Tuesday 12 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

அ.தி.மு.க.,வுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவி கை கட்டி வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்

புதுடில்லி, 12-08-2014,
லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியையும் பறிகொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பா.ஜ., வால் முன்மொழிப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வென்றது. பா.ஜ., மட்டும் தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்தது என்னவோ வெறும் 44 இடங்கள் தான். 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தோல்வி குறித்த எண்ணம் இருந்தாலும், காங்கிரஸ் இந்த அளவிற்கு மோசமாக தோற்கும் என அக்கட்சியிலுள்ள யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக கட்சியின் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுலால் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு போராட்டம்
லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியைப் பெற, 10 சதவீத இடங்கள் தேவை என்ற நிலையில்,
                                                                                              மேலும், . . . . .

தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை விரட்டி தண்டனை கொடுத்த இளம் பெண்

பெங்களூர், 12-08-2014,
பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருபவர் வீணா அசியா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்கா பகுதியில் தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல, கடந்த 8-ந் தேதி காலையில் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், வீணாவை கிண்டல், கேலி செய்தார்.உடனே ஆத்திரமடைந்த வீணா, வாலிபரை திட்டினார். இருப்பினும் வீணாவை கிண்டல் செய்வதை வாலிபர் விடவில்லை. இதுபற்றி வீணா, தனது தோழிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். வீணா வீட்டின் அருகேயே தோழி வசிப்பதால், அவர் உடனடியாக பூங்காவுக்கு ஓடி வந்தார்.
இந்த நிலையில், கிண்டல் செய்ததை நிறுத்தாத வாலிபரை துணிந்து பிடித்த வீணா, அவரை அடித்து, உதைத்து கீழே தள்ளினார். சாலையில் விழுந்து கிடந்த வாலிபரை, வீணா தனது காலால் மிதித்து கொண்டே இருந்தார். அந்த காட்சிகளை வீணாவின் தோழி, தன்னுடைய செல்போனில் வீடியோ படம் பிடித்தார். இதற்கிடையில் வீணாவின் அடி, உதையை தாங்க முடியாத வாலிபர், தன்னிடம் இருந்த ஹெல்மெட் மூலம் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இருப்பினும், வீணா விடாமல் வாலிபரை துரத்திச் சென்ற வீணா அவரை முட்டி போட வைத்து அவர் தலையில் ஓங்கி மிதித்தார்.
                                                                                                மேலும், . . . . 

ஏர்செல்-மேச்சிஸ் ஒப்பந்தம் ஆகஸ்ட் இறுதியில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை - சி.பி.ஐ. முடிவு

புதுடெல்லி, 12-08-2014,
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி பரபரப்பு புகார்களை அளித்தார். அதில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும் ஏர்செல்லை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தன்னை மாறன் நிர்ப்பந்தப்படுத்தியதாக அவர் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்தார்.
ஏர்செல், மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும் உடனடியாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
                                                                                            மேலும், . . . . 

பெண் போலீசுடன் நடனமாடியது பற்றி சர்ச்சை ஷாருக்கான் கண்டனம்

கொல்கத்தா, 12-08-2014,
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மேற்கு வங்காள மாநில விளம்பர தூதரான இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
விழா மேடையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது, இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடிய ஷாருக்கான், மேடை ஓரமாக ஓடி வந்து, அங்கு பந்தோபஸ்த்துக்கு நின்றிருந்த ஒரு பெண் போலீஸை அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கினார்.
இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
                                                                                                மேலும், . . . 

No comments:

Post a Comment