Wednesday 3 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

துணை நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது 3 நாட்கள் நடைபெறும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. மொத்தம் 3 நாட்களுக்கு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
சென்னை, டிசம்பர். 04-12-2014,
தமிழக சட்டசபையின் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் கடந்த மாதம் நவம்பர் 24-ந் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், தமிழக சட்டசபையின் கூட்டத்தை டிசம்பர் 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கவர்னர் கூட்டியுள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
பரபரப்பான சூழ்நிலை
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
                                                                                             மேலும், . . . . 

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்க எதிர்ப்பு: கேரள அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி ‘‘ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் குறுக்கிட விரும்பவில்லை’’

புதுடெல்லி, டிசம்பர். 04-12-2014,
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 7-ந் தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியை கண்காணிக்க 3 உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைக்க உத்தரவிட்டது.
மேலும், நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிரான கேரள அரசின், நீர்ப்பாசனம் மற்றும் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.
142 அடியாக உயர்வு
இதைத்தொடர்ந்து, 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் அணையில் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது.
                                                                                                 மேலும், . . . .  .

போதையில் வாகனங்களை ஓட்டி நடைபெறும் விபத்துக்களை தடுக்க நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சென்னை, டிசம்பர். 04-12-2014,
நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது என்றும், விபத்துக்களை தடுக்கும் விதமாக மதுபான பார்களை ஏன் மூடக்கூடாது என்றும், மத்திய-மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சரமாரியாக கேள்விகேட்டு, விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இருவர் பலி
அடையாறு எல்.பி.சாலையில், கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற பி.அருண்குமார், பி.ராம்குமார் ஆகியோர் மாநகர அரசு பஸ் மீது மோதியதில் பலியானார்கள். இவர்களது உறவினர்கள் இழப்பீடு கேட்டு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அருண்குமார் உறவினர்களுக்கு ரூ.9.25 லட்சமும், ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.11.34 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரது உறவினர்கள் மான்விழி, பாலு உள்பட 4 பேர், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
தண்ணீர் பஞ்சம்
இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
                                                                                                மேலும், . . . . . 

கிரானைட் முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை தொடங்கினார்

மதுரை, டிசம்பர். 04-12-2014,
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை ஐகோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரையில் நேற்று தனது விசாரணையை தொடங்கினார்.
கிரானைட் முறைகேடு
மதுரை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அப்போதைய கலெக்டர் சகாயம் ஒரு அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பிவைத்தார். இதைத்தொடர்ந்து கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு, கிரானைட் குவாரி அதிபர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மேலூர் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில்,
                                                                                                               மேலும், . . .  .

No comments:

Post a Comment