Monday 25 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள் மீது குற்றச்சாட்டு 1993 முதல் 2010-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
1993 முதல் 2010-ம் ஆண்டு வரை முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 26-08-2014,
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்தது. தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது.
                                                                                                    மேலும், . . . 

61 தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்து பலியான மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் ஜெயலலிதாவிடம் நீதிபதி ஆர்.ரெகுபதி வழங்கினார்

சென்னை, ஆகஸ்ட், 26-08-2014,
மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த 523 பக்க விசாரணை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒரு நபர் கமிஷன் தலைவர் நீதிபதி ஆர்.ரெகுபதி நேற்று வழங்கினார்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து
சென்னை போரூர் அருகில் உள்ள மவுலிவாக்கத்தில் பிரைம் ஸ்ரீஸ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் “டிரஸ்ட் கெயிட்ஸ்” என்ற பெயரில் 11 மாடியில் இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி வந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில்,
                                                                                                     மேலும், . . . . 

ஆமதாபாத்தில் இருந்து, ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்த ரூ.5¾ கோடி தங்க நகைகள் பறிமுதல் உரிய ஆவணங்கள் இல்லாததால் விற்பனை வரி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னை, ஆகஸ்ட், 26-08-2014,
ஆமதாபாத்தில் இருந்து, ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5¾ கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடிக்கடி சோதனை
ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை, ஹவாலா பணம் பறிமாறல் உள்பட சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் போலீசாரால் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுவது உண்டு.
அந்த வகையில் நேற்று மாலை சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.புருஷோத்தமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியாயிணி, உமா உள்பட போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6-வது நடைமேடைக்கு ஆமதாபாத்தில் இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
                                                                                                              மேலும், . . . . 

63-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்துக்கு பிரதமர் மோடி டெலிபோனில் வாழ்த்து



சென்னை, ஆகஸ்ட், 26-08-2014,
63-வது பிறந்தநாளை கொண்டாடிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பிரதமர் நரேந்திரமோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.
63-வது பிறந்த நாள்
பிரபல நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், தனது 63-வது பிறந்தநாளை நேற்று (திங்கட்கிழமை) கொண்டாடினார். புதிய பட்டு வேட்டி-சட்டையை அணிந்த அவர், முதலில் வீட்டில் இருந்த பெற்றோர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வெளியே கூடிநின்ற தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.
                                                                                                        மேலும், . . . .

No comments:

Post a Comment