Tuesday 9 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வருகை கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகட்சியினர் 600 பேர் கைது


திருமலை, டிசம்பர், 10-12-2014,
இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில், தற்போதைய அதிபர் ராஜபக்சே, மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, ராஜபக்சே கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி பல்கலைக்கழக மைதானத்துக்கு வந்தார். பிறகு, கார் மூலம் திருமலைக்கு வந்தார்.


திருமலையில் உள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
                                                                                                    மேலும், . . .  . . 

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் கச்சத்தீவை மீட்க மசோதா பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை திரும்ப பெற மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியது.
புதுடெல்லி, டிசம்பர், 10-12-2014,
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவது நீடித்து வருகிறது.
கவனஈர்ப்பு தீர்மானம்
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது பற்றியும், அவர்களுடைய படகுகள் கைப்பற்றப்படுவது குறித்தும் அ.தி.மு.க. உறுப்பினர் வேணுகோபால் கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டும், சிறை பிடிக்கப்பட்டும் வரும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
                                                                                                    மேலும், . . . . 

சென்னையில் பஸ் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் திடீர் மோதல் அலுவலகம் சூறையாடப்பட்டது


சென்னை, டிசம்பர், 10-12-2014,
சென்னையில் பஸ் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் திடீர் மோதல் வெடித்து, அலுவலகம் சூறையாடப்பட்டது.
கோரிக்கை மனு கொடுத்தபோது...
பஸ் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படாததால், புதிய ஒப்பந்தம் போடுவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகர பஸ் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக நேற்று காலை 9.30 மணி அளவில் 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் திரண்டனர். உடனே பல்லவன் இல்ல அலுவலக கேட் இழுத்து மூடப்பட்டது. இரும்பு தடைகள் மூலம் ஊழியர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டது. துணை கமிஷனர் கிரி தலைமையில் போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டனர்.
இதற்கு அங்கு திரண்டு நின்ற ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைதியான முறையில் மனு கொடுப்பதை தடுத்து நிறுத்துவதா? என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து பிரச்சினை மோதலாக வெடித்தது. சில நபர்கள் இரும்பு தடுப்புகளை தூக்கி வீசினார்கள். அங்கு திரண்டு நின்ற ஊழியர்கள் ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சூறையாடப்பட்டது
மேலும் சிலர் மூடப்பட்ட கேட்டை தாண்டி குதித்தனர்.
                                                                                                                    மேலும், . .  . .

டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி கூறியது அவருடைய சொந்த கருத்து: ‘பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க. தொடர்ந்து அங்கம் வகிக்கிறது’ டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

சென்னை, டிசம்பர், 10-12-2014,
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்ந்து அங்கம் வகிக்கிறது என்றும், டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி கூறியது அவருடைய சொந்த கருத்துக்கள் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
பா.ஜ.க. கூட்டணி
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ம.தி.மு.க. நேற்று முன்தினம் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, ‘பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலை புலிகளின் ஆதரவாளர், அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வேண்டும்’ என்று டுவிட்டரில் தனது கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். இதனால் பா.ம.க. தொண்டர்கள் கவலை அடைந்தனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
                                                                                                    மேலும், . . . .

No comments:

Post a Comment