Sunday 3 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

ஆடிப்பெருக்கு: மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்ட காவிரி

திருச்சி, 03-08-2014,
கணவனின் கரம் பற்றி நின்ற புதுப்பெண்களின் முகம் நாணத்தால் சிவப்பேறி இருந்தது...
கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து தாவணிபோட்டு துள்ளித்திரிந்த இளவட்டங்களின் மனதில் விரைவில் மணமாகப்போவதை நினைத்து உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது. முகம் ரத்தச்சிவப்பாய் மாறியது...
வயசு நூறு ஆனாலும் மாறாத ஆசையுடன் கணவன் தாலியை புதுப்பித்து கழுத்தில் அணிவித்ததும் சுருக்கம் விழுந்த முகத்திலும் நாணரேகை படர்ந்தது...
கரையோரத்தில் கரைபுரண்ட சந்தோசம், ஆசை, மகிழ்ச்சி, வெட்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து காவிரி மகளையும் தொற்றிக் கொண்டது.
பாய்ந்து வந்த புதுவெள்ளத்தால் ரத்தச்சிவப்பாய் மாறிய காவிரி மகள் சமுத்திரராஜனை கூடி தழுவ ஆர்ப்பரித்து ஓடி கொண்டிருந்தாள்.
                                                                                                                  மேலும், . . . . .

தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி

காத்மாண்டு, 03-08-2014,
நேபாளத்தில் இருந்து பிழைப்பு தேடி தனது சகோதரனுடன் இந்தியாவுக்கு வந்த ஒரு சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்தான்.
அவனது சகோதரன் அந்த வேலை பிடிக்காததால் நேபாளத்துக்கே சென்றுவிட முடிவு செய்து, உத்தரப்பிரதேச எல்லை வழியாக சொந்த நாட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்துக்கு செல்லும் ரெயிலில் தவறுதலாக ஏறி விட்டான்.
அகமதாபாத்தில் மொழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜீத் பகதூர் என்ற அந்த சிறுவனை கண்ட ஒரு பெண் அப்போது குஜராத்தின் முதல் மந்திரி பதவியை கூட ஏற்காமல் வெறும் பா.ஜ.க. பொறுப்பாளராக மட்டும் இருந்த நரேந்திர மோடியிடம் அழைத்து சென்றார்.
அன்று முதல் மோடியின் வீட்டில், அவரது கண்காணிப்பில் வளர்ந்த அவனுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டிலும் சிறந்து விளங்கினான்.
                                                                                                         மேலும், . . . . 

சென்னையில் பா.ஜனதா கமலாலய தரிசனம் குடும்பத்துடன் தொண்டர்கள் திரண்டனர்

சென்னை, 03-08-2014,
வாழ்க கோஷம் காதை பிளக்கும். அதிர்வேட்டுகள் சத்தத்தால் சுற்றுப்பகுதியே அதிரும். வழியெங்கும் கொடி, தோரணங்கள் பளிச்சிடும். இதுதான் அரசியல் கட்சிகளின் விழாக்களுக்கு அடையாளம். ஆனால், இவை எதுவுமே இல்லாமல் புதுமையான ஒரு விழாவை பா.ஜனதா கட்சி நடத்தியது.
தமிழக பா.ஜனதா கட்சியினர் வருடத்தில் ஒருநாள் அரசியல் பணிகளுக்கு அப்பாற்பட்டு குடும்பத்துடன் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்து மகிழும் விழாவை, கமலாலய தரிசனம் என்ற பெயரில் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார். 5–வது ஆண்டாக கமலாலய தரிசன விழா நேற்று மாலை நடந்தது.
கட்சி அலுவலகம் அமைந்துள்ள தியாகராயர் நகர் வைத்தியராமன் தெரு விழாக்கோலம் பூண்டு இருந்தது.
                                                                                                        மேலும், . . . . .

‘சாதிய உணர்வை தூண்டினார் காந்தி’ என அருந்ததிராய் பேசியதால் சர்ச்சை
திருவனந்தபுரம், 03-08-2014,
‘சாதிய உணர்வை தூண்டினார் காந்தி’ என்று சர்ச்சைக்குரிய எழுத்தாளர் அருந்ததிராய் பேசினார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து கேரள போலீஸ் பரிசீலிக்கிறது.
சர்ச்சை பேச்சு
சர்ச்சைக்குரியவர் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் ‘மகாத்மா அய்யங்காளி இருக்கை’ நடத்திய சர்வ தேச கருத்தரங்கில் (கடந்த மாதம் 17–ந் தேதி) கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பாங்கினை தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார்.
                                                                                                    மேலும், . . . . . 

No comments:

Post a Comment