Sunday 30 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

7-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 2 லட்சம் துணை ராணுவ வீரர்கள் நக்சல் ஆதிக்க பகுதிகளில் கூடுதல் படைகளை குவிக்க முடிவு
புதுடெல்லி, மார்ச், 31-03-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 7–ந் தேதி தொடங்கி மே 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
9 கட்டங்களாக தேர்தல்
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், இந்த தேர்தல்தான் மிக அதிகமாக 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6–வது கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட இருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
                                                                                                             மேலும், . . . .

ஏழைகளைப் பற்றி காங்கிரஸ் அரசு கவலைப்படவில்லை பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
புதுடெல்லி, மார்ச், 31-03-2014,
ஏழைகளைப் பற்றி காங்கிரஸ் அரசு கவலைப்படவில்லை என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியது.
18 கேள்விகள்
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்கா, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டின் பொருளாதார நிலை குறித்து, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு அவர் 18 கேள்விகள் விடுத்தார். அவர் கூறியதாவது:–
                                                                                                      மேலும், . . . 

பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ‘40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்’ தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, மார்ச், 31-03-2014,
40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–
பாராளுமன்ற தேர்தல்
வருகின்ற 24–4–2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும்
                                                                                  மேலும், . . . . 

Saturday 29 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் ராகுல் காந்திக்கு நரேந்திர மோடி பதிலடி ‘‘நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம்’’
பாக்பத், மார்ச்,30-03-2014,
நாட்டுக்காக வாழ்வதும், உயிர் விடுவதும்தான் எங்கள் சித்தாந்தம் என்று உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்திக்கு நரேந்திரமோடி பதிலடி கொடுத்தார்.
ராகுலுக்கு பதிலடி
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘ஒரு தனிப்பட்ட நபர் என்ற முறையில் நரேந்திரமோடிக்கு எதிராக என்னிடம் ஏதுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான அவரது சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன். மோடி, ஒரு பிரத்யேகமான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார். அது, மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளச்செய்யும் சித்தாந்தம்’’ என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம், பாக்பத்தில் (முன்னாள் பிரதமர் சரண்சிங் தொகுதி) நரேந்திரமோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனது சித்தாந்தம் பற்றி ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                       மேலும், . . . 

துண்டு, துண்டாக வெட்டி கூறுபோடுவேன் என்று பேச்சு மோடியை மிரட்டிய காங். வேட்பாளர் கைது சிறையில் அடைக்கப்பட்டார்
லக்னோ, மார்ச்,30-03-2014,
உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் இம்ரான் மசூத் (வயது 40).
மிரட்டல் பேச்சு
இவர், சகரன்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடுமையாக தாக்கினார்.
                                                                                        மேலும், . . . . 

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் நிர்மூலமாகும் ராமநாதபுரம் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

சென்னை, மார்ச்,30-03-2014,
சேது சமுத்திர கால்வாய் திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் நிர்மூலமாகும் என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
ராமநாதபுரத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அ.அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மின்வெட்டு
மின் உற்பத்தியை எடுத்துக்கொண்டால், எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். ஒரு வாரத்திற்கு முன்பு சில மின் நிலையங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓரிரு நாட்கள் மின்வெட்டு ஏற்பட்டது.
                                                                                                   மேலும், . . . . 

Friday 28 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
சென்னை, மார்ச், 29-03-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி மே மாதம் 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக் கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 24–ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதே நாளில் ஆலந்தூர்சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது.
                                                                  மேலும், . . .  . . 

2 கல்வித்திட்டங்களில் தமிழகத்துக்கு தரவேண்டியது மத்திய அரசு ரூ.901 கோடியை தரவில்லை என்பது உண்மையா? இல்லையா? முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ப.சிதம்பரத்துக்கு கேள்வி

சென்னை, மார்ச், 29-03-2014,
2 கல்வித் திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.901.76 கோடியை மத்திய அரசு இன்னமும் தரவில்லை என்பது உண்மையா? இல்லையா? என்று மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுபற்றி பேசியதாவது:-
சிதம்பரத்தின் வாடிக்கை
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி கூட்டத்தில் நான் பேசியபோது இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருப்பதற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தான் காரணம் என்று தெரிவித்து இருந்தேன்.
                                                                                                                       மேலும்,. . . .

