச்ச நீதிமன்ற வழக்கைக் காரணமாக பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் என்ன வழக்கு தெரியுமா?
                                                                                                     மேலும் , . . . .

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதியில் போலீசாருடன் தமிழ் அமைப்பினர் வாக்குவாதம், சாலை மறியல் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 300 பேர் கைது

திருப்பதி, டிசம்பர்.11-12-2014,
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதியில் போலீசாருடன் தமிழ் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். ராஜபக்சே வருகைக்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட பல தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்கவும்,
                                                                                           மேலும், . . . . 

நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானின் மலாலாவுடன் பகிர்ந்து கொண்டார்


நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்த கோலாகல விழாவில், கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.
ஆஸ்லோ, டிசம்பர். 11-12-2014,
ஒவ்வொரு ஆண்டும், உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு.
அமைதிக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டு, குழந்தைகள் உரிமைக்காக அயராது போராடி வருகிற இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும் (வயது 60), தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியிலும், பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் பாகிஸ்தானின் மலாலா யூசுப் சாய்க்கும் (17) அமைதிக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படும் என நார்வே தலைநகர் ஆஸ்லோவில் செயல்பட்டு வரும் அமைதிக்கான நோபல் பரிசு குழு அறிவித்தது.
அவர்களுக்கு உலகமெங்கும் பாராட்டு குவிந்தது.
பிரமாண்ட விழா
இவர்களுக்கு பரிசு வழங்கும் பிரமாண்ட விழா, ஆஸ்லோவில் உள்ள மாநகர மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
                                                                                                        மேலும், . . . 

No comments:

Post a Comment