Thursday 21 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-08-2014) காலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மதுரையில் இன்று நடக்கிறது

மதுரை, ஆகஸ்ட், 22-08-2014,
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக தனிவிமானம் மூலம் ஜெயலலிதா இன்று மதுரை வருகிறார்.
நன்றி தெரிவிக்கும் விழா
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விழா மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்காக மதுரை உள்வட்டச்சாலை பாண்டி கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கோட்டை வடிவ முகப்பும், அருகில் பெரியாறு அணையின் மாதிரி வடிவம் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா வருகை
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வருகிறார்.
                                                                                                                        மேலும், . . . 

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுக்கும் முதல்-மந்திரிகள் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே மோதல்

நாக்பூர், ஆகஸ்ட், 22-08-2014,
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சில மாநில முதல்-மந்திரிகள் புறக்கணித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் - பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
முதல்-மந்திரிகள் அறிவிப்பு
எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டால், அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்வது மரபு. மேலும் தங்கள் மாநிலத்துக்கு வரும் பிரதமரை வரவேற்க வேண்டியதும் அவர்களது கடமையாகும்.
ஆனால் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மேடைகளில் இனிமேல் பங்கேற்கப்போவதில்லை என அரியானா, மராட்டியம் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர்.
                                                                                                  மேலும், . . .

நெல்லையில் சினிமா படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சரண் ‘திடீர்’ கைது சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்


நெல்லை, ஆகஸ்ட், 22-08-2014,
நெல்லையில் சினிமா படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சரண் திடீர் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
டைரக்டர் சரண்
டைரக்டர் சரண் பல வெற்றிப்படங்களை இயக்கிவர். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் நடிகர் வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘ஆயிரத்தில் இருவர்’ சினிமா படப்பிடிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலையில் நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பகுதி நாற்கர சாலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
                                                                                                                                 மேலும், . . . 

65 வருடங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் பூமிக்குள் புதையுண்ட தீர்த்தம் கண்டுபிடிப்பு

ராமேசுவரம், ஆகஸ்ட், 22-08-2014,
ராமேசுவரத்தில் 65 வருடங்களுக்கு முன்பு பூமியில் புதையுண்ட தீர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
தீர்த்தக் கிணறுகள்
ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. பக்தர்கள் அவற்றில் நீராடி விட்டுத்தான் சாமியை தரிசனம் செய்கின்றனர். அத்துடன் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்பட பல்வேறு இடங்களில் கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. அவற்றில் பல பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில கிணறுகள் இயற்கையின் சீற்றத்தினால் மூடப்பட்டுவிட்டன.
இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவின்படி விவேகானந்தா கேந்திரம் என்ற என்ற அமைப்பின் மூலம் பசுமை ராமேசுவரம் என்ற பெயருடன் ராமேசுவரம் பகுதியை சுற்றியுள்ள தீர்த்தக்கிணறுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
                                                                                                       மேலும், . . . .

No comments:

Post a Comment