Sunday 9 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

மலேசிய விமான விபத்தில் 239 பேர் பலி போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம் செய்தது அம்பலம் தீவிரவாதிகள் நாசவேலையா? விசாரணையில் புதிய தகவல்கள்
கோலாலம்பூர், மார்ச், 10-03-2014,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது.
கடலில் விழுந்தது
அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமானது. அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே ‘பு குவாக்’ தீவிற்கு 153 மைல் தெற்கே கடலில் விழுந்து மூழ்கியது.
இதை ராணுவ ரேடார் பதிவு செய்து இருப்பதாக வியட்நாம் கடற்படை அதிகாரி அட்மிரல் நாகோ வான் பட் தெரிவித்தார்.
                                                                                                              மேலும், . . .

தெலுங்கர் பிடியில் கூட்டணி' : பா.ம.க.,
சென்னை, மார்ச், 10-03-2014,
பிற கட்சிகளோடும், சமூகங்களோடும், தாங்கள் எடுக்கும் உரசல் நிலைப்பாட்டால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் பா.ம.க., தற்போது, 'தமிழக பா.ஜ., கூட்டணி, தெலுங்கர்கள் பிடியில் சிக்கியுள்ளது. தெலுங்கர் அல்லாதவர்கள் தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு உரிய தொகுதிகள் கிடைக்குமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது' என, பா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தையில் புது தூபத்தை போட்டுள்ளது.
தமிழகத்தில், முதல்முறையாக, பா.ஜ., தலைமையில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - புதிய நீதிக்கட்சி - இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளோடு லோக்சபா தேர்தல் கூட்டணி அமையவுள்ளது. அதிலும், 'நாங்கள் தான் தலைமை வகிப்போம்' என, தே.மு.தி.க., முரண்டுபிடித்து வருவதால், பா.ஜ.,வினர் ஏற்கனவே விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், பா.ம.க.,வும் முரண்டு பிடிப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து உள்ளது.
                                                                                                  மேலும், . . .

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க.தான் என்பது ஏமாற்று வேலை கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு

கன்னியாகுமரி, மார்ச், 10-03-2014,
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க.தான் என்பது ஏமாற்று வேலை என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடும் தாக்குதல் தொடுத்தார்.
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நாகர்கோவிலில் பிரசாரம்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜாண்தங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று மதியம் ஜெயலலிதா புறப்பட்டார். திருவனந்தபுரத்துக்கு விமானம் வந்ததும் அதில் இருந்து இறங்கி, தனி ஹெலிகாப்டரில் அவர்

                                                                                                                         மேலும், . . .

No comments:

Post a Comment