Friday 29 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, 7-வது முறையாக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக, 7-வது முறையாக ஒருமனதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக் கான தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவு
தேர்தல் ஆணையாளராக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தல் முடிவு நேற்று, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டது.
விழாக்கோலம்
இந்த நிகழ்ச்சிக்காக தலைமைக் கழக அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
                                                                                                      மேலும், . . .

கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் காலியாக உள்ளன.
இதேபோல் 8 நகர மன்ற தலைவர் பதவிகளுக்கும், 12 மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், 53 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும், 101 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 82 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
                                                                                           மேலும், . . . . 

பிராட்வே பஸ் நிலையத்தில் பரபரப்பு நரிக்குறவர் குழந்தை கடத்தல் திருநங்கைகள் 3 பேர் கைது


சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசித்த நரிக்குறவரின் குழந்தையை கடத்தியதாக திருநங்கைகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு மாத ஆண் குழந்தை
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசிப்பவர் விஜய் (வயது 32). நரிக்குறவரான இவர் பாசி போன்ற பொருட்களை பாரிமுனை பகுதியில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் வஜா (30). இவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை.
சென்னை மண்ணடி ரேவு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் முத்தழகு (24), சக்திநாயகி (32), பிரியா (19) ஆகியோர் தினமும் பிராட்வே பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளுக்கு ஆசி வழங்கி பணம் வசூலிப்பார்கள். அப்போது நரிக்குறவ தம்பதிகளான விஜய், வஜாவிடம் பழக்கம் ஏற்பட்டது.
                                                                                                        மேலும், . . . .

அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை: “நாட்டு மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
“நாட்டு மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்“ என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வான பிறகு ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.
நம்பிக்கை
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அந்த கட்சி நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அலுவலக முதல் தளத்தில் இருந்து, கட்சித் தொண்டர்களுக்காக அவர் ஆற்றிய உரை வருமாறு:-
எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இன்று மீண்டும் என்னை நீங்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என் மீது எல்லையில்லா நம்பிக்கை வைத்து, என் மீது அளவு கடந்த அன்பு கொண்டு நீங்கள் அனைவரும் ஒருமனதாக என்னை கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
26 ஆண்டு பதவி
இந்த கழகப் பொதுச் செயலாளர் என்னும் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
                                                                                                   மேலும், . . . 

Thursday 28 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

ரூ.1 லட்சம் காப்பீடு வசதி கிடைக்கும் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு திட்டம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் ஒரே நாளில் 1½ கோடி பேர் பயன் பெற்றனர்

ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வசதியுடன் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 1½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 29-08-2014,
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
வங்கி கணக்கு திட்டம்
நாட்டில், வங்கி கணக்கு இல்லாத 7½ கோடி பேருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்குவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் அரசு நலத்திட்டங்கள் மூலம் நேரடியாக பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம்.கார்டு போன்ற ‘ரூபே கார்டு’ வழங்கப்படும்.
                                                                                                     மேலும், . . . 

சென்னை மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை ரூ.1,081 கோடியில் 27 கி.மீ. நீள வெளிவட்ட சாலை திறப்பு 2-ம் கட்ட பணிகளுக்கும் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஆகஸ்ட், 29-08-2014,
மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை ரூ.1,081 கோடியே 40 லட்சம் மதிப்பில் 27 கிலோ மீட்டர் நீள வெளிவட்ட சாலையை திறந்து வைத்ததுடன், ரூ.1,075 கோடி மதிப்பிலான 2-ம் கட்ட பணிகளுக்கும் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சாலைகள் கட்டமைப்பு
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய சாலைகளை அமைத்தல், புதிய பாலங் களைக் கட்டுதல், ஏற்கனவே உள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
                                                                                                  மேலும், . . . 

தலைமை செயலகத்தில் 45 நிமிடம் பேச்சு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் ஜெயலலிதாவுடன் சந்திப்பு ‘பேச்சு பயன் உள்ளதாக இருந்ததாக’ பேட்டி

சென்னை, ஆகஸ்ட், 29-08-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது என்று மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேட்டி அளித்தார்.
மத்திய மந்திரி சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்துக்கு மத்திய சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று பிற்பகல் 12.27 மணிக்கு வந்தார். அங்கு அவரை தமிழக அரசு அதிகாரி அனு ஜார்ஜ் வரவேற்றார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 12.30 மணிக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் பேசினர். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
மதிப்பும் மரியாதையும்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக இங்கு வந்தேன்.
                                                                                                                    மேலும், . . . 

சதானந்த கவுடா மகனுடன் திருமணம் ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார் பரபரப்பு தகவல்

பெங்களூர், ஆகஸ்ட், 29-08-2014,
சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார்.
நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காதல்
“எனக்கும், கார்த்திக் கவுடாவுக்கும் முதலில் அவரது நண்பர் குஷால் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு, பெங்களூர் சஞ்சய்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இருவரும் சந்தித்து பேசினோம். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினோம். கார்த்திக்கும், நானும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம். என்னை காதலிப்பதாக கார்த்திக் கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை கார்த்திக் உயிருக்கு உயிராக காதலித்தார்.
இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்வதில் எந்த பிரச்சினையும் வராது என்று எண்ணினேன்
                                                                                                                மேலும், . .. . . 

