Saturday 23 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை நன்றி தெரிவிக்கும் விழாவில் ஜெயலலிதா உறுதி

மதுரையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மதுரை, ஆகஸ்ட், 23-08-2014,
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
நன்றி தெரிவிக்கும் விழா
இந்த அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பை பெற்று அதை நடைமுறைப்படுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இதற்காக, மதுரை உள்வட்ட சாலை (ரிங்ரோடு) பாண்டிகோவில் அருகில் 7 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு, பெரியாறு அணை போன்று மாதிரி வடிவமும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, லட்சக்கணக் கில் பொதுமக்களும், விவசாயிகளும் நேற்று காலையில் இருந்தே வந்து குவிந்தனர்.
                                                                                                                                    மேலும், . . .

நன்றி தெரிவிக்கும் விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்

மதுரை, ஆகஸ்ட், 23-08-2014,
மதுரையில் நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் கூறி விளக்கினார்.
அவர் கூறிய கதைகள் வருமாறு:-
குருவும் சிஷ்யர்களும்
நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென்றால், அதற்குரிய உறுதியும், விடாமுயற்சியும் தேவை.
ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியினை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
                                                                                                                            மேலும், . . .

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 9-ந் தேதி வரை ‘கெடு’
புதுடெல்லி, ஆகஸ்ட், 23-08-2014,
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து செப்டம்பர் 9-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்து உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி
கடந்த மே மாதம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 182 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ், 2-வது பெரிய கட்சியாக விளங்கிய போதிலும், அந்த கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க கோரி காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களில் (543) குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை (55) கொண்ட கட்சிதான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்றும், ஆனால் காங்கிரசுக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இல்லாததால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என்றும் ஆளும் பாரதீய ஜனதா கூறி விட்டது.
                                                                                                             மேலும், . . .

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி சுப்ரீம் கோர்ட்டு கருத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு
எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் குறித்த எங்கள் கருத்தை சுப்ரீம் கோர்ட்டு பிரதிபலித்து இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கருத்து
பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்ட நிலையில், அந்தப் பதவியின் முக்கியத்துவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் கூறி வந்த கருத்துக்கள் சரியென்று சுப்ரீம் கோர்ட்டின் கருத்து பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தர முடியாது என சபாநாயகர் மறுத்து இருப்பது, சட்டத்தின்படி முழுக்க முழுக்க தவறானது.
                                                                                                      மேலும், . . . .

No comments:

Post a Comment