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்த மேலும் ஒரு மோசடி கும்பல் கைது கவனமாக செயல்பட, பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சென்னை, மார்ச், 29-03-2014,
சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பில் ஈடுபட்ட மேலும் ஒரு மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அதிரடி வேட்டை
சென்னை நகரில், போலி ஏ.டி.எம். கார்டு, போலி கிரெடிட் கார்டு, போலி அரசு ஆவணங்கள், போலி ரேஷன்கார்டு மற்றும் போலி வாக்காளர் அட்டை தயாரித்து, மெகா மோசடியில் ஈடுபடும் கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த சில நாட்களில் மட்டும், இது போன்ற மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
நேற்று மேலும் 5 மோசடி ஆசாமிகள், போலீஸ் வேட்டையில் கைதானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
                                                                                                 மேலும், . . . 

Thursday 27 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன
ஜெனீவா, மார்ச், 28-03-2014,
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
போர்க்குற்றங்கள்
அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஜெனீவா நகரில் உள்ள, 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே தொடர்ச்சியாக 2012 மற்றும் 2013–ம் ஆண்டுகளில் கொண்டு வந்த தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறின.
                                                                                            மேலும், . . . .

தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் தமிழகம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்
சென்னை, மார்ச், 28-03-2014,
தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் வர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
மது சப்ளை
தேர்தல் தினங்களில் வாக்காளர்களை கவர்வதற்காகவும், ஓட்டுக்காக அவர்களை வசப்படுத்தி கொள்வதற்காகவும் அரசியல் கட்சிகள் சார்பில் மது சப்ளை செய்வது வழக்கமான ஒன்று. எனவே ஓட்டுக்காக மது சப்ளை செய்வதை தடுப்பதற்கு தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அதிக மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். எனவே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மதுவை புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வருவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வந்தன.
சோதனை சாவடிகள் அதிகரிப்பு
இதுகுறித்து பிரவீன்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

                                                                                                                மேலும், . . . 

கறுப்பு பண மீட்பு விவகாரம் இந்தியா கேட்ட தகவல்களை சுவிஸ் அரசு தரவில்லை ப.சிதம்பரம் கடிதம் அம்பலம்
புதுடெல்லி, மார்ச், 28-03-2014,
கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் இந்திய கேட்ட தகவல்களை சுவிஸ் அரசு தரவில்லை என்பதை ப.சிதம்பரம் அந்த நாட்டு நிதி மந்திரிக்கு எழுதிய கடிதம் காட்டுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
வெளிநாட்டு வங்கிகளில் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தப்பணத்தை மீட்க கடந்த 65 ஆண்டுகளில் மத்திய அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தது.
                                                                                              மேலும், . . . 

Monday 24 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

17 நாட்களாக நீடித்த மர்மம் விலகியது 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது உறுதியானது மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச், 25-03-2014,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8–ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.
17 நாட்களுக்குப் பிறகு
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர். தெற்கு சீனா கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது, அந்த விமானத்துடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்பட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது.
                                                                                                                          மேலும், . . . 

ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தும் உத்தரவை திரும்ப பெறவேண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி, மார்ச், 25-03-2014,
‘அரசு சலுகைகளைப் பெறுவதற்காக ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் வகையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்து இருந்தால் அதனை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
கற்பழிப்பு வழக்குக்கு ஆதாரங்கள்
கோவாவின் வாஸ்கோ பகுதியில் மைனர் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா பிரிவு, அந்த வழக்கு விசாரணை தொடர்பாக குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் தனித்த சில அடையாளங்களை சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுடன் இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
                                                                                     மேலும், . . . 

நாளை முதல் மோடி தீவிர பிரச்சாரம் 185 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
புதுடெல்லி, மார்ச், 25-03-2014,
பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, முதன் முதலாக ஜம்மு நகரில் தொடங்கி, தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் நெருங்கி விட்டதால், ‘பாரத் விஜய்’ என்ற பெயரில் பா.ஜனதா தீவிர தேர்தல் பிரசார திட்டத்தை தொடங்கி உள்ளது.
அதன்படி நரேந்திரமோடி நாளை (புதன்கிழமை) தொடர் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் 295 வேட்பாளர்களை ஆதரித்து மொத்தம் 185 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதேபோல கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் 160 பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநில முதல்-மந்திரிகளும் தீவிர பிரசார களத்தில் குதிக்கின்றனர்.
                                                                                                 மேலும், . . . . 