Wednesday 27 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் குற்றப்பின்னணி உள்ளவர்களை மந்திரிகளாக நியமிக்க வேண்டாம் பிரதமர், முதல்-மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை
“நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருப்பதால், குற்றப்பின்னணி உள்ளவர்களை மந்திரிகளாக நியமிக்க வேண்டாம்” என்று பிரதமர் மற்றும் மாநில முதல்-மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 28-08-2014,
குற்றப்பின்னணி உள்ளவர்களை அரசியலில் இருந்து அறவே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வருகிறது.
பொது நல வழக்கு
இந்த நிலையில், 2004-ம் ஆண்டு மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் குற்றப்பின்னணி கொண்ட லாலு பிரசாத் யாதவ், எம்.ஏ.ஏ.பாத்மி, முகமது தஸ்லிமுதீன், கே.வேங்கடபதி ஆகியோர் மந்திரிகள் ஆக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றப்பின்னணி கொண்டவர்களை மத்திய, மாநில அரசில் மந்திரிகளாக சேர்ப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனோஜ் நருலா என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த பொது நல வழக்கை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மதன் பி.லோக்குர், குரியன் ஜோசப், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 5 பேரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.
தீர்ப்பு
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
                                                                                                                                       மேலும், . . . 
சேலம் மாவட்டம் கொளத்தூர் வனப்பகுதியில் தோண்ட, தோண்ட வெடிகுண்டுகள் விடுதலைப்புலிகள் பதுக்கியதா?

கொளத்தூர், ஆகஸ்ட், 28-08-2014,
கொளத்தூர் அருகே வனப்பகுதியில் கையெறி குண்டுகள் உள்பட ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தோண்ட, தோண்ட மண்ணில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இவை விடுதலைப்புலிகள் பதுக்கியதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுத குவியல்கள்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகளை தோண்டினர். அப்போது ஒரு இடத்தில் குழி தோண்டியபோது பழைய இரும்பு பேரல் ஒன்று தென்பட்டது.
வனத்துறையினர், பேரலை உடைத்து பார்த்தபோது, ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் பிளாஸ்டிக் கவரால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து கொளத்தூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
                                                                                            மேலும், . . . .

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார் சென்னையில் நடைபெறும் விழாவில் மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார்


புதுடெல்லி, ஆகஸ்ட், 28-08-2014,
அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. டெல்லியில் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார்.
அனைவருக்கும் வங்கி கணக்கு
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.
இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது.
                                                                                                              மேலும், . . . 

சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை இன்றோடு முடிக்க வேண்டும் தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு

பெங்களூர், ஆகஸ்ட், 28-08-2014,
சொத்து குவிப்பு வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் இன்றோடு (வியாழக்கிழமை) இறுதி வாதத்தை முடிக்க வேண்டும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட சில மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் கோரிக்கை விடுத்தார்.
                                                                                            மேலும், . . . 

Tuesday 26 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை இந்தியா-இலங்கை பேசி தீர்க்க வேண்டும் அ.தி.மு.க., தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேசி தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 27-08-2014,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் வருகிறார்கள்.
சில நேரம் தமிழக மீனவர்கள் படுகொலையும் செய்யப்படுகின்றனர். அவர்களது மீன்பிடி வலைகளையும், படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதலும் செய்கிறது.
இப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
அ.தி.மு.க., தி.மு.க. வழக்கு
இது குறித்த கவலைகளை தெரிவித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கோரியும் அ.தி.மு.க. எம்.பி.யும், பாராளு மன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, தி.மு.க. முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-
                                                                                                                                       மேலும், . . . 

பா.ஜனதாவின் ஆட்சிமன்ற குழுவில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி திடீர் நீக்கம்

புதுடெல்லி, ஆகஸ்ட், 27-08-2014,
பா.ஜனதாவின் ஆட்சிமன்றக் குழுவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரும் திடீரென நீக்கம் செய்யப்பட்டனர்.
அமித்ஷா நடவடிக்கை
பா.ஜனதாவின் தேசிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்ட பின்பு, அவர் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் பா.ஜனதாவுக்கு துணைத் தலைவர்கள், இணை பொதுச் செயலாளர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு அணித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமித்ஷா கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பான ஆட்சிமன்ற குழுவை புதிதாக நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் கட்சியின் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
மூத்த தலைவர்கள் நீக்கம்
இதையடுத்து நேற்று பா.ஜனதாவின் ஆட்சிமன்ற குழுவிற்கு புதிய உறுப்பினர்களையும் அவர் நியமனம் செய்தார்.
                                                                                                       மேலும், . . . . 

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளர் கைது சென்னையில் சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

சென்னை, ஆகஸ்ட், 27-08-2014,
சென்னையில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளரை சி.பி.ஐ. கைது செய்தது.
அதிரடி கைது
மத்திய அரசு நிறுவனமான கம்பெனிகளின் பதிவாளர் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் 2-வது மாடியில் செயல்படுகிறது. பதிவாளராக டாக்டர் மனுநீதி சோழன் (வயது 50) பணியாற்றுகிறார்.
தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள் இந்த அலுவலகத்தில்தான் பதிவு செய்யப்படுகின்றன. டாக்டர் மனுநீதி சோழன் மீது ஏற்கனவே நிறைய லஞ்சப்புகார்கள், சி.பி.ஐ. போலீசாருக்கு வந்தன.
இதனால் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
                                                                                                                       மேலும், .. . . .

