Saturday 22 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அனைத்து தொகுதிகளிலும் முழு அளவில் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடு விசேஷ அதிகாரிகள் டெல்லியில் இருந்து வருகை

சென்னை, மார்ச், 23-03-2014,
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி, மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
முழுஅளவு ஓட்டுப்பதிவு
பாராளுமன்ற தேர்தலில் வழக்கமாக மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களைவிட குறைவாகவே ஓட்டுகள் பதிவாகி வருவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் முழு அளவு ஓட்டுப்பதிவு நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முழு அளவில் ஓட்டுப்பதிவு நடந்தால் தான் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் கொடுப்பது போன்ற தவறான நடவடிக்கைகளையும் தடுக்க முடியும் என்பதாலேயே தேர்தல் கமிஷன் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியும் என்று

                                                                                                                     மேலும், . . . 

ராணுவத்துக்கு தேர்வான பெண்களை சித்ரவதை செய்தது உண்மைதான் இலங்கை ராணுவம் முதல் முறையாக ஒப்புதல்
கொழும்பு, மார்ச், 23-03-2014,
ராணுவத்துக்கு தேர்வான பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் சித்ரவதை செய்தது உண்மைதான். இதுகுறித்த வீடியோ காட்சி உண்மையானதுதான் என்று முதல் முறையாக இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
வீடியோ காட்சி
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்காகார்டியன்.ஆர்க்’ என்ற இணையதளத்தில் கடந்த வாரம் 4.41 நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அதில், ராணுவத்துக்கு தேர்வான பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் தகாதமுறையில் திட்டுவதும், அடிப்பதும் இடம்பெற்று இருந்தது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில் வெளியான இந்த வீடியோ படக்காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                                                                                    மேலும், ., . 

ஊழல் ஒழிப்பு மசோதாக்களை தடுத்து நிறுத்தினர் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை ராகுல் காந்தி பேச்சு
பிரதாப்கர், மார்ச், 23-03-2014,
மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை, ஊழல் ஒழிப்பு மசோதாக்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர் என்று ராகுல் காந்தி பேசினார்.
தனிநபர் அதிகாரம்
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
                                                                                             மேலும், . . . 

No comments:

Post a Comment