Friday 1 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

 சர்ச்சைக்குரிய கட்டுரை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது இலங்கை


கொழும்பு, 01-08-2014,
இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானதற்கு இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்கள் வெளியாகியிருந்தது.
                                                                                     மேலும், . . .

எம்.பி.,க்கள் மீதான குற்ற வழக்குகள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
புதுடில்லி, ஆகஸ்ட், 01–08-2014,
எம்.பி.,க்கள் மீதான குற்றவழக்குகளை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், எம்.பி.,க்கள் மீதான விசாரணையை மட்டும் விரைவாக முடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறி உள்ள சுப்ரீம் கோர்ட், வழக்குகளை விரைவாக விசாரணை செய்வது எப்படி என்பது குறித்து நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.
தற்போதுள்ள பல எம்,பி.,க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தனது அரசிலும், பார்லிமென்டிலும் குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.,க்கள் இருக்க கூடாது என்பது மோடியின் திட்டம். இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, எம்.பி.,க்கள் மீதான குற்ற வழக்குளை விரைவாக விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை கேட்டுக் கொண்டார். இதன் மூலம் பார்லிமென்ட் மீதான கறையை அகற்ற முடியும் என்பது அவர் எண்ணம்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்து குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
                                                                                           மேலும் , . . . . .

நேஷனல் ஹெரால்டு வழக்கு; சுப்பிரமணியசாமி பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
புதுடெல்லி, ஆகஸ்ட், 01–08-2014,
நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் சுப்பிரமணியசாமி பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி இருவரும், சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு டெல்லியில் தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை அபகரித்தனர். பின்னர் இந்த சொத்துகளில் 90 கோடி ரூபாயை அவர்கள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு கடனாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை சோனியாவும், ராகுலும்தான் கொண்டு இருக்கிறார்கள்.
                                                                                                                      மேலும், . . . . .

வேலூர் மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் 7 பேருக்கு இரட்டை குழந்தைகள்

வேலூர், ஆகஸ்ட், 01–08-2014,
வேலூர் தனியார் மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் கருத்தரித்து 7 பெண்கள் இரட்டை குழந்தைகள் பெற்றனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கு 150–க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இதில் 80 சதவீதம் பேருக்கு சுகப்பிரசவம் ஆகிறது.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் சந்தியாபாபு, திவ்யாபாபு ஆகியோர் இணைந்து குழந்தை இல்லாத தம்பதியினருக்கு சோதனைக்குழாய் சிகிச்சை மூலம் கருத்தரிப்பு செய்து வருகின்றனர்.
கடந்த 2012–ம் ஆண்டு முதல் சோதனைக்குழாய் மூலம் இதுவரை 500–க்கும் மேற்பட்ட தம்பதியினர் கருத்தரிப்பு செய்து குழந்தை பெற்றுள்ளனர்.
                                                                                                                   மேலும், . . . . 

No comments:

Post a Comment