திருத்தணியில் பணத்துக்காக சிறுமியை கடத்திய 5 பேர் கைது 24 மணி நேரத்தில் சிறுமி மீட்பு

திருத்தணி, ஆகஸ்ட், 27-08-2014,
திருத்தணியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்திய 5 பேர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, சிறுமியும் மீட்கப்பட்டாள்.
சிறுமி கடத்தல்
திருத்தணியில் உள்ள கலைஞர் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 45). சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பபிதா (35), ஆந்திராவில் மத்திய அரசில் உயர்ந்த பதவியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ஹன்சிகா (4) திருத்தணி அருகில் உள்ள முரக்கம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.
ஹன்சிகா திங்கட்கிழமை மாலை வழக்கம்போல பள்ளி முடிந்தவுடன் பள்ளி பேருந்தில் ஏறி தனது வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அங்கிருந்து தனது தாத்தா சீனிவாசனுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் திடீரென அங்கு வந்து சிறுமியின் முகத்தில் கைக்குட்டை வைத்து வாயை பொத்தி கடத்திச் சென்றுவிட்டது.
சிறுமி மீட்பு
இதனால் பதற்றம் அடைந்த சீனிவாசன் உடனே ஹன்சிகாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
                                                                                               மேலும், . . . .  

Monday 25 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள் மீது குற்றச்சாட்டு 1993 முதல் 2010-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
1993 முதல் 2010-ம் ஆண்டு வரை முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 26-08-2014,
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்தது. தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது.
                                                                                                    மேலும், . . . 

61 தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்து பலியான மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் ஜெயலலிதாவிடம் நீதிபதி ஆர்.ரெகுபதி வழங்கினார்

சென்னை, ஆகஸ்ட், 26-08-2014,
மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த 523 பக்க விசாரணை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒரு நபர் கமிஷன் தலைவர் நீதிபதி ஆர்.ரெகுபதி நேற்று வழங்கினார்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து
சென்னை போரூர் அருகில் உள்ள மவுலிவாக்கத்தில் பிரைம் ஸ்ரீஸ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் “டிரஸ்ட் கெயிட்ஸ்” என்ற பெயரில் 11 மாடியில் இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி வந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில்,
                                                                                                     மேலும், . . . . 

ஆமதாபாத்தில் இருந்து, ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்த ரூ.5¾ கோடி தங்க நகைகள் பறிமுதல் உரிய ஆவணங்கள் இல்லாததால் விற்பனை வரி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னை, ஆகஸ்ட், 26-08-2014,
ஆமதாபாத்தில் இருந்து, ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5¾ கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடிக்கடி சோதனை
ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை, ஹவாலா பணம் பறிமாறல் உள்பட சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் போலீசாரால் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுவது உண்டு.
அந்த வகையில் நேற்று மாலை சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.புருஷோத்தமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியாயிணி, உமா உள்பட போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6-வது நடைமேடைக்கு ஆமதாபாத்தில் இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
                                                                                                              மேலும், . . . . 

63-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்துக்கு பிரதமர் மோடி டெலிபோனில் வாழ்த்து



சென்னை, ஆகஸ்ட், 26-08-2014,
63-வது பிறந்தநாளை கொண்டாடிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பிரதமர் நரேந்திரமோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.
63-வது பிறந்த நாள்
பிரபல நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், தனது 63-வது பிறந்தநாளை நேற்று (திங்கட்கிழமை) கொண்டாடினார். புதிய பட்டு வேட்டி-சட்டையை அணிந்த அவர், முதலில் வீட்டில் இருந்த பெற்றோர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வெளியே கூடிநின்ற தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.
                                                                                                        மேலும், . . . .

Sunday 24 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காஷ்மீரில் 25 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்
இந்திய ராணுவம் பதிலடி
எல்லையோர கிராமவாசிகள் வெளியேறுகிறார்கள்

காஷ்மீரில் 25 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு, ஆகஸ்ட், 25-08-2014,
அண்டை நாடான பாகிஸ்தானுடன் எப்போதும் நல்லுறவு வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன.
இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டு தீவிரவாதிகள் ஒருபுறம் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லையில் தொடர்ந்து வாலாட்டி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
                                                                                                                     மேலும், . . . 

மடாதிபதியை கொல்ல முயற்சியா? திருப்பனந்தாள் மடத்திற்குள் நுழைந்த வாலிபரால் பரபரப்பு ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்



தஞ்சாவூர், ஆகஸ்ட், 25-08-2014,
திருப்பனந்தாள் மடத்திற்குள் நுழைந்த வாலிபரை பிடித்து ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மடாதிபதியை கொல்ல முயற்சியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள் மடம்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள காசிமடத்தை எஜமான் சுவாமிகள் என்று அழைக்கப்படும் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள்(வயது74) நிர்வகித்து வருகிறார். அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வருகிறார். மடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் நேற்று காலை மடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் மடத்தின் சுவற்றில் ஏணியை வைத்து ஏறி, மடத்திற்குள் குதித்தார். பின்பு அந்த வாலிபர் தான் கொண்டு வந்த செல்போன் மூலம் மடத்தை படம் எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த முத்துகுமார தம்பிரான் சுவாமிகள் யார் நீ? எதற்காக செல்போனில் படம் எடுக்கிறாய்? என்று கேட்டார்.
உடனே அந்த வாலிபர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து தப்பி ஓடினார்.
                                                                                                  மேலும், . . . 

கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

திருச்சி, ஆகஸ்ட், 25-08-2014,
கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உண்ணாவிரத போராட்டம்
தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 25-ந் தேதி(இன்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றன. இதற்காக இரு கம்யூனிஸ்டு கட்சிகளையும் சேர்ந்த 10 ஆயிரம் குழுவினர் வீடு, வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்க இருக்கிறோம்.
வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
                                                                                                                      மேலும், . . .  

சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் டெல்லி போலீசார் தகவல்

புதுடெல்லி, ஆகஸ்ட், 25-08-2014,
சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் கைது
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், டெல்லி நங்லோய் அருகே மீர் விகார் பகுதியில் சட்டவிரோதமாக நடத்தி வந்த ஆயுத தொழிற்சாலை கடந்த 2011-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய டெல்லி சிறப்பு போலீசார், இது தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சில தீவிரவாதிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தீவிரவாதியான தேசின் அக்தர் கடந்த மார்ச் 25-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
                                                                                                                       மேலும், . . . 

இன்றைய முக்கிய செய்திகள் (24-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-08-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

மதுரையில் பயங்கரம்: தலையில் அம்மிக்கல்லை போட்டு வக்கீலை கொலை செய்த கள்ளக்காதலி போலீஸ் நிலையத்தில் சரண்

மதுரை, ஆகஸ்ட், 24-08-2014,
தூங்கிக்கொண்டு இருந்த போது, தலையில் அம்மிக்கல்லை போட்டு வக்கீல் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கள்ளக்காதலி போலீசில் சரணடைந்தார்.
மதுரையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வக்கீலுடன் தொடர்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கொல்லப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 36). வக்கீலான இவர் மதுரை கோர்ட்டுகளில் பணியாற்றி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.
அவரது சொந்த ஊரின் அருகே உள்ள கே.கே.பட்டியை சேர்ந்தவர் கருணாகரன்.
                                                                                                  மேலும், . . . . 

மும்பையில் பட்டப்பகலில் பயங்கரம் தமிழ் வாலிபரை கடத்தி குத்திக்கொலை காரில் வந்து உடலை வீசிச்சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

மும்பை, ஆகஸ்ட், 24-08-2014,
மும்பையில் பட்டப்பகலில் தமிழ் வாலிபர் ஒருவர் கடத்தி குத்திக்கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடலை காரில் வந்து வீசி சென்ற கும்பலை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ் வாலிபர்
மும்பை வில்லேபார்லேயில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் குடிசைப்பகுதியான நேருநகரில் சராசராம் தெருவில் வசித்து வரும் ராமனின் மகன் மாரியப்பன் என்ற மாரி (வயது38). இவர் மனைவி உமாமகேஷ்வரி மற்றும் 2 குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகும்.
இந்நிலையில் மாரியப்பன் நேற்று தனது மனைவி, குழந்தையுடன் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தார்.
                                                                                                        மேலும், . . . . 
உலகின் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 14வது இடம் ரேங்கர் இணையதளம் கருத்துக்கணிப்பு

புதுடெல்லி, ஆகஸ்ட், 24-08-2014,
வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் யார் மிகவும் மோசமான மனிதர்கள் என்று வலைதளம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் மோசமான முதல் நபராக சோவியத் யூனியனை சேர்ந்த ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது.
                                                                                                     மேலும், . . .  

சென்னையில் நாளை விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சென்னை, ஆகஸ்ட், 24-08-2014,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 63–வது பிறந்தநாள் விழா நாளை (25–ந்தேதி) தே.மு.தி.க. சார்பில் கொண்டாடப்படுகிறது. மத்திய சென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தாமரை கண்ணன் தலைமையில் நாளை மதியம் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேட்டி–சேலைகள் வழங்கப்படுகின்றன.
மாணவ–மாணவிகளுக்கு நோட்டு–புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நாளை மதியம் வடபழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் விசாகன்ராஜா, கூடல் ரமேஷ், டி.செல்வம், பூங்கா ரமேஷ், ஆயிரம் விளக்கு கோவிந்தன், திருவல்லிக்கேணி செந்தில் மற்றும் மாவட்ட பகுதி
                                                                                         மேலும், . . . 

Saturday 23 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை நன்றி தெரிவிக்கும் விழாவில் ஜெயலலிதா உறுதி

மதுரையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மதுரை, ஆகஸ்ட், 23-08-2014,
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
நன்றி தெரிவிக்கும் விழா
இந்த அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பை பெற்று அதை நடைமுறைப்படுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இதற்காக, மதுரை உள்வட்ட சாலை (ரிங்ரோடு) பாண்டிகோவில் அருகில் 7 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு, பெரியாறு அணை போன்று மாதிரி வடிவமும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, லட்சக்கணக் கில் பொதுமக்களும், விவசாயிகளும் நேற்று காலையில் இருந்தே வந்து குவிந்தனர்.
                                                                                                                                    மேலும், . . .

