Wednesday 6 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

இந்தியாவில் இளைஞர்கள் மதுபானம் குடிப்பது 3 மடங்காக அதிகரித்துள்ளது ஆய்வில் தகவல்
புதுடெல்லி, 06-08-2014,
இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
74.3 சதவீதம்
அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மடங்கு அதிகமாகும். அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
                                                                                                 மேலும், . . . . . .

யூ.பி.எஸ்.சி.தேர்வு விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்திற்க்கு மத்திய அரசு அழைப்பு
புதுடெல்லி, 06-08-2014,
சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று நேற்று முன்தினம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் திறனறித் தேர்வில் ஆங்கில விடைகளுக் கான மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்றும், 2011-ல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் மீண்டும் 2015-ல் எழுதலாம் எனவும் அறிவித்தார்.
இந்த பிரச்சினை நேற்றும் பாராளுமன்ற இரு சபைகளிலும் எதிரொலித்தது. நேற்று டெல்லி மேல்-சபை கூடியதும் சபைத் தலைவர் அமீது அன்சாரி கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார்.
                                                                                                        மேலும், . . . . . .

கட்சி தலைவரை தவறாக சித்தரித்ததாக கூறி ஆவேசம் சட்டசபையில் இருந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
சென்னை, 06-08-2014,
கட்சி தலைவரை தவறாக சித்தரித்ததாக கூறி ஆவேசம் அடைந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தனியாக அல்ல, தண்ணியில நிற்பார்
தமிழக சட்டசபையில் இந்துசமய அறநிலையங்கள் துறையின் மானிய கோரிக்கை குறித்த எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன் பதிலளித்து பேசினார்.
அப்போது, “தன் கட்சி சின்னம் எது என்று தெரியாமல் தடவி, தடவி தாரத்தின் துணை கொண்டு தடுமாறி, தடுமாறி ஓட்டுப்போட்ட ஒருவர், அம்மாவை எதிர்த்து நிற்க பலவகையில் கூட்டணிபோட்டார். அப்படிப்பட்டவருக்கு ஒன்று சொல்கிறேன்,
                                                                                               மேலும், . . . . 

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது

ஊத்துக்கோட்டை, ஆகஸ்ட், 06–08-2014,
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 1–ந் தேதி பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று காலை 6 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வந்தடைந்தது.
ஜீரோ பாயிண்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று இரவு 8 மணிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. வினாடிக்கு 10 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும் கண்டலேறு தண்ணீர் மற்றும் மழை நீரை தேவைப்படும் போது புழல் மற்றும் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்
                                                                                                               மேலும், . . . . . 

No comments:

Post a Comment