Monday 24 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

17 நாட்களாக நீடித்த மர்மம் விலகியது 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது உறுதியானது மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச், 25-03-2014,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8–ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.
17 நாட்களுக்குப் பிறகு
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர். தெற்கு சீனா கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது, அந்த விமானத்துடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்பட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது.
                                                                                                                          மேலும், . . . 

ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தும் உத்தரவை திரும்ப பெறவேண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி, மார்ச், 25-03-2014,
‘அரசு சலுகைகளைப் பெறுவதற்காக ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் வகையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்து இருந்தால் அதனை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
கற்பழிப்பு வழக்குக்கு ஆதாரங்கள்
கோவாவின் வாஸ்கோ பகுதியில் மைனர் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா பிரிவு, அந்த வழக்கு விசாரணை தொடர்பாக குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் தனித்த சில அடையாளங்களை சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுடன் இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
                                                                                     மேலும், . . . 

நாளை முதல் மோடி தீவிர பிரச்சாரம் 185 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
புதுடெல்லி, மார்ச், 25-03-2014,
பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, முதன் முதலாக ஜம்மு நகரில் தொடங்கி, தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் நெருங்கி விட்டதால், ‘பாரத் விஜய்’ என்ற பெயரில் பா.ஜனதா தீவிர தேர்தல் பிரசார திட்டத்தை தொடங்கி உள்ளது.
அதன்படி நரேந்திரமோடி நாளை (புதன்கிழமை) தொடர் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் 295 வேட்பாளர்களை ஆதரித்து மொத்தம் 185 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதேபோல கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் 160 பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநில முதல்-மந்திரிகளும் தீவிர பிரசார களத்தில் குதிக்கின்றனர்.
                                                                                                 மேலும், . . . . 

No comments:

Post a Comment