நன்றி தெரிவிக்கும் விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்

மதுரை, ஆகஸ்ட், 23-08-2014,
மதுரையில் நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் கூறி விளக்கினார்.
அவர் கூறிய கதைகள் வருமாறு:-
குருவும் சிஷ்யர்களும்
நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென்றால், அதற்குரிய உறுதியும், விடாமுயற்சியும் தேவை.
ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியினை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
                                                                                                                            மேலும், . . .

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 9-ந் தேதி வரை ‘கெடு’
புதுடெல்லி, ஆகஸ்ட், 23-08-2014,
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து செப்டம்பர் 9-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்து உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி
கடந்த மே மாதம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 182 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ், 2-வது பெரிய கட்சியாக விளங்கிய போதிலும், அந்த கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க கோரி காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களில் (543) குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை (55) கொண்ட கட்சிதான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்றும், ஆனால் காங்கிரசுக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இல்லாததால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என்றும் ஆளும் பாரதீய ஜனதா கூறி விட்டது.
                                                                                                             மேலும், . . .

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி சுப்ரீம் கோர்ட்டு கருத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு
எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் குறித்த எங்கள் கருத்தை சுப்ரீம் கோர்ட்டு பிரதிபலித்து இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கருத்து
பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்ட நிலையில், அந்தப் பதவியின் முக்கியத்துவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் கூறி வந்த கருத்துக்கள் சரியென்று சுப்ரீம் கோர்ட்டின் கருத்து பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தர முடியாது என சபாநாயகர் மறுத்து இருப்பது, சட்டத்தின்படி முழுக்க முழுக்க தவறானது.
                                                                                                      மேலும், . . . .

Thursday 21 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-08-2014) காலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மதுரையில் இன்று நடக்கிறது

மதுரை, ஆகஸ்ட், 22-08-2014,
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக தனிவிமானம் மூலம் ஜெயலலிதா இன்று மதுரை வருகிறார்.
நன்றி தெரிவிக்கும் விழா
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விழா மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்காக மதுரை உள்வட்டச்சாலை பாண்டி கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கோட்டை வடிவ முகப்பும், அருகில் பெரியாறு அணையின் மாதிரி வடிவம் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா வருகை
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வருகிறார்.
                                                                                                                        மேலும், . . . 

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுக்கும் முதல்-மந்திரிகள் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே மோதல்

நாக்பூர், ஆகஸ்ட், 22-08-2014,
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சில மாநில முதல்-மந்திரிகள் புறக்கணித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் - பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
முதல்-மந்திரிகள் அறிவிப்பு
எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டால், அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்வது மரபு. மேலும் தங்கள் மாநிலத்துக்கு வரும் பிரதமரை வரவேற்க வேண்டியதும் அவர்களது கடமையாகும்.
ஆனால் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மேடைகளில் இனிமேல் பங்கேற்கப்போவதில்லை என அரியானா, மராட்டியம் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர்.
                                                                                                  மேலும், . . .

நெல்லையில் சினிமா படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சரண் ‘திடீர்’ கைது சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்


நெல்லை, ஆகஸ்ட், 22-08-2014,
நெல்லையில் சினிமா படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சரண் திடீர் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
டைரக்டர் சரண்
டைரக்டர் சரண் பல வெற்றிப்படங்களை இயக்கிவர். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் நடிகர் வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘ஆயிரத்தில் இருவர்’ சினிமா படப்பிடிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலையில் நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பகுதி நாற்கர சாலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
                                                                                                                                 மேலும், . . . 

65 வருடங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் பூமிக்குள் புதையுண்ட தீர்த்தம் கண்டுபிடிப்பு

ராமேசுவரம், ஆகஸ்ட், 22-08-2014,
ராமேசுவரத்தில் 65 வருடங்களுக்கு முன்பு பூமியில் புதையுண்ட தீர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
தீர்த்தக் கிணறுகள்
ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. பக்தர்கள் அவற்றில் நீராடி விட்டுத்தான் சாமியை தரிசனம் செய்கின்றனர். அத்துடன் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்பட பல்வேறு இடங்களில் கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. அவற்றில் பல பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில கிணறுகள் இயற்கையின் சீற்றத்தினால் மூடப்பட்டுவிட்டன.
இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவின்படி விவேகானந்தா கேந்திரம் என்ற என்ற அமைப்பின் மூலம் பசுமை ராமேசுவரம் என்ற பெயருடன் ராமேசுவரம் பகுதியை சுற்றியுள்ள தீர்த்தக்கிணறுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
                                                                                                       மேலும், . . . .

Tuesday 19 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

பல்லாவரம் தனியார் பள்ளியில் மாணவி கற்பழித்து கொலை? நூற்றுக்கணக்கில் பெற்றோர் திரண்டு ஆர்ப்பாட்டம் - சாலை மறியல்