Saturday 22 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அனைத்து தொகுதிகளிலும் முழு அளவில் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடு விசேஷ அதிகாரிகள் டெல்லியில் இருந்து வருகை

சென்னை, மார்ச், 23-03-2014,
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி, மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
முழுஅளவு ஓட்டுப்பதிவு
பாராளுமன்ற தேர்தலில் வழக்கமாக மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களைவிட குறைவாகவே ஓட்டுகள் பதிவாகி வருவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் முழு அளவு ஓட்டுப்பதிவு நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முழு அளவில் ஓட்டுப்பதிவு நடந்தால் தான் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் கொடுப்பது போன்ற தவறான நடவடிக்கைகளையும் தடுக்க முடியும் என்பதாலேயே தேர்தல் கமிஷன் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியும் என்று

                                                                                                                     மேலும், . . . 

ராணுவத்துக்கு தேர்வான பெண்களை சித்ரவதை செய்தது உண்மைதான் இலங்கை ராணுவம் முதல் முறையாக ஒப்புதல்
கொழும்பு, மார்ச், 23-03-2014,
ராணுவத்துக்கு தேர்வான பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் சித்ரவதை செய்தது உண்மைதான். இதுகுறித்த வீடியோ காட்சி உண்மையானதுதான் என்று முதல் முறையாக இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
வீடியோ காட்சி
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்காகார்டியன்.ஆர்க்’ என்ற இணையதளத்தில் கடந்த வாரம் 4.41 நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அதில், ராணுவத்துக்கு தேர்வான பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் தகாதமுறையில் திட்டுவதும், அடிப்பதும் இடம்பெற்று இருந்தது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில் வெளியான இந்த வீடியோ படக்காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                                                                                    மேலும், ., . 

ஊழல் ஒழிப்பு மசோதாக்களை தடுத்து நிறுத்தினர் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை ராகுல் காந்தி பேச்சு
பிரதாப்கர், மார்ச், 23-03-2014,
மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை, ஊழல் ஒழிப்பு மசோதாக்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர் என்று ராகுல் காந்தி பேசினார்.
தனிநபர் அதிகாரம்
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
                                                                                             மேலும், . . . 

Friday 21 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

 5 முனை போட்டியால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்


சென்னை, மார்ச், 22-03-2014,
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
5 முனை போட்டி
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தும் போட்டியிடுவதால் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
                                                                                                 மேலும், . . . 

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆஸ்பத்திரியில் நேரில் சம்மன் அமெரிக்காவில் தான் இல்லவே இல்லை என்று சோனியா மறுப்பு நிரூபிக்க பாஸ்போர்ட்டு நகலை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
நியூயார்க், மார்ச், 22-03-2014,
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சோனியாவிடம் சம்மன் வழங்கியதாக சீக்கிய அமைப்பு கூறுகிறது. சோனியாவோ, அப்போது தான் அமெரிக்காவில் இல்லவே இல்லை என்று மறுத்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக பாஸ்போர்ட்டு நகலை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
சோனியா மீது வழக்கு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984–ம் ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியிலும், நாட்டின் பிற இடங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் மூண்டன.
                                                                                        மேலும், . . . . 

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதி விருதுநகர் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

விருதுநகர், மார்ச், 22-03-2014,
நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்று விருதுநகர் தொகுதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று திருத்தங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
சாதாரண தேர்தல் அல்ல
வருகின்ற மக்களவைத் தேர்தல் சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கக் கூடிய தேர்தல். நம்முடைய துயரங்களை தீர்க்க, வகை செய்யும் தேர்தல். இந்திய நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவை மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த மாற்றத்தை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்.
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல. மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். அதை நீங்கள் தான் செய்ய முடியும்.
                                                                                          மேலும், . . . 

Thursday 20 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பா.ஜனதா கூட்டணியில் தொகுதி உடன்பாடு தே.மு.தி.க-14, பா.ஜ.க-8, பா.ம.க-8, ம.தி.மு.க-7, கொங்குநாடு-1, ஐ.ஜே.கே-1 கட்சி தலைவர்கள் முன்னிலையில் ராஜ்நாத்சிங் அறிவிப்பு
சென்னை, மார்ச், 21-03-2014,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க இங்குள்ள தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு. தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை சேர்க்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரே தொகுதியை கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
ராஜ்நாத்சிங் வருகை
3 மாத கால முயற்சியின் பலனாக, தற்போது பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 39 அமைப்புகளும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. புதுச்சேரியில், ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
                                                                                          மேலும், . . . 

இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களை கொடூரமாக தாக்கும் சிங்கள ராணுவ அதிகாரிகள் புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
லண்டன், மார்ச், 21-03-2014,
இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவ அதிகாரிகள் கொடூரமாக தாக்கும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இலங்கை ராணுவம் அத்துமீறல்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் போர் நெறிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை ராணுவத்தினர் பிடித்து சுட்டுக்கொன்றனர். இதேபோல் விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவைச்சேர்ந்த இசைப்பிரியாவும் ராணுவத்தினரால் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
                                                                                        மேலும், . . . 

காந்தி நகரில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்த அத்வானி சமாதானம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி சந்திப்பால் மனமாற்றம்
புதுடில்லி, மார்ச், 21-03-2014,
லோக்சபா தேர்தல், பா.ஜ., வேட்பாளர், ஐந்தாவது பட்டியல், நேற்று முன்தினம், இரவில் வெளியானது. அதில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கூடுதலாக, குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவார் எனவும், மூத்த தலைவர், அத்வானி, அவரின், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் எனவும், அறிவிப்பு வெளியானது.
மத்திய பிரதேசத்தின், போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானிக்கு, குஜராத்தின், காந்திநகர் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த அவரை, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி சந்தித்து பேசி, சமாதானப்படுத்தினார். இதையடுத்து, வழக்கம் போல், காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிட,

                                                                                                 மேலும், . . . 

Wednesday 19 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


தமிழக நலன்களை விட்டு தந்தவர் கருணாநிதி: முதல்வர்

சென்னை, மார்ச்.20 -
மக்களவை தேர்தலையொட்டி தென்காசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சங்கரன் கோவிலில் பிரசாரம் மேற்கொண்டார்.
சங்கரன்கோவில், ஏஞ்சல் பள்ளி மைதானம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்து, அங்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கில் கடல் அலைபோல் திரண்டிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, % தன்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது பேசியதாவது:_
2011 -ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ; அதைவிட மகத்தான வெற்றியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைப்பதற்காகவே இங்கே நான் வந்திருக்கிறேன். எனது வேண்டுகோளினை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
                                                                                                                      மேலும், . . .

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா
புதுடெல்லி, மார்ச், 20-03-2014,
5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலை நோக்கி பறந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான மலேசிய விமானத்தில் சீனாவை சேர்ந்த 150 பேர் பயணம் செய்தனர்.
எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா மும்முரமாக இறங்கியுள்ளது. விமானத்தை தேடும் வேட்டை தற்போது இந்திய கடல்பகுதிகளை நோக்கி திரும்பியுள்ள நிலையில், அந்தமான் கடல் பகுதியில் தேடும் பணிக்காக, அதிநவீன மீட்புக்கப்பல் உள்ளிட்ட 4 போர்க்கப்பல்களை இந்திய கடல்பகுதியில் நுழைய அனுமதிக்குமாறு இந்தியாவிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.
                                                                                மேலும், . . .

தேர்தலின்போது வாகன சோதனை போன்ற பணிகளில் ஈடுபட துணை ராணுவத்தினர் 3,500 பேர் வருகை தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த தீவிர நடவடிக்கை
சென்னை, மார்ச், 20-03-2014,
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 24-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்னும் தொடங்கப்படவில்லை. என்றாலும் வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் கமிஷன் தீவர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தேர்தலை முன்னிட்டு பணம், பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தீவிர வாகன சோதனைகளும் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நேரடி மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஐ.ஜி.சேஷசாயி தலைமையில் தினமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.
                                                                                                    மேலும், . . . 

Tuesday 18 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


மாயாமான மலேசிய விமானம் விமானத்தின் பாதை கம்யூட்டரில் மாற்றி அமைத்து கடத்தல்
நியூயார்க், மார்ச், 19-03-2014,
கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் எந்தவித தகவலும் இதுவரை தெரியவில்லை. இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. தறபோது விமானத்தை தேடும் தூரம் அதிகரிக்கபட்டு உள்ளது.
விமான பைலட்கள் மீது சந்தேகம்
விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். மலேசிய போலீசார் தலைமை பைலட்டின் குட்ம்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அகமது ஷா மன நிலை எவ்வாறு இருந்து என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த வில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உதவி பைலட் பாரூக் அப்துல் அமீது வீட்டிலும் மலேசிய போலீசார் சோதனை நடத்தினர். அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மாயமான விமானம் எம் எச் 370 கடத்தலுக்கு மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விமானம் காணாமல் போனதை தொடரந்து விமானிகளின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
                                                                                                 மேலும், . . .

தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடிக்கும் பா.ம.க. பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவிப்பு
சென்னை, மார்ச், 19-03-2014,
தொகுதி பங்கீட்டில் பா.ம.க. முரண்டு பிடிப்பதால், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவித்து வருகின்றன. கூட்டணி இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.
பா.ம.க. இடம்பெறுமா?
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பா.ம.க.வும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே, பா.ம.க. 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதனால், அதில் 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. தரப்பில், நீங்கள் வேட்பாளர்கள் அறிவித்ததில் 5 தொகுதிகளை அப்படியே தருகிறோம்.
                                                                                                               மேலும், . . . . 

வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம்; கெஜ்ரிவால் சொல்கிறார்
புதுடெல்லி, மார்ச், 19-03-2014,
வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
கருத்தரங்கில் பேச்சு
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தயார் என்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். நேற்று டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் கருத்தரங்கு ஒன்றில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை எதிர்த்து ஒரு அடையாளத்துக்காக போட்டியிடவில்லை என்றும், அந்த தொகுதியில் அவரை தோற்கடிப்பதே தனது முக்கிய குறிக்கோள் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். கருத்தரங்கில் பேசும்போது அவர் கூறியதாவது;–

                                                                                                                                   மேலும், . . . 

Sunday 16 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி பெங்களூர் பேரணியில் அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச், 17-03-2014,
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் அல்லாத வேறு மாநில தொகுதி ஒன்றில் இருந்து போட்டியிட முடிவு செய்து இருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அதன்படி, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், ஊழலுக்கு எதிராக போராடிவரும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய புதிய கட்சியான ஆம் ஆத்மி, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
                                                                                                              மேலும், . . . 

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை விமானியே கடத்தினாரா? புலனாய்வு அதிகாரிகள் விசாரணை
கோலாலம்பூர், மார்ச், 17-03-2014,
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை விமானியே கடத்தினாரா என்ற கோணத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
மாயமான விமானம்
சென்னை பெண் சந்திரிகா சர்மா மற்றும் 4 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்ற மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி அதிகாலையில் மாயமான மர்மம், தொடர்கதையாய் நீண்டு வருகிறது.இந்த விமானத்தை தேடும் முயற்சியில் 14 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள், செயற்கைக்கோள்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக ஈடுபட்டும் திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருப்பது தொடர்புடைய அனைவரையும் தளர்ச்சி அடையச்செய்துள்ளது.
                                                                                                     மேலும், . . . 

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
சென்னை, மார்ச், 17-03-2014,
தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறினார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று மதியம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                            மேலும், . . . 

Saturday 15 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்
சென்னை, மார்ச், 16-03-2014,
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக பா.ஜ.க. வலுவான அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்த கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தன.
தொகுதி பங்கீட்டில் சிக்கல்
பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தது. அந்த தொகுதிகளில் சிலவற்றை தே.மு.தி.க கேட்டதாலும், இதர சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் இடையே பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீடித்தது.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு காண முடியவில்லை.
வேட்பாளர் அறிவிப்பு
இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, திருவள்ளூர், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார்.
                                                                                                                       மேலும், . . . 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும் தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

தூத்துக்குடி, மார்ச், 16-03-2014,
“சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை நாடாளுமன்றத்தில் வெற்றி பெறச் செய்த கருணாநிதி, தற்போது அதை தடை செய்ய பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் ‘அந்தர் பல்டி‘ அடித்து இருக்கிறார். மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் வாய்ப்பு நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் மூலம் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும்“ என்று தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து, தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார்.
இதற்காக தூத்துக்குடி கதிர்வேல் நகருக்கு மாலை 3 மணி அளவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்குள்ள திடலில் தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்து இருந்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.சண்முகநாதன், சசிகலா புஷ்பா எம்.பி. சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பங்கள், முளைப்பாரி ஏந்தி வரவேற்றனர்.
பிரசார மேடையில் நின்றபடி, முதல்–அமைச்சர் ஜெயலிலதா பேசியதாவது:–
                                                                                                                     மேலும், . . . . 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடி போட்டி பா.ஜனதா கட்சியின் 4–வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுடெல்லி, மார்ச், 16-03-2014,
பா.ஜனதா கட்சியின் 4–வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
மத்திய தேர்தல் குழு கூட்டம்
பா.ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்தனர். இரவு 11 மணிக்கு மேலும் இந்த கூட்டம் நீடித்தது. உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் அரியானா உள்பட 12 மாநிலங்களின் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல்–மந்திரியுமான நரேந்திரமோடி இந்த தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்தும், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்தும் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

                                                                                                                                      மேலும், . . . 

Monday 10 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலுக்கு அணிகள் தயார் தமிழகத்தில் 5 முனை போட்டி உறுதி
புதுடெல்லி, மார்ச், 11-03-2014,
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்தமாதம் (ஏப்ரல்) 24–ந்தேதி நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க–தி.மு.க.
பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. இந்த முறை தனித்து சந்திக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அக்கட்சி தமிழகம்–புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
                                                                                                                     மேலும், . . .

கருணாநிதி வெளியிட்டார் தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
சென்னை, மார்ச், 11-03-2014,
தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும், 35 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
வடசென்னையில் ஆர்.கிரிராஜனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், தென்சென்னையில் டி.கே.எஸ்.இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை தனித்து எதிர்கொள்ளும் அ.தி.மு.க., தமிழகம் – புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
                                                                                            மேலும், . . . . 

239 பயணிகளுடன் மாயமான விமானத்தின் மர்மம் நீடிப்பு உடைந்த பாகங்கள் எதுவும் தென்படாததால் மீட்புக்குழுவினர் திணறல்
கோலாலம்பூர், மார்ச், 11-03-2014,
239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்காததால், விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
239 பயணிகளுடன் மாயம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய விமானம் ஒன்று கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் புறப்பட்டது. அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
அது தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே கடலில் நொறுங்கி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
                                                                                                  மேலும், . . . 

Sunday 9 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

மலேசிய விமான விபத்தில் 239 பேர் பலி போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம் செய்தது அம்பலம் தீவிரவாதிகள் நாசவேலையா? விசாரணையில் புதிய தகவல்கள்
கோலாலம்பூர், மார்ச், 10-03-2014,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது.
கடலில் விழுந்தது
அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமானது. அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே ‘பு குவாக்’ தீவிற்கு 153 மைல் தெற்கே கடலில் விழுந்து மூழ்கியது.
இதை ராணுவ ரேடார் பதிவு செய்து இருப்பதாக வியட்நாம் கடற்படை அதிகாரி அட்மிரல் நாகோ வான் பட் தெரிவித்தார்.
                                                                                                              மேலும், . . .

தெலுங்கர் பிடியில் கூட்டணி' : பா.ம.க.,
சென்னை, மார்ச், 10-03-2014,
பிற கட்சிகளோடும், சமூகங்களோடும், தாங்கள் எடுக்கும் உரசல் நிலைப்பாட்டால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் பா.ம.க., தற்போது, 'தமிழக பா.ஜ., கூட்டணி, தெலுங்கர்கள் பிடியில் சிக்கியுள்ளது. தெலுங்கர் அல்லாதவர்கள் தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு உரிய தொகுதிகள் கிடைக்குமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது' என, பா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தையில் புது தூபத்தை போட்டுள்ளது.
தமிழகத்தில், முதல்முறையாக, பா.ஜ., தலைமையில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - புதிய நீதிக்கட்சி - இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளோடு லோக்சபா தேர்தல் கூட்டணி அமையவுள்ளது. அதிலும், 'நாங்கள் தான் தலைமை வகிப்போம்' என, தே.மு.தி.க., முரண்டுபிடித்து வருவதால், பா.ஜ.,வினர் ஏற்கனவே விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், பா.ம.க.,வும் முரண்டு பிடிப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து உள்ளது.
                                                                                                  மேலும், . . .

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க.தான் என்பது ஏமாற்று வேலை கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு

கன்னியாகுமரி, மார்ச், 10-03-2014,
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க.தான் என்பது ஏமாற்று வேலை என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடும் தாக்குதல் தொடுத்தார்.
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நாகர்கோவிலில் பிரசாரம்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜாண்தங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று மதியம் ஜெயலலிதா புறப்பட்டார். திருவனந்தபுரத்துக்கு விமானம் வந்ததும் அதில் இருந்து இறங்கி, தனி ஹெலிகாப்டரில் அவர்

                                                                                                                         மேலும், . . .

