Monday 11 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

தேனியில் 200 பேர் தங்குவதற்கு புதிய மாவட்ட சிறைச்சாலை ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, ஆக. 11–
சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
குற்றவாளிகளை சிறையில் அடைத்து சீர்திருத்தி, மறுவாழ்வளித்து, விடு தலைக்குப்பின் அவர்கள் சமுதாயத்தின் அங்கமாக திகழ்வதற்கான பணியை செய்து கொண்டிருக்கும் சிறைத்துறையை மேம்படுத்துவதிலும், சிறைத்துறை பணியாளர்களுக்கும், சிறைவாசிகளுக்கும் கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் சிறைச்சாலைகள் ஏதும் இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறைவாசிகள் தற்போது மதுரை மத்திய சிறைக்கும், வளரிளம் சிறைவாசிகள் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பார்ஸ்டல் பள்ளிக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.
எனவே, இச்சிறைவாசிகளை தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக்களையவும்,
                                                                                                                    மேலும், . . .  .

புதுச்சேரி அருகே விபத்து டைரக்டர் டி.ராஜேந்தர் தங்கை மகன் உள்பட 4 பேர் பலி

மரக்காணம், 11-08-2014,
சினிமா டைரக்டர் டி. ரஜேந்தரின் தங்கை சேமலதா. இவருடைய மகன் ஆதிகுரு (வயது 22). இவர் சினிமா உதவி டைரக்டராக பணியாற்றி வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறை வந்திருந்தார். இன்று காலை அவர் டாடா இண்டிகா காரில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை புறப்பட்டார். காரில் அவருடைய உறவினர்கள் பிரியதர்சினி (29), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயராகவன் (52) ஆகியோர் இருந்தனர். காரை விஜயராகவன் ஓட்டிவந்தார்.
அதிகாலை மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
                                                                                   மேலும், . . .

10,500 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது


சென்னை, ஆகஸ்ட், 11-08-2014,
இந்தியாவில் அரசு பணியில் மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்ச்சி சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.
ஜெயலலிதாவின் அறிவிப்பை தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 என்று பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை பிறப்பித்தார்.
                                                                                                       மேலும், . . . .

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாராணி சுங்கத்தின் தந்தை மரணம் ஜெயலலிதா இரங்கல்

சென்னை, ஆகஸ்ட், 11-08-2014,
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாராணி சுங்கத்தின் தந்தை டி.வி.எஸ்.சுந்தரம் மறைவையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கைத்தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றுபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாராணி சுங்கத். இவருடைய தந்தை டி.வி.எஸ். சுந்தரம், ரெயில்வே துறையில் முதன்மை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 86 வயதான இவர், நேற்று சென்னையில் காலமானார்.
முக்கிய பிரமுகர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
                                                                                                                    மேலும், . . . 

 

No comments:

Post a Comment