சென்னை, ஆகஸ்ட், 19-08-2014,
சென்னை, பல்லாவரம் தனியார் பள்ளியில், மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக, வெளியான தகவலையடுத்து, நேற்று காலை முதல், பெற்றோர் அந்த பள்ளியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலையில், செயின்ட் தெரேசா மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள இப்பள்ளியில், 4,800 மாணவியர் படிக்கின்றனர்; 120 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.ஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த பள்ளியில், சில தினங்களுக்கு முன், மாணவி ஒருவர், கட்டட வேலை செய்யும் வட மாநில கட்டுமான தொழிலாளிகளால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார் என்று, பல்லாவரம் பகுதியில் தகவல் பரவியது. இதனால், பள்ளி மாணவியர், பெற்றோர், பகுதிவாசிகள் மத்தியில் பெரும் பீதி பரவியது. ஆனால், அது வெறும் வதந்தி என்றும், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க, மர்ம நபர்கள் சிலர் வதந்தி பரப்புவதாகவும், நேற்று முன்தினம், பல்லாவரம் காவல் நிலையத்தில், பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.நேற்று காலை, 8:00 மணிக்கு, பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில், பள்ளியின் முன், பெற்றோர் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பள்ளியின் வாசல் கதவை திறந்து, வளாகத்திற்குள் சென்றனர்.
'கொல்லப்பட்ட பள்ளி மாணவி யார்? எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? கொலை தொடர்பாக ஏன் தகவல் மறைக்கப்பட்டது?' என, சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
                                                                                                          மேலும், . . . . 

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு குட்பை மாற்று திட்டத்திற்கு தயாராகும் மத்திய அரசு
புதுடில்லி, ஆகஸ்ட், 19-08-2014,
வட்டார போக்குவரத்து அலுவலகங்களை (ஆர்.டி.ஓ., ஆபீஸ்) மூட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்கு பதிலாக மாற்று அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது, அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். இந்த அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரதப் பழசாகிப் போன சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மாற்றுவதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு ஈடுபாடு காட்டி வருகிறது.
                                                                                                      மேலும், . . . .

சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? ராமதாஸ் பேட்டி

சென்னை, ஆகஸ்ட், 19-08-2014,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நடந்த தென் சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:–
கே:– பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறதா?
ப:– இது பற்றி அவர்களிடமே கேளுங்கள்.
கே:– சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதா பா.ம.க. கூட்டணி நீடிக்குமா?
ப:– இதுபற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்வோம்.
கே:– மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா அரசும் இலங்கை தமிழர் விவகாரத்திலும், மீனவர் விவகாரத்திலும் சரியான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லையே?
                                                                                     மேலும், . . . .

விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க இடைக்கால தடை நீட்டிப்பு
சென்னை, ஆகஸ்ட், 19-08-2014,
மத்திய அரசின் கெயல் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்துக்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன.
இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் தொழிற்துறை முதன்மை செயலாளர் கெயில் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை அனுப்பினார்.
அதில் ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்,
                                                                                                             மேலும், . . . 

Sunday 17 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-08-2014) காலை, IST- 10.00 மணி, நிலவரப்படி,

பதவி தப்புமா? என்ற அச்சத்தில், அமைச்சர்கள்

சென்னை, ஆகஸ்ட், 18–08-2014
வரும், 23ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு புறப்பட்டு செல்கிறார். அங்கு சென்ற பின், கட்சியின் கொள்கை பரப்பு செயலர் பதவியில் யாரை நியமிப்பது, மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் சிலருக்கு, 'கல்தா' கொடுப்பது உட்பட, சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக, ஆளும் கட்சி வட்டாரத்தில், தகவல் பரவி உள்ளது.
சுணக்கம் காட்டிய...
இதனால், தங்கள் பதவிகள் தப்புமா? என்ற அச்சத்தில், சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
                                                                                                                   மேலும், . . . 

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை, ஆகஸ்ட், 18–08-2014
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள அன்னாவரம் என்ற இடத்திலிருந்து, சென்னைக்கு ஒரு கும்பல், காரில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. போதைப்பொருள் கடத்தில் தடுப்பு போலீஸ் தென்மண்டல இயக்குனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். டாடா இன்டிகா காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வந்தது. ஆந்திராவில் இருந்து சென்னைக்குள் நுழையும் இன்டிகா கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை போட்டபடி இருந்தனர்.
குறிப்பிட்ட கார் ஒன்று, போலீஸ் சோதனையில் நிற்காமல் வேகமாக வந்து விட்டது. அந்த காரை போலீசார் விரட்டி வந்தனர்
                                                                                                          மேலும், . . . . 

சென்னை சாலிகிராமத்தில் அதிகாலையில் விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை, ஆகஸ்ட், 18–08-2014
சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலையில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் கருகினர். படுகாயம் அடைந்த 3 பேரும் ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 3-வது தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை பாண்டியன்(வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(52). இவர்களுடைய மகன் அய்யப்பன்(34). இவர் அதே பகுதியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
அய்யப்பனின் மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
                                                                                                                  மேலும், . . . . 

நெல்லை அருகே செங்கல் சூளையில் சாம்பலாகி கிடந்த உடல்: போலீஸ் விசாரணை

கடையம், ஆகஸ்ட், 18–08-2014
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சொந்தமான தோட்டம் கடையம் புலவனூரில் உள்ளது. அவரது தோட்டம் அருகே ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த கோவில்மணி என்பவர் செங்கல்சூளை நடத்தி வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் சென்றுவிட்டனர்.
இன்று காலை வேலைக்காக தொழிலாளர்கள் வந்தனர். அப்போது செங்கல்சூளையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுகள் எரிந்து கிடந்தது.
                                                                                                       மேலும், . . . . 

