Wednesday 27 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் குற்றப்பின்னணி உள்ளவர்களை மந்திரிகளாக நியமிக்க வேண்டாம் பிரதமர், முதல்-மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை
“நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருப்பதால், குற்றப்பின்னணி உள்ளவர்களை மந்திரிகளாக நியமிக்க வேண்டாம்” என்று பிரதமர் மற்றும் மாநில முதல்-மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 28-08-2014,
குற்றப்பின்னணி உள்ளவர்களை அரசியலில் இருந்து அறவே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வருகிறது.
பொது நல வழக்கு
இந்த நிலையில், 2004-ம் ஆண்டு மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் குற்றப்பின்னணி கொண்ட லாலு பிரசாத் யாதவ், எம்.ஏ.ஏ.பாத்மி, முகமது தஸ்லிமுதீன், கே.வேங்கடபதி ஆகியோர் மந்திரிகள் ஆக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றப்பின்னணி கொண்டவர்களை மத்திய, மாநில அரசில் மந்திரிகளாக சேர்ப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனோஜ் நருலா என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த பொது நல வழக்கை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மதன் பி.லோக்குர், குரியன் ஜோசப், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 5 பேரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.
தீர்ப்பு
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
                                                                                                                                       மேலும், . . . 
சேலம் மாவட்டம் கொளத்தூர் வனப்பகுதியில் தோண்ட, தோண்ட வெடிகுண்டுகள் விடுதலைப்புலிகள் பதுக்கியதா?

கொளத்தூர், ஆகஸ்ட், 28-08-2014,
கொளத்தூர் அருகே வனப்பகுதியில் கையெறி குண்டுகள் உள்பட ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தோண்ட, தோண்ட மண்ணில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இவை விடுதலைப்புலிகள் பதுக்கியதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுத குவியல்கள்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகளை தோண்டினர். அப்போது ஒரு இடத்தில் குழி தோண்டியபோது பழைய இரும்பு பேரல் ஒன்று தென்பட்டது.
வனத்துறையினர், பேரலை உடைத்து பார்த்தபோது, ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் பிளாஸ்டிக் கவரால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து கொளத்தூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
                                                                                            மேலும், . . . .

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார் சென்னையில் நடைபெறும் விழாவில் மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார்


புதுடெல்லி, ஆகஸ்ட், 28-08-2014,
அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. டெல்லியில் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார்.
அனைவருக்கும் வங்கி கணக்கு
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.
இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது.
                                                                                                              மேலும், . . . 

சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை இன்றோடு முடிக்க வேண்டும் தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு

பெங்களூர், ஆகஸ்ட், 28-08-2014,
சொத்து குவிப்பு வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் இன்றோடு (வியாழக்கிழமை) இறுதி வாதத்தை முடிக்க வேண்டும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட சில மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் கோரிக்கை விடுத்தார்.
                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment