Sunday 28 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

பெங்களூருவில் குண்டு வெடிப்பு; சென்னை பெண் பலி 2 பேர் படுகாயம்


பெங்களூரு, டிசம்பர், 29-12-2014,
பெங்களூரு நகரின் முக்கிய கடைவீதியில் நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதிகள் மிரட்டல்
தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு நகருக்கு தீவிரவாதிகளின் மிரட்டல் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பெங்களூருவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக “டுவிட்டர்” சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு திரட்டி வந்ததாக மெஹதி மஸ்ரூர் பிஸ்வாஸ் (வயது 24) என்ற ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மெஹதி பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதோடு ஷமிவிட்னஸ் என்ற டுவிட்டர் சமூக வலைத்தள முகவரி மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு திரட்டி வந்ததும் அம்பலமானது.
மெஹதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெங்களூருவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த போவதாகவும், துணைபோலீஸ் கமிஷனர் அபிஷேக் கோயலுக்கு டுவிட்டரில் மிரட்டல் வந்தது. அதில் “எங்கள் சகோதரர் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்றும், பெங்களூரு நகரில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குண்டு வெடித்தது
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று இரவு குண்டுவெடித்து சென்னை பெண் பலியானார்.
                                                                                                     மேலும், . . .  . 


இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் சென்ற விமானம் மாயம் கடலில் விழுந்து நொறுங்கியதா?

சிங்கப்பூர், டிசம்பர், 29-12-2014,
162 பேருடன் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் திடீர் என்று மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஏர் ஆசியா விமானம்
மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஆசியா’ நிறுவனம் மலிவு கட்டண விமானங்களை இயக்கி பிரசித்தி பெற்றதாகும். இந்த விமான நிறுவனத்தின் ‘ஏ320-200’ ஏர் பஸ் விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில், பிரான்சு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு பயணி, 3 தென்கொரிய பயணிகள் உள்பட மொத்தம் 155 பயணிகள், 7 சிப்பந்திகள் என மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர். 162 பேரில் 156 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். பயணிகளில் 16 பேர் குழந்தைகள், ஒரு கைக்குழந்தையும் உண்டு. இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை.
திடீர் மாயம்
இந்த விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை சென்று அடைந்திருக்க வேண்டும்.
                                                                                                                           மேலும், . . . . 

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது பஸ்களை இயக்க நடவடிக்கை தமிழக அரசு ஏற்பாடு


தமிழ்நாட்டில்போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. ஆனால் வழக்கம் போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, டிசம்பர், 29-12-2014,
அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 11 தொழிற்சங்கங்களின் பேரவை கூட்டம் கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை தோல்வி
அப்போது, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29-ந் தேதி (இன்று) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பு அன்றே வெளியிடப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் கடந்த 26-ந் தேதி அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
வேலைநிறுத்த போராட்டம்
2-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை கடந்த 27-ந் தேதி தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி 29-ந் தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன.
ஆனால், திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து தொழிலாளர் கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு போக்குவரத்து பணிமனை முன்பும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால், அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களை கொண்டு பஸ்களை இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
முதல்-அமைச்சர் ஆலோசனை
போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தை அடுத்து,
                                                                                                                               மேலும், . .  . .

போக்குவரத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக முடிவு காண வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல்



சென்னை, டிசம்பர், 29-12-2014,
போக்குவரத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக முடிவு காண வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர்களுடைய பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல், தமிழக முதல்-அமைச்சர் கடந்த 8-12-2014 அன்று நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ரூ.1000 இடைக்கால நிவாரணமாக 1-1-2015 முதல் வழங்குவதாக மீண்டும் ஒரு பொய்யை சட்டமன்றத்தில் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல நிர்வாகங்களை முற்றுகையிட்டு 9-12-2014 அன்று போராட்டங்கள் நடத்தினர்.
கோரிக்கை நிராகரிப்பு
வேலை நிறுத்தம் முறையாக சட்டப்படி 19-12-2014 முதல் தொடங்கியிருக்க வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் துறையும் போக்குவரத்துத் துறையும் மெத்தனம் காட்டி கோரிக்கைகளை நிராகரித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் 19-12-2014 முதல் 22-12-2014 வரை பொதுமக்களிடம் வேலை நிறுத்தத்திற்காக ஆதரவு திரட்டியதாகவும், இறுதிவரை அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொழிற்சங்கங்கள் 29-12-2014 முதல் வேலைநிறுத்தம் செய்வதென அறிவித்தன என்றும், இதற்கான விளக்கக் கூட்டம் 26-12-2014 அன்று சென்னை பல்லவன் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பொழுது தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்றும், ஆனால், அங்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்புள்ள பெரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் விவரங்கள் தரப்பட்டன.
பேச்சு வார்த்தை
27-12-2014 காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அனைத்து சங்கங்களும் அங்கு சென்றிருக்கிறார்கள். அங்கு அ.தி.மு.க. சங்கமும் வருகை தந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச. இருப்பதால் தொழிலாளர் துறை முன்னதாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்து அதன் மூலம் அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தையை 30-12-2014 அன்று துவங்குவது என்ற ஆலோசனையை தொ.மு.ச. பேரவை அரசு முன் வைத்தபோது, முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்து தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் தான் பேச்சுவார்த்தை துவங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
உடனடியாக தொ.மு.ச. எந்த கவுரவமும் பார்க்காமல் நாங்கள் கடிதம் கொடுக்கிறோம்.
                                                                                                  மேலும், . .  . .

No comments:

Post a Comment