இன்றைய முக்கிய செய்திகள் (17-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் முன்பு சீமான் முற்றுகை போராட்டம்

சென்னை, ஆகஸ்ட், 17-08-2014,
இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், இன்று தொடங்கி வருகிற 19–ந்தேதி வரை நடைபெறும் இலங்கை ராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலைக்கோட்டு தயம், அய்யநாதன், அன்பு தென்னர சன், தங்கராசு அமுதா நம்பி, அறிவுச் செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் சீமான் பேசியதாவது:–
ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் தனது ராணுவ இணைய
                                                                                 மேலும், . . . . 

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜெயலலிதா ராமதாஸ்–விஜயகாந்த் வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட், 17-08-2014,
தமிழக பா.ஜனதா தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பா.ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
அவருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
தாங்கள் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                      மேலும், . . . .

தடை நீக்கம்: மாநாடு வெற்றி பெற தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் - திருமாவளவன்

சென்னை, ஆகஸ்ட், 17-08-2014,
சேலத்தில் இன்று மாலை நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கல்வி உரிமை மாநாட்டிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் 144 (ஏ) தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். சேலம் மாவட்ட எல்லைக்குள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
சேலம் மாவட்ட கலெக்டரின் தடை குறித்து சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் அந்த மாநாட்டிற்கு கலெக்டர் விதித்த தடையை விலக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாடகை வானங்களில் கட்சி கொடியுடன் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:–
                                                                                               மேலும், . . . . .

கன்டெய்னரில் கடத்தப்பட்ட இந்தியர்கள் லண்டனில் வெளியேற்றி விசாரணை

லண்டன், ஆகஸ்ட், 17-08-2014,
சரக்கு கப்பல் மூலம் கன்டெய்னரில் அடைக்கப்பட்டு சிலர் லண்டனுக்கு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வந்த 35 பேரும் இந்திய தீபகற்ப பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வந்த நபர்களில் ஒருவர் மூச்சு திணறி இறந்த நிலையில் கிடந்தார்.
பெல்ஜியம் பகுதியில் இருந்து இந்த கப்பல் லண்டன் நோக்கி வந்துள்ளது. இசக்ஸ் தில்புரி துறைமுகத்தில் 35 பேரையும் இறக்கி விசாரித்து வருகின்றனர். இது போன்று வேறு கன்டெய்னரில் யாரும் அடைக்கப்பட்டுள்ளார்களா என அனைத்து கன்டெய்னர்களும் பரிசோதிக்க இமிகிரேஷன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மயக்கமுற்ற நிலையில்
இந்த கப்பலில் வந்தவர்கள் இந்திய துணை தீப கற்பபகுதிளை சேர்ந்தவர்கள் விசாரித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                    மேலும், . . . .. 

Saturday 16 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

யாரும் நமக்கு இனி சவால் விட முடியாது போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மும்பை, ஆகஸ்ட், 16–08-2014,
ஐ.என்.எஸ்., கொல்கத்தா என பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
மும்பை துறைமுகத்தில் இன்று நடந்த விழாவில், போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து பாதுகாப்பு படைகள் நவீனமயாமாக்கப்படுவது உறுதி செய்யபட்டு உள்ளது. யாரும் நமக்கு சவால் விட முடியாது. என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
                                                                                                          மேலும், . . .

பா.ஜ., தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு தமிழகத்திற்கு முதல் பெண் தலைவர் தமிழக பா.ஜனதா தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் நியமனம்

புதுடில்லி, ஆகஸ்ட், 16–08-2014,
பா.ஜ., தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா தனது படை தளபதிகளை அறிவித்தார். இதில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் மத்திய அமைச்சர் மகன் வருண்காந்தி பொதுசெயலர் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியில் வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த எச். ராஜா தேசிய செயலராகவும், லலிதாகுமாரமங்கலம் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும், அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு மாநில தலைவர் பொறுப்பு முதன்முறையாக பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவரும் சிறந்த பேச்சாளருமான தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்லி., தேர்தலில் பா.ஜ., வெற்றிக்கு முழுக்காரணமாக இருந்தவர் அமித்ஷா என்றும் இவரே மேன் ஆப் தி மேட்ச் என்றும் பிரதமர் மோடி இவரை வெகுவாக பாராட்டினார். இவரது கட்சி தலைமை பொறுப்பு கடந்த வாரத்தில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
                                                                                                              மேலும், . . .

வீடுகளுக்கு அருகில் மதுக்கடைகள் நீதிமன்ற அறிவுரையை அரசு மதிக்குமா? - என ராமதாஸ் கேள்வி

சென்னை, ஆகஸ்ட், 16–08-2014,
வீடுகளுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்கப்படுவது கண்ணியமாக வாழ்வதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், இத்தகைய மதுக்கடையை மூட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இதனை தமிழக அரசு மதித்து செயல்படுமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வதைவிட மது விற்பனையை பெருக்குவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வீட்டிற்கு பக்கத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை நீதியரசர் நாகமுத்து வழங்கியிருக்கிறார். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் மதுக்கடைகளை அமைக்கக்கூடாது என்று தான் விதிகள் கூறுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க எந்தவிதமான தடையும் இல்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி, ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு மக்கள் வாழ்வதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது.
                                                                                                                      மேலும், . . .

