Saturday 9 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் சீமான் பங்கேற்பு

சென்னை, 09-08-2014,
இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி
இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்றும் தமிழக முதல்-அமைச்சரை இழிவுபடுத்திய இலங்கை அரசை கண்டித்தும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                            மேலும், . . . . .

விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

புதுடெல்லி, 09-08-2014,
சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும். சந்திரனின் இந்த மாறுபட்ட இயக்கத்தால் பூமியில் மாற்றங்கள் ஏற்படும் என மத கோட்பாடுகளில் தீவிரமான சிலர் நம்புகின்றனர்.
நிலவின் இயக்கம் காரணமாக பூமியில் நிலநடுக்க அபாயங்களும், பிளேக் போன்ற உயிர்க்கொல்லி வியாதிகளும் மற்றும் எரிமலை சீற்றங்களும் அதிகரிக்க கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.
                                                                                                      மேலும், . . . . 

இந்து முன்னணி தலைவர் கொலை கைதான 6 தீவிரவாதிகளுக்கு மருத்துவ பரிசோதனை

திருவள்ளூர், 09-08-2014,
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் அம்பத்தூரில் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்துல் சமீம், அப்துல் ஹக்கீம் சாதிக் பாஷா, அபுதாகீர், சையத் அலி நவாஸ் முகமது, சமிமுல்லா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
                                                                                                   மேலும், . . . . 

எடப்பாடியில் சென்னை கலெக்டர் போல் நடித்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

எடப்பாடி, 09-08-2014,
கல்யாணப் பரிசு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் தங்கவேல் தான் மன்னாரன் கம்பெனியில் மேனேஜராக இருப்பதாக மனைவியிடம் பொய் பேசி காலம் கடத்தி வருவார். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் உண்மை தெரிய வர சிக்கலில் மாட்டிக்கொள்வது போலான நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலமானது.
அதே போல நேற்று எடப்பாடி பகுதியில் தான் சென்னை கலெக்டர் என்று கணவர் மற்றும் மாமனாரையும், உறவுக்காரர்களையும் நம்ப வைத்து ஏமாற்றி வந்த பெண் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி போலீசில் பிடிபட்டார். அவரது பெயர் அருணாதேவி (வயது 26). பி.எஸ்.சி பட்டதாரியான இவர் எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி ஆவார். இவர் சிக்கிக் கொண்டதற்கு பின்னால் ஒரு பெரிய கதை உண்டு.
எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கதிரவன்.
                                                                                                             மேலும், . . . .

No comments:

Post a Comment