Tuesday 5 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே
கொழும்பு, 05-08-2014,
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் இலங்கை ராணுவ இணையதளத்தில் வெளியான கட்டுரைக்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வருத்தம் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும் அதை வன்மையாக கண்டிக்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களும் எழுதி வருகிறார்.
இதை கேலி செய்யும் வகையிலும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையிலும் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் அண்மையில் அவதூறாக ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
                                                                                                    மேலும், . . . . 

ஒடிசாவில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் 23 பேர் பலி 17 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
புவனேஷ்வர், 05-08-2014,
ஒடிசாவில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர பகுதிகளில் வசித்த 17 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
                                                                                                        மேலும், . . . . .        

மீரட்டில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம் பதற்றம் நீடிப்பு
மீரட், 05-08-2014,
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மீரட் மாவட்டம் கார்காவ்தா பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அவர் முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார்.
                                                                                               மேலும், . . . . . 

ஆபரேஷன் மூவர் அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகளை கண்டறிய வித்தியாசமான அடையாளம்
பண்டிபூல், 05-08-2014,
சவுத் வேல்ஸ் பண்டிபூல் பகுதியை சேர்ந்த தம்பதிகள் கரண் - இயன் கில்பர்ட். இந்த தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன. அந்த குழந்தைகளை அதன் பெற்றோர்களுக்கே அடையாளம் தெரியவில்லை. எந்த குழந்தைக்கு பால் கொடுத்தோம், எந்த குழந்தைக்கு கொடுக்கவில்லை, எந்த குழந்தைக்கு குளிப்பாட்டி டிரஸ் மாற்றினோம் என்று புரியாமல் குழம்பி தவித்து வந்தனர். மூன்று குழந்தைகளுக்கும் பேபன் , மாடிசன் மற்றும் பைகே என பெயரிட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது
தற்போது பிறந்து உள்ள 3 குழந்தைகளை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
                                                                                                                 மேலும், . . . . .
     

No comments:

Post a Comment