Saturday 8 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 194 பேர் இடம்பெற்றனர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது
புதுடெல்லி, 09-03-2014,
சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 194 பேர் அடங்கிய காங்கிரசின் முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கிரிக்கெட் வீரர் முகமது கைப், வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா ஆகியோருக்கும் ‘சீட்’ தரப்பட்டுள்ளது.
முதல் பட்டியல்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதலாவது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் கமிட்டி, அந்த பட்டியலை இறுதி செய்தது.
அதில், 194 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்திய மந்திரிகள் உள்பட தற்போதைய எம்.பி.க்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுகங்கள், இளைஞர்கள் ஆகியோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 35 சதவீத வேட்பாளர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 15 சதவீதம்பேர் பெண்கள் ஆவர்.
                                                                                                                          மேலும், . . 

சென்னை பெண் உள்பட 239 பேர் பலி சீனா சென்ற மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது
பீஜிங், 09-03-2014,
சீனா சென்ற மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியதில் சென்னை பெண் உள்பட 239 பேர் பலியாகி விட்டனர்.
மலேசிய விமானம்
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் இடையே மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகள் விமானங்களை இயக்கி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் வளர்ந்து வருவதால் இந்த விமானங்களில் பயணம் செய்ய மக்களிடையே நல்ல கிராக்கி உள்ளது.
                                                                                                  மேலும், . . . 

மனைவியை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? நரேந்திரமோடி மீது திக்விஜய்சிங் கடும் தாக்கு
புதுடெல்லி, 09-03-2014,
மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? என்று, நரேந்திரமோடி மீது காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் தாக்குதல் தொடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், சர்வதேச மகளிர் தினமான நேற்று நரேந்திரமோடி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:–
நரேந்திரமோடியின் மனைவி
‘‘நரேந்திரமோடியின் இதயத்தில் பெண்கள் மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தால், அவரிடம் இருந்து சில தகவல்களை அறிய விரும்புகிறேன். தேர்தல் விண்ணப்ப படிவத்தில் அவருடைய மனைவியின் பெயரை குறிப்பிடாதது ஏன்?
                                                                                                      மேலும், . . . 

Thursday 6 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல் கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்டு கூட்டாக அறிவிப்பு

சென்னை, மார்ச், 07-03-2014,
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.
இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன.
அவசர ஆலோசனை
அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
                                                                                                            மேலும், . . . 

கூட்டணி பேச்சு உறுதி பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச், 07-03-2014,
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தற்போது உறுதி செய்துள்ளது.
எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது. தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அக்கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
                                                                                                       மேலும், . . . 

‘மக்கள் மனதில் வேரூன்றிய கட்சி காங்கிரஸ்’ ராகுல் காந்தி பேச்சு
தானே, மார்ச், 07-03-2014,
‘மக்கள் மனதில் வேரூன்றிய கட்சி காங்கிரஸ்’ என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:–
வேரூன்றிய கட்சி
காங்கிரஸ் கட்சி உதயமானது மராட்டிய மண்ணில் தான். எங்கள் கருத்துக்கள் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவை பகவத் கீதையில் இருந்து எடுக்கப்பட்டவை. மராட்டிய மன்னர் சிவாஜி, ‘சாம்ராட்’ அசோகர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் இந்த கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள்.
                                                                                                மேலும், . . . 

Wednesday 5 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

ஏப்ரல் மாதம் 7–ந் தேதி முதல் மே மாதம் 12–ந் தேதி வரை பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் தமிழகத்தில் ஏப்.24–ந் தேதி ஓட்டுப்பதிவு மனுதாக்கல் 29–ந் தேதி தொடங்குகிறது
புதுடெல்லி, மார்ச், 06-03-2014,
16-வது பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
9 கட்ட தேர்தல்
தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். மற்ற இரு தேர்தல் கமிஷனர்களான எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
அதன்படி, இந்தியா முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி, மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த தேர்தல்தான் மிக அதிகமாக 9 கட்டங்களாக நடைபெறுகிறது.
                                                                                               மேலும், . . .  

ராயப்பேட்டை கொள்ளையில் துப்பு துலங்கியது 24 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது

சென்னை, மார்ச், 06-03-2014,
சென்னை ராயப்பேட்டையில், அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக இருந்த பெண்களிடம், கொள்ளை அடித்த வழக்கில், கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்கி, கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது பற்றி, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது முன்னிலையில், நடந்த சம்பவம் பற்றி, மைலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:–
தொழில் அதிபர் வீட்டில்....
சென்னை ராயப்பேட்டை, பாலாஜி நகரில் உள்ள அஜய் அடுக்குமாடி குடியிருப்பில், தொழில் அதிபர் கலீலூர்ரஹ்மான் என்பவர் வசிக்கிறார். அவர் கத்தார் நாட்டில் தங்கி இருந்து தொழில் செய்கிறார். அவரது வீட்டில் அவரது மாமியார் மசூர்சுல்தானா (வயது 65), அவரது மகள் கல்லூரி மாணவி இர்பாத் பாத்திமா மற்றும் வேலைக்கார பெண் ஆகியோர் தனியாக தங்கி உள்ளனர்.
                                                                                                                 மேலும், . . . 