செங்குன்றத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்த 7 பேர் கைது

சென்னை, ஆகஸ்ட், 16–08-2014,
செங்குன்றத்தில் முன்விரோதம் காரணமாக சரவணன் என்ற ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14.08.2014ம் தேதி காலை 11.15 மணிக்கு செங்குன்றம் பைப்பாஸ் ரோடு அருகில் ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் கத்தியால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர், இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
                                                                                                          மேலும், . . . 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்


நடிகர் : சந்தோஷ்
நடிகை : அகிலா கிஷோர்
இயக்குனர் : பார்த்திபன்
இசை : சத்யா
ஓளிப்பதிவு : ராஜரத்தினம்
நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கதை விவாதத்திற்கு உதவியாக இவருடன் விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.
இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அவளை திருமணம் செய்துக் கொள்கிறார் சந்தோஷ்.
அகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
சந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து விடுகிறது. சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.
பிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனர் ஆனாரா? அகிலாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.



       







                                                                                                        மேலும், . . . 

சிநேகாவின் காதலர்கள் - விமர்சனம்

நடிகர் : திலக்
நடிகை : அத்வைதா
இயக்குனர் : முத்துராமலிங்கன்
இசை : பிரபாகர்
ஓளிப்பதிவு : ஆனந்த்
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பத்திரிகை தொழிலில் ரிப்போர்ட்டர் வேலை செய்து வருகிறார் சிநேகா. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அண்ணன்-அண்ணி இருவரும், மாப்பிள்ளையாக எழிலை தேர்வு செய்ததுடன், அவரை பெண் பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார்கள். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் சிநேகாவை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைக்கிறார்கள். விருப்பம் இல்லாமல் பெண் பார்க்கும் படலத்தில் கலந்துக் கொள்ளும் சிநேகா, எழிலுக்கு கொடுத்த டீ கப்பில் என்னை பிடிக்கவில்லை என்று கூறும்படி எழுதி வைக்கிறாள்.

                                                                                         மேலும், . . .  

Friday 15 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-08-2014) மாலை, IST- 02.00 மணி, நிலவரப்படி,

ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு சுதந்திர தினவிழாவில் மோடி அறிவிப்பு
புதுடெல்லி, ஆகஸ்ட், 15–08-2014,
இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் மிகவும் உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலை 7 மணிக்கு சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காலை 7.20 மணிக்கு செங்கோட்டைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். முப்படை தளபதிகள் அறிமுகத்துக்குப் பிறகு பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதுவரை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர்கள் எல்லோரும் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் நின்றே தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால் பிரதமர் மோடி இன்று அத்தகைய பாதுகாப்பு கூண்டு இல்லாமல் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
முதல் தடவையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன் முதலாக கொடி ஏற்றி வைத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பொதுவாகவே பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் என்று புகழப்படுகிறார்.
ஆனால் இன்று அதையும் கடந்து அவரது சுதந்திர தின உரை உணர்ச்சிகரமான பேச்சாக இருந்தது. நாடு முன்னேற ஒவ்வொரு குடிமகனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தன் பேச்சில் மோடி வலியுறுத்தினார்.
இது பல்வேறு புதிய திட்டங்களையும் எதிர்பார்த்தபடி பிரதமர் மோடி அறிவித்தார்.
                                                                                                          மேலும், . . . . 

சென்னை கோட்டையில் ஜெயலலிதா கொடி ஏற்றினார்





சென்னை, ஆகஸ்ட், 15–08-2014,

68–வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசு சார்பில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
8.35 மணிக்கு போர் நினைவுச் சின்னத்துக்கு வந்தார். உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கிருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை போலீசார் 15 மோட்டார் சைக்கிள் வீரர்கள் புடை சூழ கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். கோட்டை வாயில் அருகே அவரை தலைமைச் செயலாளர் மோகன்வர்கீஸ் சுங்கத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ராணுவ படைதலைவர் ஜக்பீர்சிங், தமிழ்நாடு புதுச்சேரி கடலோர காவல் படை பொறுப்பு அதிகாரி மகா தேவன், விமானப்படை அதிகாரி ரிப்பன் குப்தா, கடலோர காவல்படை கமாண்டோ சர்மா, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை முதல்– அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு நடந்தது. கோட்டை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அணி வகுப்பு மரியாதையை முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏற்றார்.
                                                                                                         மேலும், . . . .

நெல்லையில் கலெக்டர் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி









நெல்லை, ஆகஸ்ட், 15–08-2014,
பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்கு பின்பே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விழா மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழா தொடங்கியதும் கலெக்டர் கருணாகரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். கொடி ஏற்றி முடித்ததும் கலெக்டர் இருக்கையில் அமர சென்றார். அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்து பெட்ரோல் கேனுடன் ஒரு வாலிபர் ஓடி வந்தார். அவர் பெட்ரோலை உடலில் ஊற்றினார். பின்னர் தீப்பெட்டியை எடுத்து தீ பற்ற வைக்க முயன்றார்.
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட செய்தது.
                                                                                                                 மேலும், . . . .

திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்


நகரி, ஆகஸ்ட், 15–08-2014,
ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது.
அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக மக்கள் கருதுகிறார்கள்.
எனவே இன்றைய தினம் ஆந்திரா, தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடந்தது.
                                                                                           மேலும், . . . . 

அஞ்சான் - சினிமா விமர்சனம்

நடிகர் : சூர்யா
நடிகை : சமந்தா
இயக்குனர் : லிங்குசாமி
இசை : யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரி இடத்தில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.
                                                                                                         மேலும், . . . .