Monday 4 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

இன்று பிறந்தநாள் விழாஏசு, அனுமார் தோற்றத்தில் ரங்கசாமி படங்கள்

புதுச்சேரி, ஆகஸ்ட், 04–08-2014,
புதுவை மாநில முதல்–அமைச்சர் ரங்கசாமிக்கு இன்று (திங்கட்கிழமை) பிறந்தநாள் விழா. ரங்கசாமிக்கு இன்றுடன் 64 வயது பூர்த்தி அடைந்து 65–வது வயது பிறந்துள்ளது. இதனை என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறன்றனர்.
இன்று அதிகாலை முதலே முதல்–அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு முன்பு திரண்ட தொண்டர்கள் நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று முதல்–அமைச்சர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து, நினைவு பரிசு அளித்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
                                                                                                    மேலும், . . . . .

இணைய தளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறுஇலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி, ஆகஸ்ட், 04–08-2014,
இலங்கை பாதுகாப்பு துறையின் இணைய தளத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துகளை பரப்பி கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக டெல்லி மேல்சபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். மேல் சபை கூடிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இது பற்றிய பிரச்சினையை கிளப்பி சபையின் மைய பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதை கண்டித்தும் இலங்கை அதிபருக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் 15 நிமிடத்துக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் சபை கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர்.
                                                                                           மேலும், . . . 

மேட்டூர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்வுவிரைவில் 100 அடியை எட்ட வாய்ப்பு
மேட்டூர், ஆகஸ்ட், 04–08-2014,
நீர்வரத்து அதிகரித்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில், மூன்று அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் 100 அடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்படும் நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இரு நாட்களுக்கு முன், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட கூடுதல் நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால், நேற்று வினாடிக்கு, 20,260 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு, 37,729 கனஅடியாக அதிகரித்தது.
கூடுதல் நீர்வரத்தால், நேற்று, 84.190 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று, 87 அடியாகவும், 46.260 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு இன்று, 49.284 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி, நீர் இருப்பு 3 டி.எம்.சி., என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                         மேலும், . . . .

இலங்கையில் 18–ந் தேதி நடக்கும் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்க கூடாது ஜி.கே.மணி

நாகர்கோவில், ஆகஸ்ட், 04–08-2014,
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
இலங்கையின் வெளியுறவுத்துறை இணைய தளத்தில் தமிழக முதல்–அமைச்சர் பற்றி வெளியிடப்பட்ட அவதூறு கருத்தை பா.ம.க. வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் நிறுவனர் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதுபோல அனைத்து கட்சி தலைவர்களும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இது தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கை மீது கொண்ட வெறுப்பின் காரணமாக எழுந்த குரலாகும். தமிழகத்தில் 3 முறை முதல்–அமைச்சராக இருந்தவர் பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியையும் இணைத்து இந்த கருத்து வெளியாகி உள்ளது. அமெரிக்காவே பிரதமர் மோடிக்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் இலங்கையின் விஷமத்தனமான இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்.
பிரதமரையும் விமர்சித்து உள்ளதால் இந்த பிரச்சினைக்கு இந்தியாவின் அனைத்து மாநில முதல்–மந்திரிகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் தீர்வாக அமையும். அதற்காக கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட இந்தியா சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
                                                                                                      மேலும், . . . . 

No comments:

Post a Comment