வெள்ளிங்கிரி மலையில் மாயமான சினிமா இயக்குனரை கண்டுபிடிக்க 70 பேர் கொண்ட குழு அமைப்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை தீவிரம்

கோவை, மார்ச், 06-03-2014,
வெள்ளிங்கிரி மலையில் மாயமான சினிமா இயக்குனரை கண்டுபிடிக்க 70 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சினிமா கலை இயக்குனர்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோ மிர்தாத் (வயது 35). இவர் கடந்த 2009–ம் ஆண்டு முதல் திரைப்பட கலை இயக்குனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் கடந்த 27–ந் தேதி இரவு கோவை மாவட்டம் பூண்டி வெள்ளிங்கிரி மலையில் உள்ள 7–வது மலைக்கு பக்தர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் மலையில் இருந்து கீழே இறங்கினார். 6–வது மலையில் வந்தபோது வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார். உடனே அவர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் வழிதவறி விட்டதாக தெரிவித்தார்.
                                                                                               மேலும், . . . 

Tuesday 4 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-03-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச், 05-03-2014,
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1–ந்தேதியுடன் முடிவடைகிறது.
பாராளுமன்ற தேர்தல்
எனவே மே 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது.
இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
                                                                                                          மேலும், . . . 

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

சென்னை, மார்ச், 05-03-2014,
கச்சத்தீவு பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மீனவர்கள் பிரச்சினை
இன்றைய சூழ்நிலையில், நம் முன் தலையாய பிரச்சினையாக விளங்குவது தமிழக மீனவர்கள் பிரச்சினை. இலங்கை கடற்படையின் தொடர் துன்புறுத்தல் சிறைபிடிப்பு காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனது தலைமையிலான அரசின் துரித நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்களை ஒருபுறம் இலங்கை அரசு விடுவித்து வருகிறது. மறுபுறம் புதிதாக மீனவர்களை சிறை பிடிக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால், வலுவான இந்திய அரசு மத்தியில் அமரவேண்டும்.
                                                                                                                               மேலும், . . . 

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தனித்து போட்டி? ஜெயலலிதா பேச்சில் வெட்டவெளிச்சம்

சென்னை, மார்ச், 05-03-2014,
காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி களை, அ.தி.மு.க., கழற்றிவிட முடிவு செய்திருப்பது உறுதியானது.
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். நேற்று, இரண்டாவது நாளாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து, சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். காஞ்சிபுரத்தில், அவர் பேசும்போது, ''மத்தியில், நடைபெறும், ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். அந்த ஆட்சி, தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியாக, அமைய வேண்டும். அப்போது தான், தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்படும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில், நீங்கள் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.
                                                                                          மேலும், .. . .

Monday 3 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-03-2014) காலை,IST- 03.00 மணி,நிலவரப்படி,

தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மத்தியில் அ.தி.மு.க. இடம் பெறும் ஆட்சி வேண்டும் காஞ்சீபுரம் கூட்டத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

சென்னை, மார்ச், 04-03-2014,
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியை முதலில் இறுதி செய்த அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
                                                                                                        மேலும், . . . .

7 கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 6–ந் தேதி விசாரணை
புதுடெல்லி, மார்ச், 04-03-2014,
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, ராஜீவ் காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு, 6–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
பொதுநலன் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடன் உயிரிழந்த 14 பேரில் மூன்று பேரின் குடும்பத்தினர் அப்பாஸ், ஜான் ஜோசப், மேலும் 3 பேர், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வரின் உத்தரவுக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
                                                                                                               மேலும், . . . .


2 நாளில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இல்லை கருணாநிதி பேட்டி
சென்னை, மார்ச், 04-03-2014,
தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:–
தி.மு.க. கூட்டணியில்...
கேள்வி:– இன்றுடன் நேர்காணல் முடிந்து விட்டது. எப்போது வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறீர்கள்?
                                                                                                 மேலும், . . . .